30 ஏப்., 2010

சுறா - இது விமர்சனமல்ல

11

தேட்ஸ்தமிழ் சைட்ல வந்த சுறா விமர்சனம் கிழே( நன்றி - தேட்ஸ்தமிழ்)
-----------------------------------------------------------------------------------------------------------------------
நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்
எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார். --
என்னோட கமென்ட்
------------------

இந்த மாதிரி படத்த பாக்கறது விட்டுட்டு போயி பொழப்ப பாருங்க மக்கா.

-------------
டிஸ்கி : திட்டறவங்க திட்டிட்டு போங்க.

28 ஏப்., 2010

காதல் செய்வீர் மானிடத்தீரே! - பகுதி 4

3

பகுதி 1, பகுதி 2, பகுதி 3

சாத்தூர் போகும் அந்த பஸ்சின் மத்தியில் உள்ள ஜன்னலோர இருக்கையில் கண்முடி உட்கார்ந்திருந்தார் சிதம்பரம்.   அவரின் மனதில் எண்ண ஒட்டம் பஸ்ஸை விட மிக வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. 

தன்னை கூப்பிட்டது யார் என்று திரும்பி பார்க்கையில் நின்றிருந்த தியாகராஜனை பார்த்து ஒரு கணம் திகைத்துத்தான் போனார் சிதம்பரம். இன்சூரண்ஸ் அலுவலகத்தில் தியாகராஜனை பார்த்து விடாமல் போய்விட வேண்டும் என்றிருந்தவரை தியாகராஜனை பார்த்தவுடன் தர்மசங்கடாமியிருந்தது சிதம்பரத்துக்கு.  

திரும்பியவரிடத்தில் “என்ன சார் அநியாயமா இல்ல ஒங்களுக்கே” என்ற தியாகராஜனிடம் ஒரு கணம் திகைத்து “இல்ல.  அது வந்து ..... ” என்றார் சிதம்பரம்.

“ விட்டா ஒங்க ஆளுங்க எங்க தலைய மொட்ட அடுச்சிறுவாங்க போல்ருக்கு” என்று சிரித்த முகத்துடன் சொன்ன தியாகராஜனை பேச்சை கேட்டு ஒரு கணம் அவர் எதை பேசுகிறார் என்று தெரிந்தாலும் என்ன சொல்வதென்று நின்றிருந்த சிதம்பரத்தை பார்த்து “ வாங்க ரூமுக்கு போய் பேசலாம்” என்று அவரது ஆபிஸ் ரூமுக்கு கூட்டிப்போனார்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கையில் வந்த ஆபிஸ் பாயிடம் இரண்டு காபிக் கொண்டு வரச்சொன்னார் சிதம்பரம். ஆபிஸ் பாய் சென்றவுடன்
“ மாப்பிள்ளை எப்படி இருக்கார் ” என்றார் தியாகராஜன்.
ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் மவுனம் காத்த சிதம்பரம் “ சாரி சார்.  மன்னிச்சிருங்க” என்றவரிடம் “அய்யோ ஏங்க பெரிய வார்த்தயல்லாம் சொல்றீங்க”  என்றார் தியாகராஜன்.

அடுத்த சில நிமிடங்கள் நிலவிய மவுனத்தை  கலைத்தார் தியாகராஜன்.
“ஆக்சுவலி ரெண்டு பேரும் மேலயும் தப்பு இருக்கு சார். ரெண்டு பேரும் இன்னொருத்தங்க மேல வச்ச அதித அன்புதான் இதுகெல்லாம் காரணமா இருக்க முடியும்.  பொண்னுங்களுக்கு எப்பவுமே பொஸ்ஸவிவ்னெஸ் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். புருசன் தினம் போடற டிரஸ்லேந்து, சாப்பிடற சாப்பாடு வரைக்கும் தன்னோட சாய்ஸா இருக்கனும்னு நெனைக்கிறாங்க. ஆனா இந்த காலத்து ஆம்பிள பசங்களுக்கு அது என்னவோ தன்ன அடக்கிற மாதிரி ஒரு உணர்வு. பெத்தவங்க நம்ம ஒரு விசயத்த ஒரு தடைவுக்கு மேல சொன்னலே நம்ம மேலேயே எரிஞ்சு விலுவாங்க இல்லையா. கொஞ்ச காலம் விட்டு பிடிக்கலாம் சார். கவலை படாதீங்க ” என்று முடித்தார் தியாகராஜன்.

ஒரு சிறு சிரிப்புடன் கூடிய தலையாட்டலைதான் பதிலாக தர முடிந்தது சிதம்பரத்தால். காபி வரவும் குடித்து விட்டு மீண்டும் சிறிது நேரம் பேசி முடித்து விட்டு கிளம்புகையில் “ வீட்டுல வசந்தியையும் , மிச்ச எல்லாத்தையும் கேட்டதா சொல்லுங்க சார் ” என்றார் சிதம்பரம்.

“ உறுதியாக சொல்றேன் சார் ”  என்றார் தியாகராஜன். இந்த மனதில் ஒடிக்கொண்டிருக்கையில்  “ மாமா கண்ண தொறக்கறது.  வெங்கடாசலபுரம் வந்துருச்சுலா. இப்படியே தூங்கிட்டு இருந்தீங்கன்னா கோவில்பட்டி வந்துர போது ” என்ற குரல் கேட்டு கண்விழித்தார் சிதம்பரம். பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்  சிதம்பரத்தின் மனைவி கோமதியின் தம்பி மாடசாமி.

-- தொடரும்.

26 ஏப்., 2010

காதல் செய்வீர் மானிடத்தீரே ! - பகுதி 3

5

பகுதி 1, பகுதி 2

மகளை சற்று சமாதானப்படுத்தி மதுரைக்கு கூட்டி வந்து ஒரு வாரம் ஒடியிருந்தது தியாகராஜனுக்கு. மதுரை வந்து சேர்ந்த அடுத்த நாளில் இருந்து அவரை வேலை முழுவதுமாக ஆக்ரமித்து கொண்டது. அவர் மதுரை நகரில் இருக்கும் ஒரு இன்சூரன்ஸ் கம்பேனியில் மேனஜர். மோட்டார் வாகனங்களின் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை நிர்வகிக்கும் அலுவலகம் அது. கடந்த வாரங்களில் ஆக்சிடெண்ட் ஆன சில லாரிகள் மற்றும் வேன்களின் போன்றவற்றின் கிளைம் சமபந்தபட்ட சில விசயங்களை மற்ற நிர்வாகிகளுடன் விவாதித்து அவரின் கீழ் வேலை செய்தவர்களுக்கு அது சம்பந்தமான உத்தரவுகளை பிறப்பித்து அவர்களை வேலை வாங்குவது என பொழுது மிகவும் பிஸியாக போனது.


கடந்த ஒரு வாரத்தில்  தியாகராஜனின் மனைவி மேகலாவும், மகன் சுரேஷும் வசந்தியை ஒருவழியாக சற்றே சகஜ நிலைக்கு கொண்டு வந்திருந்தனர். சுரேஷ் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பீ,காம் படித்துக்கொண்டே தியாக்ராஜனின் நண்பரான ஒரு ஆடிட்டரின் கிழ் வேலை பார்த்துக்கொண்டே சி.ஏ. வகுப்புகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருக்கும் இளைஞன். வசந்தியை விட மூன்று வயது இளையவன்.  மனைவி மேகலா ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளர். நல்ல வசதியான குடும்பம் இவர்களுடையது.


மகன் வந்து ஒரு வாரம் ஆகி விட்டாலும் சிதம்பரத்தால் அவன் விவகாரத்தில் அடுத்த படியாக ஒன்றும் செய்ய முடியாத மாதிரி அவரது வேலை அவரை இழுத்துக்கொண்டது. அவர் இருக்கின்ற நகரமான சாத்தூரில் உள்ள ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை அவருக்கு.  அந்த நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை மேனேஜ்மெண்டின் கீழ் வேலை பார்க்கும் அவருக்கும் தான் ஒரே இடத்தில் 40 வருடங்களாக வேலை பார்பது பெருமைதான். ஆர்.டி.ஒ ஆபிஸ் வேலைகள் மற்றும் அவர்களின் சடட சம்பந்தபட்ட வேலைகள் அனைத்தயும் தனி ஒரு ஆளாக சமாளிப்பது அவரின் திறைமைக்கு சான்று.


குமரேசன் வந்த தினத்தின் காலையில் அவரது அலுவலகத்தில் இருந்து வந்த அவசர அழைப்புக்கு விரைந்து சென்று பார்க்கையில் அவர்களின் லாரி ஒன்று லோடு ஏற்றி வருகையில் திருச்சியின் அருகே மற்றொரு சிறு வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் கோர்ட்டுகும், போலிஸ் ஸ்டஷ்னக்கும் அழைந்து அவரின் செருப்பு தேய்ந்துதான் போயிருந்தது. அந்த வண்டியின் இன்சூரன்ஸ் சம்பந்தபட்ட வேலைகளை பார்க்க அந்த இன்சூரன்ஸ் கம்பேனிக்கு வந்திருந்தார் அன்றைக்கு. வந்த வேலை முடிந்து கிளம்ப வாசல் நோக்கி திரும்பியவரை “சிதம்பரம் சார் . ஒரு நிமிடம்” என்றழைத்த குரல் தியாகராஜனுடையதாயிருந்தது.


-- தொடரும்.20 ஏப்., 2010

சுறா சார் சுறா !

17

நண்பரின் இமெயிலில் வந்தது.
 ----------------------------------------------------------

விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை.

கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்

"அடங்கொய்யால  ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"


விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
அவரோட 50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்....
----------------------------------------------------------------------------------------------

.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்

நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.

19 ஏப்., 2010

விருது

10

விருது
தனக்கு கிடத்த விருதை எனக்கும் அளித்து என்னை சந்தோச கடலில் தள்ளியிருக்கிறார் பா.ரா. சார்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் போது கணக்கு பரிட்சையில் முதல் முதலாக( கடைசியாகவும் தான் :) ) நூற்றுக்கு நூறு வாங்கிய போது
வகுப்பெடுத்த காந்திமதி டிச்சர் என்னை வகுப்பின் முன் வந்து நிற்க சொல்லி எல்லோரையும் எழுந்து நிற்க சொல்லி கைதட்ட சொன்ன
நிகழ்வு மனதில் வந்து போகிறது. காந்திமதி டீச்சர் மாதிரி பா.ரா. சாரை உணர்கிறேன் இப்பொழுது. நன்றி பா.ரா. சார் இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.

தனக்கு கிடைத்த இந்த விருதை நண்பர் சைவகொத்துபரோட்டாவும் என்னுடன் பகிர்நதிருந்தார். அவருக்கும் என்னுடைய கோடனு கோடி நன்றிகள்.

13 ஏப்., 2010

காதல் செய்வீர் மானிடத்தீரே - பகுதி 2

9


சிறிது சிறிதாக கிளம்பிய விசும்பல் சத்தம் பெரும் அழுகையாக மாறதுவங்கியிருந்தது. எரிச்சலுடன் கையில் வைத்திருந்த சொம்பை தண்ணிருடன் தரையில் தூக்கி எறிந்தார் சிதம்பரம்.

"என்ன எழவுடா இது. என்ன விசயன்ன்னு சொல்லாம  பொட்ட(ப்) புள்ள மாதிரி அழுக ஆரம்பிச்சுட்ட. அசிங்கமா இல்ல உனக்கு. கொன்னு போட்ற போறேன். . அழுகைய  நிப்பாடிட்டு என்னன்னு சொல்லி தொலை இப்ப” பொங்கி எழுந்த கோபத்தை வார்த்தைகளில் காட்டினார் சிதம்பரம்.

“என்னன்னு சொல்ல சொல்றீங்க. அப்படியே செத்துறலாம் போல இருக்கு. ஒரு மதிப்பே இல்லாம போச்சு எனக்கு” அழுகையினூடே வெடித்து கிளம்பியது வார்த்தைகள் குமரேசனிடம் இருந்து.

“ தம்பி அப்படில்லாம் சொல்லாத. இராசா. உன்னய நம்பித்தானய்யா நாங்க இருக்கோம் ” என்ற மனைவியை “ கொஞ்ச நேரம் வாயை பொத்திக்கிட்டு சும்மா கிட. நீ வேற” என்றார் சிதம்பரம்.

“ எனக்கு என்ன மூளையே கிடையாதா. நான் என்ன சின்ன கொழந்தையா ஒவ்வொரு விசயத்துக்கும் எதுனாச்சும் சொல்லிகிட்டே இருக்கா. ஒவ்வொரு தடவயும் அவ எடுக்கற முடிவுக்குதான் நான் தலையாட்டனும்னு நெனக்கிறா. நானா எதுவும் பன்னுனாலும் குத்தம் கண்டுபிடிச்சுகிட்டே இருக்கா. கோபத்துல எதுவும் திருப்பி பேசுனா ஏதோ புழுவ பாக்கற மாதிரி பாக்குறா. அப்படி பாக்குறப்ப எனக்கு செத்து போய்றலாம்னு தோனும். இருந்தாலும் எல்லாத்தயும் சகிச்சிகிட்டு இருந்தாக்க முந்தா நேத்தி ஒன்னுமத்த விசயத்துக்கு கத்தி கூப்பாடு போட்டு நடுத்தெரும்னு பாக்காமா மேல கைய வெக்கறா. செத்தாலும்  சாவனே ஒளிய அவ கூட சத்தியமா இனிமே வாழ முடியாது என்னால” கோபமும் சுயபச்சாதாபமும் கலந்து வந்து விழுந்து வார்தைகளினால் நொந்து போய் தூணில் சாய்ந்தார் சிதம்பரம்.

”ஒரு விசய்த்தில கூட சொந்தாம யோசிச்சு முடிவு எடுக்க தெரியாத, நல்லத் எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்க தெரியாத, எடுத்ததுக்கெல்லாம் கோப படற, எதுலயும் ஒரு நிதானம் இல்லாத ஆம்பள் கூட எப்படி வாழுறதுன்னு தெரியலப்பா” பெரும் சோகத்திலும் நிதானமாக பேசிய மகளை பார்த்து பெருமையாக இருந்தது தியாகராஜனுக்கு. இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் “கோபப்படாம நிதானமா யோசிச்சு முடிவெடுக்காலாம்மா. என்னாச்சு சொல்லு” என்றார் நிதானாமாக.

“இல்லப்பா. கசந்து போச்சுப்பா. கோப்பட்டா பொருத்துக்கலாம். எடுத்ததுக்கல்லாம் கத்தறதும் இருக்கற இடம் என்னன்னு தெரியாமா அடிக்க கைய ஒங்கறதும் என்னப்பா பொழப்பு இது. இதல்லாம் கூட பொருத்துக்கலாம்பா. நாமள்ளலாம் படிச்சிருக்கோம்லப்பா. வார்த்தைகள்ள ஒரு டிகினிட்டி வேணாம். எடுத்ததுக்கெல்லாம் ஸ்லம் பிப்புள்ஸ் மாதிரியாப்பா பேசறது. அந்த வார்த்தயல்லாம் கேட்டா அப்படியே உடம்பு கூசுதுப்பா. இது வேணாம்பா எனக்கு. பேசாமா டைவர்ஸ் வாங்கி குடுத்துருங்கப்பா” என்ற வசந்தியை சற்றே கோபத்துடன் பார்த்தார் தியாகராஜன். வாழ்க்கையின் அந்த கணம் மிக கடினமாக தோன்றியது அவருக்கு. 
-- தொடரும்.

9 ஏப்., 2010

காதல் செய்வீர் மானிடத்தீரே!

7

கீணிங்.. கீணிங் என சத்தம் கேட்டு சற்றே கண் விழித்தார் சிதம்பரம். பக்கத்தில் படுத்திருந்த மனைவி கோமதியை உசுப்பி பார்த்தார்.
”ஏய் கொஞ்சம் எந்திருச்சு போய் என்னன்னு பாக்கலாம்ல” என்றவரிடம்
“நீங்க போய் பாருங்க” என்று பதில் வர “சரிதான்” என்றபடியே “இந்த நேரத்துல எந்த எழவு வந்து இப்படி இம்சை பன்றதுன்னு தெரியலயெ” என்று மனதில் நினைத்துக்கொண்டே இடுப்பில் நழுவி கிடந்த வேட்டியை கட்டிக்கொண்டே வாசலை பாத்துப்போனார்.
திரும்பியும் கீணிங்.. கீணிங்கென சத்தம கேக்கவே “ஏய் எவனப்பா அது. கொஞ்சம் கூட பொறுமை இல்லயா. வந்துட்டு இருக்கோம்ல” என்றபடியெ எரிச்சலுடன் கதவை திறந்தால் கையில் பெட்டியுடனும், தோழில் பையுடனும், முகத்தில் மூன்று நாள் தாடியுடனும் குமரேசன் நின்றிருந்தான். குமரேசன் அவரது மகன். அவன் பின்னால் எட்டிப்பார்த்து “எங்கடா, வசந்தி” என்றவரிடம்
“வரல” என்றவனிடம் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தாலும் “ சரி படுத்து தூங்கு அப்புறம் பேசலாம்” என்று சொல்லிவிட்டு படுக்கையை நோக்கிப்போனார்.
திரும்பியும் முழிப்பு தட்ட , ஏதோ விசும்பல் சத்தம் முத்ததில் இருந்து வர “என்ன எழவுடா இது” என்று மனதில் நினைத்துக்கொண்டே படுக்கையில் திரும்பி பார்த்தால் மனைவி இல்லை. “ஒ விடுஞ்சிருச்சா” என்று முனங்கியபடியெ படுக்கைய விட்டு எழும்பி வெளியே வந்தால் “ என்னங்க பாத்தீங்களா பாவி மவ நம்ம தம்பிய என்ன பாடு படுத்திருக்கான்னு” என்ற மனைவியை “ஏய் சும்மா” இரு என்று சொல்லி விட்டு “ என்னடா என்னாச்சு” என்றார் மகனிடம். “ வந்த்துட்டேன்” என்றவனிடம் “என்னடா ஆச்சு” என்றார் சற்று ஆத்திரத்துடன்.

மதுரை பொன்மேனி மூன்றாவது தெருவில் இருந்த அந்த வீட்டில் இருந்து ஒலித்த டெலிபோன் சத்தம் தெரு முழுதும் கேட்டது. “ ஏய் டெலிபோன் இந்த சத்தம் போடுது. அத யாராது எடுத்தா என்ன” என்று கத்தியபடியே டாய்லட்டின் கதவை திறந்த படியே வந்த தியாகராஜனை பூஜை அறையில் இருந்து எட்டிப் பார்த்த மனைவியிடம் “ ஒ அங்க இருக்கியா நீ. சாமிப்படத்தா பாத்துட்டா போதும் ஒனக்கு. இந்த சுரேஷ் எங்க போனான்” என்ற படியே போனை எடுத்து “ஹலோ” என்றவரிடம் “ அப்பா உடனே கிளம்பி வாங்கப்பா” என்று அவரின் மகள் வசந்தியின் குரல் ஒலித்தது.

-- தொடரும்.

2 ஏப்., 2010

விட்டில் பூச்சி வாழ்க்கை

10

மத்தியான நேரத்தில் எனது கீழ் ஒர்க் பண்ணும் டெவலப்பர் ஒருவனின் கோடிங்கை எடுத்து ரிவுயு பண்ணிக்கொண்டிருக்கும் போது இண்டர்காம் ஒலிக்க எடுத்தால்  எனது  மேனேஜர் சந்தர்.
 “ ராம் குட் யு கம் டூ மை ரூம் பார் பைவ் மினிட்ஸ். ஐ ஹாவ் அ நீயுஸ் பார் யூ”.  
“யெஸ் சார் ஐ ஆம் கம்மிங் நெள” இண்டர்காமை அதனிடத்தில் வைத்து விட்டு, சிஸ்டத்தை லாக் செய்து விட்டு என்ன விசயமாக இருக்குமென்று யோசித்து கொண்டே மேனேஜரின் கேபினை நோக்கி நடந்தேன். 
”குட் ஐ கம் இன் சார்” மேனேஜரின் கதவை தட்டி விட்டு “யெஸ்” என்றவுடன் கதைவ திறந்து உள்ளே நுழைந்தேன்.
தனது லேப் டாப்பை  பார்த்து கொண்டே “டேக் யுவர் சீட்” என்றவரிடம் “இட்ஸ் ஒகே சார்” என்றவனை அவர் நிமிர்ந்து பார்க்க உடனே ஒரு சீட்டின் நுனியில் உட்கார்ந்தேன்.
”ஹோப் யூ வில் ரிமம்பர். கப்புள் ஆப் வீக்ஸ் பேக் பீபோர் வீ  டிஸ்கஸ்டு அபவுட் ஆன் ஆன்சைட் ஆபர்சூனிட்டி. டூ யூ ஹாவ் இண்டரஸ்ட் டூ டிராவல்” என்றவரிடம் மனதில் சந்தோசம் இருந்தாலும் என்ன சொல்வதென தயங்கி நின்றவனிடம் “வாட் மேன். வென் எவர் ஆப்பர்சூனிட்டிஸ் நாக் யுவர் டோர் டோன் ஹெஸிடேட் டூ டேக் இட். திஸ் இஸ் த ஏஜ் பார் டிராவல் அண்ட் ஏனிங்” என்றார்.

” நோ சார். ஐ வில் டிஸ்கஸ் வித் மை பேமிலி அண்டு வில் லெட் யூ நோ இன் அனதர் கப்புள் ஆப் டேஸ்” என்று சொன்னவுடன் ”ஒகே மேன் டேக் யுவர் டைம்” என்று அவரின் லேப் டாப்பில் திரும்பியும் மூழ்க ஆரம்பிக்கே தலையாட்டிவிட்டு ஒரு தேங்ஸுடன் வெளியேறினேன்.

திரும்ப வந்து எந்து சீட்டில் உட்கார்ந்து சிஸ்டத்தை அன்லாக் செய்தாலும் சந்தோசத்தில் மனது வேலையை செய்ய மறுத்தது. இந்த கம்பேனியில் சேர்ந்து ஆறு மாதம்தான் ஆகிறது. ஐந்திலக்கத்தில் சம்பளம், ஆறிலக்கத்தில் கடன். இதற்கு முன்னால் சென்னையில் வேலை செய்த கம்பேனியில் கடைசி ஒன்றரை வருடம் அமெரிக்காவில் இருந்தாலும் வந்தவுடனே இந்த கம்பெனியில் இன்னும் கூடுதலாக சம்பளம் கிடைக்க , இப்பொழுது ஆறு மாதமாக பெங்களுருவில் வாசம். மனைவியும் குழந்தைகளும் அப்பா அம்மாவின் துணையுடன் சென்னையில். மனைவியும் வேலை பார்த்தாலும் புலி வாலைப்பிடித்த கதையாக ஹோம் லோனும் , வேகில் லோனும் இன்ன பிற பெர்சனல் லோன்களும் விடாமல் தொரத்த கூட கிடைத்த சம்பளத்தால் உத்தியோக மாற்றத்தை உளமாற நேசித்தது மனது. இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சென்னை பயனம்.

சந்தோச மிகுதியால் மனைவியை கூப்பிட்டு விசயத்தை சொல்ல உடனே போன் எடுத்து டயல் செய்தேன். ரீங் போய் சிறிது நேரம் களித்து போனை எடுத்தவள் “ஐ ஆம் இன் மீட்டிங். வில் கால் யூ லேட்டர்” என்று சொல்லி உடனே கட் செய்தாள். செரி என்று போனை அதன் இருப்பிடத்தில் வைத்து விட்டு ஒரு காப்பி எடுத்து கொண்டு லாஞ்சில் வந்து உட்கார செல்போன் ரிங் அடிக்க கலை காலீங் என்று வர செல்லை எடுத்து “என்னம்மா மீட்டிங் முடிஞ்சதா “ என்றவனிடம் “இம். இம் . சொல்லுங்க” என்றாள் உற்சாகம் இல்லாத குரலில்.

“பிஸியா இருக்கியா. பேசலாமா” நான்.

”இல்ல சொல்லுங்க என்ன விசயம்”. அவள்.

” ஒரு குட் நீயுஸ். “ என்றவனிடம் “என்ன இங்க டிரான்ஸ்பர் கிடைச்சுருச்சா” என்றாள் உற்சாகமாக.

“லூஸு. அதல்லாம் இல்ல. ஒரு ஆன்சைட் ஆப்பர்சூனிட்டி இருக்கும் போல இருக்கு. உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லறேன்னு சொல்லிருக்கேன் ஆபிஸ்ல. அதான் கால் பண்ணினேன். நீ என்ன சொல்ற”.

”இந்த வீக் எண்டு இங்க வருவீங்கள. அப்ப பேசிக்க்கலாம். ஏண்ட மட்டும்தான் கேப்பிங்களா. அப்பா அம்மா வேற ஊர்ல போய் ஒரு ஆறு மாசம் இருக்கனும்னு சொன்னாங்க. வீக் எண்டு வந்து அவங்க கிட்டயும் பேசிட்டு போய் முடிவ சொல்லுங்க” என்றாள்.

”ஏய் அதல்லாம் விடு அவங்க கிட்ட நான் பேசிக்கிறேன். நீ என்ன சொல்ற சொல்லு”.

“ஏங்க இந்த அவசரம். வீக் எண்டு வருவீங்களா? இல்லேன்னா அப்படியே அங்கேந்து ஆன் சைட் போகப்போறீங்களா” என்றவளிடம் “ஒ.கே போன வையி. நான் அங்க வந்து பேசிக்கிறேன்” என்று சொல்லி போனை கட் செய்தேன்.அடுத்த வந்த மூன்று நாட்களும் டெஸ்டிங், கோடு ரிவியு, ஆன்சைட் கால் என்று பிசியாக போனது. மேனஜரும் ஏதோ கஸ்டமர் மீட்டிங்க்கு போய் விட்டதால் அவரிடம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் நாட்கள் கழிந்தது. அந்த வெள்ளிக்கிழமை ஈவ்னிங் மடிவாலா போய் கே.பி.என் பஸ் பிடித்து சனிக்கிழமை காலை ஐந்து மணிக்கு கே.கே,நகரில் உள்ள பிளாட்டில் நுழைந்து காலிங் பெல் அடிக்கையில் அப்பா வந்து கதவை திறந்தார்.

“என்னப்பா எப்படி இருக்கீங்க” என்றவனிடம் “நல்லா இருக்கேன். போய் படுத்து ரெஸ்ட் எடு. அப்புறம் பேசலாம்” என்றார். பேக்கை சோபாவில் வைத்து விட்டு பெட்ரூம் கதைவை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தேன். நன்றாக தூங்கி கொண்டிருந்த மனைவியையும் குழந்தையையும் டிஸ்டப் செய்யாமல் நானும் ஒரு ஒரமாக படுத்து தூங்கிப்போனேன். காலை எழுந்து  வெளியில் சென்று சில வேலைகளை முடித்துவிட்டு மத்தியம் லன்ச்சுகு வீட்டின் உள் நுழைந்தேன். அப்பா டீவியில் உட்கார்ந்து நீயுஸ் கேட்டு கொண்டிருந்தார். அவர் அருகே போய் உட்கார்ந்தேன். 

“ போய் சாப்பிடு ” அப்பா.

“நீங்க சாப்பிடீங்களா” என்றவனிடம் “இம்.இம்” என்றார் டீவியில் இருந்து கண்ணை எடுக்காம்லே. சரி என்று சாப்பிட்டு உட்கார அருகே வந்து மகனும் உட்கார அவனுக்கு ஊட்டி விட்டுக்கொண்டே நானும் சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்து அப்பா பக்கத்தில் வந்து உட்கார்ந்து “உங்க கிட்ட கொஞ்சம் பேசனும். நான் ஆன்சைட் போகப்போறேன் என்றேன்” என்றவனை திரும்பியே பார்க்காமல் இருந்தார்.

“கலை கிட்ட சொல்லிருந்தேன். உங்க கிட்ட சொன்னாலா” நான்.

“ தெரியாது. அம்மா கிட்ட சொல்லிருப்பா” அப்பா.

எரிச்சலுடன் மனவியை நிமிர்ந்து பார்க்க அவள் பெட்ருமினுள் நுழைந்து கொண்டிருந்தாள்.

”சாரிப்பா நான் உங்ககிட்ட சொல்லாததுக்கு. இப்ப என்ன சொல்றீங்க”.

”என்ன சொல்ல சொல்ற. தகவலா சொல்றியா இல்லேன்னா யோசனை கேக்கறியான்னு தெரியாம என்ன என்னத்த சொல்ல சொல்ற”.

“அப்பா” என்று சற்று உரக்க சொன்னவனை திரும்பி பார்த்து நிதானமாக “சொல்லு” என்றார்.

”சாரிப்பா. யோசனதான் கேக்கறேன் சொல்லுங்க” என்றேன்.

“எதுக்குப்பா கல்யாணம் பண்ணிக்கிட்ட ?” சற்று நக்கல் கலந்து வந்து விழுந்த வார்த்களை கேட்டு எரிச்சலுடன் “ இத எதுக்கு கேக்கறீங்க. நான் கேட்டதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.  புரியல எனக்கு” என்றேன்.

“ரெண்டு பேரு கல்யாணம் பண்றதே வாழ்கைல ஒரு பற்றுதல் வரனுங்கிறதுக்குதான். கல்யாணம் முடிஞ்சு எத்தன நாள் சேந்து இருந்துருப்பீங்க நீங்க சொல்லு. கல்யாணம் முடிச்ச உடனே ஆன் சைட் போறேன்னு கிளம்பி போய்ட்டு ஒரு ஆறு மாசம் கழிச்சு வந்த. வந்த உடனே கடன வாங்கி ஒரு வீட்ட வாங்கின.எனனடா இவ்வளவ்வு  கடன் வாங்கிருக்கானேன்னு பயம் ஒரு பக்கம் இருந்தாலும் நெரய சந்தோசமாவும் இருந்துச்சு உன்னய பாத்து. கொஞ்ச நாள் இருந்த . குழந்தையும் பொற்ந்துச்சு. குழந்த பொறந்துருச்சு . டூ வீலர் பத்தாது. கார் வாங்கனுன்னு யோசிச்ச. திரும்பியும் ஒரு கடன். கடன் அடைக்கனும் பணம் வேனுன்னு திரும்பியும் ஒரு ஒன்னரை வருசம் காணம போயிட்ட. திரும்பி வந்த. சேரி இனிமே எல்லாரும் சேந்து சந்தோசமா இருக்கலாம் அப்படின்னு நெனச்சா. இங்க இவன உட அவன் அதிகமா துட்டு தரான்னு ஆறு மாசமா அங்க போய் ஒங்காத்து இருக்க. ரெண்டு வாரத்துக்கு ஒரு தர வந்து போறேன்னு கொஞ்சம் சந்தோசப்பட்டா இப்ப அதுவும் இல்லைங்கிற. எத நோக்கி போய்ட்டு இருக்கனு ஒனக்கும் தெரில எனக்கும் புரியல. ஒன்கூடவே வரலான்னு ஒத்தி நெனச்சா நீ அவள மறந்து வேகமா ஒடிக்கிட்டே இருக்க. இதாப்பா வாழ்க்கை விட்டில் பூச்சி மாதிரி. அதுகுத்தான் ஒன்னும் தெரியாம வெளிச்சத்த பார்த்து வெளக்கு பக்கத்துல போய் வாழ்கைய முடிச்சுக்குது. நீங்க என்னன்னா பக்கத்துல இருக்குற சந்தோசத்த பத்தி யோசிககாம வேற எதயோ சந்தோசன்னு நெனச்சுகிட்டு அத அடய நெத்தமும் ஒடி ஒடி சாகூறீங்க. எலலாம் தெரிஞ்ச நம்மளும் அப்படியே இருக்கலாமா இராசா. சொல்லு.  யோச்சிசு முடிவு எடு”.

“லச்சுமி நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன். கொஞ்சம் அந்த குடைய எடு” . அம்மா கொண்டு வந்து கொடுத்த உடன் செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பி போனார். எதுவமே தோன்றாமல் சற்று நேரம் அப்படியே உட்கார்ந்து இருந்தேன். அடுத்த நாள் யாரிடமும் எதுவும் பேசாமல் சாயங்காலம் வந்தது. ஊருக்கு கிளம்பும் போது “என்ன முடிவு எடுத்தீங்க” என்ற மனைவியிடம் “தெரியல் போயிட்டு கால் பண்ணி சொல்றேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினேன். அடுத்த நாள் காலையில் பெங்களுருவை தொட்ட பின் மொபைல் எடுத்து வீட்டுக்கு டயல் செய்ய அப்பா எடுத்தார்.

“நான் இங்க வந்துட்டேன்” என்றவனிடம் “சரி” என்ற ஒற்றை சொல் பதிலாக வர சற்று நிதானித்து  “நான் போலப்பா” என்றேன். “சரி” என்ற அப்பாவிடம் குரலில் சற்று சந்தோசம் கலந்து இருந்தது.