23 பிப்., 2010

தீ பக்கெட் லிஸ்ட் (2007)

8

நாம் எல்லாருக்கும் மணிரத்னத்தின் ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாடலை போல நெரைய ஆசைகள் இருக்கும். அவற்றில் சிலவற்றை அடைந்திருப்போம், சில ஆசைகள் விட்டில் பூச்சிகள் விளக்கின் ஒளியில் மரித்து போவது போல் நம்முள்ளே மரித்து போயிருக்கும். Mr. எமதர்ம ராஜன் உங்களின் முன் வந்து கண்ணா உன்னோட லைப் அவ்வளவ்வுதான், இன்னும் மூணு மாசம்தான் இருப்ப அதுக்குள்ள என்ஜாய் பண்ணிக்கோன்னு சொன்னா, நமக்குள்ள மரித்துப்போன அல்லது புதைந்து போன ஆசைகளை தோண்டி எடுத்து நிறைவேற்றிக்கொள்ள மனசு துடிக்கும் அல்லவா? அதுதான் இந்த படமும்.

கார்ட்டர் ஒரு கார் மெக்கானிக். அவர் ஒரு பெரிய்ய குடும்பத்தின் தலைவன். ஒரே மனைவியுடன் 26 வருடங்களாக (!) வாழ்ந்து வருபவர். வரலாற்று பேராசியராக வர ஆசைப்பட்டு சில பல காரணங்களால் அது முடியாமல் கார் மெக்கானிக்காக ஆனவர். அது போல இன்னும் பல ஆசைகளை மனதினுள் அடக்கி கொண்டு வாழ்ந்து வருபவர்.
ஒரு நாள் Mr. எமதர்ம ராஜன் அவரின் முன் வந்து அவர் மரணத்திற்கு தான் நாள் குறித்தததை சொல்ல, அதாவது கார்ட்டர்க்கு தனக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது.


எட்வர்டு ஒரு மல்டி மில்லியனர். நம்ம அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் மாதிரி சில பல
ஹாஸ்பிட்டல்ஸ நடத்திட்டு இருக்கறவர். பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புவவர். நான்கு முறை கல்யாணம் ஆனாலும் நம்ம கமல் ஸார் மாதிரி சீ அந்த பழம் புளிக்கும்னு டைவர்ஸ் ஆனவர். சந்தர்ப்பவச்த்தால் அவருக்கும் கார்ட்டர்க்கு வந்த அதே நோய் வருகிறது. இருவரும் ஒரே ஹாஸ்பிட்டலில் ஒரே அறையை பகிர்ந்து கொள்ள நேரிடுகிற்து.

தமிழ் பட காதலர்கள் போல முதலில் முட்டிக்கொண்டாலும் , பின் வரும் தருணங்களால் இருவரும் நட்பாகின்றனர். எந்தளவிற்கு என்றால் நண்பணை பிடிக்காத அன்பு மனைவியிடம், அதே நண்பனுக்காக பரிந்து கொண்டு சண்டை பிடிக்கும் அளவுக்கு. இதில் ஒரு நாள் கார்ட்டர் எழுதி வைத்திருக்கும் பக்கெட் லிஸ்ட்டை(அவரின் ஆசைகளின் லிஸ்ட்) எட்வர்டு படிக்க நேரிடுகிறது. அதை தொடர்ந்து வரும் வாக்குவாதங்களின் முடிவில் கார்ட்டரின் ஆசைகளை இருவரும் இணைந்து செயல் படுத்த முடிவெடுக்கின்றனர்.

கார்ட்டரின் லிஸ்ட்டில் ஒவ்வொன்றாக குறைய ஒன்று மட்டும் முடியாமல் போகிறது.
அந்த ஒன்று இந்த உலகத்தின் உச்சமான எவரெஸ்ட்டின் மேல் ஏறி நிற்பது. அந்த ஆசை நிறைவேதுவதுக்கு முன்னலாலே Mr. எமதர்ம ராஜன் கார்ட்டரை அழைத்துக்கொள்ள எட்வர்டு அதை நிறைவேற்ற முடிந்ததா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

கார்ட்டராக மார்கன் பீரி மேனும், எட்வர்டாக ஜாக் நிக்கல்சனும் வாழ்த்திருக்கும் படம் இது. இருவரின் நடிப்பை பற்றி நான் சொல்வதை விட நீங்களே பார்த்து அனுபவிப்பது நலம். எல்லாரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய பீல் குட் மூவி இது.

டிஸ்கி

இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க

22 பிப்., 2010

முகங்கள்

13

விடுமுறை நாளில்
வேறு வேலை இல்லாததால்
பொழுதுபோக்க வழிதேடி
என் முகம் வரைய
முயற்சி செய்கையில்
வந்த முதல் முகம்
பாமா விஜயம் நாகேஷை
போலவும் இரண்டாம் முகம்
சற்று அப்புசாமி தாத்தா
போலவும் மூன்றாம் முகம்
முற்றும் துறந்த முனிவனை
போலவும் வர
ஏன் என்று யோசிக்கையில்
அலைபேசியில் வந்த
குறுஞ்செய்தி சொன்னது
“Happy Wedding Anniversary”

டிஸ்கி

இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க

16 பிப்., 2010

மை நேம் இஸ் கான்

4

இப்போது இந்த படத்தின் கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் கேபிள் அண்ணனின் வலை தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதிவு மை நேம் இஸ் கான் படத்தின் தொடர்ச்சியே. கஷ்டப்பட்டு அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் கான் அவரிடம் தனது பெயர் கான் எனவும் தான் தீவிரவாதி இல்லை எனவும் சொல்கிறார். இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் நடக்கும் அல்லது நடந்த உரையாடலை தமிழ்படுத்தி தந்திருக்கிறேன்.

கான் : ஹல்லோ பிரெசிடெண்ட் என் பெயர் கான், நான் தீவிரவாதி இல்லை.

அ.ஜ : ஒ.கே. மிக்க சந்தோஷம். நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமா ?

கான் : ஆமாம் பிரெசிடெண்ட். ஒரு சில பேர் செய்யும் சில தவறான செயல்களால் , அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயம் அல்லது மதத்தினை சேர்ந்த மக்கள் அனைவரும் தவறானவர்களாக பார்க்கப்படுவது நீயாயமா?
இந்த தவறான பார்வையினால் எத்தனை பேர் தினந்தோறும் அவமானபட வேண்டியிருக்கிறது என உங்களுக்கு தெரியுமா ? தயவு செய்து இந்த செயல்களை நிறுத்த உதவி செய்யுங்கள் பிரெசிடெண்ட்.

அ.ஜ : நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. நீங்கள் கோறும் உதவியையும் என்னால் கண்டிப்பாக செய்ய முடியும். அதற்கு முன் உங்களால் எனக்கு ஒரு சிறு உதவி செய்ய முடியுமா?. உங்களால் செய்ய முடியும் என நினைக்கிறேன்.

கான் : சொல்லுங்கள் பிரெசிடெண்ட்.

அ.ஜ : நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தை சேர்ந்த சிலர்தான் பல் இடங்களில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு காரணம் என நீங்கள் நம்புகிறிர்கள் இல்லையா ? அப்படி இருக்கையில் அவர்களிடம் சென்று அவர்கள் இந்த செயல்களை செய்யாமல் இருக்கச்செய்ய உங்களால் முடியும் இல்லையா ?
அப்படி நீங்கள் செய்தால் நீங்கள் கோறும் உதவியையும் நான் கண்டிப்பாக செய்கிறேன்.

இதற்கு ஒத்துக்கொண்ட கான் பல சிரமங்களுக்கிடையில் கலியுக எமன் மிஸ்டர் பின் லேடனை சந்திக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையில் உரையாடல் கிழே.

கான் : ஹல்லோ சார். என் பெயர் கான்.

பி.லே : அப்படியா. சந்தோஷம்.

கான் : தயவு செய்து உங்கள் அமைப்பினர் செய்யும் செயல்களை நிறுத்த முடியுமா ? அவர்களினால் பல பேர் சந்திக்கும் சங்கடங்கள் எத்தனை தெரியுமா? நம் சொந்த மக்கள் சந்திக்கும் அவமானங்கள் எவ்வளவ்வு தெரியுமா? இதல்லாம் நிறுத்தப்பட்டால் உலகம் அமைதியாக் இருக்கும் தெரியுமா ?

பி. லே : நீறுத்தலாம். ஆனால் எனக்கு போர் அடிக்குமே ?

கான் : ??????????????????????

கரன் ஜோகரும், கானும் இதையும் படமாக எடுப்பார்க்ளா ? அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க முடியும் ஒருவரால் , பின் லேடனை சந்திக்க முடியாதா என்ன ?

டிஸ்கி

இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க

15 பிப்., 2010

Bharamaram(2009)

3

நீங்கள் சிறு வயதில் செய்த ஒரு தவறை அதனால் வரும் பின்விளைவுகளை யோசிக்காமல் வேறு ஒருவர் மேல் சுமத்தினால் , அதனால் அந்த நபரின் வாழ்வு என்ன ஆகும் ? இது என்ன கேள்வி என்று கேட்க தோணுகிறதா ? ஒரு வேளை குற்றம் சுமத்தபட்ட நபரின் வாழ்வு அதனால் சிதைந்து போயிருந்தால். என்ன இது முட்டாள் தனமான சிந்தனை என்று கேட்கதோணுகிறதா ? எனக்கும் அதே உணர்வுதான் இந்த படத்தை பார்க்க தோன்றும் போது இருந்தது.

உன்னி கோயம்புத்தூரில் தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் ஒரு மத்திய வர்க்க குடும்ப தலைவன். அவனை தேடி வரும் ஒரு நண்பணின் பார்வையில் ஆரம்பிக்கிறது படம். அந்த நண்பணை அடையாளம் தெரியாமல் முதலில் ஒட்ட மறுக்கும் உன்னி, பிற்பாடு அந்த நண்பணின் சிய செயல்களால் அவனை நம்பி பழக ஆரம்பிக்கிறான். நடுவினில் வேறொரு நண்பனிடத்தில் பேசும் போது, அவன் இந்த நண்பணை பற்றி சொல்லும் போது, அதற்கு அவன் , உன்னி சொல்லும் பெயரில் அவர்களுடன் படிக்கவில்லை எனவும் , வேறு ஒருவனின் பெயரை சொல்லி இவன் அவனாக இருக்க கூடும் என எச்சரிக்கை செய்கிறான். அது முதல் உன்னி இவனை சந்தேக பார்வையில் பார்க்க ஆரம்பிக்கிறான். அடுத்த நிகழும் சில சம்பவங்களினால் அந்த நண்பண் யார் என தெரிய வருகிற்து. அந்த நண்பணின் கட்டாய படுத்துவதால் , வேறு வழியில்லாமல் அவனுடன் அவன் குடும்பததை சந்திக்க உன்னி பயனப்படுகிறான். அந்த பயனத்தில் நண்பணால் உன்னிக்கு கிடைக்கும் அனுபவங்களும், முடிவினில் ஏற்படும் ஒரு அதிர்சியுமே கதை.

உன்னியாக சுரேஷ் மேனன் என்ற நடிகரும், அவரை தேடி வரும் நண்பணாக சிவன் குட்டி என்ற கதாபாத்திரத்தில் மோகன்லாலும் நடித்திருக்கிறார்கள். இது முழுக்கமுழுக்க லாலேட்டனின் படம். பின்னி பெடலெடுத்திருக்கிறார். பூமிகா லாலேட்டனின் மனைவியாக மிகச்சில காட்சிகளே வந்தாலும் அவரது பண்பட்ட நடிப்பாலும், அவரது கதாபாத்திரத்தின் அதிர்சிகரமான முடிவாலும் மனதில் கனமாக உட்கார்ந்து கொள்கிறார். பிளஸ்ஸியின் இயக்கமும் மிக சிறப்பாக இருக்கிறது. இந்த படம் பல நெகடிவ் விமர்சன்ங்களை பெற்றிருந்தாளும் கூட லாலேட்டனின் மிக சிறப்பான நடிப்பால் கட்டாயம் ஒரு முறை பார்க்க வேண்டிய படம். இந்த படம் எனக்கு உணர்த்திய நீதி ஒன்றுதான். அது “உங்களது சிறு புன்னகை கூட மற்றவர்களை ஒரு துளி கூட சங்கடப்படுத்த கூடாது” என்பதுதான்.

டிஸ்கி

இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க

7 பிப்., 2010

அவன் இவன் அவர்

11

அவன் நீண்ட நேரமாக நடந்து கொண்டிருக்கிறான். அவனது குழப்பமான தெளிவற்ற மனநிலையை அவனது நடை பிரதிபலித்துக்கொண்டிருந்தது.எதிரில் வந்த ஒரு மோட்டார் பைக் காரணும் , சில பாதசாரிகளும் கூட அவனை திட்டி விட்டு விலகிச்சென்றனர். ஒரு நாயும் கூட அவன் மேல் மோதப்பார்த்து , அதன் மொழியில் அவனை குறைத்து விட்டு விலகி ஒடியது. இந்த செயல் எதுவும் அவன் புத்தியில் உரைக்க வில்லை. அவன் அவனது நடையை தொடர்ந்துகொண்டிருந்தான். அவனது இந்த மனநிலைக்கு காரணம் அவன் அன்று பூங்காவில் சந்தித்த அந்த மனிதர்தான். அவன் ஒரு இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவன். நீண்ட தொலைவில் இருந்த ஒரு சின்ன கிராமத்தில் இருந்து அவன் இந்த நகரத்தில் இருந்த கல்லூரியில் படிக்க வந்திருந்தான். மிகுந்த பொருளாதார சிக்கலினூடையே அவனது தந்தை கடன் வாங்கி அவனை படிக்க அனுப்பியிருந்தார். சிறிது காலமாக அவன் தந்தை நோய்வாய் பட்டு வேலைக்கு போக முடியாமல் வீட்டோடு இருந்த படியால் அவனுக்கு பணம் அனுப்ப முடியாமல் இருந்தார். அதனால் அவன் பரிட்சைக்கு பணம் கட்ட முடியாமல் தடுமாறினான். சின்ன வேலைகள் கூட அவனை நம்பி யாரும் கொடுக்காததால் மனம் வெறுத்து போய் இருந்த அவன் அன்று அவரை பூங்காவில் சந்திக்க நேர்ந்தது. அடுத்து என்ன செய்வது என்ற யோசனயில் ஒட்கார்ந்து இருந்த அவனுக்கு அவரின் பேச்சும் கனிவான தோற்றமும் ஆறுதல் அளித்தது. ஆனாலும் அடுத்தடுத்த சந்திப்பினில் அவரது பேச்சு அவனுக்கு நம்பிக்கையையும், நல்ல தெளிவையும் ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இன்று அவர் அவனிடம் தான் அவனுக்கு உதவ முடியும் எனவும் , ஆனால் அவன் அதற்கு உபகாரமாக ஒரு காரியம் செய்ய வேண்டும் என்றும் சொன்னார். அதை கேட்டு குழப்பமுற்ற அவனிடம் தான் அவனை கட்டாய படுத்தவில்லை எனவும் ஒரு இரண்டு , மூன்று நாட்கள் யோசித்து அவரிடம் அவனது முடிவை தெரிவிக்கும்படியும் சொன்னார்.

குழம்பிய மனநிலையில் வீட்டிற்கு திரும்புகையில் அவன் இவனை பார்த்தான்.அவன் நகரத்துக்கு வந்து சம்பாதித்த ஒரே ஒரு நண்பண் இவன் மட்டும்தான்.தாய் இல்லாமல் , குடிகார தந்தையின் கவனிப்பும் கிடைக்காமல் வளர்ந்திருந்தான். சின்ன சின்ன திருட்டுக்கள் நடத்தி பலமுறை சிறைக்கு போய் வந்திருந்தான். அவன் இவனிடம் மனக்குழப்பத்தை சொல்ல இவன் அவர் சொன்ன காரியத்தை செய்து முடித்தால் கிடைக்க போகும் லாபத்தை பத்தி யோசனை செய்ய ஆரம்பித்தான். முடிவினில் தான் அவனுடன் வருவதாகவும் இருவரும் அவரிடம் சென்று பேசலாம் என்றும் சொல்ல இருவரும் உணவறிந்து விட்டு உறங்கச்சென்றனர்.

அடுத்த நாள் இருவரும் சென்று அந்த மனிதரை இருவரும் சந்தித்தனர். அவன் இவனை அறிமுகப்படுத்தி, அவர் சொல்கிற காரியத்தை அவன் செய்ய சம்மதம் எனவும், அவர் தவறாக எடுத்துக்கொள்ளாவிட்டால் இவனையும் கூட சேர்த்துக் கொள்கிறென் என்றும் சொன்னான். சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் சம்மதம் எனவும் , ஒரு இடத்தை சொல்லி அங்கே வந்து விடும் படி சொன்னார். உடனே இவன் காரியத்தை முடித்தால் அவர் என்ன தருவார் எனக் கேட்க அதற்கு அவர் சிரித்துக்கொண்டே எல்லாம் நல்ல படியாக முடிந்தால் ஒரு பெரிய தொகயை தருவதாகவும் சொன்னார். அடுத்த நாள் அவர் சொன்ன இடத்திற்கு இருவரும் சென்றனர். அந்த இடத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடக்க ஆயத்தமாயிருந்தது. அவரும் சரியாக அதே நேரம் அங்கே வந்து சேர்ந்தார். அவர் கையில் ஒரு மாலை இருந்தது. வரும் தலைவர் அவரின் விருப்பமானவர் எனவும் , அவர் வந்த உடனே இந்த மாலையை அவருக்கு அனிவித்து விட்டு வேறு இடத்திற்கு போகலாம் எனவும் சொல்ல இருவரும் சம்மதம் என்றனர். கொஞ்ச நேரம் களித்து தான் போய் சிறுநீர் களித்து விட்டு வந்து விடுவதாகவும் , வரும் வரை மாலையை வைத்துக் கொண்டிருக்கும் படியும் சொல்லி விட்டுச்சென்றார்.

தலைவர் அந்த நேரத்தில் வர அவரை பார்க்க கூட்டம் முண்டியடித்து ஒடியது.அதைப்பார்த்த இருவரும் ஆவல் மிகுதியில் கூட்டத்துடன் இருவரும் சேர்ந்து
ஒடினர். கூட்ட நெரிசலில் தீடிர் என ஒரு பெரும் சத்தம் கேட்க , மீதி சனங்கள் சிதறி ஒடினர். போலிசாரும் சுறுசுறுப்பாக தலைவரை அந்த இடத்தில் இருந்து அழைத்துச்சென்றனர். அடுத்த நாள் நாளேடுகளில் அந்த செய்தி முதல் பக்கத்தில் இடம் பிடித்திருந்தது. ”தலைவர் பேச இருந்த கூட்டத்தில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.20 பேர் இறந்தனர்., இது ஒரு தீவிரவாத சதியாக இருக்காலாம் என போலிஸார் சந்தேகம்.”.

டிஸ்கி

இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க.

2 பிப்., 2010

பயாஸ்கோப் - A Soldiers Story(1984)

8

பயாஸ்கோப்

இந்த பகுதியில் நான் பார்த்த , என்னை பாதித்த படங்களை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். இவை எதுவும் கண்டிப்பாக விமர்சனம் அல்ல. ஒரு திரைப்பட ரசிகனாக நான் ரசித்த படங்களை பற்றிய எனது சிறு குறிப்புக்கள் மட்டுமே. இனி...

A Soldiers story(1984)

நான் பிறந்த நாலவது வருடதில் வந்த இந்தப் படத்தை நேற்றுதான் நான் பார்க்க நேரிட்டது. இரண்டாவது உலகப் போரில் ஹிட்லரின் நாசிப்படைகளை எதிர்த்து போர் செய்த அமெரிக்க படையினர் தங்கியிருந்த கேம்ப்பில் நடந்த ஒரு கொலையையும் அதன் விசாரணையையும் பற்றிய படம் இது. அந்த சமயத்தில் (1944) அமெரிக்காவில் இருந்த உச்சகட்ட நிறவெறியை பிரதிபலித்த படம் இது. ஆர்மி கேம்ப்பில் ஒரு கருப்பின் ஷார்ஜெண்ட்(வாட்டர்ஸ்) கொல்லப்பட அதை விசாரிக்க வரும் இன்னொரு கருப்பின ஆபிசர்(டேவன்போர்ட்) வெள்ளையின அதிகாரிகளால் சந்திக்கும் சவால்களும் , அதை சவால்களை எதிர்த்து நின்று அவர் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதும்தான் படமே.
அந்த ஆபிசர் அந்த ஆர்மி கேம்ப் இருக்கும் இடதிற்கு பஸ்ஸினில் வந்து இறங்குவதிலிருந்து அவரது ஒவ்வொரு செயளும் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். டேவன்போர்ட்டாக நடித்த Howard E. Rollins Jr. மற்றும் கொலை செய்யப்ப்டும் ஷார்ஜெண்ட் வாட்டர்ஸாக நடித்திருக்கும் Adolph Caesar உம் அந்த கேரக்டர்களாவெ வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் Adolph Caesarன் குரலும் நடிப்பும் ந்ம்முர் எம்.ஆர்.ராதாவை கண்ணில் நிறுத்தியது. இவர்களை தவிர படதில் சிறு வேடங்களில் நடித்திருக்கும் எல்லாரும் மிக நன்றாக நடித்தருப்பார்கள். Denzel Washington கூட ஒரு சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார்.

படம் முழுவதும் என்னை கவர்ந்தாளும் நான் ரசித்த இடங்கள் இரண்டு. கறுப்பின ஆபிசர்(டேவன்போர்ட்) இரண்டு வெள்ளையின சிப்பாய்களை விசாரிக்க , வெள்ளையின அதிகாரியால் அனுமதி அளிக்கப்பட்ட உடன் வெளியே வந்து தரும் எக்ஸ்பிரஸன் அலாதியானது. படத்தின் முடிவில் வெள்ளையின அதிகாரிகளால் போரினில் சண்டையிட சான்ஸ் தரப்பட , அதை கறுப்பின போர் வீரர்கள் கொண்டாடும் இடம். மொத்தத்தில் ஒரு அருமையான ப்ரியட் மூவி இது.

டிஸ்கி

சினிமாவை பற்றிய எனது முதல் பதிவாகவிருப்பதால் இத்தொடு முடிக்கிறேன். இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க.