முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஷகிலா சேச்சியும் சிநேகிதர்களும் பின்னே விஷாலும்

சித்திரை திருநாளை முன்னிட்டு வெளியான நான் சிகப்பு மனிதனில் விஷாலின் பக்கெட் லிஸ்ட்டில் இருப்பதிலயே ஆக முக்கியமான விசயமானது கேரளத்து பைங்கிளியாய் ஒரு கால கட்டத்தில் இருந்த லால்களயும், மம்முட்டிகளயும் முட்டி புறந்தள்ளிய அகில இந்திய சூப்பர் ஸ்டாரினி உயர்திரு ஷகிலா சேச்சியின் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது.  இந்த பாயிண்ட் ஒரு பாடு மனதில் வைத்து பூட்டிய சாத்தூர் நினைவுகளை வெளியே கொண்டு வந்து விட்டது.

அது பள்ளி முடித்து காலேஜ் சேர்ந்த கால கட்டம். அதுவரைக்கும் வாழ்வினிலே மிகவும் மகிழ்ந்து செய்த விசயம் சாப்பிடுவது நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, ஆற்றங்கரை மணலில் கால் கடுக்க கிரிக்கெட் விளையாடுவது மற்றும் வெட்டி அரட்டை அடிப்பது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானதாக இருந்தது சரோஜாதேவி புத்தகம் படிப்பது. காலேஜ் சேர்ந்த கால கட்டத்தில் +2 முடித்தும் இஞ்சியரிங் சேரும் ஆசையில் இருந்தும் இஞ்சியரிங் சீட் கிடைக்காத சில நண்பர்கள் மட்டும் இம்ப்ரூவ்மெண்ட் எழுதுவதற்காக பயிற்ச்சியில் இருந்தனர். அவர்களின் ஆகப்பெரும் காரியம் தினமும் சாயங்கால வேளையில் இருட்டிய பின்னர் தேவி தியேட்டருக்கும் முருகன் தியேட்டருக்கும் விஜயம் செய்வது. தேவி தியேட்டர் சாத்தூரிலிருந்து மதுரை போகும் வழியில் ஊரின் எல்லையான வெங்கடாசலபுரத்திற்கு சற்று முன்னர் இருப்பது(இருக்கிறது). முருகன் தியேட்டர் என்பது அதற்கு நேர் திசையில் சாத்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் அமிர்பாளையத்தில் இருப்பது(கேள்வி பட்டத்தில் இந்த தியேட்டர் இப்பொழுது இல்லை).  தேவி தியேட்டரில் இரவு 8.30 மணிக்கு ஒரு ஷோ. படத்தின் முதல் பாதி முடியும் நேரம் ஏறத்தாழ 9.15..  முதல் பாதி ஆரம்பித்த 10 நிமிடங்களிலிருந்து அடுத்த அரை மணி நேரத்தில் வெட்டி ஒட்டிய முக்கிய காட்சிகள் முடிந்து விடும். முருகன் தியேட்டரில்  காட்சி ஆரம்பிக்கும் நேரம் 10 மணி 0 வினாடிகள்.. சரியாக 9.15 மணிக்கு வெளியே வரும் நண்பர்கள் கூட்டம் சைக்கிளை மிதித்து சரியாக 9.50 மணிக்கு முருகன் தியேட்டரில் ஆஜர் ஆகும். அங்கே முதல் பாதி முடிய சற்றேகுறைய 10.45 ஆகும். அதன் பின்னர் குரூப் ஸ்டெடியை எங்கள் வீட்டு திண்ணையில் அரங்கேற்றிவிட்டு கூட்டம் கலையும் நேரம் இரவு 12 ஆகும். இது தினசரி வேலைப்பாடு. கையில் காசு இல்லையென்றால் இடையில் ஒன்றிரண்டு நாட்கள் வார விடுமுறை அளிக்கப்படும். மிச்சபடி சரியாக தேவி தியேட்டர் வேலையாள் எங்களுக்காக தியேட்டர் கதவை சரியாக 9.15 மணிக்கு திறந்து வைத்து காத்திருப்பார் நாங்கள் வெளியேற. ஏற்கனவே பார்த்த படங்களாயிருந்தாலும் எங்களுக்கு ஒருபொழுதும் அழுத்துப்போனதில்லை.
சரியாக காலேஜ் மூன்றாம் செமஸ்டர் என்று நினைக்கிறேன். அப்பொழுது இம்ப்ரூவ்மெண்ட் கிளிகள் எல்லாம் பறந்துவிட்டிருந்தன. நான் மட்டும் தனித்த கிளியாய் சிறகு விரிக்க ஆரம்பித்திருந்தேன். OR(operational Reserach)நான் அரியர் வைத்திருந்த பேப்பரை அன்றைக்கு மத்தியம் திருப்பி எழுத வேண்டும். காலை பத்து மணி வாக்கிலயே வீட்டிலிருந்து கிளம்பி நான் முருகன் தியேட்டர் வாசலில் நின்றிருந்தேன். அப்பொழுது அங்கே மடோனாவின் Body of Evidence படம் ஒடிக்கொண்டிருந்தது.  படம் பார்க்க உள்ளே நுழைந்து இண்டர்வெல் விட்டாயிற்று. திடிரென்று மேலே விழுந்த ஒரு கை “என்ன மாப்ள படம் பார்க்க வந்திருக்க போல” என்று குரலெழுப்பியது. திகைத்து போய் நிமிர்ந்தால் பி.காம் படிக்கும் நண்பனொருவன் நின்றுகொண்டிருந்தான். சிவகாசியில் இருந்து வந்து போனவன்.  இப்படியாக படம் முடிந்து பரிட்சைக்கு போய் சேர்ந்தேன். எக்ஸாம் ஹாலில் எனது ஹெச்.ஓ.டி தான் சூப்பர்வைசர். கால்குலேட்டர் எடுத்து வராத என்னை கரிந்து கொட்டி நான் பெயிலாக வரம் அளித்தார். ஒரு மாசம் முடிந்து ரிசல்ட் வந்திருந்தது. பாஸாகியிருந்தேன்.. என்னே மடோனாவின் கருணை. அன்றிலிருந்து இன்று வரை மடோனாவின் அந்த படத்தை ஏறத்தாழ 100 தடவையாது பார்த்திருப்பேன். மடோனாவுக்கு நான் ஆற்றும் நன்றிக்கடன்.

இப்படியாக ஊர்புராணத்தை முடித்துக்கொண்டு இன்றைக்கு பார்த்த விஷாலின் நான் சிகப்பு மனிதனை பார்ப்போம்.

Narcolepsy /ˈnɑrkəˌlɛpsi/, also known as hypnolepsy, is a chronic neurological disorder caused by the brain's inability to regulate sleep-wake cycles normally.[1] People with narcolepsy often experience disturbed nocturnal sleep and an abnormal daytime sleep pattern, which often is confused with insomnia. Narcoleptics, when falling asleep, generally experience the REM stage of sleep within 5 minutes, while most people do not experience REM sleep until an hour or so later.[2]


இப்படியாகப் பட்ட Narcolepsyயால் பாதிக்கப்பட்ட (எனக்கும் ஆபிஸ்ல வேலை கொடுத்தா தூக்கம் வருது...) விஷால் வாழ்வினில் முக்கியமான சமயத்தில் தூங்கிவிட அதனால் பேராபத்திற்கு உள்ளாகி வில்லன்களை போட்டுத்தள்ளுவதுதான் படம்.  கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் நம்மை துடிக்க துடிக்க வைத்து வெளியே அனுப்புகிறார்கள். விஷால் பரவாயில்லை.  லட்சுமி மேனன் பொருந்தாத உடை அணிந்து படத்தில் நடித்திருக்கிறார். இவர்களை தவிர ஜெயப்பிரகாஷும், சரண்யாவும் வழக்கம் போல. திரு இயக்கியிருக்கிறார். ஒரு தடவை பார்க்கலாம். எப்படியும் ஷகிலா சேச்சி காப்பாத்திவிடுவார் விஷாலை. 

அடிச்சு அடிச்சு கை வலிக்கு. அதுனால விஷால் படம் ஒரு தபா பார்க்கலாம்னுட்டு சொல்லி இதோட முடிச்சுக்கறேன். 


க ரா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அப்பா காணாமல் போனார்

காரை டெலிவரி எடுக்க வந்திருந்த கஸ்டமருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, டேபிளில் இருந்த டெலிஃபோன் அடிக்க ஆரம்பித்தது.

போனை எடுத்தவுடன் “பிஸியா இருக்கேன். யாருன்னாலும் கனெக்ட் செய்யாதன்னு சொன்னேன்ல” என்றேன் ப்ரியாவிடம்.

ப்ரியா ரிஷப்பனிஸ்ட்.

 “இல்லை சார் உங்கம்மான்னு சொன்னாங்க அதான் “ என்றாள்.

 “அம்மாவா ? “ ஒரு கணம் கேள்விக்குறி மாதிரி புருவங்கள் ரெண்டும் வளைந்து நிமிர்ந்தது.  கஸ்டமருக்கு புரிந்திருக்கவேண்டும். “கிளம்பட்டுமா ? “ என்பது மாதிரி சீட்டை விட்டு எழுந்திருந்தார்.

“சாரி” என்றேன். கைக்குலுக்கி அவர் நகர்ந்தவுடன், “ம்ம்.. கனெக்ட் பண்ணு என்றேன்”.

”அஷோக் “ என்று பதில்குரல் ஒலித்தது. கனெக்ட் செய்திருந்தாள். அம்மாவின் குரல்தானா என்று ஒரு நிமிடம் யோசனை வந்து போனது. அவளிடம் எப்போது கடைசியாக பேசினேன் என்று நினைவில்லை. “சொல்...லு..ம்மா” என்றேன் தயங்கி தயங்கி..
”அஷோக் ... அப்பாவ காணலடா “ என்றாள்..
தூக்கி வாரிப்போட்டது. “எத்தன மணி நேரம் ஆச்சும்மா . பக்கத்துலதான் போயிருப்பார். வந்துருவார்” என்றேன்.
“இல்ல அஷோக் .. மூணு நாளாச்சுடா” என்றாள்.
“என்னம்மா சொல்ற” ஜோதி மாமா வீட்டில் சோபாவில் உட்கார்ந்தி…

வாசிப்பு என்னும் பேரானந்தம்.

சிறு வயதிருலிருந்து எனது நினைவு தெரிந்த நாள் முதல் என்னுடைய முக்கியமான பொழுது போக்கு கனவு காண்பது.. எனக்கு நானே கதைகள் சொல்லி கொண்டு ஏதோ ஒரு கனவில் அழைந்த பொழுதுகள் ஏராளம்.   அந்த பழக்கம் பிற்கு வந்த நாட்களில் பல கதை புத்தகங்களை வாசிப்பதில் கொண்டு போய் சேர்த்தது.  
மற்ற சிறுவர்கள் பூந்தளிர், அம்புலிமாமா, சிறுவர் மலர் என்று படித்து கொண்டிருந்த காலத்திலேயே ஆனந்த விகடனை வாசிக்க காத்து கிடப்பேன் நான்.   ஏனோ எனக்கு புராண காலத்து கதாபாத்திரங்களின் மேல அந்த அளவு ஈடுபாடு இருந்தது இல்லை அந்த நாட்களில். அதானாலேயே என்னவோ காலப்போக்கில் தேவிபாலா, ரமணிசந்திரன் போன்றோர் எழுதிய நிகழ்கால மனிதர்களை போன்ற கதாபாத்திரங்களை உள்ளடக்கிய நாவல்கள் என்னை பெரிதும் கவர்ந்திருந்தன.  பாடப் புத்தகங்களை தொடாமல் நாவல்கள் , ஆனந்த விகடன் போன்ற புத்தகங்களிலேயே சஞ்சரித்திருந்தது என் மனம். இந்த பழக்கத்தினால் பள்ளியில் மதிப்பெண்கள் குறைய குறைய வீட்டில் வசவும் அடியும் ஏறுமுகம் அடைந்தது.
சிறுவயதிலேயே என்னிடம் ஒட்டிகிடந்த பிடிவாத குணம் அடிகளையும் வசவுகளையும் தாண்டி கதை புத்தகங்களை நோக்கி என்னை ஒட வைத்தது. வீட்டிற்கு தெரியாமல் கத…