28 அக்., 2011

துயில்

4


’மச்சி இருந்தாலும் நான் அவள அடிச்சிருக்க கூடாதுடா’ பஃப்பில் உட்கார்ந்து புலம்பி கொண்டிருந்தான் அவன்.


‘என்னடா ஆச்சு ? ‘ மேலும் கதை கேட்கும் ஆர்வத்தில் இவன்.
‘அவ என்ன அழகு தெரியுமாடா.. இன்னிக்கு காலைல தூங்கிட்டு இருந்தப்ப பக்கதுல மூஞ்சிய கொண்டு போய் பார்த்தேன்.. மச்சி தேவதை பார்த்துருக்கியா நீ.. அப்படியே இருந்தாடா ’ அவன்.


’அப்புறம் ஏண்டா ‘ இவன்...


’தெரியல மச்சி .. ‘ என்று முடித்தான் இவன்.


கதை சீக்கிரம் முடிந்துவிடுமோ என்று நினைத்த இவன் ‘ மச்சி இன்னும் ரெண்டு லார்ஜ் சொல்லாம்டா.. ஒன்னு உனக்கு .. இன்னொன்னு எனக்கு, என்ன சொல்லிரவா’ என்றான்.


ஒரு நிமிடம் யோசித்த இவன் ‘ மச்சி ..... அவ எபபடி இருந்தா தெரியுமாடா..’ திரும்பியும் ஆரம்பித்தான்.


அவன் ஆரம்பித்தவுடன் இவன் அங்க வந்த பார் அட்டெண்டரிடம் இன்னும் ரெண்டு லார்ஜ் என்றான்.


முதல் சிப்பை வாயில் வைத்த அவன் “ எங்கம்மாலாம் காலைல அஞ்சு மணிக்கு மேல தூங்கி பார்ததில்ல மச்சி நான் “ என்றான்.
---
மாடிப்படியில் ஒரத்தில் உட்கார்ந்திருந்தவளின் கன்னத்தில் அழுது ஒய்ந்திருந்த சுவடுகள் பதிந்திருந்தன.


’ ஏய் அரசி போட போறான். வா பார்க்கலாம் ‘ அவளின் அம்மாவின் குரலுக்கு ‘ நான் வரலம்மா.. நீ பாரு’ என்றாள். 


‘என்னடி ஆச்சு உனக்கு .. ஒன்னும் சொல்லாம இங்க வந்து ஏன் இப்படி உக்காந்துட்டு இருக்க ‘ என்றபடி வெளியே வந்தாள் அம்மா.


‘இம்ம்.. குழந்த அழுதுச்சு.. போம்மா.. நீ போய் உன் வேலைய பாரு ‘ என்றபடி திரும்பி உட்கார்ந்தாள்.


’உங்களுக்கு என்ன காபியா ? டீயா ? டெய்லி காலைல எழுந்த உடனே எப்பவுமே இதே கேள்விதான் எப்பவும்’ எரிச்சலாக வந்தது அவளுக்கு.


இன்னிக்கு காலைல எழுந்து வந்தப்ப “ தேவதை மாதிரி இருக்கடி என் புஜ்ஜிம்மா “ அவன் இளுத்து பிடித்து கட்டிக்கொண்டு கொஞ்சியது நியாபகம் வந்தது. கண்ணின் ஒரத்தில் இருந்து சில கண்ணிர் துளிகள் அவள் சேலையில் சிதறியது.


டீவியில் அரசி ஒட ஆரம்பித்திருந்தது.


----


அடுத்த நாள் காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்திருந்த அவன் கிச்சனில் பாத்திரங்களை உருட்டி கொண்டிருந்தான் அவன். “ இந்த காப்பி பொடிய எங்க வச்சுட்டு போனா இவ “ என்று ஆரம்பித்தவனின் வாயில் ஒரு கெட்ட வார்த்தையும் உதிர்ந்தது.


----


காலை ஏழரை மணி ஆகியும் எழுந்திராமல் தூக்கி கொண்டிருந்தவளை எழுப்ப போன அம்மாவிடம் சொல்லிகொண்டிருந்தார் அப்பா “ அவ அங்கதான் டெய்லி காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து வேலை பார்த்திருப்பா.. கொழந்த தூங்கட்டும் விடென்”.


”குட்டிம்மா எழுந்திரேன்.. நேரமாச்சு” தினம் கொஞ்சி எழுப்பும் குரல் காதில் கேட்காமல் இன்னும் தூங்கி கொண்டிருந்தாள் அவள்.

இராமசாமி கண்ணன்.

4 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.