31 டிச., 2010

heureuse nouvelle année

15

நாம் எல்லோருக்கும் ஒரு வயது கூடிப்போகும்...

நம்மளுக்கு நாமலே ஆப்பு வச்சுப்போம் இன்னொரு கொள்ள கூட்டதுக்கோ / இல்லேன்னா இப்ப இருக்கற கொள்ள கூட்டதுக்கோ ஒட்டு போட்டு...

இன்னும் 300,000 கோடிக்கு ஒரு ஊழல் வெளில வரும்...

ரஜினி காந்தும், கமலஹாசனும் தமனா கூட ஜோடி போட்டு நடிப்பாங்க...

புரட்சி நடிகர் 2015 நம்ம ஆண்டுன்னு புர்ச்சி அறிக்கை விடுவாப்ல.. முடிஅஞ்சா இன்னொரு படத்துல நடிச்சு அதுக்கு ஜெட்லி சரவண்னனும் பின்ன பல பேரும் விமர்சனம் எழுதுனாலும் எழுதலாம்..


யூத் அங்கிள் டைரக்ட் பன்னின படத்துக்கு நாமெல்லாம் விமர்சனம் எழுதுவோம்..

பதிவுலகத்துலேந்து இன்னும் பல மக்கா! புத்தகம் போடுவாங்க...

நம்ம யாரு.. எல்லாத்தயும் தாங்கி நிப்போம்ல.. வாங்க மக்கா ! அடுத்த வருசத்துக்கு போலாம்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!!!!

எல்லா வளமும் பெற்று இன்புற்றிருக்க .. எல்லாம் வல்ல இயற்கையை பிரார்திக்கிறேன்...

அன்புடன்,

இராமசாமி .
இராமசாமி கண்ணண்.

24 டிச., 2010

கூட்டுப்புழு

6

இப்பொழுதுதான் சற்று தூறி முடித்திருந்தது. 

மாடியில் உள்ள ரூமில் கட்டிலில் உட்கார்ந்து நான் படித்துக்கொண்டிருந்தேன்.

“ மழை பேஞ்சிருந்தாவது ஒரளவு குளிந்தா மாதிரி இருந்திருக்கும். இந்த தூறல் வேற சனியன் மாதிரி.. வெக்கையை இன்னும் கிளப்பி விட்ருத்து... ” விசிறுக்கொண்டே சமையலுள் நிலைப்படியில் தலைசாய்த்திருந்தவளுக்கு “ அம்மா பால்” பால்காரன் செல்வத்தின் குரல் கேட்டது.

 “ ஏய் ரமா இங்க வா” பாவுலிருந்து சத்தம்.. அப்பா... ரிடயர்டு ஆனதிலிருந்து பாவுல்தான் அவருக்கு எல்லாம்... சாப்பாடு, தூக்கம் எல்லாம் அங்கேதான்.. காலைக் கடன்களுக்கும், குளிப்பதற்கும் தவிர்த்து சதா சர்வ காலமும் பாவுல்தான்..

 “ ஏய் ரமா.... ஏய் யாரவது அங்கே இருக்கேளா... இல்லேன்னா எல்லாரும் போய் சேந்துட்டேளா”. வாசலில் பால் காரன் செல்வத்திடம் பால் வாங்கி கொண்டிருந்த அம்மாவுக்கு இப்போது அப்பாவின் குரல் கணிரென்று கேட்டது.. பாத்திரத்தை அப்படியே வைத்து விட்டு உள்ளே ஒடினவளிடம்

 “ அம்மா எம்முட்டுமா” செல்வத்தின் குரல் கேட்டாலும் பதில் சொல்லாமல் அம்மா ஒடினாள்... ஒடினாளா ? அவள் நடந்து போன வேகம் அப்படித்தான் இருந்தது. 

“ இன்னும் நாலு வீட்டுக்கு போக வேணாமா... இந்தம்மா வேற”  செல்வம் முனங்கி கொண்டு இருந்தான்.

வேகமாக வந்தவள் பாவுல் நிலையில் ஒரு ஒரமாக சாய்ந்து நின்றாள்.

“ சொல்லுங்கோன்னா” என்றவளிடம்

 “ கூப்பிட ஒடன்ன வராம்ம எங்க ஒழிஞ்சு போயிட்டே”  என்று திரும்பி கூட பார்க்காமல் எரிந்து விழுந்தார்.  சற்று நேரம் எதுவும் பதில் சொல்லாமல் அப்படியே நின்றாள். அவளுக்கு தெரியும் என்ன பதில் சொன்னாலும் அதுக்கும் ஏதாவது வந்து விழுமென்று.

அம்மா இப்படிதான். அப்பா திட்டினாலும் அடித்தாலும் இது நாள் வரையிலும் ஒன்றும் சொன்னதில்லை. எனக்கு விவரம் புரிந்த வயதிலிருந்து அப்பா இப்படித்தான். அம்மா என்று இல்லை , நான், சுதா யாரிடமும் சிரித்து பேசியதில்லை. அதுக்காக அவர் முசுடு ஒன்றும் இல்லை. என்னையும் , சுதாவையும் நன்றாக படிக்க வைத்திருந்தார். சுதா படிப்பதற்கு , பொண் குழந்தைகள ஏன் படிக்க வைக்கனும் என்று அக்கம் பக்கம் வந்த முனங்கல்களை அவர் ஒரு பொருட்டாக மதித்ததும் கிடையாது.

 “ சுந்தரா செத்த கிழ வா... அப்பா கூப்பிடறார் பார்” அம்மாவின் குரல் கேட்டதும் படித்து கொண்டிருந்த புக்கை மூடி வைத்து விட்டு கிழே வந்தேன்.  கிழ வரவும் பால்காரன் நியாபகம் வந்தவள் மாதிரி அம்மா வாசல் நோக்கி போனாள். நான் பாவுல் நிலைப்படியில் போய் நின்றேன்.

“ என்னடா நீ.. வயசுக்கு வந்த பொம்மனாட்டி மாதிரி அங்க நின்னுண்டு இங்க வா” என்றார்.

 உள் நுழைந்து “ அப்பா” என்றவனிடம்

 “ என்ன பன்னிண்டுருக்க” என்றார்.

 “ பி.எஸ்.ஆர்.பி” அப்ளை பன்னிருக்கேன்பா.. அதுக்கு பிரிப்பேர் பன்னின்ண்டு இருக்கேன்” என்றேன்.

“ எப்ப எக்ஸாம்” கேட்டவரிடம் “ அடுத்த மாசம்பா” என்று சொல்லி முடிப்பதற்குள் “ சுதா எங்க ? “ என்றார். 

“ தெரியலப்பா.. அம்மாகிட்ட கேட்டு சொல்றேன்” என்றவனிடம் “ செரி செரி இருக்கட்டும்... வெளில போறியா” என்றார்.

“ இப்ப இல்லப்பா கொஞ்ச நேரமாகும்பா” என்றேன். 

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர் “ செரி செரி வழில எங்கயாது வக்கில குமாஸ்தா சவுந்தர்ராஜன பார்த்தேனா ஆத்து வரைக்கும் வந்துட்டு போ சொல்லு” என்றார்.

 “ சரிப்பா ”  என்று நின்று கொண்டிருந்தேன். வேறு எதுவும் சொல்லாமல் ஏதோ நியாபகத்தில் ஆழ்ந்தவரை புரிந்து கொண்டு நானே அந்த இடத்தில் இருந்து நகர்ந்தேன். மாடியில் ஏற போனவனை “ சுந்தரா... இங்க வா” அம்மா குரல் அழைக்க சமையலுள்ள நோக்கி நகர்ந்தேன். 

“ இந்த சீனி டப்பாவா கொஞ்சம் எடுத்து தாடா.. எனக்கு எட்டலை” என்றாள். 

அவளையே பார்த்துக்கொண்டு “ ஏம்மா ஸ்டுல கொண்டு வந்து போட்டு எடுத்துகலாம்ல” என்றவனிடம் “ அடுப்புல பால் காயறதுடா.. இல்லேன்னா நான் எடுத்துக்க மாட்டேனா” என்றாள்.

முனங்கி கொண்டே எடுத்து கொடுத்தவனிடம் “ கொஞ்ச நேரம் இரு.. காபி போட்டுடறேன்.. குடிச்சுட்டு மேல போ” என்றாள். தலையசத்தவாறே ஹாலுக்கு வந்தேன். சற்று நேரம் தரையில் கிடந்த ஹிந்து பேப்பரை பொரட்டி கொண்டிருக்கையில் அம்மா கையில் காப்பியுடன் வந்தாள்.

 “ ஏய் ரமா கொஞ்சம் தீர்த்தம் எடுத்துண்டு வா” அப்பாவின் குரல் கேட்க கையில் காப்பி டம்ளரை தினித்து விட்டு அப்பாவுக்கு தண்ணி எடுத்து கொண்டு ஒடினாள். காப்பி குடித்து முடித்து விட்டு சமையலுள்ளில் கொண்டு போய் டம்ளரை வைத்து விட்டு திரும்புகையில் எதிர்க்க வந்த அம்மாவிடம் “ சுதா எங்கம்மா” என்றேன்.

“ யாரோ சிநேகிதியாளா பார்த்துட்டு அப்படியே லைப்பரிக்கு போயிட்டு வரேன்னு போயிருக்காடா” என்றாள்.

“ செரிம்மா நான் மாடில உட்கார்ந்து படிச்சுண்டு இருக்கேன்.. எதுவும் வேனும்னா கூப்பிடு” சொல்லிவிட்டு மாடியேறினேன். வாசல் கதவை திறக்கும் சத்தமும் “ அண்ணா” என்ற சுதாவின் குரலும் , “சுந்தரா” என்ற அப்பாவின் குரலும் ஒரு சேர கேட்டது. 

-- தொடர்வேன்.

பின்குறிப்பு : இன்னும் இரண்டு பகுதிகளில் கண்டிப்பாக முடித்து விடலாம் என்று தொடங்கியிறுக்கிறேன்.

இராமசாமி கண்ணண்.

17 டிச., 2010

தமிழ்மணமும் .... என் பதிவும்

12

மக்கா எப்படி இருக்கீங்க எல்லாரும்...

தமிழ்மணம் இந்த வருஷம் வச்சுருக்கற போட்டியில நானும் என்னோட ஒரு பதிவ இனச்சுருக்கேன்..

முதுமையில் காதல்

படிங்க .. பிடிச்சா ஒட்டு போட்டு ஆதரவு தாங்க..

இராமசாமி கண்ணண்.

30 நவ., 2010

தேடல் உள்ள வாழ்வினிலே தினமும் ருசி இருக்கும்

22


 நம் வாழ்க்கையில் பல தரப்பட்ட மனிதர்களுடன் கைகுலுக்கும் தருணங்களை நமக்கு ஏற்படுத்தி தருவது புத்தக்ங்களும், பயணங்களும் தான். அந்த தருணங்களில் நாம் சந்திக்கும் மனிதர்கள் நம்மை அறியாமல் நமக்குள்ளும் ஏதேனும் விசயங்களை பதிய வைத்து விட்டு சென்று விடுவர்.  அத்தகைய பயணங்கள் எல்லோருக்கும் வாய்பது இல்லை.  நம்மிடத்தில் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. 

அதை போன்ற ஒரு பயணத்தை உணர கூடிய அனுபவத்தை தருகிறது மிஷ்கின்னின் இந்த மொழிபெயர்ப்பு கவிதை.  எல்லோருக்கும் உண்டான அரிசி மணிகள் இந்த படம் முழுதும் சிதறிக்கிடக்கின்றது. உங்களுக்கு உண்டான அரிசி மணியை நான் எடுத்துக்கொடுக்க கூடாது. அதை நீங்களே எடுத்து கொள்ளுங்கள்.  

ஐந்து வயதில் அம்மா என்னை “சனியனே” என்றும் கொஞ்சிய பொழுது ஏண்டி கொழந்தய எப்ப பார்த்தாலும் திட்டிண்டே இருக்க் என்று அனைத்த அண்ணத்து மாமியிடமும், பத்து வயதில் ஊரில் உள்ள அத்தனை வம்புகளயும் இழுத்து கொண்டு வந்த போது அடித்த அம்மாவிடம் இருந்து என்னை இழுத்து கொண்டு ஏண்டி எப்ப பார்த்தாலும் பிள்ளய திட்டிக்கிட்டே இருக்க, அவன் சூப்பரா வருவான் பாரு என்று அன்பு கரம் நீட்டிய மைதிலி மாமியடமும்,  வீட்டில் பிடித்த சாப்பாட்டை சமைக்காததால் கோபித்து கொண்டு சாப்பிடமால் பள்ளிக்கு வரும் வழியில் அன்புடன் அழைத்து அன்னமிட்ட வள்ளியம்மை டிச்சரிடமும் ஒடுகிறது எனது மனம் இந்த் படத்தை பார்க்கயில். அந்த சிறுவன் அந்த பெண்ணிற்கு அவன் அத்தனை நாள் தேக்கி வைத்த முத்தத்தை கொடுக்கயில் ஏனோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற என் அம்மாவின் நெத்தியில் ஒரு முத்தமாவாது கொடுத்து விட துடிக்கிறது என் மனசு..

அம்மா.. I  Miss You....
 அன்புடன் ,
இராமசாமி கண்ணண்.

14 நவ., 2010

Abandoned 2010 --- ஆங்கிலம்

17


 மேரி வால்ஸ் ஒரு வங்கியின் மேனேஜர். சில மாதங்களுக்கு முன்னாடி தன் தாயை இழந்தவர்.  முக்கியமாக ஒரு அழகிய இளம்பெண்.  கெவின் பீட்டர்சன் என்ற பீரிலான்ஸ் கன்ஸ்டல்னடுடன் நான்கு மாதமாக காதலில் வி(ழ்)ழுந்திருப்பவர்.   தன் காதலனின் கால் அறுவை சிகிச்சைக்கு வேண்டி அவரை மருத்துவமனையில் விட்டு விட்டு திரும்பியும் அவரை கூட்டிச்செல்ல வேண்டி மருத்துவமனைக்கு வருகிறார்.   அறுவை சிகிச்சைக்கு ஒரு மணி நேரம் முன்னாடி வரை அவருடன் இருந்துவிட்டு , முடியும் தருவாயில் காதலனை பார்க்க திரும்பி வருகிறார்.

திரும்பி வந்து பார்கையில் காதலனை கானாமல்  , அந்த மருத்துவமனை முழுக்க தேடுகிறார். மருத்துவமனை கணிணியிலும் அவரது காதலனை பற்றிய ஒரு தகவலும் இல்லை என்கின்றனர்.  அத்துடன் அவரது காதலனின் அறுவை சிகிச்சையை செய்யும் அந்த டாக்டரும் அன்றைய தினம் விடுப்பில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது மருத்துவமனையின் நிர்வாகத்தினால்.  அவரது காதலைன அட்டன் செய்த நர்ஸின் பெயரை சொன்னால் அப்படி ஒரு நர்ஸ் அங்கே வேலை செய்ய வில்லை என்கின்றனர். 

மேரி வால்ஸின் குழப்பமான தகவல்களையும் , செய்லகளையும் கானும் மருத்துவமனை நிர்வாகத்தினர் , ஒரு போலிஸ் டிகட்டிவை வர வழைக்கின்றனர்.  அவரும் மேரி வால்ஸிடம் பேசிய பின்  அவரும் அந்த மருத்துவமனை முழுதும் அலசிப்பார்த்தும் , மேரி வால்ஸ் சொன்ன மனிதனை பற்றி ஒரு தகவலும் கிட்டாமல் போகிறது.  இதற்கிடையில் மேரி வால்ஸின் ந்டவடிக்களை கண்டு அவ்ரை ஒரு மனநோய்  மருத்துவரை விட்டு டெஸ்ட் செய்கிறது மருத்துவமனை நிர்வாகம்.  

இதற்கிடையில் மேரி வால்ஸ் அவள் சொன்ன காதலினின்  சோசியல் செக்கூயிரிட்டி எண்ணும் வேரு ஒரு பெண்ணின் சோசியல் செக்கூயிரிட்டி எண்ணாக இருக்கிறது.  மொத்ததில் மேரி ஒரு ந்டக்காத சம்பவத்தை பற்றி சொல்வதாக அனைவரும் நினைகின்றனர். ஆனால் மேரியோ தான் சொல்லும் அத்தனையும் நிஜம் என்று திரும்ப திரும்ப சொல்கிறார். இதற்கிடயில் கெவினின் லேப்டாப் தனது காரில் இருப்பது நினைவுக்கு வர பார்க்கிங்க் லாட்டில் உள்ள தனது காரில் சென்று பார்ப்பதில் அதுவும் இல்லாமல் போக மிகவும் குழம்பி போகிறார்.

இதற்கிடையில் அவர் சொல்வது நிஜம் என்று சொல்வதினால் அவரது காதலனை கண்டு பிடிக்காமல் , அவரால் அந்த மருத்துவமனைய விட்டு வெளியேற மருத்துவமனை நிர்வாகமும், போலிஸ் டிடெக்டிவ்வும் தடை விதிக்கிறார்கள். இடையில் காதலனும் போன் செய்து தான் ஒரு சிக்கலில் மாட்டியிருப்பதாகவும், தன்னை சிலர் கடத்தி அந்த மருத்துவமனையில் வேறு ஒரு பகுதியில் வைத்து துன்புருத்துவதாகவும் சொல்ல , மேரியின் டென்சன் எகிறுகிறது. மருத்துவமனை பாதுகாவலர்களின் கண்ணில் மண்ணை தூவி தப்பித்து, காதலனை காண ஒடும்போது ஒரு கார் மோதி மேரி காயமுற, அந்த மருத்துவமனயிலேயே அவர் அட்மிட் செய்யப்படுகிறார்.மருத்துவமனை பெட்டில் மேரி இருக்க அவரை பார்க்க ஒரு மனிதர் வருகிறார்.

நிற்க...

நான் முழு கதையையும் சொல்லி விடுவேன் போலிருக்கிறது.. மேரியை சந்திக்க வரும் அந்த மனிதன் யார் ? .. . மேரியின் காதலன் கிடைத்தானா. ?. உண்மையிலேயே மேரி சொன்ன அடையாளங்களுடன், பேருடன் ஒரு மனிதன் இருக்கின்றானா ? ...   நீங்கள் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருந்தால் உங்கள் துடிப்பு எப்படி இருக்கும்.. அந்த துடிப்பை உணரவும் , மேல் உள்ள கேள்விகளுக்கு பதில் தெரியவும் கண்டிப்பாக படத்தை பாருங்கள்.

டிஸ்கி 1 :

இந்த் படத்தில் நடித்த அந்த இளம்பெண்ணை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.

டிஸ்கி 2 :

ஒரு சோகமான செய்தி அந்த இளம்பெண் இப்போது உயிருடன் இல்லை.அன்புடன்,
இராமசாமி கண்ணண்.

19 அக்., 2010

மனதை வருடிய பாட்டு

5

கடந்த மூன்று மாதங்களில் இந்த பாட்டை என்னையும் அறியாமல் ஒரு நாளைக்கு குறைந்தது 10 தடவையாது கேட்டு கொண்டிருக்கிறேன்.  பாடிய பாடகரின் குரலா அல்லது இசையா எதுவென்று தெரியவில்லை. இருந்தாலும் பாட்டை கேக்கையில் என்னதென்று சொல்ல முடியாமல் ஒரு உணர்வு மனதில் ஆணித்தரமாக உட்கார்ந்து கொள்கிறது,  பாடலை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட.

 பாடல் எழுதப்பட்ட மொழி மலையாளம். படம் பிரம்மரம். இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.


     Get this widget |     Track details  |         eSnips Social DNA   


.

பாடலை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

இராமசாமி கண்ணண்.

15 செப்., 2010

புகைப்பவர்களுக்கும் , புகைக்க எண்ணம் உள்ளவர்களுக்கும் ஒரு நிமிடம்

19

அன்பு நண்பர்களுக்கு,

நீங்கள் புகைப்பவர்களா....

ஒரு நிமிடம் சிந்தியுங்கள்....

நீங்கள் புகைப்பதினால் நீங்கள் உங்கள் உடம்பை சீரழித்து கொள்வதுடன், நீங்கள் வீடும் புகையால் மற்றவர்களின் உடல்நிலையையும் சேர்த்தே சீரழிக்கிறீர்கள்...


Please Dont smoke. Let us save our life and other's life too.

Please Read this Post.

இராமசாமி கண்ணண்.

31 ஆக., 2010

அஹிம்சாவாதி

52

இரண்டு ரொட்டி துண்டுடன்
ஒரு நாட்டு கோழி முட்டையில்
செய்த ஆம்லெட்டுடன்
காலை உணவை முடிச்சாச்சு.

ஆபிஸ் வரும் வழியில்
திறந்திருத்த கசாப்பு கடையில்
ஒரு முழு நாட்டு கோழியை
வீட்டுக்கு கொடுக்க சொல்லியாச்சு.

ஆபிஸ் வந்த பின் மனைவியை
கூப்பிட்டு கோழியின் கால் எழும்பை
சூப் வைக்க சொல்லியும் மிஞ்சியதை
கொளம்பாகவும் வைக்க சொல்லியாச்சு.

மணி பதினொன்றுக்கு ஆபிஸ் பாய்
கொண்டு வந்து வைத்த பிஸ்கட்டின்
மேல் ஒடிய எறும்பை கொன்று விட்டு
டியையும் குடிச்சாச்சு.

மரண தண்டைன சரியென சொன்ன
பக்கத்து சீட் காரனிடம் காந்தி பிறந்த
நாட்டில் மனிதனின் உயிர் எடுப்பது
பாவமுன்னு புத்தியில உரைக்க சொல்லியாச்சு.

மதிய உணவின் போது மரண தண்டனை
தப்பாங்க என கேட்ட மனைவியிடம்
 எவன் உசிரோ போச்சி நமக்கென்ன ஆச்சு
நீ பேசாம கொளம்ப ஊத்து என்று சொல்லி
மத்தியான சாப்பாட்டயும் முடிச்சாச்சு.

- இராமசாமி கண்ணண். 

18 ஆக., 2010

உமாசங்கரும் கணடனங்களும் சில கேள்விகளும்

76உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அதிகார வர்கத்தினரால் சஸ்பெண்ட் செய்ய பட்டிருப்பது கண்டிக்க தக்க செயல் தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.  அதற்காண எனது கண்டனங்களும்..

ஆனால் இந்த விசயத்தில் சில பதிவர்கள் ஜாதியை நுழைப்பது வரவேற்க தக்கதா ?... அதுதான் முற்போக்கா ?..  உண்மையிலேயே நாமெல்லாம் ஜாதியை ஒளிப்பதற்காக போராடி கொண்டிருக்கிறோமா ?.. இவர்கள் சொல்வது போல் அவர் அந்த ஜாதியை சேராமல் ஒரு முற்படுத்தபட்ட ஜாதியை சேர்ந்திருந்தால் அரசின் இந்த செயல் நியாயமா ?...  முற்படுத்தபட்ட ஜாதியை சேர்ந்த எந்த அதிகாரியும் நியாயமாக நடந்து கொள்வதில்லயா ?..ஒட்டுக்காக வாழ்கை நடத்துற அரசியல்வாதிதான் அவங்கள பிற்படுத்த பட்ட, பிற்படுத்த பட்ட திரும்பி திரும்பி அழுத்தி சொல்லி பிற்படுத்தி வச்சுருக்கானுங்க.. நம்மளும் அப்படித்தான் சொல்லனுமா ? ..

இன்னும் நிரைய கேள்விகள் கிளம்பிகிட்டே இருக்கு... ஒவ்வொன்னா வரும் ...

வாழ்க புரட்சியாளர்கள்.. வளரட்டும் தேசம் ...

-- இராமசாமி கண்ணண்...

டிஸ்கி1 : திட்டவறங்க இராமசாமிய மட்டும்தான்  திட்டனும்.. கண்ணண இல்ல.. என்ன பெத்து போட்டத தவிர அவரோட பங்கு இதுல்ல ஒன்னும் இல்ல...

டிஸ்கி2 : இந்த பதிவுலயும் எழுத்துப்பிழை பார்க்கிறவங்களுக்கு நன்றிகள் பல...

2 ஆக., 2010

ரோசாமலரே ராசகுமாரி

22


 இந்த காலத்துல நடிக்கறதல்லாம்
என்னத்த சந்திரலேகா படத்துல
இராசகுமாரி என்ன அழகு தெரியுமா
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்
தாத்தா.

ரசினுகாந்தென்ன ரசினிகாந்து
அந்தகாலத்துல நான் மட்டும் அசந்திருந்தா
ஊரு பொண்ணுங்க அத்தன பேரும்
எனக்கு சக்களத்திகதான்
என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்
பாட்டி

- இராமசாமி கண்ணண்.

மாற்றங்கள்

17

பத்து வருடங்களில்
ரொம்பவும்தான்
மாறியிருந்தது ஊர்.

முத்து சலூன்
முத்து ஹேர் ஸ்டயில்ஸ்
ஆகியிருந்தது

வீரய்யா சலவை கடை
வீரா வாசர்ஸ் & டிரையர்ஸ்
ஆகியிருந்தது

மணியண்ணன் டீக்கடை
மணி டீ & ஸ்நாக் ஸ்டால்
ஆகியிருந்தது.

தனலட்சுமி பலசரக்குகடை
தனலட்சுமி சூப்பர் மார்க்கெட்
ஆகியிருந்தது

சேட்டு வட்டி கடை
நேமிக்சந்த் கல்வி அறக்கட்டளை
ஆகியிருந்தது.


- இராமசாமி கண்ணண்

7 ஜூலை, 2010

அம்மாவின் கருணை.

14

 “
இலங்கைச் செய்தி
வெள்ளைக் கொடிகளை அசைத்துக் கொண்டு சரணடைந்த விடுதலைப் புலிகளை கொன்றதை கண்டிக்கிறேன்: ஜெயலலிதா”.

(நன்றி : newindianews.com).

செய்தி வெளியான தினம்

[ புதன்கிழமை, 07 யூலை 2010, 05:06.41 AM GMT +05:30 ]

எனது கேள்வி :


கும்பகர்ணண விட தூங்கறதுல யாரு பெரிய ஆளு ?

5 ஜூலை, 2010

பனை போல் வாழ்வு

20

ஒராயிரம் பனை இருந்தும்
ஒத்த கள்ளு குடிக்க விட்டதுல்ல
என்ன சிவனாண்டி கிழவனுக்கு
பொழுது விடிஞ்சு பொழுது போனா
எப்போதும் இதே பாட்டுதான்
பேருதான் பெத்த பேரு
பெருந்தனக்காரருன்னு
ஒத்த கல்லு இது வரைக்கும்
வாச்சதுண்டா எனக்கு
மீனாச்சி கிழவியோட
பொலம்பில்லா நாள் இல்ல
கொள்ளு பேர பிள்ள கல்யாணத்திலயும்
பெருசுகளோட ரவுசுக்கு குறையில்ல
சொல்லிப்போச்சு சொந்த சனம்.

இராமசாமி கண்ணண்.

1 ஜூலை, 2010

கால இயந்திரத்தில் ஒரு பயணம்

13

நம்ம நண்பர் சிரிப்பு போலிஸ் ரமேஷ வலைஉலகத்தின் கிரியேட்டிவ் தல பிரியமுடன்.. வசந்த் சும்மா இல்லாம ஒரு தொடர் பதிவுக்கு  கூப்பிட நண்பனும் வேற வழியில்லாம இப்படி ஒரு பதிவ போட்டு தாக்கி கடைசில என்னயும் ஒரு பதிவ போட சொல்லிடாப்ல. அவர் என்னைய எழுத சொன்னது என்னானா

உங்களுக்கு ஒரு கால இயந்திரம் கிடைக்குது. அதுல ஏறி நீங்க பிறக்குறதுக்கு முன்னால எதோ ஒரு வருசத்துக்கு போகணும். எந்த வருசத்துக்கு போவீங்க. என்ன பண்ணுவீங்க. உங்களுக்கான தலைப்பு "கால இயந்திரம்" .

பய புள்ளைக்கு அப்படி என்ன கோபமோ நம்ம மேல.  ஆனா பாருங்க இதுல மாட்டிகிட்டு தினறுறது நீங்கதான். என்னத்த எழுதறதுன்னு ரோசன பன்னுனதுல இப்படி எழுதிபுட்டேன் பார்த்துகுங்க.

சாதியில்லை
மதமுமில்லை
மனித மனதில்
அன்பு மட்டுமுண்டு

சண்டைகளில்லை
இன்னல்களில்லை
மனித மனதில்
மனிதத்திற்கோர் இடமுண்டு

ஏமாற்றுபவர் இல்லை
ஏமாறுபவரும் இல்லை
மனிதரிடையில்
நேர்மை என்றொரு குணமுண்டு

கவலைகள் இல்லை
கபடங்கள் இல்லை
மனித மனதில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டுமுண்டு

ஏழையில்லை
பணக்காரனுமில்லை
மனிதரிடத்தில்
எல்லோரும் சமம்
என்றோர் எண்ணமும் உண்டு

நான் இல்லை
நீ  இல்லை
மனிதரிடத்தில்
நாம் என்னும் எண்ணம்மட்டுமே உண்டு


அப்படியோர் காலமும்முண்டோ
கண்டவர்கள் சொல்லுங்கள்
என் கால இயந்திரத்தில்  
நமக்கோர் பயணமும் உண்டு

அவ்வளவ்வுதான் மக்கா நம்மளுக்கு தோனுனது. நம்ம கிரியேட்டிவ் தல சும்மா இல்லாம இதுல ஒரு சட்டம் (Rule) போட்ருக்காப்ல. என்னன்னா இன்னும் ரெண்டு பேத்த தொடர் பதிவெழுத நம்ம கோத்து விடனுமாம்(என்னா வில்லத்தனம்). தலயாச்சே பேச்ச கேக்காம இருக்க முடியுமா சொல்லுங்க.

நான் கூப்பிட போற அந்த ரெண்டு பேரு யாருன்னா.

முத பலி

நம்ம தானை தலைவி டாக்டர் வெட்டிப்பேச்சு சித்ராக்காதான்( நாங்களாம் யூத்துல). திடிர்னு நம்ம கடவுள் சார்வாள் உங்க முன்னாடி வந்து மறுபடியும் நீங்க உங்க வாழ்க்கைய குழந்தை பருவத்துல இருந்து ஸ்டார்ட் பன்னி புச்சு புச்சா எதுனாச்சும் பன்னிக்கலாம் அப்படின்னு ஒரு வரம் கொடுத்தா என்ன என்னலாம் பண்ணலான்னு நீங்க நினைப்பீங்க. உங்களுக்கு உண்டான தலைப்பு “ மீண்டும் குழந்தை பருவத்திலிருந்து”.

ரெண்டாவது பலி

காமிக்ஸ் புடிக்கும்ல ஜெய் உங்களுக்கு. உங்களுக்கு கடவுள் ஒரு காமிக்ஸ் கேரக்டரா மாறுறதுக்கு சாய்ஸ் கொடுக்கறார்னு வெச்சுகங்க. நீங்க எந்த காரக்டர சூஸ் பன்னுவீங்க. ஏன் அப்படின்னு எழுதறீங்களா.  மாட்டி விட்டதா நினச்சுகாம கொஞ்சம் எழுதுங்க.

29 ஜூன், 2010

நொடிப்பொழுதினில்

13

வாழ்கையில்
இன்பமும் துன்பமும்
வந்து போக
நொடிப்பொழுது போதும்
 உங்கள எனக்கு பிடிச்சிருக்கு
நீ சொன்ன அந்த நொடி
இன்பமெனில்
உங்களுக்கு சமைக்க தெரியுமா
நான் தலையசைத்த அந்த நொடி
துன்பமின்றி வேறேன்ன

27 ஜூன், 2010

முதுமையில் காதல்

24

அம்பது பேரபுள்ள பாத்த
ஆறுமுகம் கிழவனுக்கு இன்னிக்கு
எம்பது வயசாச்சம்
வந்த சொந்த பத்தம் அத்தனயும்
கூடத்தில சுத்தி நிக்க
பொக்க வாய் கிழவன் பக்கத்துல
விசலாச்சி ஆச்சி நின்னது கூர புடவயில
பொக்க வாய் கிழவன சொன்னான்
மரப்பாச்சிக் பொம்மைக்கு
எட்டு கசத்துல புடவைய பாருன்னு
ஈக்க மாரு குச்சிக்கு
வேட்டி கட்டி விட்டதாருன்னு
விசலாச்சி ஆச்சி போட்டு தாக்க
பொக்க வாய் கிழவனுக்கு புரை ஏறிடிச்சு
கீர்த்தி சிறுசானலும் மூர்த்தி பெறுசு பாரு
சுத்தி நின்ன கூட்டத்த காட்டி கிழவன் சொல்ல
போகப்போற வயசு வந்தும் குசும்ப பாரு
விசலாச்சி ஆச்சி விரட்ட
சீக்கிரம் போக விடு இந்திரலோகத்துக்கு
மேனகையும் ஊர்வசியும் இருக்காக எனக்கு
பொக்க வாய் கிழவன் குசும்பு காட்ட
உனக்கு முன்னாடி நான் அங்க இருப்பேன்
ஆச்சி சொல்லி விசும்ப கிழவன் சொன்னான்
நா இல்லாம நீ போயிருவியான்னு.

25 ஜூன், 2010

பாட்டியுமானவர்

20காக்காய்க்கு சோறுவைத்த பாட்டியிடம்
“ஏன் பாட்டி காக்காய்க்கு சோறு வக்கிற”
கேட்ட பேரனிடம் பாட்டி சொன்னாள்
“ அது காக்காய் இல்லப்பா , உன் தாத்தா”
பின்னொருநாளில்
காக்காயக்கு சோறுவைத்த அம்மாவிடம்
“ யாரும்மா அது தாத்தாவா “
கேட்ட மகனிடம் அம்மா சொன்னாள்
“ இல்லப்பா அது பாட்டி”.

18 ஜூன், 2010

தாமு

18

வீக் எண்டு முடிந்து வாரம் ஆரம்பித்திருக்கிறது இன்று.  காலையில் அவசரம் அவசரமாக குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு வந்தேன். சிரியல்ஸும் காப்பியும் ரெடியாக இருந்தது. என் சகதர்மினியிடம் இட்லி தோசை கேட்டால் நான்கு வருடத்திற்கு முன் டாக்டர் என் உடம்பின் வெயிட் கூடிப்போனதற்கு அப்போது பாலோ பண்ண சொன்ன  டயட்டை பற்றி ஒரு ஒரு மணி நேரம் கதாகாலட்சேபம் செய்ய ஆரம்பித்து விடுவாள். அதனால் காது வலிக்கு பயந்தே சீரியல்ஸே நலமாகி போனது எனக்கு.

சீரியல்ஸை சாப்பிட்டு கொண்டே டீவியை போட்டால் சி.என்.என்னனில் குட்டை பாவடை போட்டிருந்த ஒரு பாட்டியும் , கோட் சூட் போடு டை கட்டியிருந்த ஒரு தாத்தாவும் ஒபாமா வீட்டு நாயின் புகழ் பாடி கொண்டிருந்தனர்.

“ என்ன டீ.வீ. வேண்டி கிடக்கு. மானிங் 8.30 ஆச்சு ஆபிசுக்கு கிளம்ப வேணாம்மா” இடி மாதிரி வந்து இறங்கியது என் சகதர்மினியின் குரல்.

குட்டை பாவடையை ஆப் செய்து விட்டு நகர்ந்தேன். சாக்சை மாட்டுகையில் “ ஜன கன மன” ஒலிக்க சாக்சை மாட்டுவதை நிப்பாட்டி விட்டு அப்படியே அட்டென்சனுக்கு மாறினேன். ஒலித்தது என் செல்போன் ரிங்டோன்தான். அமெரிக்கா வந்தாலும் ஒரு தேசப்பற்றுதான். செல்போனை எடுத்தால் “நட்டு காலிங்” என்று வந்தது.

நட்டு = நடேசன் என் நண்பன் நியுயார்க்கில் இருந்து கால் பண்ணிணான். 

“ சொல்றா நட்டு” என்றேன்.

“ டேய் மாமா. உனக்கு ஒரு ஹாப்பி நியுஸ், ஒரு சாடு நியுஸ். எத முதல்ல சொல்லட்டும்” என்றான் சந்தோஷம் கலந்த குரலில்.

“ என்ன இந்தியா போறியா. உன்னய வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா” என்றேன்.

உங்களிடம் சொல்ல முடியாத ஒரு கெட்ட வார்த்தை அவனிடம் இருந்து வந்தது. போனை டெட்டால் ஊற்றி கழுவ முடியாதே என்ன செய்ய ?. 

“ தாமு யூ.எஸ் வந்திருக்கான். இது ஹாப்பி நியுஸ். அவன் உன்னைய பார்கனும்னு சொன்னான் இது ஹாப்பியா என்னன்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்றான்.

இதற்குள் என் கார் நிறுத்தி இருந்த பார்க்கிங் லாட்டுக்கு வந்திருந்தேன்.


காரில் சாவியை சொருகி காரை ஸ்டார்ட் செய்யும் போதா நட்டுவின் வாயினில் இருந்து வந்த அந்த வார்த்தைகளை என் செல் போன் என் காதில் துப்ப வேண்டும். ஏதோ பூகம்பம் வந்த மாதிரி என் காரே நடுங்கி போனது. நல்ல வேலை பூகம்பம் இல்லை. தாமு என்ற பெயரை கேட்டதில் என் கார் சற்றே நடுங்கி போயிருந்தது. சற்றே வயதான கார் அது.

“ ஏண்டா மாப்பிளை நீ இங்க வந்துட்டுபோனப்ப கூட உனக்கு சிவாஸ் ரீகல்லாம் வாங்கி தந்து நல்லாதானடா கவனிச்சேன். நீ ஏண்டா இப்படி பண்றே” என்றேன் கலக்கமாக.

“ நான் என்னடா பண்ண. அவன் தான் உன்னோட போன் நம்பர் கேட்டான். கொடுத்திருக்கேன். பேசுவான். பேசிக்கோ” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

விதி வலியது என்று மனசில் நினைத்துகொண்டு காரை ஸ்டார்ட் செய்தேன். ஒரு வலியாக ஆபிஸ் வந்தாயிற்று. ஆபிஸில் நுழைந்து சேரில் உட்கார்ந்து சிறிது நேரம் வேலை ஒடியிருக்கும். திரும்பியும் என் போன் நம் நேஷனல் ஆந்தந்தை பாட ஆரம்பித்தது. எடுத்து பார்த்தால் “ அன்நோன் நம்பர்” என்று வந்தது.

கால் அட்டென்ட் செய்து “ ஹலோ” என்றேன்.

“ ஹாய். கான் ஐ ஸ்பிக் டு சந்துரு” என்றது எதிர்பக்கம்.

“ எஸ். மே ஐ நோ ஹூ இஸ் திஸ்” என்றேன்.

“ டேய் நண்பா. நான் தாண்டா தாமு பேசறேன்” என்றதில் ஆரம்பித்த பேச்சு சில மணி நேரங்கள் நீடித்தது.

“ உங்கிட்ட பேசுனது ரொம்ப சந்தோசம்டா. உன்னைய பார்கனும்டா. நான் சனிக்கிழமை வரேண்டா அங்க” என்று முடித்தான் அல்லது முடிவெடுத்தான்.என் மெள்னம் அவனுக்கு சம்மதமானது.


ஆபிஸ் முடிந்து வீடு திரும்பியதும் , ரெப்ரேஸ் பண்ணிக்கொண்டு வெளியே வந்த ஹாலில் அமர்ந்து டீ.வியை ஆன் செய்தவுடன்

“ என்ன ஜிம்க்குக்கு போகலியா” என்ற என்னவளிடம்

“ இல்லை இண்டியன் ஸ்டோர் போனும்” என்றேன்.

“ நான் எதுவும் வாங்கனும்னு சொல்லலியே” என்றாள்.

“ இல்லம்மா. சனிக்கிழமை பிரண்டு வரேன்னு சொல்லிருக்கான். ஏதானும் ஸ்நாக்ஸ் வாங்கலான்னு” என்று இளுத்தவனிடம்

“ எனக்கு தெரியாம யார் அது பிரண்டு” என்று ஆரம்பித்தவளிடம் நான் சொன்னது பின்வருமாறு.

தாமு சுருக்கமாக தாமோதரன் எங்கள் ஜமாவின் செண்டர் ஆப் அட்ராக்‌ஷன் சிறு வயதில்.  எங்கள் ஊரில் இருந்த மீனாச்சி பஸ் சர்விஸ் ஒனர் நல்லமசாமி நாயுடுவின் ஒரே புத்திரன். இது வரையில் மட்டும் தான மனைவியிடம் சொன்னது. இனிமேல் ஒங்களுக்காக.

அவனுக்கு அம்மா கிடையாது. அவனது சிறு வயதிலேயே இறந்திருந்தார்கள். தாயில்லாத பிள்ளையாகி போனதால் அவனுக்கு எங்கு போனாலும் செல்லம்தான். யாரும் திட்டி வள்ர்காததினால் அவனது உடம்பு ஏகபோகத்திற்க்கு வளர்ந்திருந்தது. ஒரு முறை ஆத்திரத்தில் என் மீது அவன் கை பட்டதில் என் தோள் பட்டை சற்று இரங்கிப்போய் வெங்கடாசலபுரம் நாயக்கர் ( இவர்தான் எங்கள் ஊரில் எலும்பு மருத்துவர்) போய் சரி செய்ய வேண்டியதாய் போனது.

எங்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கும், இன்ன பிற விசயங்களுக்கும் அவனை நம்பி இருக்கவேண்டியிருந்த்தால் அவனை எதிர்த்து எங்களால் ஒன்றும் செய்ய முடியாததாயிருந்தது. அவனின் பராக்கிரமங்களை சொல்வதென்றால் எவ்வளவ்வோ விசயங்களை சொல்லி கொண்டு போகலாம். ஆனால் ஒரு பானை சோற்றிற்கு ஒரு பருக்கை போதும் பதம் பார்பதற்கு. இருந்தாலும் நான் இரண்டாகவே சொல்கிறேன்.

முதல் சம்பவத்தில் பாதிக்கபட்டது என் அக்காவும் மாமவும். அப்போதுதான் திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு வந்திருந்தார்கள் அக்காவும் மாமாவும். மாமவிற்காக சில பறப்பனவும், நடப்பனவும் எங்கள் வீட்டு சமையலறையில் சமாதியாயிருந்தது. என் அம்மாவின் சமையல் மணத்தை எங்கிருந்தோ உணர்ந்த தாமு வாயு வேகம் மனோ வேகத்தில் அவனது வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்து விட்டான். யானை புகுந்த கரும்பு தோட்டம் மாதிரி ஆகிப்போனது எங்கள் வீடு.  நல்லி எலும்பு கூட தனக்கு மிஞ்சாத சோகத்தில் என் மாமா அந்த வருட தலை தீபாவளிக்கு கூட எங்கள் வீட்டு பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.

இரண்டாவது சம்பவம் நடந்தது எங்கள் கூட்டத்தில் இருந்த நண்பனுக்கு. எப்படியோ காதலில் அவன் அப்போதுதான் செட்டில் ஆயிருந்தான். வழக்கமாக
நாங்கள் கூடுமிடத்தில் அவன் மட்டும் மறைவாக் நின்று கொண்டு ஏதோ ஒரு அயிட்டத்தை திண்று கொண்டிருந்தான் என்று கேள்வி. இதை எப்படியோ உணர்ந்த தாமு அங்கே வந்து விட்டான். வந்த வுடன் நண்பனிடத்தில் இருந்த பாத்திரத்தை பிடிங்கி அந்த அயிட்டத்தில் இருந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டான். போட்ட மாத்திரத்தில் துப்பியும் விட்டான். துப்பியவன் சும்மாயில்லாமல் “ எங்கடா வாங்கின , ரங்கன்னா கடையிலயா” என கேக்க நணபனும் ஒன்றும் சொல்ல முடியாமல் தலையாட்டி தொலைய “ ஏண்டா. அவன் கிட்ட போய் வாங்கின. அவன் எப்பவுமே ஊசி போனதான்ன விப்பான்” என் சொல்ல நண்பணின் காதல் அம்பேல். ஏன் என்றால் மறைவில் நின்று கொண்டிருந்தது ரங்கனின் தங்கையான நண்பணின் காதலி.

ஒரு வலியாக இந்தியன் ஸ்டோர் போய் ஸநாக்ஸ் வாங்கி , வால்மார்ட் போய் சிக்கனும், மட்டனும் வாங்கி வந்து பிரிட்ஜில் அடுக்கியாயிற்று. அடுத்து வந்த நான்கு நாட்களும் ச்டாரேன காணாமல் போனது.  சனிக்கிழமை காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து விட்டு கந்த சஸ்டி கவசம் சொன்னவனை என் மனைவி முறைத்த முறைப்பு “ இவன் எப்போதிருந்து பைத்தியம் ஆனான்” என்று பார்த்த மாதிரி இருந்தது.

ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்தி காலை உணவுக்கு சிக்கன் குழம்பும் , இட்லியும் பண்ண சொல்லி விட்டு ஏர்போட்டுக்கு ஒடினேன். காரை பார்க்கிங்கில் போட்டு விட்டு, டெர்மினலி வெயிட் செய்து கொண்டிருந்தேன். திடிரெண்று தோளில் ஒரு கை வில யாரன்று திரும்பி பார்த்தால் கொஞ்சம் ஒல்லியாக ஒருவன் நின்று கொண்டிருந்தான். 

“ எஸ்” என்றேன். “ டேய் . சந்துரு நான் தாமுடா” என்றவனை அதிசயமாக பார்த்தேன். சிறு வயதில் பக்கோடா காதர் மாதிரி இருந்தவன் இப்போது வையாபுரி மாதிரி ஆகியிருந்தான். காரில் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். சிறிது நேரம் கழித்து சாப்பிட உட்கார்ந்தோம். என் மனைவி இட்லியும் , சிக்கன் குழம்பும் கொண்டு வர 

“ஐயோ இதல்லாம் வேண்டாம்மா. எனக்கு ஒட்ஸ் இருந்ததுன்னா, கஞ்சி போட்டு குடுத்துரும்மா. மத்தியான சாப்படுக்கு கூட தயிர் சாதம் இருந்தா போதும் ” என்று சொன்னான். அவன் சொன்னதை கேட்டு என்னவள் என்னை காதலுடன் பார்க்க என்னயறியாமல் என் வாய் 

 “ காக்க காக்க
    கனகவேல் காக்க
   நோக்க நோக்க
   நொடியினில் நோக்க”
கந்த சஷ்டி கவசத்தை பாட ஆரம்பித்திருந்தது.

14 ஜூன், 2010

ராமன் ரயிலேறிப்போனான்

14

   “ கிணி, கிணி, கிணி” ஸ்கூல் கடைசி பெல் அடித்தது.
  பெல் அடித்தவுடன் கிளாஸ் ரூமிலிருந்து பிள்ளைகள் சிட்டென வெளியே பறந்தனர். எல்லோரும் வெளியே போனவுடன் ராமன் அவனது மஞ்சபையை தூக்கி கொண்டு வெளியே வந்தான். அவனது இடதுகாலின் முட்டி சிராய்ந்து ரத்தம் கறையாக படிந்த்திருந்தது.  

மத்தியானம் சத்துணவு சாப்பாடு சாப்பிட்டு முடிந்தவுடன் விளையாட போய் நின்றவனை மற்ற மாணவர்கள் சேர்ந்து கேலி செய்து கிழே தள்ளியிருந்தததில் அவன் கால் முட்டி சிராய்திருந்தது. ஏற்கனவே அவன் வலது காலை விட இடது கால் சற்று வளர்த்தி கம்மிதான். அதனால் ஏற்கனவே சற்று விந்தி விந்திதான நடப்பான். இதனால் மற்ற மாணவர்கள் அவனை நொண்டி எனதான் கூப்பிடுவார்கள்.

பள்ளியின் வாசலை தொட்டவுடன் அவனுடன் படிக்கும் பூதப்பாண்டி ஸ்கூட்டர் ஒட்டுவது மாதிரி “டுர்.. டுர்” என சவுண்டு கொடுத்துக்கொண்டு ஒடி வந்தவன் அவனது அருகில் வந்து “ ஏய் நொண்டி வா டா என் கூட பைக்ல . நான் ஒன்னைய வீட்டுல கொண்டு போய் விட்டுறேன்” என்றான் என்னவோ நெஜ பைக் ஒட்டுறவன் மாதிரி.

“ இல்ல எங்க அப்பா எனக்கு ரயில் வாங்கி கொடுத்துருக்காரு. நான் அதுலதான் போவேன். நீ போ” என்றான் ராமன்.

“ போடா நொண்டி. இவங்கப்பா பெரிய இவரு. இவனுக்கு ரயில் வாங்கி தரப்போராராம்” என்று பரிகாசம் பண்ணிவிட்டு அவன் நகர்ந்தான்.

அடி பட்ட காலை தூக்கி நடக்க முடியாமல் மெதுவாக விந்தி விந்தி மெயின் ரோட்டை கிராஸ் செய்தவன் தேவர் சிலை அருகே வரவும் அப்பொழுது போன கூட்ஸ் டிரயின் கூக்கூ என சத்தம் கொடுத்து கொண்டு போகும் சத்தம் கேட்டவுடன் வலி மறந்து கூக்கூ என்று சத்தம் கொடுத்துக்கொண்டே ஒடத்துவங்கினான்.

அவனது வீடு தேரடியின் சமிபத்தில் இருந்தது. அவனது தந்தை லிங்கம் சாத்தூர் முனிசிபாலிட்டியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்பவன். அம்மா இசக்கிக்கும் அதே தொழில்தான். ஊரில் உள்ள பெரும்பாலனவர்களின் வீட்டிற்கு சென்று சாக்கடைகளை கழிவு விட்டு வருவாள். வீட்டிற்கு மாதத்திற்கு 25 ருபாயும் திபாவளி பொங்கலுக்கு போனசாக புடவை எனக் கிடைக்கும். இரண்டாவாதாக வயிற்றில் ஒரு குழந்தை வந்த வுடன் அவளால் முன்னர் மாதிர் இப்பொழுது எங்கேயும் போய் வர முடிவதில்லை.

ரயில் மாதிரி கத்திக்கொண்டே ஒடி வந்த ராமனால் பெருமாள் கோயிலை தாண்டி ஒட முடியவில்லை. நாகராஜன் சாரின் வீட்டிற்கு எதிரே வருகையில் கால் வலிக்க ஒட முடியாமல் கிழே படுத்துக்கிடந்த நாயின் மேல் விழப்போனான். இவன் மேலே விழுந்து விடுவானோ என்று பயந்தததில் அந்த நாயும் இவனை பார்த்து குரைத்ததில் பயந்தே போனான். பயத்தில் கணில் இருந்து தாரை தாரயாக் வழிந்த கண்ணிருடன் வீட்டை பார்த்து விந்தி விந்தி நடக்க ஆரம்பித்தான்.

இசக்கி அழுது ஒய்ந்து உடகார்ந்திருந்தாள். முடிந்து போன பீடித்துண்டு கையில் சுட வாயில் சொல்ல முடியாத ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்துக்கொண்டே அதை தூக்கி எறிந்தான் லிங்கம்.

திரும்பி குடிசைக்குள் எட்டிப்பார்த்தவன்  “ ஏய் அழுகைய நிப்பாட்டு முதல்ல. பிள்ள வந்த வுடனே அவன கூப்பிட்டு கிழம்பனும். துணியெல்லாம் எடுத்து வச்சியா நீ” என்றான்.

அத்தனை நேரம் அவனுடன் சண்டை போட்டு முடியாமல்

“ கடைசியா ஒரு தடவை யோசிங்க மாமா. புள்ளை பாவம் மாமா” என்றாள் இசக்கி.

ஆத்திரத்துடன் திரும்பியவன் எழுந்து வந்து அப்படியே அவளின் முடியை கொத்தாக பிடித்தான். வலி தாங்கமல் கத்தியவளை பொடுட்படுத்தாமல்

“ இன்னொரு தடவை இப்படி எதுவ்ம் சொன்ன கொன்னு போட்ருவேன்” என்றான்.

நொண்டிக்கொண்டே வீட்டினுள் நுழைந்த ராமன் “ அம்மா கால் வலிக்கு ” என்றான். ராமன் குரலை கேட்ட இசக்கி பையினுள் துணிகளை அடுக்கி கொண்டே திரும்பி பார்த்தாள். காலில் ரத்தக் கறையுடனும் கண்ணில் நீருடன் நின்றிருந்த ராமனை பார்த்த இசக்கி துடித்துப்போனாள்.

“ என்னையா ஆச்சு. எங்க விழுந்த” என்றாவாறு ராமன பிடித்து இழத்து காலை பார்த்தாள்.  

“ மத்தியானம் வெலாடுறப்ப பசங்க கிழ தள்ளி விட்டுடாங்க” என்றான் ராமன்.

“ ஐயோ ஏன் புள்ளைய தள்ளி விட்டவன் நாசாமப் போவ” என்று சாபமிட ஆரம்பிக்கவும் ,

“ ஏய் என்ன கத்திகிட்டு கிடக்க. துணிய எடுத்து வச்சியா இல்லயா”  என்று கத்திக்க்கொண்டே லிங்கம் உள்ளே நுழைந்தான்.

“ மாமா இன்னிக்கு, வேணாம் மாமா. புள்ள ஏற்கனவே அடிபட்டு வந்து நிக்கு” என்று இசக்கி சொல்லி முடிப்பத்ற்குள்,

இரைந்து கிடக்கும் துணிகளை பார்த்துக்கொண்டே “ எம்மா எங்கம்மா போறோம்” என்றான் ராமன்.

“ ரயில்ல போகபோறோம்” என்றான் லிங்கம்.

ரயில் என்ற வார்த்தையை கேட்ட வுடன் ராமனுக்கு வலி மறந்து போய் உற்சாகம் தொற்றிக்கொண்டது. கையை பிடித்திருந்த இசக்கியின் கையை உதறி விட்டு வெளியே ஒடினான்.

உற்சாகத்தில் வெளியே ஒடினவன் தனலட்சுமி தியேட்டரை தாண்டி சிவன் கோயில் தாண்டி தெப்பகுளத்தை தாண்டி “ கூக்கூ. குச்சு குச்சு” என்று திரும்பி திரும்பி ரயில் மாதிரி கத்திக்கொண்டே ஒடினான். வழியில் நாகராஜன் சாரின் விட்டை நெருங்கபோதும் மட்டும் ஸ்கூல் விட்டு வரும் போது குரைத்த நாய் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே கத்துவதை நிறுத்தாமல் தேரடியை நோக்கி ஒடவும் , அங்கே இருந்த சாத்தூர் முன்சிபாலிட்டியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பின்புறம் ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் சத்தம் கொடுத்துகொண்டே போவது அவன் கண்ணில் படவும் சரியாக இருந்த்து. 

ரயிலை பார்த்த சந்தோசத்தில் “ நாங்களும் ரயில்ல போறெமே” என்று கத்திக்கொண்டே வீட்டை பார்த்து ஒடினான்.  அவன் குரலில் கால் வலியின் தடம் முழுவதும் மறைந்து உற்சாகம் கரைபுரண்டு ஒடியது.

அவன் விட்டிற்குள் வரவும் இசக்கி எடுத்து வைத்த துணிபையுடன் லிங்கம் நின்று கொண்டிருந்தான் புரப்பட ஆயத்தமாக.

“ சரி வா போலாம்” என்றான் லிங்கம் ராமனை பார்த்து.

“ அம்மா” என்ற ராமனை பார்த்து “ அம்மா பின்னாடியே வரும் நீ வா போலாம்” என்றான் லிங்கம்.

கண்ணில் கண்ணிருடன் இசக்கி பிள்ளையை வழி அனுப்பி வைத்தாள்.

ரயில்வே ஸ்டஷனில் சுற்றி ராமனின் வயதொத்த பசங்களுடன் நின்று கொண்டிருந்த மனிதரின் அருகில் ராமனை அழைத்துகொண்டு போய் நிறுத்தி “அண்ணாச்சி” என்ற லிங்கத்தை பார்த்து திரும்பினார் அந்த மனிதர்.

திரும்பி பார்த்தவர் “ வா லிங்கம் “ என்றவரின் கண்கள் ராமனின் காலில் இருந்த காயத்தை பார்த்தார்.

“ என்ன ஆச்சுப்பா, கால்ல காயத்தோட நான் எப்படி கூட்டிட்டு போக” என்றார் லிங்கத்திடம்.

“ இல்ல அண்ணாச்சி சின்ன காயம்தான்” என்றான் லிங்கம் தலையை சொரிந்து கொண்டே.

“ இல்லல அங்க வந்து வேலை பாக்க முடியாமப்போச்சுனா முதலாளிகிட்ட நான்ல திட்டு வாங்கனும்” என்றவரிடம்

“ அதல்லாம் இல்ல அண்ணாச்சி” என்றான் லிங்கம்.

“சரி இந்தா” என்று லிங்கத்தின் கையில் சில ரூபாய் நோட்டுகளை திணித்தார் அந்த அண்ணாச்சி. ரூபாய் நோட்டை கண்டவுடன் லிங்கத்தின் முகம் மலர்ந்தது.

ரயில் வரவும் ஏறிய மனிதர் “ஏய் லிங்கம் ஒவ்வத்தனா ஏத்தி விடு” என்றார். எல்லாரயும் ஏத்தி விட்ட பின்னர் ராமன் அப்பா வராதை கண்டு

“ அப்பா நீ வரலியா” என்றான்.

“ இல்ல அம்மாவை கூட்டிகிட்டு பின்னாடியே நான் வாரேன். நீ அண்ணாச்சி கூட போ என்ன” என்று லிங்கம் சொல்லவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது.

ரயில் சத்தம் கொடுத்ததை கேட்டு  உற்சாகமாகிய ராமன் “ கூக்கு, குச்சு குச்சு” என ரயில் மாதிரியே கத்த அவனின் குரல் ரயிலின் சத்தத்துடன் கலந்தது.

10 ஜூன், 2010

கால்பந்து - சில நினைவு குறிப்புகள்

4

இதோ இன்னும் சில மணி நேரங்களே இருக்கிறது.  இந்த உலகமே கண்டு களிக்கப் போகும் கால்பந்து திருவிழா ஆரம்பிக்க. 8 குருப்புகளாக 32 அணிகள் மோதும் 64 போட்டிகள் கணகளுக்கு விருந்தாகபோகின்றன. சிறு வயதில் இருந்தே என் மனதை மிக கவர்ந்த விளையாட்டாக இருப்பது கால்பந்தாட்டம் தான். இதற்கு நான் பிறந்து வளர்ந்த ஊரும் படித்த பள்ளியும் காரணம். 

எங்கள் ஊர் சாத்தூரில் வருடம் தோறும் நடை பெறும் அரசன் கணேசன் சுழற் கோப்பை எங்கள் ஊரை பொருத்த மட்டில் உலககோப்பை கால்பந்து போட்டி மாதிரிதான் எங்கள் ஊர் மக்களுக்கு. எங்கள் பள்ளி மைதானத்திலே நடந்தாலும் பள்ளி நடைபெறும் நாட்களில் மைதானத்தை சுற்றி தட்டிப்போட்டு தடுப்பமைத்து பள்ளி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டிருக்கும். இந்த போட்டிகளில் ஆட தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் அணிகள் கலர் கலராக சட்டை அணிந்து கொண்டு கால்களில் பூட்களுடன் அவர்கள் விளையாடுகையில் அவர்கள் கால்களின் ஊடே உருண்டு செல்லும் அந்த பந்தின் மீதே அணைவரின் கவனமும் இருக்கும்.

தான் சப்போட் செய்யும் அணியினர் கோல் போட தவரும் போது காற்றில் தவழ்ந்து வரும் வார்த்தைகளில் ஒரு வித ஏமாற்றம் கலந்திருக்கும். கிரவுண்டை சுற்றி நிற்கும் சில மக்கள் தான் சப்போட் செய்யும் அணியினர் பந்தை கடத்தி வரும்போது  “ ஏய் இந்த பக்கம் பாரு. லெப்ட்ல ஆளே இல்ல . ப்ந்த இவன் கிட்ட பாஸ் பன்னு” போனற கமெண்டுகள் சகஜம். போட்டி முடிந்து கிளம்புகையில் மொத்த கூட்டமும்  “ அவன் ஏன் இப்படி ஆடறான். அந்த கார்னர் கிக் அப்ப இவன் அழகா அடிச்சான். கொஞ்சம் தலைய கரக்டா வெச்சு பட் அடிச்சுருந்தா கரக்டா உள்ள போய்ருக்கும்” போன்ற விவாதங்கள் சகஜம். எங்கள் ஊரே மிகவும் ரசித்த விளையாட்டு இது.  முக்கியமாக ஊரில் நடக்கும் பொருட்காட்சிக்கு வரும் கூட்டத்தை விட புட்பால் மேட்சுகளுக்கு வரும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

எங்கள் ஊரை சேர்ந்த ஒய்.எம்.சி.எ அணியினர் தினமும் சாய்ங்காலத்தில் எங்கள் ஸுகூல் கிரவுண்டில் பிராக்டிஸ் செய்வார்கள். அந்த காலத்தில் அவர்கள் எல்லாம் எங்களுக்கு ஹூரோக்கள்தான். செண்டர் பார்வர்டு ஆடும் சந்தானம் அண்ணண் எங்கள் எல்லோருக்கும் மரடோனாவாகத்தான் தெரிவார்.  கோல்கீப்பர் பொன்முருகன் இன்னொரு ஹீரோ. ஆள் ஒல்லியாக இருப்பார். கையில் கிளவுஸுடன் அவர் கோல் கீப்பராக நிற்பதே அழகு. அப்புறம் இன்னொருவர் லோடுமேன் கதிரேசன் அவர் பெயர். எனது பேவரைட் அவர்தான். ஒருமுறை அவர் அடித்த பந்து கோல்போஸ்டை தாண்டி பின்நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த என் தலையில் அடிக்க தலை என் உடம்பில் இருந்து தணியே பிய்துக்கொண்டு போகிறமாதிரி இருந்தது. அவர் உதைத்த உதை அந்த மாதிரி.

ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புக்கு உயர் நிலை பள்ளியில் சேர்ந்ததில் இருந்து பல பீ.டி. பிரியட்களில் கால் கட்டை விரல் தேய பள்ளி மைதானத்தில் ஒடியிருக்கிறேன் பந்தை துரத்திக்கொண்டு. ஆனால் எத்தனை கோல் போட்டிருப்பேன் என்றல்லாம் இடக்கு மடக்காக கேள்வியெல்லாம் கேக்க கூடாது.  ஆறாம் வகுப்பில் சேர்ந்ததில் இருந்து எங்கள் கிளாஸில் இருந்த எல்லாரும் இரண்டு அணிகளாக பிரிந்து பீ.டி பிரியட்களில் ஒரே மோதல்தான்.எங்கள் கிளாஸில் இருந்த குமரன் மற்றும் கிங்ஸ்லி இருவரும் தான் அணி கேபடன்கள். நான் குமரன் அணி.சட்ட திட்டங்கள் சரியாக தெரியாத அந்த வயதில் எல்லாரும் பந்தை துரத்தி கொண்டு ஒடிய அந்த பொழுதுகள் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.

அடுத்து வரும் நம் சந்ததியினருக்கு அப்படியெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.  நல்ல விளையாட்டு மைதானங்கள் உள்ள பள்ளிகள் அரிதாகி வருகின்றன. பள்ளிகளும் படிப்பதற்கு தரும் முக்கியத்துவத்தை விளயாட்டுகளுக்கு தருவதில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளை படி படி என்று விரட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். பிள்ளைகளின் ஒய்வு நேரத்தில் கூட தொலைக்காட்சிகளில் வரும் விளையாட்டு நிகழ்ச்சிகளை கூட பார்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த நேரங்களயும் சீரியல்கள் ஆக்ரமித்துகொண்டிருக்கின்றன. 

“ ஒடி விளையாடு பாப்பா. நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா” என்ற பாரதியின் பாட்டு ஏனோ நியாபகத்தில் வந்து போகிறது. உடல் உழைப்பை அறியாத ஆராக்கியமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் முயன்று கொண்டிருக்கிறோமோ என்ற கவலை மனதை அரிக்கிறது.  படிப்பு எவ்வளவ்வு முக்கியமோ அந்த அளவுக்கு விளையாட்டும் முக்கியம்தான். இதை பள்ளிகளும் பெற்றோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.  சுவர் இருந்தால்தான் சித்திரம். அதைப்போல் நல்ல உடல்நலமிருந்தால்தான் எவவளவ்வு படித்தாலும் நல்ல வாழ்க்கை வாழ முடியும்.

8 ஜூன், 2010

துணை

10

நான் கணேசன்.  நான் இந்த நகரத்தில் உள்ள ஒரு பலசரக்கு மொத்த வியாபர நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு சாதரண மனிதன். நியாயமாக சொன்னால் நான் கூலி அல்லது ஒரு நாய், நன்றியுள்ள நாய். நான் பிறந்து ஐந்து வயதிலெல்லாம் என் தாய் என்னை விட்டி பிரிந்து விட்டால் அல்லது இறந்து விட்டால்.  என் தந்தை எனக்கு ஒரு கேள்வி குறிதான். ஆம் எனக்கு என் தந்தை யாரனெ தெரியாது. நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளிகளின் யாரவது இருக்க கூடும் என்பது என் அனுமானம். ஏன் எனில் என் தாய் இறந்தவுடன் என் உறவினர்களில் யாரோ ஒருவரால் நான் இங்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டேன்.

அன்றிலிருந்து இங்கேதான் இருக்கிறேன். இருக்க இடம் மூன்று வேலை உணவு , உடுத்த துணி(ஏற்கனவே யாரவது உபோயகப்படுத்தியது) இதுதான் சம்பளம். வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கி கொள்ள வேண்டியதுதான். அதுக்கும் ஒரு நாள் வேட்டு வைத்த மாதிரி நடந்தது ஒரு சம்பவம். முதலாளிகளின் ஒருவரின் மகனை அண்ணா என்று கூப்பிட போக உறவு முறை வேண்டுதாட உனக்கு என்று அடித்து துரத்தப்பட்டேன். துரத்தினாலும் சுவத்தில் எறியப்பட்ட பந்தை போல திரும்பி வந்தேன் துரத்திய இடத்திற்கே. ஏன் என்றால் எனக்கு வேற போக்கிடம் இல்லாமல் இருந்ததுதான்.

திரும்பி வந்த எனக்கு வேலை செய்ய அனுமதி கிடைத்தது வெளியில் எங்காவது தங்கி கொள்ள வேண்டும், சம்பளமாக உடுத்த துணியும் , சாப்பிட உணவும் கிடைக்கும் போன்ற நிபந்தனைகளுடன். அதிலிருந்து தங்குமிடம் பிளாட்பாரம் ஆனது. வேலை செய்த களைப்புடன் இருப்பிடத்தில்(பிளாட்பாரம்) தூங்கி கொண்டிருந்த ஒரு இரவு அந்த சம்பவம் நடந்தது. தூங்கி கொண்டு இருந்த பொழுது யாரோ யாரையோ துறத்திக்கொண்டு ஒடுவது மாதிரி  இருந்தது. சிறிதி நேரம் கழித்து வெட்டுங்கடா அவன என்ற குரல்களுடன் பல பேர் சேர்ந்து ஒருவனை வெட்டுவது கேட்டது. சிறிது நேரம் கழித்து “ தண்ணி தண்ணி” என்று குரல் கேட்க எந்திருத்து பார்க்க ஒரு மனிதன் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். அவன் அதுவாக மாற ஆரம்பித்த தருணத்தில் ஏதோ ஒன்று என்னை ஊன்றி தள்ள எப்படியோ அந்த மனிதர் காப்பற்ற பட்டார்.

அடுத்த சில தினங்களில் வாழ்கையின் முதன் முதலாக ஒரு நட்பு ஏற்பட்ட தருணங்கள் அது. அந்த மனிதர் தோழர் ஆறுமுகம் என்ற ஒரு கம்யூனிஸ்ட் பிரமுகர். அவர் கற்று தந்த பல விசயங்களில் நான் ஒரு மனிதனாக உறுமாற தொடங்கினேன். அவர் என்னை நான் வேலை பார்த்த இடத்தில் இருந்து வர சொன்னாலும் அவர் சொல்லி நான் கேட்காமல் போன ஒரு விசயம் அது. திரும்பியும் சில மாதங்களில் தோழரின் மேல் மற்றொரு தாக்குதல். அதிலிருந்து எப்படியோ அவர் காப்பற்றப்ட்டு அராசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  தோழரை பார்க்க மருத்துவமனைக்கு போன ஒரு நாளில்தான் நான் அவளை பார்க்க நேர்ந்தது. 

மருத்துவமனையில் யாரிடமோ அவள் கத்தி பேசிகொண்டிருப்பதை பார்த்த போது என்னவோ அவள்யே பார்த்து கொண்டு இருக்க வேண்டும் என்று தோண்றியது. என் மனது ஒரு பெண்ணை நோக்கி ஈர்கப்பட்டது அப்போதுதான். யாரோ தன்னை உற்றுப்பார்பதை உணர்ந்த அவள், “ என்ன வேணுமா. போலாமா, எம்முட்டு வெச்சுருக்க” என்று என்னை பார்த்து கத்த அதிர்ந்து போன நான் வேறு வழி பார்த்து நடக்க தொடங்கினேன் இல்லை ஒடினேன் என்பதே சரி. சிறிது தூரம் வந்த பிறகும் அவளின் குரல் காதில் கேட்டு கொண்டே இருந்தது. கேட்பது சிறிது நாள் நீடிக்க வேலை நேரத்தில் என்னை மறந்து நான் ஒரு ஒலி எழுப்ப “ வேலை நேரத்தில் என்ன நாயி சிரிப்பு வேண்டி கிடக்கு. ஒழுங்கா வேலையா பாரு”என்று அதட்டல் வர சிரிப்பு என்ற ஒரு விசயத்தை உணர்ந்த முதல் தருணம் அது. அதன் பிறகு வந்த சிறிது நாட்களில் அடிக்கடி சிரிப்பது என்பது ஒரு சுக்மாகி போனது எனக்கு.

இப்பொழுது எனது இருப்பிடம் தோழரின் கட்சி ஆபிஸாக இருந்தாலும் படம் பார்க்க எண்ணம் வரும்போது தியேட்டரின் பின்னர் இருந்த மரத்தின் அடியில் உறக்கம் என்பது வழக்கமாகி போனது. கையில் படம் பார்க்க காசு இல்லாததாலும் மரத்தடியில் தியேட்டரில் வரும் ஒலி நல்லா கேட்பது போதுமானதாக மரத்தடி உறங்குமிடம் ஆகும் அவ்வப்போது. அந்த மாதிரியான் ஒரு இரவில் தியேட்டரில் இருந்து ஒலித்த ஒரு காதல் பாடல் ஒன்று என்னை மறந்து அவளின் நினைவில் என்ன தள்ளி அந்த பொழுதை ஏகாந்தமாக்கியது. அந்த நினைவுகளில் இருந்து வெளிவராமல் உறங்கிபோன என்னை “ ஏ. நீ என்ன இங்க வந்து தூங்கிட்டு இருக்க. எந்திருச்சு எங்காயாது போ” என்ற குரலில் திடுக்கிட்டு எழுந்து நான் கண்டது அவளைதான். 

தொடர்ந்து வந்த சில பல சந்திப்புகளில் மிக நெருக்கமாக அவளை நானும், என்னை அவளும் உண்ர துடங்கிய அந்த பொழுதுகள் நான் என்னையே ஒரு ஆண் என உணர தொடங்கியது அப்போதுதான். ஒரு மழை விட்ட பின்னிரவில்  , ஒரு ஈரம் இல்லாத இடமாக தேர்ந்து எடுத்து இருவரும் ஒதுங்கிய நேரத்தில் எங்களது முதல் கூடல் நடந்தேறியது. என் வலிகள் நான் மறந்து, அவள் வலிகள் அவள் மறந்து நாங்கள் இருவரும் ஒன்றாக ஆரம்பித்தது அதற்கு பிறகுதான். இதற்கு நடுவில் தோழரும் ஒரு விபத்தில்(விபத்து எனதான் பதியப்பட்டது) மறைய என்னை துளி கூட கலங்கவிடாமல் செய்தது அவள்தான். அடுத்து சிறிது நாட்கள் களித்து நடந்த ஒரு கூடலின் முடிவில்  நான் அவளிடம் திருமணத்தை பற்றி பேச அவள் பந்தம் இல்லாமல் இருப்பதே நல்லது என சொல்லி மறுக்க எங்களுக்குள் வந்த முதல் ஊடல் இது.

அதன் பிறகு அவள் சிறிது நாட்கள் காணமல் போனாள் . அவள் இல்லாத தனிமையில் உடல் வெப்பத்தை போக்க வேரு ஒரு இடம் தேடியதில் வந்த வினை உடல் வெப்பத்தை கூட்டியே போனதில் சுருங்கிப்போனேன். அரவனைக்க யாருமில்லாமல் ,  மருத்துவமனையே உறங்குமிடம் ஆகிப்போனது. சீண்டுவார் யாருமில்லாமல் நான் ஒரு நோய் வந்த நாயாகிப்போனேன். உடலின் வெப்பம் தாங்க முடியாமல் நான் முனங்கி கொண்டிருந்த ஒரு பொழுதில் என் மேல் விழுந்த ஒரு கண்ணிர் துளி அவளுடையாதிருந்தது. கோடை காலத்தில் பூமியின் வெப்பத்தை தனிக்க வந்த மழையை மாதிரி என் உடலின் வெப்பத்தை தணிக்க என் மேல் விழுந்த அவளின் அந்த கண்ணிர் துளி போதுமானதாக இருந்தது.


7 ஜூன், 2010

சா.இ.நா. எட்வர்ட் பள்ளிகள்

6“ கேடில் விழுச்செல்வம் கல்வி  யொருவற்கு
     மாடல்ல மற்றை யவை”

இந்த உலகத்தில் ஒருவனுக்கு உயிர் வாழ உணவு, நீர், காற்று, உடை , உறைவிடம் எல்லாம் எவ்வளவ்வு முக்கியமோ அவ்வளவ்வு முக்கியம் கல்வியும்.  அந்த கல்வியை கற்று தரும் ஆசான்களும், கல்விகற்க நாம் போகும் கல்விசாலைகளும் நம் வாழ்வின் முக்கியமான் அங்கங்கள்.

நான் கல்வி கற்ற பள்ளிக்கூடத்தையும் , கல்வி கற்பித்த ஆசான்களயும் திரும்பி நினைத்துப் பார்க்கும் பதிவு இது.  நான் எனது பள்ளிப் படிப்பை படித்தது எங்கள் ஊர்(சாத்தூரில்) உள்ள சா.இ.நா. எட்வர்ட் பள்ளிகளில். அரை கிளாஸ்(எல்.கே.ஜி,யூ.கே.ஜி)லிருந்து ஐந்து வரை(இரண்டாம் வகுப்பு தவிர) சா.இ.நா.இடைநிலை பள்ளியிலும், ஆறிலிருந்து பன்னிரெண்டு வரை சா.இ.நா. உயர் நிலை பள்ளியிலும் ஆக மொத்தம் 11 ஆண்டுகள் எனது பள்ளிப் பருவம் இங்கேதான் நடந்தது.

முதல் வகுப்பு எனக்கு எடுத்த டீச்சரின் பெயர் ஆனி அம்மா.அவர்களின் பெண்ணின் பெயர் ஆனி, அதனால் எங்களின் மனதில் அந்த பெயரே நிலைத்து விட்டது. அவர்கள் யாரிடமும் கோபப்படவே மாட்டார்கள். இரண்டாவது நான் படித்தது பாலர் கல்வி நிலையம்(ஈரோட்டில் மூலப்பாளயத்தில் இருந்த பள்ளி.) எடுத்த டீச்சரின் பெயர் காந்திமதி டீச்சர். இவர்கள் பெயர் எனது மனதில் நிலைத்தற்கு காரணம் நான் இரண்டாம் வகுப்பில் முதல் மாதத்தில் கணிதப்பரிட்சையில் 100/100 வாங்கிய உடன் என்னை முன்னாடி வரச் செய்து வகுப்பில் இருந்த மற்ற்வர்களயெல்லாம் எழுந்து நிற்க செய்து கைதட்ட சொன்னதுதான்.

திரும்பியும் மூனறாம் வகுப்பு சா.இ.நா. இடை நிலைப்பள்ளியில் தொடர்ந்தது.
மூன்றாம் வகுப்பு எடுத்தது பத்மா டிச்சர். இவர்களின் அக்கா எங்கள் தெருவில் இருந்தார்கள். அதனால் எங்கள் வீட்டில் இருந்த அனைவருக்க்கும் நல்ல பழக்கம் இவர்களுடன். எங்கள் வீட்டில் பெரியம்மா வைக்கு வத்தக்குழம்பின் மேல் அவர்களுக்கு அவ்வளவு பிரியம். நான் நான்காம் வகுப்பு படித்தது பாலசுப்ரமணியம் சார். இவர் என்றால் இன்னும் ஒரு வித பயம் மனதில் இருக்கின்றது. எனது அப்பாவின் வகுப்பு தோழர் இவர். நான் என்றால் இவருக்கு கொள்ளை பிரியம். எப்பவும் அடி வெழுத்து விடுவார்.

ஜந்தாம் வகுப்பு நான் படித்தது ஜோதி டீச்சரிடம். என் தந்தையும் இவரிடம் படித்திருக்கிறார். நன்றாக ஆறடியில் ஆஜானபாகுவான உருவம் அவருக்கு. அவரை மாதிரி ஒரு பெண்மணியை திரும்பி என் வாழ்வில் கண்டதில்லை. அவர் வீட்டிற்கு ட்யுஷன் படிக்க போகயில் அவரது கணவரிடம் (காளைராஜ் சார் அவரும் ஆசிரியர் எனது தந்தைக்கு) நம்ம் கண்ணண்(என் தந்தை) பையன் இவன் என்று முகத்தில் சிரிப்புடன் சொல்லுவார். சரியாக படிக்கவில்லையென்றால் அடி பின்னி பெடலெடுத்து விடுவார்.

ஆறாம் வகுப்பில் இருந்து பண்ணிரெண்டு வரை நான் படித்தது சா.இ.நா. எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில். ஆறாம் வகுப்புக்கு எனக்கு வகுப்பாசிரியர் வேலுச்சாமி சார். எப்பொழுதும் புன்னகை பூத்திருக்கும் முகம் இவருடையது. இன்று வரையிலும் நான் இவரோடு தொடர்பிலிருக்கிறேன். எனது திருமண வரவேற்பிற்க்கு வந்து வாழ்த்தினார் என்னை. ஒருமுறை வீட்டில் அம்மாவிடம் கோபித்துக்கொண்டு மத்தியானம் சாப்பிடாமல் பள்ளிக்கு கிழம்பி வந்து கொண்டிருக்கையில் வழியில் என்னை பார்த்த இவர் என் முகத்தை பார்த்து நான் சாப்பிடாததை கண்டு பிடித்து அவர் வீட்டில் சாப்பிட செய்து அவருடன் என்னை பள்ளிக்கு கூட்டிக்கொண்டு போனார். அன்று அவர் சொன்ன விசயம் யார் மேல் கோபம் இருந்தாலும், வருத்தம் இருந்தாலும் சாப்பட்டை மட்டும் பழிக்க கூடாது என்பதை இது வரை தட்டியதில்லை(அதுனால் தான் இன்று 90 கிலோ வெயிட் இருக்கிறேன் என்பது வேறு விசயம்).

ஏழாம் வகுப்புக்கு எனது ஆசிரியர் திரு பிரான்சிஸ் செல்வராஜ் சார் அவர்கள்.  நாங்கள் ஏழாம் வகுப்பு படித்த போதுதான் அவருக்கு திருமணம் நடந்தது. அவர் திருமணத்துக்காக 15 நாள் விடுப்பில் இருந்தார். அந்த 15 நாட்களும் எங்களின் பொழுது பள்ளி மைதானத்தில் தான் கழிந்தது. அவரின் திருமணத்திற்கு எங்கள் வகுப்பில் படித்த எல்லாரும் சென்றிருந்தது வாழவில் மறக்கு முடியாத தருணம். இவரும் என் திருமண வரவேற்பிற்கு வந்து வாழ்த்திச்சென்றார்.

எட்டாம் வகுப்பு எனக்கு எடுத்தது டி.எஸ்.பி என்றழைக்பட்ட திரு டி.எஸ். சவுந்திரபாண்டியன் சார் அவர்கள். இவர்தான் எனக்கு ஆங்கிலம், சயின்ஸ் மற்றும் மேத்ஸ் எடுத்தார். சயின்ஸ் கிளாஸ் எடுக்கறப்ப அதாவ்து காக்ரோச் குட்டி போடறதல்லாம் பத்தி சொல்றப்ப. இதல்லாம் நான் உங்களுக்கு சொல்ல கூடாது. நான் சொல்லைன்னாலும் எப்படியும் நீங்களே தெரிஞ்சுக்கத்தான் போறீங்க. அதனால சொல்றேன் அப்படின்னு செம் பில்டப் கொடுப்பார். இவர பத்தி இன்னொரு விசயம். இவர் கிளாஸ் பசங்கள பத்தி மத்த வாத்தியாருங்க எதுவும் குறை சொன்னா இவருக்கு அது துளி கூட பிடிக்காது. சண்டைக்கு போயிருவார்.

ஒன்பதாவது வகுப்புக்கு எனக்கு சொல்லி கொடுத்தது தேவசகாயம் சார். இவரிடம் பள்ளிப்பருவம் முடியும் வரைக்கும் அடி வாங்கியிருக்கிறேன். இவரின் ஆங்கில வகுப்புகள் அலாதியானது. ஆங்கில இலக்கணத்துக்கு பார்முலா எழுதி இவர் சொல்லிக்கொடுத்தை வைத்துதான் இன்று வரைக்கும் பொழப்பு நடக்குது எனக்கு. சதா சர்வ காலமும் பள்ளியும் மாணவர்களும் தான் இவரின் எண்ணம் முழுக்க.  இவரின் இரண்டாவது மகன் ஸ்டிபன் என் கிளாஸ்மெட்.

பத்தாவது எனக்கு எடுத்தது சிங்கராஜ் சார். இவர் சொல்லும் கதைகள் அலாதியானது. பத்தாவது படிக்கும் போது எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது திரு சி.சுப்ரமணியம் சார் அவர்கள். “ ஏந்நாய். பேநா(ய்) கொண்டு வரவில்லை. போநாய் வெளியே” என்ற இவரின் வச(வு)னம் மிகவும் பேமஸ். இவர் உரைநடை வகுப்பெடுக்க தமிழ இலக்கணம் எடுத்தது மா.பா(மா. பாலகிருஷ்னன்) சார் அவர்கள். நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

+1 ல் எனக்கு வகுப்பாசிரியர் திரு காமராஜ் சார் அவர்கள். இவர்தான் மேத்ஸ் டீச்சரும் கூட. +1,+2 இரண்டுக்கும் இவர்தான் மேத்ஸ். இவருக்கு கோபமே வரதாது. இவர் வைக்கும் பரிட்சைகளுக்கு வர மாணவர்களுக்கு பரோட்டாவல்லாம் வாங்கி குடுப்பார்.  +1 ல் தமிழ் சொல்லிக்கொடுத்தது திரு ஆனந்தராஜ் சார். ஒரு முறை மாதப்பரிட்சைக்கு புக்கில் உள்ள திருக்குறள் எல்லாவற்றையும் எழுத சொன்னார்(பார்க்காமல்தான்). நான் எடுத்தது நூற்றிற்கு சற்று குறைச்சல் ‘0’.
+2 வில் எனக்கு வகுப்பாசிரியர் திரு . கருனாகரன் சார் அவர்கள். மிஸ்டர் ஸ்டிரிக்ட்.  கெமிஸ்ட்ரி டீச்சர் இவர்தான். பெயில் ஆனால் தொலைந்தோம். 100 தடவை, 200 தடவையெல்லாம் இம்போஸிஸன் கொடுத்து மாணவர்களை அழ வைத்து விடுவார். இதுக்கு பயந்தே பாஸ் செய்வ்வோர் அதிகம். ஆனால் நான் பயந்த்தே கிடையாது.

இந்த வருடம் சா.இ.நா. எட்வர்ட் பள்ளிகளின் நூற்றாண்டு வருடம். நூற்றாண்டு வருட கொண்டாடங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் பாரதரத்னா டாக்டர்.எ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களது தலைமையில் பள்ளியின் நூறவது ஆண்டு விழா நடக்க இருக்கிறது. இப்போது பள்ளியையும் ஆசிரியர்களயும் நினைத்து பார்பது  மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.சாத்தூர் மாதிரி ஒரு சிற்றூரில் இந்த மாதிரி ஒரு கலவி நிறுவனம் நூறாண்டுகளை கடந்தும் சேவை செய்து வருவது போற்ற வேண்டிய விசயம் ஆகும். தற்போது கோவை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வரும் திரு. உமாநாத் இந்த பள்ளியின் முன்னால் மாணவர்.பள்ளியை பற்றி மேலதிக தகவல்களுக்கு. http://www.shnedwardschool.com.


4 ஜூன், 2010

காருண்யம்

7

" கந்தனுக்கு மூத்தோனே
  மூச்சித வாகன்னே
  மூலப் பொருளோனே
” 
சுப்பிரமணி டிஸ்டாலில கனிரென சாமிப்பாடல் ஒளிக்க ஆரம்பித்தது. மணி காலை நாலு. கடை தெருவுக்கு விடிய ஆரம்பித்தது.

கடை தெருவென்றால் ஒரு டீக்கடை. ஒரு சிறிய ஹோட்டல், ஒரு பலசரக்கு கடை, காய் கறி கடை மற்றும் இரு கறிக்கடைகள் இவ்வளவ்வுதான். கடைகளோடு  ஒட்டிய ஒரு சில வீடுகளும் அங்கே இருந்தன. ஹோட்டலை ஒட்டிஇருந்த குப்பை தொட்டியின் அருகில் இரு நாய்கள் முந்திய இரவின் எச்சில் இலைகளுக்கு சண்டையிட்டு கொண்டிருந்தன.

திடிரென அந்த இரண்டும் இலைகள விட்டு குப்பை தொட்டியின் அருகே இருந்த இன்னொன்றை பார்த்து குரைக்க ஆரம்பித்தது. குப்பை தொட்டியின் அருகே கிடந்த அதின் மேல் ஈக்களும் கொசுக்களும் ஆக்ரமித்து இருந்தன. தொடை வரை ஏறி இருந்த ஆடையானது அங்கங்கெ கிழிந்து காற்று உள்சென்று வெளிவர வசதியாக இருந்தது.

நாய்களின் குரைப்பை கேட்டு மெது மெதுவாக குப்பை தொட்டியின் அருகே கடைத்தெருவுக்கு வந்த கூட்டம் கூட ஆரம்பித்தது. கூட்டத்தில் குரல்களின் மூலம் அங்கே கிடந்த அது ஒரு பெண்ணென அறியப்பட்டது.  அந்த பெண்ணின் விலகியிருந்த உடைகளை பார்த்து அங்க கூடியிருந்தவர்களின் மனசு ஆடையிழந்து நிர்வாணமாக ஆரம்பித்தது..

கூட்டத்தில் எழுந்த குரல்களின் நடுவே அந்த குப்பை தொட்டியின் அருகே இருந்த கதவு திறந்தது. கதவு திறந்தவுடன் கூடியிருந்த கூட்டம் “ கொலைகாரன் வந்துட்டான்” என்ற குரலுடன் பக்கத்தில் இருந்த மறைவுகளில் மறைந்தது சட்டென.  அங்கே படுத்து கிடந்த பெண்ணையும் சிதறி மறைந்த கூட்டத்தையும் பார்த்த அவன் திரும்பி வீட்டினுள் நுழைந்தான். அவன் வீட்டுக்குள் போவதை பார்த்த சில தலைகள் மறைவுகளில் இருந்து வெளியே வந்தன.

திரும்பியும் அவன் வீட்டிலிருந்து வெளியே வருவதை கண்ட அந்த தலைகளும் திரும்பி மறைந்தன.  வெளியே வந்த அவன் கைகளில் ஒரு துணியிருந்தது. கொண்டு வந்த துணியை பெண்ணின் மேல் போர்த்திவிட்டு கூட்டத்தை நோக்கி காரி துப்பி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அவன் தலை மறைந்ததை கண்ட கூட்டம் வெளியே வந்து பேச தொடங்கியது. அப்பொழுது கேட்ட  “ கொலைகாரன் வந்துட்டான்” என்ற வார்த்தைகளில் ஆத்திரம் கலந்து இருந்தது.3 ஜூன், 2010

காதலாகி

15

பிரான்ச் ஆபிஸ் இன்ஸ்பெக்சனுக்காக கோவைக்கு வந்து இன்று சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன். அது என்னுடைய ராசியோ என்னவோ தெரியாது எங்கே போனாலும் வேலை கடைசி வரை என் தோழில் தொங்கி கொண்டு ரயிலை பிடிக்க கால அவகாசம் இல்லாமல் அவசரத்தில் ஒடி வந்து தொற்றிகொள்ள வேண்டியிருக்கிறது ஒவ்வொரு முறையும். இந்த தடவையும் அப்படித்தான். இன்ஸ்பெக்சன் வேலைகள் முழுவதும் முடிந்து ஹோட்டல் வந்து ரூம் செக் அவுட் செய்து வெளியே வந்தால் டைமுக்கு ஆட்டோவோ டாக்சியோ கிடைக்காமல் பஸ்ஸில் பயணம் செய்து ரயில் கிளம்புகையில் வந்து தொற்றிக்கொள்ள வேண்டியதாக போனது.

எப்படியோ ஏறி என்னுடைய இடம் பார்த்து பெட்டியை சீட்டின் அடியில் வைத்து உட்கார்ந்த உடன் சற்று நேரம் கழித்து  டிடிஆர் வந்தார். அவரிடம் என் டிக்கெட்டை காண்பிக்க அவர் என்னையும் டிக்கெட்டையும் மாறி மாறி உற்றுப்பார்த்த வாறு சற்று நேரம் நின்றிருந்தார். இதை பார்த்து “ எனி பிராப்ளம் சார்” என்றவனிடம் ஒன்றும் இல்லையென தலையாட்டிவிட்டு டிக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார். 

கொண்டு வந்து ஆனந்த விகடனை சற்று நேரம் விரித்து படித்துக்கொண்டிருக்கையில் பக்கத்து சீட் ஆசாமி பெர்த்தை போட வேண்டும் என சொல்ல சரி என்று புத்தகத்தை மூடி விட்டு கதவின் ஒரமாக போய் நின்று கொண்டு காற்று வாங்கி கொண்டிருக்கையில் ஒரு கை மேலப்பட எரிச்சலுடன் திரும்பினேன். டிடிஆர் அங்கே நின்றிருந்தார்.


எரிச்சலுடன் “ என்ன சார் இங்க நிக்க கூடாதா” என்றேன்.

 “ அது இல்லை. நீங்க சுந்தரம் சார் பையனா” என்றார் டிடிஆர்.

கேள்வியை கேட்டு இவருக்கு எப்படி அப்பாவின் பேர் தெரியும் என்று சற்றே குழம்பி நிற்கையில் “ சாத்தூர் அக்ரஹாரத்தில சுப்பையர் காம்பவுண்டுல இருந்த சுந்தரம் சார் பையன் ராமசந்திரன் தான நீங்க” என்றார் சற்றே அழுத்தமாக.

“ஆமாம்..... நீங்க ... சுப்பு.. சுப்புராமன்னா” என்று முடிப்பத்ற்குள் ஆமாம் என்றார் சிரித்துக்கொண்டே.

“அப்பா. எங்க உனக்கு என்ன அடையாளம் தெரியாம போயிருமோன்னு பயந்திண்டிருந்தேன்” என்றார் சுப்புராமன் அண்ணா.


சிரித்துகொண்டே “ எப்படின்னா” என்றவனை பார்த்து “ என்ன சொன்ன அண்ணான்னா” என்றார் நக்கலுடன். “ சரி வா என்னோட கேபினுக்கு போய் செத்த நேரம் பேசிண்டு இருக்கலாம்” என்று நடந்தவரின் பின்னாடி நடந்தேன். எனது நினைவுகளும் பின்னோக்கி பறந்தது.

அப்பாவுக்கு சாத்தூர் அருகே  உப்பத்தூர் கவன்மெண்டு ஸ்கூலில் டீச்சர் வேலை. நாங்கள் கூடியிருந்தது சுப்பையர் காம்பவுண்டில். அப்பா, அம்மா, நான் அப்புறம் சுப்புலட்சுமி @ சுப்பா எனது அக்கா என்பதுநான் நாங்கள். சுப்பையர் காம்பவுண்டு என்பது பத்து விடுகள் கொண்ட ஒரு லயன் வீடு. பத்து விட்டிற்கும் சேர்ந்து ஒரே டாய்லட், ஒரே பாத்ரூம். எனக்கு 10 வயது பெரியவள் சுப்பா. நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது சுப்பா +2. 

அப்போதுதான் எங்கள் காம்பவுண்டுக்கு புதிதாக குடி வந்தது சுப்புராமன் அண்ணாவின் குடும்பம். அவரது அப்பாவும் அம்மாவும் யாருடன் அளவாகத்தான் பேசுவார்கள். ஆனால் சுப்புராமன்னா எல்லோருடனும் நன்றாக பேசுவார். கோலி, கில்லி என்று விளையாடி கொண்டிருந்த எங்களுக்கு அவர்தான் கேரம், செஸ் போன்ற இண்டோர் கேம்ஸுகளை சொல்லி கொடுத்தார். அவர் அப்போதுதான் காலேஜ் முடித்து வேலைக்கு முயற்ச்சி செய்து கொண்டிருந்தார்.

அண்ணா ஊர் லைப்பிரரிக்கு சென்று நிரைய புத்தகங்களை எடுத்து வந்து படிப்பார். அதல்லாம் என்ன புக்ஸ் என கேட்டால் பெரியவனாகித்தான் அந்த புக்ஸல்லாம் படிக்கனும்னு சொல்லிட்டு நமுட்டு சிரிப்பு சிரிப்பார். சில சமயம் என்னிடம் சில புக்ஸை கொடுத்து சுப்பாவிடம் கொடுக்க சொல்லுவார். என்னது என்று கேட்டால் சுப்பா சில பாடங்களில் டவுட்ஸ் கேட்டதாகவும் அதுக்கு விளக்கம் எழுதி கொடுத்திருப்பதாகவும் சிரித்துக்கொண்டே சொல்வார்.பிற பையன்கள் அவரை அண்ணா என்று கூப்பிட என்னை நீ என்னை அண்ணா என்று கூப்பிட கூடாது அத்திம்பேர் என கூப்பிடு என்றார் ஒரு முறை.


இது நடந்து சில் நாட்களில் ஒரு நாள் மதியம் நான் விளையாடி முடித்து விட்டு வெளியே வருகையில் எங்கள் வீட்டின் வாசலில் ஒரே கூட்டமாக இருந்தது. உள் நுழைந்து பார்த்த போது அம்மாவும் சுப்பாவும் மூலையில் உட்காந்து அழுது கொண்டிருந்தார்கள். அப்பா பெரும் கோபத்தில் கத்திக்கொண்டு இருந்தார். அவரின் முகம் மிக சிவந்திருந்தது.  திடிர் என்று எங்கள்து வீட்டில் இருந்து வெளியே போய் சுப்புராமன்னா வீட்டின் முன் நின்று பயங்கரமாக அசிங்க அசிங்கமான வார்த்தையில் கத்தினார்.

அன்று முழுவதும் அப்பா கத்திக்கொண்டே இருந்தார். அன்று இரவு நான் தூங்கிகொண்டிருக்கையில் திடிர் என்று அம்மா கத்திய கத்தலில் எழுந்திருந்து பார்த்தால் சுப்பா காம்பவுண்டின் பின்னே இருந்த கிணற்றில் குதித்திருந்தாள். எல்லாரும் கத்துகையில் , சுப்புராமன்னா ஒடி வந்து கிணற்றில் குதித்தார். சற்று நேரம் களித்து சுப்பாவுடன் மேலேறி வந்தார். வெளியே வந்தவுடன் அவரது கண்ணத்தில் ஒங்கி அறைந்த அப்பா பெரும்குரலெடுத்து அழ தொடங்கினார். 
அந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் வரையில் சுப்பா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பிரம்மை பிடித்த மாதிரி வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்தாள். சிறிது நாட்களில் சுப்புராமன்னாவின் குடும்பமும் காலி செய்துகொண்டு போய் விட்டது. சுப்பாவும் திருமணம் முடித்து மும்பையில் செட்டில் ஆகிவிட்டாள். 
“ உள்ள வா. இப்படி உக்காரு” என்ற சுப்புராமன்னாவின் குரலில் நினைவு கலைந்து நிகழகாலத்திற்கு வந்தேன். நான் ஒரு சேரில் உக்கார எனக்கு எதிர்க்க அமர்ந்த சுப்புராமன்னா “ சுப்பா எப்படி இருக்கா” என்றார். இரவின் அமைதியை கிழித்துகொண்டு கூக்குரலிட்டு ஒடிக்கொண்டிருந்தது ரயில்.31 மே, 2010

குற்றம் - 2

5


காட்சி 1

“ என்னப் பெத்த இராசா ஒன்னைய இந்த கோலத்துல பாக்கறதுக்கா நான் இன்னும் உசிரோட இருக்கேன்.” மாரி முத்துவை பார்த்த உடன் பொன்னாத்த கிழவியின் அடி வயிற்றில் இருந்து கிளம்பிய அந்த சத்தத்தில் அந்த அறையில் இருந்த மற்றவர்கள் எல்லாம் கிழவியை திரும்பி பார்த்தனர். 

கிழவியின் ஒப்பாரியை கண்டு எரிச்சலடைந்த வக்கில் ஸ்ரீதரன் “ எப்பா கணேசா நீ ஒன் ஆத்தாவ கூப்பிட்டு கொஞ்சம் வெளிய போய்யா. நீங்க வந்தாளாது அவன் வாய தொரந்து பேசுவான்னு சொல்லி உங்கள கூப்டுட்டு வநதா நீங்க இங்க வந்து இப்படி கத்துனா நான் என்ன பண்ண” என்று கத்தியதை கேட்டு கிழவியை கணேசன் வெளிய தள்ளிக்கொண்டு போனான்.

கிழவி போன உடன் “ எப்பா மாரிமுத்து எப்படி இருக்க. இங்க வெச்சு கேக்க கூடாதுதான். ஏன் கேக்கிறேனா போலிஸ் காரங்க எதுவும் தொந்தரவு பண்ணினாங்களா. யாரும் எதுவும் கைய கிய்ய வைக்கிலேயே” என்றவரை பார்த்து இல்லை என்றமாதிரி தலையசைத்து வைத்தான் மாரிமுத்து.

“ ஏம்பா இதுக்கு கூட வாயை தொறந்து பதில் சொல்ல மாட்டியா. என்ன மவுன விரதமா இருக்க. நீ எதுனாச்சும் பேசுனாதான் என்னையால எதுவும் செய்ய முடியும். உனக்கில்லாட்டியும் இன்னும் மூனு பேரு ஒன்னைய நம்பி இருக்காங்க " என்றவரிடம்  “சரிங்கய்யா” என்றான் மாரிமுத்து முதன் முதலாக. 

காட்சி 2
 மாரிமுத்துவிடம் பேசி முடித்து விட்டு வெளியே வந்த ஸ்ரீதரன் “ நீங்க எதுவும் பேசனுன்னா போய் பேசிட்டு வந்துருங்க. ”  என்றவ்ரை பார்த்து “ சரி சார் ” என்றான் கணேசன்.

“ ஆத்தா வா உள்ளார போய் அண்ணண பாத்துட்டு வரலாம்” என்ற கணேசனிடம் “ இல்லையா நீ போய்ட்டு வந்துரு . நான் திரும்பி உள்ளார வந்தா அழுது வெச்சுருவேன். நீ போய் அவனுக்கு தைரியம் சொல்லிட்டு நல்லதா நாலு வார்த்த பேசிட்டு வா. போ” என்றாள் கிழவி.

சுவர் ஒரமாக நின்றிருந்த மாரிமுத்து “ அண்ணே” என்று கூப்பிட்ட கணேசனின் குரல் கேட்டு திரும்பினான்.

“ கணேசு நல்லா இருக்கியா. ஆத்தா எப்படி இருக்கு. அதே நல்ல படியா பாத்துக்க”  என்ற் மாரிமுத்துவை பார்த்த கணேசன் “ ஆத்தா சதா சர்வ காலமும் ஒன்னைய நெனச்சுகிட்டு பொலம்பிக்கிட்டே கிடக்குன்னா” என்றான்.

“ அண்ணிய பாத்தியாடா”  என்றான் மாரிமுத்து.

 “ இல்லைனனா நாலு நாளைக்கு முன்னாடி போயிருந்தோம் நானும் ஆத்தாவும். ஆனா அவுக வீட்டு வாசல்லேயெ நிறுத்தி பேசி அனுபிச்சாடாங்கன்னே.   ஆத்தா கூட வாவும் வயிறுமா இருக்கற பொன்ன பாத்துட்டு போயிறோம்னு சொல்லிச்சு. அதுக்கு அண்ணி எங்கள் பார்க விருப்பம் இல்லைன்னு சொல்லிருச்சுன்னா ” என்றான் கணேசன்.

 “ சரி வுடு கணேசா . நாலப்பின்ன செரியா போவும். நீ சம்முவத்தா பாத்தியா” மாரிமுத்து.


“ அண்ணா அந்த செவத்த மூதி எங்க பாத்தும் கிடைக்கலன்னா. அவன் மட்டும் ஏன் கையில கிடைச்சான் அவன சவமாக்கிட்டுதான்னா வேற வேல” என்றான் குரலில் ஆத்திரத்துடன் கணேசன்.


“ கணேசு ஆத்திரப்படாத.  நீ ப்டிச்சவன். அவன் எங்கின இருந்தாலும் தேடி கண்டு பிடி. அவன் நமக்கு வேணும்” என்றான் மாரிமுத்து.


அண்ணண் குரலுக்கு அனுக்கமாக தலை ஆட்டினான் கணேசன்.

காடசி 3

அந்தி சாயும் அந்த நேரத்திலும் சூரியனின் வெப்பம் தகித்து கொண்டிருந்தது.  அந்த வெப்பத்திலும் கூட மதுரை மீனாச்சியம்மன் கோயிலை சுத்தி நகர்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் எரும்பு சாரைய போலிருந்தது.

அப்பொழுது தானப்ப முதலி தெருவின் பக்கத்தில் இருந்த ஒரு சின்ன ஒட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அவனின் கண்கள் மூன்று நாள் இடை விடாது தூங்கி எழுந்தவனின் கண்களை ஒத்திருந்தது.

அப்படியே செண்ட்ரல் தீயேட்டரை நோக்கி ந்டந்தவனின் வேட்டி தொடைக்கு மேல் ஏறியிருந்தது. எதிர்க்க அவனை இடிப்பது மாதிரி வந்த சைக்கிள் காரனை பார்த்து  வாயில் சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளை உதிர்து விட்டு நகர்ந்தான். பதிலுக்கு அவனும் இவன் பரம்பரையில் வந்த பெண்களின் பெருமைகளை ஊருக்கு உரக்க சொல்லி விட்டு கடந்தான்.

வழியில் நின்றிருந்த கடலை வண்டிக்காரனிடம் ஒத்த ரூபாய் கொடுத்து அவன் தந்த கடலை பொட்டலத்தை பிரித்து படித்துக்கொண்டே நகர்ந்தான். செண்ட்ரல் தியேட்டர் வரவும் கடலை காலியாகவும் சரியாக இருந்தது. பொட்டல பேப்பரை பிரித்தவன் ஒரு மாததிற்கு முன்னதாக படத்துடன் வெளியாகி இருந்த “ கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் மரணம். கொலையாளி கைது” என்ற செய்திக்கு கிழே வெளியாகிருந்த படம் மாரிமுத்துவின் படமாயிருந்தது. பேப்பரை கசக்கி வீசியெறிந்து விட்டு “ ஒக்காலி அவசரப்பட்டுடான் ரொம்ப” என்றவாரு நகர்ந்தவ்ன் மாரிமுத்துவுக்கு மிகவும் வேண்டப்பட்ட ச்ம்முவம் என்றழைக்கபட்ட சண்முகமேதான்.

-- தொடரும்

30 மே, 2010

கிட்டாதாயின் வெட்டென மற

9

இலக்கை எண்ணு
அகம் உணர்.
செவி திறந்து வை.
கற்றுத் தெளி.
கற்றதை திணி

மனதை இயக்கு.
மயக்கத்தை அடக்கு
முயற்சி செய்
வெற்றி கிட்டாதாயின்
வெட்டன மற
இலக்கை எண்ணு.

           

27 மே, 2010

குற்றம்

8

காட்சி 1
இருக்கன்குடியில் இருந்து புரப்பட்ட அந்த கவன்மெண்ட் பஸ் நெம்மேனி பஸ் நிறுத்ததில் நின்று புறப்பட்ட ஆய்த்தமாக டிரைவர் கியரை மாற்றிய பொழுது பஸ் நிருத்தத்திற்கு ஒட முடியாமல் ஒடி வந்து கொண்டிருந்த பொன்னாத்தா கிழவி ” எய்யா செத்த நிறுத்துய்யா வண்டிய. நானும் ஏறிக்கிடுதேன்” என்று கத்திக்கொண்டே பஸ்ஸை தட்டினாள். கிழவியின் சத்தத்தை கேட்ட கண்டக்டர் விசில் ஊதி  வண்டியை நிறுத்தினார். கிழவியை ஏறிய உடன் அந்த ரோட்டில் முனங்கிகொண்டே சாத்தூரை நோக்கி பயணத்தை துவங்கியது பஸ்.
”ஏத்தா எங்க போவனும்” கண்டக்டர்.
“சாத்தூருக்குத்தான். எம்முட்டுய்யா “ என்ற கிழவியடம்
“டெய்லி பஸ்ல ஏறினாலும் இதே கேள்விதானா உனக்கு. 3.50 சில்லறை வெச்சுருக்கியா. இல்லேன்னா அப்படியே இறக்கி விட்றுவேன்” என்றார் கண்டக்டர்.
“ இருக்கு. இந்தா “ என்று இடுப்பில் மாட்டியிருந்த சுருக்குப் பையில் கிடந்த சில்லறைய பொருக்கி தந்து கண்டக்டர் கொடுத்த டிக்கெட்டை வாங்கி சுருக்கு பையில் திணித்தாள்.
“எல்லாரும் டிக்கெட்ட பத்திரமா வச்சுக்கங்க. வாங்கதவைங்க வாங்கிருங்க. ரெயில்வே கேட் பக்கத்துல செக்கிங் நிப்பாங்க. அவிங்க எதுவும் சொன்னா அப்புறம் கத்தாதிங்க” என்று குரல் கொடுத்துக்கொண்டே கண்டக்டர் நகர்ந்தார்.
பஸ்ஸில் உக்கார இடமில்லாமல் கூட்டம் நெருக்கி அடித்தது. பிடிமானதுக்கு பக்கத்தில் உள்ள சீட்டின் கம்பியை பிடித்து கொண்ட கிழவி “ ஏத்தா நீ சுடலையம்மா பேத்திதான. கல்யாணம் ஆயி சிவில்லிபுத்தூர்ல இருக்கறதா சொன்னாங்க. என்ன இந்த பக்கம். வீட்டுல அப்பன் ஆத்தால்லாம் எப்படி இருக்காங்க “ என்றாள்.
“ எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்க்கீங்க. மாரிமுத்து அண்ணனுக்கு ஏதோ வண்டி மோதி ஆசுபத்திரில இருக்காங்கன்னு சொன்னாங்க. இப்ப எப்படி இருக்காங்க. கணேசன்ன எப்படி இருக்கு. அண்ணி எப்படி இருக்காங்க” என்றாள் சீட்டில் உட்கார்ந்து இருந்தவள்.மாரிமுத்து கிழவியின் மூத்த மகன். கணேசன் இரண்டாம் மகன். சாத்தூர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த்தான். மாரிமுத்துவுக்கு மட்டும் கல்யாணம் ஆயிருந்தது.
“ நல்லா கேட்ட போ. அது நடந்து ஆச்சு ஒரு வருசம்.  இப்பத்தான் கேக்கனுன்னு தோணிச்சா ஒனக்கு. இப்பா நல்லா இருக்கான் “ என்று சொல்லவும்
“ முக்குராந்தகல் வந்த்ருச்சு. இறங்கவறங்க இறங்கிங்க “ என்ற கண்டக்டரின் குரல் கேட்டு “ ஏத்தா நான் இறங்கனும் . ஆத்தா அப்பனுல்லாம் கேட்டேன்னு சொல்லு” என்றவாறே பஸ்ஸில்ருந்து இறங்கினாள் கிழவி.
” ஏத்தா ஒனக்கு விசயமே தெரியாதா. ஒரு மாசத்துக்கு முன்னாடி மாரிமுத்து பய வட்டிக்கு காசு கொடுத்தவன் திரும்பி கேட்டான்னு அவன அடிச்சு கொன்னு போட்டான்னு அவன் போலிஸ் புடிச்சுட்டு போயிருச்சுல்ல. கிழவி பாவம்தா. வக்கில் ஆபிஸுக்கும் , கோர்ட்டுக்கும் நடையா நடந்துட்டுருக்கு. நல்லது நடந்தா சரிதான் “ என்றாள் பஸ்ஸில் சிவில்லிபுத்தூர் காரிக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவள்.
பஸ்டாண்டை நோக்கி பஸ் புறப்பட வக்கில் ஆபிஸ் இருந்த  பெருமாள் கோவில் தெருவை நோக்கி காலை தேய்த்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள் பொன்னாத்தா கிழவி.
காட்சி 2
தொரந்திருந்த வக்கில் ஆபிஸுக்குள் எட்டிப் பார்த்தால் பொன்னாத்தா கிழவி. எட்டிப்பார்த்த கிழவியை “வாங்க உள்ள “ என்றார் வக்கில் குமாஸ்தா சுப்பு. 
உள்ளே வந்த கிழவி “ வக்கில் அய்யா இருக்காங்களா” என்றாள்.

“அப்படி ஒரமா உக்காருங்க. சார் உள்ள போன் பேசிகிட்டு இருக்காங்க. பேசி முடிச்ச உடனே நான் போய் சொல்லிட்டு கூப்புடறேன்” சுப்பு.
“அய்யா என்ன சொல்றாங்க. மவன காப்பாத்திருவாங்கள். அவன் ஒரு தப்பும் செய்ஞ்சுருக்க மாட்டான்யா” கிழவி.
“ எல்லாம் சார் சொல்லுவார். பொருங்க ” என்று சொல்லிக் கொண்டே வக்கில் அறையை பார்த்து நகர்ந்தார் சுப்பு.
போனவர் சற்று நேரம் கழித்து வெளியே வந்து   “ போங்கம்மா உங்கள சார் கூப்பிடறாங்க ” என்று கிழவியை உள்ளே அனுப்பினார்.

உள்ளே சேரில் உட்கார்ந்திருந்த வக்கில் ஸ்ரீதரன் கிழவிய பார்த்து “ வாங்கம்மா” என்றார்.  “ உங்க மகன் கேஸைதான் பாத்துகிட்டு இருக்கேன். நாலன்னைக்கு போலிஸ்லேந்து உங்க மவன கோர்ட்டுல ஆஜர் பண்றாங்க. நான் நாளக்கு போய் அவன ஜெயில்ல போய பாத்து பேச போறேன். காட்சில்லாம் அவருக்கு எதிரா இருக்கு. என்னால என்ன பன்ன முடியும்னு பாக்கறேன். நீங்களும் ஏன் கூட வாங்க. அவற வாய தொறந்து நான் சொல்ல சொல்றத சொல்ல சொல்லுங்க. அவர் நான் சொல்றத கேட்டாதான் எதுவும் செய்ய முடியும் ” என்றார்.

“ அய்யா காப்பதிருங்கய்யா. அவுந்தான் என் குடும்பத்துக்கு முக்கியம் ” என்ற கிழவியை பார்த்து “ என்னால முடிஞ்சத நான் பண்ணறேன். நீங்க ஒங்க சின்ன பையனையும் கூட்டிகிட்டு நாளைக்கு ஜெயில்லுக்கு வந்துருங்க ” என்று சொல்லிக்கொண்டே சேரை விட்டு எழுந்தார்.

அறையை விட்டு வெளியே வந்தவள் குமாஸ்தா சுப்புவிடம் சொல்லிக்கொண்டு வக்கில் ஆபிஸை விட்டு வெளியே வந்தாள். வானம் கருத்திருந்தது.

காட்சி 3

மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகளுக்கான செல்லில் அடைக்கப்பட்டிருந்த மாரிமுத்து விட்டத்தை வெரித்துப்பார்த்து உட்கார்ந்த்ருந்தான். அவன் கண்களில் கிழே படிந்திருந்த கண்ணிரின் படிமம் அவனின் மன நிலைய சொல்லியது.

கடந்த ஒரு மாதமாக நடந்த சம்பவங்கள் அவனில் மனதில் ஒடிக்கொண்டிருந்தது. தனக்கு நடந்த துரோகமும், வட்டிக்கு காசு கொடுத்தவன் பேசிய பேச்சும், தம்பி , மனைவி மற்றும் ஆத்தாளை பற்றிய நினைப்பும் அவனை ஒரு மாதமாக தூக்கம் கொள்ளாமல் செய்திருந்ந்தது.

சிந்தனை வயப்பட்டு கிடந்தவனின் சிந்தனைய கலைத்தது “ ஏய் உன்னைய பாக்க ஒன் ஆத்தாளும், தம்பியும் வக்கிலோட வந்துருக்காங்க. எந்திச்சு வா” என்ற வார்டனின் குரல்.

-- தொடரும்.18 மே, 2010

இறந்து போனவனின் டைரிகுறிப்புகளிலிருந்து

14

என் உயிர் சிநேகிதன் மாதவன் இறந்து இன்றைக்கு பத்தாம் நாள். பத்து நாட்களுக்கு முன் என் கம்பெனியின் போர்டு மீட்டிங் மற்றும் புது புராடக்ட்ஸின் புரோமசன்களுக்கான ஆட் சூட்டிங்ஸ் சிலவற்றை காணவேண்டி என் கம்பெனி சகாக்களுடன் மலேசியா கோலாலம்பூரில் இருந்த பொழுது என் மனைவியிடம் இருந்து வந்த தகவல் இடியென தாக்கியது என்னை. 

  “ மாதவன்னா போயிட்டார் ” என்றவளிடம் நம்ப முடியாமல் “ ஏய் லூஸு மாதிரி என்னத்தயாது சொல்லாத. அதல்லாம் இருக்க முடியாது. இப்பத்தான் மலேசியா கிளம்பறதுக்கு முன்னாடி கூட அவன் கூட பேசிட்டு வரேன் ” என்று என்னை அறியாமல் நான் இருக்கும் இடத்தை மறந்து கத்தினேன். “ இல்ல இப்பத்தான் கீர்த்தனாக்கா போன் பண்ணினா ” என்றாள் என்னவள். கீர்த்தனா மாதவனின் அக்கா.

போன் பேசி முடித்து சற்று பைத்தியம் பிடித்த மாதிரி ஒன்றும் தெரியாமல் அங்கே அருகினில் இருந்த சேரில் பொத்தென்று சரிந்து உட்கார்ந்தேன். என்ன மாதிரி பழக்கம் அது. நான் பிறந்ததில் இருந்து என் வீட்டாருடன் இருந்தை விட மாதவனுடன் இருந்த பொழுதுகள் அதிகம்.  எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நாங்கள் இருவரும் பேசாமல் இருந்த நாட்கள் ரொம்ப கம்மி. என்னுடன் கூட பிறந்தவர்கள் யாருமில்லாத போது பக்கத்து வீட்டில் இருந்த கீர்த்தனாக்காவும், மாதவனும் என் துணையாகி போனார்கள். சற்றே வளர்ந்த உடன் நானும் மாதவனும் பேசி தீர்த்த பொழுதுகள் ஏராளம். ஊரில் இருந்தவர்கள் எங்களை தனி தனியாக பார்த்ததில்லை. 

பொன்னியின் செல்வனிலிருந்து , ஜெப்ரி ஆர்ச்சர் வரை அவன் தான் என்னை தேடி தேடி படிக்க வைத்தான்.என் வாழ்க்கையில் ஏராள விசயங்களை கற்று தந்தவன் அவன்தான். திருட்டு தம்மிலிருந்து,  ஜாக் டேனியல்ஸ் விஸ்கி வரை எனக்கு கற்று கொடுத்தவன் அவன் தான். கல்லூரி காலத்தில் நெரைய விசயங்களை கிரகிக்க முடியாமல் நான் தினறிய போது அவன் தான் எனக்கு சொல்லி கொடுத்தது. இதல்லாம் விட நான் காதலித்த போது என் காதலுக்கு தூது போனதில் இருந்து எங்கள் இரு வீட்டாரிடமும் பேசி என் திருமணமும் முடிந்ததில் அவன் எனக்கு செய்த உதவி ! என்ன சொல்ல . நினைக்க நினைக்க கண்ணில் நீர் திரண்டு வந்து முட்டியது.

மலேசிய வேலைகள் முடிந்து திரும்பி வந்தவுடன் இன்றுதான் மாதவனின் வீட்டிற்கு போக முடிந்தது. போனவுடன் என்னை பார்த்து அழுத மாதவனின் அப்பா அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் எனக்கும் அழுகை கட்டு படுத்த முடியாமல் பொங்கி வந்தது . எல்லாம் முடிந்து கிளம்புகையில் கீர்த்தனா அக்கா ஒரு பெட்டியை கையில் கொடுத்து மாதவன் என்னிடம் கொடுக்க சொன்னதாக கொடுக்க வாங்கி கொண்டு காரில் ஏறினேன்.

காரில் போகும் போது கீர்த்தனாக்கா கொடுத்த பெட்டியை திறந்து பார்த்த போது பெட்டி முழுவதும் வருட வாரியாக டைரியாக அடுக்கி வைக்க பட்டிருந்தது. ஒவ்வொரு டைரியாக எடுத்து புரட்டிய போது எங்களின் நினைவுகளின் பதிவுகளாக ஒவ்வொரு பக்கங்களும் இருக்க மாதவன் என்னுடன் இருப்பது போலவே பட்டது .  டைரிகளை படித்து கொண்டிருந்த போது மனைவியிடம் இருந்து போனில் அழைப்பு வர திரும்பிக்கொண்டிருப்பதாக சொல்லி போனை வைத்தேன். 

அடுத்தாக எடுத்த டைரியின் முகப்பு பக்கத்தில் அழகிய பச்சை நிற எழுத்துகளில் என் காதல் பக்கங்கள் என்றிருக்க ஒரு அதிர்ச்சி தாக்கியது என்னை. அவனின் எல்லாமும் எனக்கு தெரியும் என்று நினைத்திருக்கையில் இந்த விசயம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது . அந்த டைரி முழுவதும்  பல அற்புதமான காதல் கவிதைகளால் நிரப்ப பட்டிருந்தது . படித்துக்கொண்டே இருக்கையில் வந்த ஒரு கவிதை இப்படி எழுதப்பட்டிருந்தது. 

 “ என் உடம்பின்
உதிரத்தில் கலந்திருக்கும்
நட்பை விட 
என் மனதில் ஒரத்தில்
பூத்திருக்கும் காதல்
பெரிதென படவில்லை 
எனக்கு


அதற்கு பின் அந்த டைரியில் எதுவும் எழுதப்பட்டிருக்க வில்லை. அந்த கவிதை எழுதப்பட்டிருந்த நாள் “ 19-ஏப்ரல்-1999 ”. மாதவனிடம் நான் எனக்கும் என்னவளுக்கும் இடையேயான காதலை சொன்ன நாள். கண்ணில் நீர் கோர்க்க டைரியை மூடிய எனக்கு உலகம் என் காலடியில் மிக வேகமாக உருண்டோடுவது போல் இருந்தது.

14 மே, 2010

சொத்து

13

மேலத்தெரு கிருஷ்ணண் ஆசாரிக்கு
இன்று பத்தாம் நாள் காரியம்
காரியம் முடிந்து மூத்த அண்ணன் சொன்னான்
மேலத்தெரு வீடும் ரைஸ் மில்லும் எனக்கு
கொல்லபட்டிதென்னந்தோப்பும் 
10 ஏக்கர் கரிசல் காடும் எனக்கு
சின்ன அண்ணன் சொல்லிப்போனான்
மகளுக்கும் சம உரிமை இருக்கு
எல்லாம் நகையும் எனக்குத்தான்
சொல்லிபோனாள் வீட்டின் கடைக்குட்டி லச்சுமி
 யாரும் கேக்காத அம்மா  சொன்னாள்
அய்யா எல்லாரும் சாப்பிட வாங்க
பசியாத்திட்டு அப்புறம் பேசிக்கடலாம்