12 மே, 2011

புத்தர் என் வீட்டிற்கு வந்திருந்தார்

9

ஒரு லட்சம் கோடிக்கு
எத்தனை சைபர்
என்று யோசித்திருந்த
ஒரு பொழுதில்
ஆசையை துறந்து
புத்தர் ஆன சித்தார்தன்
என் வீட்டிற்கு வந்திருந்தார்

சாப்பிட கொடுப்பதிற்கு
பருக்கை கூட இல்லை
என்றவனிடம்
கோக்கோ பெப்சியோ
போதுமென்றார்

படுத்து தூங்க
பட்டுமெத்தையும்
காட்டன் தலகானியும்
கொடுத்தவனிடத்தில்
வெற்றுத்தரையில்
படுப்பதே சுகமென்றார்

தூக்கம் வராமல் கட்டிலில்
புரண்டுகொண்டிருந்த நான்
ஏதேனும் பேசலாமா என்றேன்
கிழே படுத்திருந்தவரிடம்

என்ன வேனும் கேள்
என்றவர் ஆசையே
துன்பத்திற்கு காரணம்
என்றார் கேட்க தொடங்கும்
முன்.

மற்றவன் மனைவியிடம்
தொடர்பு வைத்திருந்த
ஆடவன் ஒருவன்
கொலையுண்ட செய்தியை
அவரிடம் சொல்லி
காரணம் என்னாவாயிருக்கும்
என்றேன்

பேராசையின்றி வேறேன்ன
என்றவர்
காதலே ஒரு
துன்பமிகுந்த இம்சையென்றும்
சொன்னார்

1 லட்சம் கோடி ஊழலலை
பற்றி பேசிக்கொண்டிருக்கையில்
தனக்கு தூக்கம் வருகிறதென்றும்
ஒரு போர்வை கொடுத்தால்
சுகமென்றும் சொன்னார்

காலையில் துயில் நீங்கி
எழுந்தவரிடம் பல் தேய்க்க
கரிப்பொடியை நீட்டியவனிடதில்
பெப்ஸோடண்டு பேஸ்டை
தவிர்த்து மற்றதெதுவும்
ஒத்துக்கொள்வதில்லை
என்றார்.

கிளம்பும் முன்
வெள்ளிக் கோப்பையில்
காப்பி அருந்தியவர்
ஆசையில்லாத மனிதன்
ஒருவனை காண
ஆசையென்றார்

சாவை கண்டு
அழுத பெண்ணிடத்தில்
சாவே விழாத வீட்டில்
கடுகு வாங்கி வர
அவர் சொன்னதை
அவருக்கே நியாபகபடுத்த
வேண்டியிருந்தது.இராமசாமி கண்ணன்.

9 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.