முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

August, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தரின் குடிசை

நீண்ட நாட்கள் ஆயிற்று இந்த பக்கம் வந்து.வீட்டினில் என்னை தவிர யாரும் இல்லாமல் தனிமையில் உழன்று கொண்டிருந்தேன். அங்கே போகலாமா, அதை செய்து விடலாமா ஒன்று விதமான ஒடிக்கொண்டிருந்த மனதை கட்டுப்படுத்தி வீட்டில் தச்சு மம்மு சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம் என சாதத்தை மைக்ரோ வேவ் அவனில் வைத்தேன். வரும் தச்சு மம்மு மட்டும் சாப்பிட்டால் நல்லாயிருக்காது என யோசித்த மனம் ரசம் வைக்கச் சொல்லியது. ரசத்தை வைத்து இறக்கியவுடன் , இருக்கும் ஊறுகாயை வைத்து சாப்பிடலாம் என்று நினைத்து எல்லாத்தயும் எடுத்து வைத்தேன்.  இவ்வளவ்வு பண்ணியாச்சு இன்னும் ஒரு காய் செய்ய முடியாத என்று எண்ணி வீட்டில் கிடந்த நான்கைந்து உருளைக் கிழங்குகளை எடுத்து வேக வைத்து சற்றே மசித்து ஒரு விதமான் பொடிமாசை பண்ணி இறக்கினேன்.

சாப்பிட்டு முடித்தவுடன் தனிமையை விரட்ட வந்த ஆபத்தாந்தவனாக பேரிலக்கியவாதி, கவிதாமணி, இலக்கிய செம்மல் மயில்ராவணன் எழுந்தருளினார்.  வந்தவர் ஒரு பெரிய சூட்கேசை திறந்து ஒரு விதமான பொட்டியை வெளியே எடுத்தார்.. திகைத்து போர் பார்தேன். படம் பார்க்கலமா என்றார் ? தலையசைத்து வைத்தேன். என்ன படம் பார்க்கலாம் என்று அடுத்த கேள்வி வ…