30 மார்., 2010

மெய்பொருள்

8

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு..
 சுந்தரம் வாத்தியாரின் குரல் உரக்க ஒலித்தது ஐந்தாம் வகுப்பு ‘பி’ செக்சனில்.குள்ளமான உருவம், சற்றே கனத்த சரிரம், அதையொத்த நல்ல கனத்த சாரீரம் அதுதான் சுந்தரம் வாத்தியார். அவர் படித்து பெற்ற பட்டம் தமிழ் புலவ்ர். தன்னிடம் எந்த மாணவரும் ட்யுஷன் வைத்துக்கொள்ளாதது, மனைவியின் நச்சரிப்பு, அவர் அப்பா அவருக்கு தந்தை விட்டுப்போன வீட்டின் மேல் பங்காளிகள் கோர்ட்டில் தொடந்திருக்கும் கேஸ் போன்ற மனக்குறைகளும், சங்கடங்களும் அவருக்கு இருந்தாலும் அவர் கற்ற தமிழின் மேல் அவருக்கு இருக்கும் காதலும், அதை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் சற்றும் குறைந்ததில்லை அவருக்கு. 

பாடம் எடுத்துக்கொண்டிருக்கயில் இடையில் அய்யா தமிழ் வாத்தியாரய்யா என்ற குரல் நக்கலுடன் ஒலிக்க வகுப்பரைக்கு வெளியே வந்தார். அங்கே சேவியர் வாத்தியார் பக்கத்தில் ஒரு பையனுடன் நின்றிருந்தார். இவர் தலை வெளியில் தென்பட்டவுடன் “ ஏன்யா உம்ம பையனுக்கு வீட்டுல பென்சில் கின்சில்லாம் வாங்கி தரதில்லையா. பக்கத்துல இருக்கற பையனோட பய்லேந்துலாம் திருடறான்? “ என்று நக்கல் கலந்து ஒலித்த  சேவியர் வாத்தியரின் குரலை கேட்ட சுந்தரம் வாத்தியாரின் முகம் சிவந்தது. சேவியர் வாத்தியாரின் அருகில் உடம்பில் நடுக்கத்துடன் நின்றிருந்த பையன் மகேசு சுந்தரம் வாத்தியாரின் மகன். அவனும் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான்.
ஏற்கனவே வீட்டில் சட்டை பையிலும், பாத்திரங்களில்லும் வைத்த காசு அடிக்கடி காணமல் போவதில் மகனின் மேல சந்தேகத்தில் இருந்த வாத்தியார் திரும்பி வகுப்பறைக்குள் வேகமாக சென்று கையில் பிரம்புடன் வெளியில் வந்து மகேசை தரதரவென்று இளுத்துக்கொண்டு பள்ளியில் நடுப்பகுதிக்கு வந்தார். “அய்யா என்ன செய்யிறுரு” என்று கத்திக்கொண்டே சேவியர் வாத்தியாரும் பின் தொடர்ந்தார். பள்ளியின் நடுப்பகுதியை தொட்டவுடன் பள்ளி மக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க மகேசை கொண்டு வந்த பிரம்பு பிஞ்சு போகும் வரைக்கும் விளாசி தள்ளினார். கடைசியில் கைஒய்ந்து போக அவனை சுடும் வெய்யிலில் வெறும் காலில் முட்டி போட சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் விடுவிடுவென வகுப்பறையை நோக்கி நடந்தார்.  பள்ளி முடிந்து நண்பர்களுடன் பேசி முடித்து விட்டு வீடு திரும்பிய சுந்தரம் வாத்தியார் மகன் இன்னும் விடு திரும்பாத்தை அறிந்து மீண்டும் பள்ளி வந்து முழுவதும் மகனை காணாமல் வீடு திரும்பினார். வீடு திரும்பிய கணவனிடம் பள்ளியில் நடந்தை கேட்டறிந்த மனைவிக்கும் அவருக்கும் அந்த இரவு தூங்கா இரவாக விடிந்தது.

பொழுது புலர்ந்ததும் சென்னை எக்மோரில் வந்து நின்ற பெட்டியில் ஏறிய காசிமிற்கு நாற்பதில் இருந்து நாற்பத்தைந்து வயது இருக்கும். காலையில் வந்து நிற்கும் டிரைனில் ஏறி பயனிகள் விட்டு செல்லும் பேப்பர்கள் மற்றும் பாட்டில்களை பொறுக்கி விற்பது அவர் தொழில். அன்றும் ஒவ்வொரு பெட்டியாக போய் கொண்டிருக்கும் போது ஒரு பெட்டியில் ஒரு ஒரத்தில் சுருண்டு படுத்துக்கிடந்த அந்த பையனை பார்த்தார். அவனை தொடும் போது அவரை கண்டு பயந்து போன அவனை தேற்றி அவனை பற்றி விபரம் கேட்டாலும் அவன் எதுவும் சொல்லவும் இருக்க அவனை அங்கேயே விட்டுச் செல்ல மனமில்லாமல் அவனை அவருடனே கூட்டிச்சென்று சம்சுதின் என்று பெயரிட்டு வளர்க ஆரம்பித்தார்.  நாளடைவில் அவருடன் சம்சுதினும் மிகவும் ஒன்றிப்போய்விட்டான். காலம் உருண்டோடியது. இன்று சம்சுதின் சென்னை அறிந்த தொழிலதிபர். பல இடங்களில் சேரும் வேஸ்ட் பேப்பர்கள், அட்டை பெட்டிகளை சேகரித்து அவற்றை கூலாக்கி புது அட்டை பெட்டிகளாகவும் , பேப்பர்களாவும் மாற்றி மறு உபயோகதிற்கு அளிக்கும் தொழிற்சாலை ஒன்றை திரம்பட நிர்வகித்து வருபவன். அவன் கஸ்டமர் ஒருவன் சொன்ன விசயத்தை கேள்விப்பட்டு  தொழிற்சாலை அமைக்க நல்ல மலிவு விலையில் நிலம் வாங்க வந்த இடத்தில் அந்த ஊருக்கு வந்திருந்தான். ஒய்வு நேரத்தில் அந்த ஊரை அப்படியே நடந்து சுற்றி வரக்கிளம்பினான்.


வழியில் ஒரு வீட்டின் முன் ஒரு கூட்டத்தை பார்த்து ஒரு பெரியவர் சாகக்கிடப்பதை தெரிந்து கொண்டான். ஏனோ அவன் மனம் அந்த வீட்டின்  உள் நுழைந்து பார்க்க தூண்ட , அங்கு ஒரு பெரியவரை படுக்கையில் கிடத்தி இருக்க , படுக்கையை சுற்றி ஒரு வயதான் பெண்மணியும் இன்னும் சில பேரும் அழுது கொண்டு இருக்க, சற்றென நிமிர்ந்து பார்த்த அந்த வயதான் பெண்ணும் இவனை பார்த்து ஏங்க பாருங்க அவன் வந்துட்டான் என் அரற்ற ஆரம்பிக்க , இவனையும் ஏதோ ஒன்று செலுத்த அந்த பெரியவரின் அருகே போய் குனிந்து நின்றான். அவரின் காதருகே போய் அப்பா என்றவுடன் அவர் கண் அசைய இவன் அவரிடம்

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.. என்று சொல்ல அந்த பெரியவரின் உயிர் பிரிந்தது.
27 மார்., 2010

உலகம் உய்ய

13

சனிக்கிழமை மத்தியானத்தில்
சிறுநீர் கழிக்க ஒய்வறைக்குள்
நுழைய எத்தனிக்கையில்
டேங்கில தண்ணீர் இல்லை
என்ற மனைவியின் சொல் கேட்டு
தானியங்கி தண்ணீர் இரைப்பானை
முடிக்கிவிட்டு தெருவின் ஒரத்தில்
என் உடம்பின் பாறத்தை இரக்கிவிட்டு
தலை நிமிர்கையில் தென்பட்ட
நண்பரிடம் உலகம் உய்ய
என்ன வழி என்று நேரம் போவதே
தெரியாமல் விவாத்திருக்கையில்
பக்கத்து வீட்டு குழந்தை வந்து
சொல்லிப்போனது தண்ணீர்
பொங்கி வழிகிறதென்று.

25 மார்., 2010

மதமும் மனிதமும்

8

மதம்   என்னும்   யானை மேல் ஏறி
சினம் என்னும் ஆயுதம் ஏந்தி
வெறி பிடித்த மிருகம் போல் மாறி
சில பல உயிர்கள் அழித்து

மனிதம் என்னும் குணம் மறந்து போனோம்
மொத்தத்தில் மனிதரும் அழிந்து போவோம்
ஒருநாள்.

20 மார்., 2010

மேதை - கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

20

தயவு செஞ்சு எல்லாரும் வாங்க சாமி. வரேல்லேன்னா சாமி குத்தம் ஆயிரும்.
செல்லம் கோச்சுகாதம்மா. புஜ்ஜி குட்டில்ல வா போய் ஆடலாம்
புள்ளைங்களா கோபப்படாதீங்க. நான் எழுதல
என்னாது சினிமா தியேட்டர்லாம் மூடீட்டாங்களா?
மதுர குலுங்க குலுங்க
i can talk english. i can walk english. i can laugh english


டிஸ்கி : வந்ததும் வந்துட்டீங்க. எதுனாச்சும் சொல்லிட்டு போங்க.19 மார்., 2010

இப்படியும் ஒரு காதல் கதை

10

நான் விக்னேஷ்.  அவள் பெயர் லாவண்யா. எனக்கு அவகிட்ட ஒரு வேலை இருக்கு. ஆகா இதான வேண்டாங்கிறது. இந்த நித்தி வீடியோவல்லாம் பாத்து ரொம்ப கெட்டு போயிருக்கீங்க நீங்க.  ஒரு  இளைஞன் ஒரு இளைஞி கிட்ட ஒரு வேலை இருக்குன்னு சொன்னாக்க உடனே அது ஒன்னுதானா ? என்னோட விசயம் தெய்வீக காதல். பீயார். பிரேமம். சார் ? நீல்லுங்க எஙக போறீங்க. என்னாது பேச்ச் குறைச்சுகவா ? ஒ.கே சார் . ஆனா சார் எனக்கு ஒரு ஹெல்ப வேணும் ஒங்க கிட்ட இருந்து. சார் சார் பய்ப்படாதீங்க சார் விவகாரமால்லாம் ஒன்னும் கேட்டுட மாட்டேன். ஒரு பொண்ணு கிட்ட லவ் லெட்டர் எப்படி கொடுக்கிறது சார் ? சார் என்ன சொல்றீங்க ? சார். சார் பீளிஸ் நோ பேட் வேட்ஸ். ஏன் சார் கோச்சுகீறிங்க ?

இதல்லாம் கேக்குறானே சரியான கேணயா இருப்பானோன்னு நினைக்கிறீங்க. கரக்டா ? என்ன பண்றது சார் என்னோட நெலமை அப்படி. இப்படித்தான் நான் முதல்ல ஒரு பொண்ண லவ் பண்ணிணேன். அப்ப நான் கொஞ்சம் ஒல்லியா விசால் மாதிரி இருப்பேன். ஆனா கூட இருக்கற பசங்க எல்லாம் என்னவோ நான் ஷாருக்கான் மாதிரி இருக்கேன்னு சொல்வாங்க. பாவீங்க படு பாவிங்க ஒரு டீக்கும் ஒசி சிகரெட்டுக்கும் ஆசப்பட்டு என்னோட வாழ்க்கைய பொலி போட தெரிஞ்சானுங்க. பின்ன என்ன சார் வந்தோமா தம்ம போட்டோமா டீய குடிச்சோமான்னு போயிருக்கலாம்.? ஆனா என்ன் ஏத்து விட்டு ஒரு  பொண்ணு பின்னாடி நாயா பேயா அலைய விட்டுடாங்க. அவ பேரு வித்யா சார். நாங்க வளக்க்கமா குடிக்கிற டீ கடை பக்கத்துல இருக்கற கம்பூயூட்டர் சென்டர்ல படிக்கிறதுக்கு வருவா. நான் கொஞ்சம் நல்லாவே பாடுவேன் பாத்துகங்க. அப்படித்தான் அன்னிக்கு ஒரு நாள் தங்கமகன்ல ரஜினி பாடுவாருல்ல ராத்திரியில் பூத்திருக்கு தாமரைதான் வண்டோன்னு அந்த பாட்ட பாடுக்கிட்டு இருக்கறப்ப அவ கடைய கிராஸ் பண்னியிருக்கா. அத நான் கவனிக்கல ஆனா இந்த பசங்க சும்மா இல்லாம ஏத்தி விட்டுடாங்க. அவ என்னவோ என்னய திரும்பி பாத்து சிரிச்சிட்டு போனதா. 

மொதல்ல நான் அத நம்பல. ஆனா அடுத்த நாள் அவ கிராஸ் பண்றப்ப என்னய பாத்து சிரிக்கற மாதிரி இருந்துச்சு. அதுலேந்து நம்ம வாழ்கையே மாரி போச்சு. அவ வர டயத்துக்கு என்ன வேலை இருந்தாலும் கரக்டா கடைக்கு முன்னாடி வந்து நின்னுறுவேன். இப்படியெ போய்டு இருக்கறப்ப பசங்க எத்தன நாளைக்குதான் பார்த்துகிட்டே இருப்ப. போயி பேசுடானானுங்க. வாழ்க்கைல விதி அப்பத்தான் விளையாட ஆரம்பிச்சு எனக்கு. அடுத்த நாள் அவ நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு , கைல ஒரு ரோஸ்ஸ வச்சுகிட்டு கடைக்கு போனாக்கா கம்ப்யூட்டர் சென்டர்க்கு முன்னாடி ஒரே பரபரப்பா இருந்த்துச்சு. என்னான்னு விசாரிச்சா வித்யாகிட்ட அங்க வேலை பாக்கிற ஒருத்தன் லவ் லெட்டர் கொடுத்துடான்னு அவ வீட்டுல சொல்ல அவ அண்ணனுங்க , அப்பா எல்லாரும் வந்து கம்ப்யூட்டர் சென்டர்ர அடிச்சு நொறுக்கீட்டு அவனயும் அடிச்சு போட்டுட்டு சொன்னாங்க. இது தெரிஞ்ச உடனே நம்ம பிளான் டிராப் ஆய்டுச்சு. பின்ன என்ன பன்றது காதலுக்காக அடி வாங்க ஷாருக்கான இருக்கறத விட காதலிக்காம விசால்லாவ இருந்துட்டு போய்டலான்னு அப்ப முடிவு பண்ணினேன் சார். இருந்தாலும் கட்டிக்க போற பொண்ணுக்காது கல்யாணத்துக்கு முன்னாடி லவ் லெட்டர் கொடுக்கலான்னு பார்த்தா இந்த் லாவண்யா வேற என்ன கண்டாலே தெரிச்சு ஒடுறா சார்.

சார். சார். ஓடாதீங்க சார். ச். போய்டீங்களா ? சார் நீங்களாவுது சொல்லுங்க ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் எப்படி கொடுக்கிறது ?

டிஸ்கி

இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க


18 மார்., 2010

14 மார்., 2010

ஊனிலும் உயிரிலும்

6

என்னை கவர்ந்த பத்துப் பெண்களை பற்றி சொல்லியாயிற்றி. என்னிப் பார்த்தால் பெண்களுடனான நமது பந்தம் ஒரு எண்ணிக்கையில் முடிய கூடியதா என்ன ? ஜனனம் முதல் மரணம் வரை நம் வாழ்க்கையில் பெண்ணின் பங்கு மகத்தானது.
நம் உடம்பில் ஒடும் உதிரமாகவும், உடலில் ஒட்டியிருக்கும் உயிராகவும், நம் சுவாசமாகவும் நமக்கு எல்லாமாகவும் இருப்பது பெண் தான். நீரின்றி அமையாது உலகு, பெண்ணின்றி அமையாது வாழ்வு. என் வாழ்க்கையில் என்னை பாதித்த பெண்களை பற்றி பேசலாம் என்றிருக்கிறேன்.


இன்னும் சொல்வேன்...

12 மார்., 2010

கேள்விக் குறி ?

17

ஆன்மிகம் வளர்க்க
ஆசிரமம் தொடங்குவதும்
ஆண்டவனை தரிசிக்க
அர்ச்சனை சீட்டு தருவதும்
கல்வி கற்பிக்க
கல்லூரி தொடங்குவதும்

நோய் நொடி தீர்க்க
மருத்துவமனை நடத்துவதும்
பெரும் தொண்டா ?
அல்லது 
பெரும் வணிகமா?

11 மார்., 2010

ஒழுக்கம்

9

அண்ணண் முருகன் நல்ல பேச்சாளர்
ஒழுக்கம் என்ற தலைப்பில் அவர் பேச இருந்தது
மங்கயைர்கரசி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
மனைவி வள்ளியம்மை வாழ்த்தி வழிஅனுப்ப
கிளம்பிச்சென்றார் பள்ளிக்கு 
அமுதென அழகிய தமிழில் அவர் எடுத்தியம்ப
அமைதியாக ரசித்தனர் பெண்கள் 
பேசி முடித்த பின் உண்டு ஒய்வெடுக்க 
அண்ணண் போனார் தெய்வானையின் வீட்டுக்கு

10 மார்., 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்

14

முதல்ல சந்தோசம் நண்பர்களே. நம்மளயும் ஒரு மனுசனா மதிச்சி இந்த தொடர் பதிவிக்கு கூப்பிட்ட நண்பர் சைவகொத்துப்பரோட்டாவுக்கு நன்றி.


இந்த பதிவோட சட்ட திட்டம் என்னன்னா உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து பெண்மணிகளாவும் இருக்காலாம்.


இனி என்னோட பட்டியல்.


1. சின்னப் பொண்ணு : அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களே காலில் விழுந்து வணங்கிய பெரிய பொண்ணு இவர். ஏட்டறிவு இல்லாவிட்டாலும் விவசாய மக்களுக்கு இவர் ஒரு கலங்கரை விளக்கம்.


2. விஜயா : நாகப்பட்டினம் பள்ளி வேன் விபத்தில் சிறு குழந்தைகளை காப்பாற்ற தன் உயிர் தந்த தியாகி. அர்பணிப்பு என்னும் சொல்லின் அருஞ்சொல்பொருள்.


3. எம்.எஸ்.சுப்புலட்சுமி : இவரின் குரல் கேட்டு மயங்காதோர் இவ்வுலகத்தில் இல்லை.


4.  அன்னிபெசன்ட்அம்மையார் : கவிப்பேரரசர் (ரியல்) பாரதிக்கு பெண்களின் மகத்துவத்தை உணர்த்திய மாதர் குல மாணிக்கம். இவரின் பேச்சைக்கேட்ட பின்னர்தான் மாதவராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும் என்று பாடினான் பாரதி.  இந்திய சுதந்திர போரட்டத்துக்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது.


5.  கமலா செல்வராஜ் : காதல் மன்னனின் மகளாக பிறந்து , இந்திய பெண்களின் வயற்றில் பால் வார்த்தவர். டெஸ்ட் டுயுப் பேபியை சாத்தியப் படுத்தியவர். மருத்துவ உலகத்தில் இவர் ஆற்றி வரும் தொண்டு மகத்தானது.


6.  மதர் தெரசா : இவரின் சேவயை பற்றி சொல்ல எனக்கு அருகதை கிடயாது. மனிதராய் பிறந்த எவருக்கும் இவர் வாழ்ந்த இடம் ஒரு கோயில். இவர் வாழ்ந்த நாட்டினில் நாம் வாழ்வதே நமக்கு பெருமை.


7.  ஜான்சி ராணி லட்சுமி பாய் : வீரத்தின் விளை நிலம். வெள்ளயரை எதிர்த்து போரிட்ட இவரின் வீரமும், தன்னம்பிக்கையும் ஒவ்வொருக்கும் பாடம்.


8. கமலா மாமி : யார் இவர் என்று தெரியாதவர்கள் தயவு செய்து கடுகு தாளிப்பு வலை தளத்திற்கு ஒரு முறை சென்று பாருங்கள். பிறகு தெரியும் சகிப்பு தன்மையென்றால் என்னன்னு.


9. மதுரம் : என்.எஸ்.கே அவர்களின் மனைவி. இவரை திரையில் பார்த்தாலே நகைச்சுவை தெரிக்கும்.


10.  வலை உலக பெண்டீர் : சித்ரா டீச்சர்சின்ன அம்மினி, சந்தன முல்லை,அமிர்தவர்ஷினி அம்மா , கலகலப்பிரியா இன்னும் பலர். இவங்களலாம் பத்தி சொல்றதுகு என் கிட்ட சரக்கு பத்தாது.


இந்த பதிவ விருப்பபட்டவங்க எல்லாரும் தொடரலாம்.
 
டிஸ்கி


இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க
  

4 மார்., 2010

என் வாழ்வின் வசந்த காலங்கள்

10

அம்மாவின் கைப்பிடித்து பழகிய நடையும்
அப்பாவின் தோழ் ஏறி பழகிய உப்பு மூட்டையும்
அக்காவின் நோட்டினில் இருந்து எடுத்த மயில் சிறகும்
அண்ணனின் கைபிடித்து சுற்றி திரிந்த பொருட்காட்சியும்
தாத்தா ஆசையோடு வாங்கிதந்த முதல் பேண்ட்டும்
பாட்டி பாசத்தோடு சுட்டுத்தந்த அரைவேக்காட்டு முறுக்கும்
என் குழந்தை பருவத்து குதுகாலங்கள்.

அப்பாவின் பைக்காசு திருடி வாங்கிதின்ன பரோட்டாவும்
அண்ணிண் சைக்கிளில் குரங்குபெடல் ரவுண்ஸும்
பள்ளிகட் அடித்து பார்த்த மர்ம மாளிகையும்
பரிட்சையில் பிட் அடித்து ஆசானிடம் வாங்கிய அடியும்
பள்ளித்தோழியின் பின்போய் பாடிய “நடக்குது நந்தவனமும்”
ஆற்றங்கரை மணலில் வெய்யில்லில் ஆடிய கிரிக்கெட்டும்
என் விடலை பருவத்து அருஞ்சொட்பொருட்கள்

வேலை(த்)தேடி தேய்ந்த செருப்பும்
பசித்தீர்க்க புசித்த சீகரெட்டும்
தந்தை முகம் காண கூசிய வெட்டிப்பொழுதுகளும்
வேலை கிடைத்து வாங்கிய முதல் சம்பளமும்
தாய் முகம் மலர வாங்கித்தந்த முதல் புடவையும்
விண்ணைத்தாண்டி பறந்த முதல் விமானப்பயணமும்
அவள் மனம் என் மனமான திருமணமும்
எங்கள் இருமுகத்தின் ஒரு முகமான என் மகனும்
என் வாலிபத்தின் வழித்தடங்கள்

இவையாவும் என் வயோதிகத்தில் கொசுவர்த்தி சுருளாக
என் மனதினை மீட்டும் என் வாழ்வின் வசந்த காலங்கள்


2 மார்., 2010

பீபோர் தீ ரெய்ன்ஸ் - 2007

2

பீபோர் தீ ரெய்ன்ஸ் - 2007சிறிது நேரத்திற்கு முன்னால் நண்பர் மயில்ராவணனின் தகான் படத்தின் பதிவை படிக்க நேர்ந்த்தது.படிக்கும் போதுதான் எனக்கு பீபோர் தீ ரெய்ன்ஸ் படத்தை பற்றிய ஞாபகம் வந்தது. இதுவும் சந்தோஷ் சிவனின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் 2007ல் வெளிவந்த ஒரு இந்திய ஆங்கிலப்படம். இந்தப்படத்திலும் ராகுல் போஸ் தான் ஹீரோ. படத்தின்கதை எனப்பார்த்தால் சுதந்திரத்திற்கு முன்பான ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் நடந்த ஒரு கூடாக்காதலும்  அதன் பொருட்டு நடந்தேறும் சில சம்பவங்களும் தான். இந்த விடயத்தை சுதந்திரப் போரட்டத்தின் பேக் கிரவுண்டில் சொல்லியிருப்பார் சந்தோஷ் சிவன்.

படத்தின் ஹீரோ டீ.கே (ராகுல் போஸ்) கேரளாவில் ரோடு போட வரும் ஒரு ஆங்கிலேய பொறியாளனின் கிழே வேலை பார்த்து வருபவன். அந்த ஆங்கிலேய பொறியாளனின் வீட்டில் வீட்டு வேலை பார்க்க வரும் டீ.கேவின் ஊரை சேர்ந்த ஷாஜினிக்கும் அந்த பொறியாளனக்கும் காதல் அரும்புகிறது. இதில் சிக்கல் என்னவென்றால் ஷாஜினி ஏற்கனவே மணமானவள். இந்த கூடாக்காதல் ஷாஜினியில் கணவனுக்கு தெரிய வர, அதற்குப்பின் ஏற்படும் சில சம்பவங்களின் முடிவில் ஷாஜினி இறக்க நேரிடுகிறது. அவள் மரணத்தில் டீ.கேவை சந்தேகிக்கும் அவனின் ஊர்மக்களிடம் பெரும்பாடு பட்டு அவன் அதற்கு காரணமில்லை என நிருபிக்கிறான்.
ஷாஜினியின் மரணத்திற்கு காரணமானவனை கொன்றவனை டீ.கே கொன்றால் அவன் குற்றமற்றவன் என் ஊர் சொல்ல, டீ.கே அந்த ஆங்கிலேய பொறியாளனை கொன்றானா என்பதை வெள்ளித்திரையில் காண்க. இந்த படத்தினை பொருத்த மட்டில் முதலில் பாரட்டவேண்டியது ஒளிப்பதிவு. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவை பற்றி நான் விளக்குவது சச்சினின் பேட்டிங்கை சடகோபன் ரமெஷ் விள்க்குவது போல. ஹீ இஸ் சிம்பளி கிரேட். இரண்டாவது கவனிக்க பட வேண்டிய விடயம் இசை. இந்த படத்தின் இசையமைப்பாளர் Mark Kilian . அருமையான இசை. நம் மனதினை ஊடுருவி நம் ஆத்மாவை தட்டி எழுப்பும் இசைக்கோர்வை. மூன்றாவதாக ஷாஜினியாக
வரும் நந்திதா தாஸ். சூரியனை கண்டவுடன் மலரும் சூரியகாந்தி பூவின் பிரகாசத்தை ஒத்திருக்கும் பிரகாசமான முகமுடையவர் அவர்.அந்த அழகிய கண்கள் பேசும் ஆயிரம் கவிதைகளை நம்மால் படிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். டீ.கே வாக வரும் ராகுல் போஸும் நிறைவாக செய்திருக்கிறார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவுக்காகவும், நந்திதா தாஸின் நடிப்புக்காகவும் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

டிஸ்கி

இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க


1 மார்., 2010

நானும் காதலித்தேன்

13

தாயின் பிரசவம்
என் உலக தரிசனம்
நானும் காதலித்தேன்.

குழந்தைப்பருவம்
என் செல்ல குறும்புகள்
அம்மாவின் செல்ல அடிகள்
அப்பாவின் அரவணைப்பு
நானும் காதலித்தேன்.

விடலைப்பருவம்
விரும்பியபெண் பரிசு காதல்
நானும் காதலித்தேன்

வாலிபப்பருவம்
காதலியே மனைவி பரிசு குழந்தை
நானும் காதலித்தேன்

வயோதிகப்பருவம்
மரணத்தின் விளிம்பில் நான்
நானும் காதலித்தேன்

டிஸ்கி

இந்த கவுஜய படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட(மைனஸ் ஒட்டானலும்) கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க