23 நவ., 2009

என் வாழ்நாள் சாதனை

6


ஒவொரு மனிதரும் வாழ்நாளில் பல சாதனைகளோ அல்லது ஒரு சாதனையோ செய்து விட மனசு துடியாய் துடிக்கும்.  ஆனால் அந்த கனவை நினைவாக்குபவர்கள் மிக சிலரே..

எனக்கு ஒரு கனவு  இருந்துச்சு சின்ன வயசுல... எப்படியாது ஸ்கூல் கு சைக்கிள் எ போகனுன்னு... ஆனா விதி வலியது இல்லையா.. நான் சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்ச உடனே எங்க ஊர்ல இருக்கற மக்கள் எல்லாம் என்னவோ cyclone  வந்த மாதிரி நடுங்கி ஒடுங்கி விட்டுக்குள்ள போய் பதுங்கிகிட்டாங்க .. ஏன்னா பின்லேடன் அமெரிக்கால flight  ல மோதின மாதிரி நம்ம ஒரு மனுஷன் இல்லாம ரோட்டுல போற அகிறினை மேல குட வண்டிய விட்டு மோதுநதுல ஒரே terror  ஆய்டுச்சு ஊர்ல..  கொஞ்சம் விளக்கமா சொல்றதுனா ஒரு ரெண்டு சம்பவம் நடந்து போச்சு.. சம்பவம் ந உடனே மதுரை சம்பவம் மாதிரி எதையாது யோசிச்சு டர் ஆகாதிங்க .. ஏன்னா உண்மையிலே டர் ஆனது நான்தான்... மொதல சைக்கிள் ஓட்டறதுக்கு முன்னாடி சைக்கிள் கார்ரியர் ஒகாந்து ப்ராக்டிஸ் பண்லன்னு ஆரம்பிச்சேன் ... ஒரு நல நம்ம அண்ணாச்சி ஸ்கூல் கு சைக்கிள் போறப்ப அவர் குட போயரலன்னு கார்ரியர் மேல எம்பி குதிசு ஒகர ட்ரை பண்றப்ப அப்படியே என்னவோ ஹை ஜம்ப் பண்ற மாதிரி அந்த சைடு தண்டி விழுந்தா ஒரு விட்டு படி இருந்துச்சு.. கரெக்ட் எ தல அதுல மோதி பனால் ஆய்டுச்சு.. நம்ம அண்ணாச்சி அத பாத்துட்டு டர்.... நிங்களே சொலுங்க மக்கா .. மொத கோணலே மொக்கை கோணலா ஆய்டுச்சு நம்ம வாழ்க்கைல... அதுக்கு அப்புறம் கொஞ்ச நாலு கழிச்சு மனச தைரியம் ஆகி கிட்டு திருப்பி சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்ச உடனே ஒரு விளங்காத விஷயம் நடந்து போச்சு.. ஒரு நாள் ஏன்ன ஆச்சுனா சைக்கிள் விட்டுகிட்டு இருக்கற ப.. எதிர் ல நம்மள பத்தி தெரியாம ஒரு பாசமுள்ள அப்பா அவரோட குழந்தையே சைக்கிள் எ முண்ணாடி ஒக்காத்தி வெச்சுகிட்டு வந்துட்டு இருந்தாப்ல.. நம்மாளுக்கு தெரிஞ்சாலும் அது நமளோட சைக்கிள் கு தெரியாதுல மக்கா .. அது போய் நேரா அவரோட சைக்கிள் எ மோத .. அவரு குழந்தை கிழ விளுந்த்ருச்சு.. அவரு பதறி போய் நம்மளோட ரெண்டு கன்னத்துலயும் ஆட்டோகிராப் போட்டுட்டு போயடபல.. அதுக்கு அப்புறம் எபடியோ நம்ம சைக்கிள் நம்ம சொல்றத கேட்டு பலகிரிச்சு..  கொஞ்ச நாளுக்கு அப்புறம் ஏன்ன நடந்துச்சு தெர்யுமா மக்கா ... எனோட இடுப்பு .. அது இடுப்பு இல்ல இடுப்பு இல்ல ... அடுப்பு மக்கா அடுப்பு ... அவளோ பெரிய இடுப்பு / அடுப்ப வெச்சுகிட்டு சைக்கிள் ஒட்டுரப்ப  .. ஒரு தெருவுக்கு எதிர ஒரு வீட்டு திண்ணை.. அந்த தெரு முடியறப்ப turn பண்ணாம விட்டதுனால சைக்கிள் திண்ணைல மோதி சைக்கிள் டர் ஆய்டுச்சு.. இத பார்த்த நம்ம விட்டுல.. வாக்கிங் இஸ் தி பெஸ்ட் exercise  அப்படினு சொளிட்டாங்க.. அதுனால ஸ்கூல் முடிக்கிற வரைக்கும் நடந்தே வாழ்கை ஓடி போச்சு..

அதுக்கு அப்புறம் காலேஜ் போன உடனே என்னக்கு ஒரு டூ விளர் லைசென்ஸ் எடுதுரனுன்னு ஒரே ஆசை போங்க..  எங்க விட்டுல சைக்கிள் கு நான் குடுத்த மோட்சதத பத்தி தெரிஞ்சதால இதுக்கு ஒத்துகல ... நம்ம விட்டுல ஒரு chitfund  ல சீட்டு போட்டு வேசுருதங்க.. அந்த அண்ணாச்சி அப்ப அப்ப வந்துட்டு போவப்ள சீட்டு பணம் வசூல் பண்றதுக்கு.. அவரு எங்க போய் ஏன்ன செட்டை பண்ணினப்லையோ அத்தளம் எனக்கு தெரியாது.. அனா கைய ஒடஞ்சி போய் கட்டு போட்டுகிட்டு வந்து நின்னாபுல ஒரு நாலு ... விட்டுக்கு வந்துட்டு தம்பி கட்டு பறிக்க போகணும் நீ கொஞ்சம் ஏன் குட வான்னு குட்டிட்டு போனப்ள.. போறப்ப அவரே ஒட்டு போயடாப்ள ... ஆனா திரும்பி வரப என்னைய நீ கொஞ்சம் வண்டி ஒட்டிட்டு வாட நு sonapla .. பாவம் அவரு ஏன்ன பண்ணுவாரு ... விதி வலியது ஆச்சே... ஏன்ன பண்றது அவர பிண்டி ஒக்காத்தி வெச்சு கிட்டு வண்டிய பத்தி தூரம் ஓடிக்கிட்டு வந்தாச்சு.. வர வழில நாம எம தர்ம ராஜா வோட வாகனம்... அதாங்க ஒரு எருமை மாடு நம்ள பத்தி தெரியாம கிராஸ் பண்ணிச்சு... மனுசனுக்கே நம்மள பத்தி தெரியாதப்போ மாட போய் என்னத்த சொல்ல.. அவரு தம்பி கொஞ்சம் பிரேக் பிடிடா .. வண்டி மாட்டு மேல போய் மோதிர போவுதுன்னு மரண பயத்துல கத்து கத்துனு kathhurapla ... முன்ன பின்ன வண்டி ஓடிக்கிட்டு இருந்த எனக்கு பிரேக் இருக்கற எடம் தெரிஞ்சுருக்கும் .. பிரேக் கண்டுபுட்சு அலுதரகுல வண்டி எருமை மாட்டுக்கு பக்கதுல போயிருச்சு.. எபடியோ வண்டிய nipaati  ... அப்பா அப்பா ipave  முச்சு வாங்குது போங்க...  இந்த சம்பவத்துல டர் ஆனதுனால பல வருஷம் லைசென்ஸ் பத்தி யோசனை இல்லாமலேயே இருந்துட்டேன் ...

ஆனா விழி வலியது மக்கா.. ஏன்ன பண்றது கல்யாணம் பண்ணி அமெரிக்கா வந்த உடனே திரும்பி லைசென்ஸ் ப்ரோப்லேம் வந்துருச்சு... இங்க இருக்கற driving  ஸ்கூல் காரங்க எனக்கும் எப்படியோ driving  கத்து குடுத்து yenayum  வாழ்நாள்ல ஒரு சாதனைய பன்ன வெச்சுட்டாங்க.... ஏன்ன பண்றது மக்கா விதி வலியது ....