23 பிப்., 2010

தீ பக்கெட் லிஸ்ட் (2007)

8

நாம் எல்லாருக்கும் மணிரத்னத்தின் ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாடலை போல நெரைய ஆசைகள் இருக்கும். அவற்றில் சிலவற்றை அடைந்திருப்போம், சில ஆசைகள் விட்டில் பூச்சிகள் விளக்கின் ஒளியில் மரித்து போவது போல் நம்முள்ளே மரித்து போயிருக்கும். Mr. எமதர்ம ராஜன் உங்களின் முன் வந்து கண்ணா உன்னோட லைப் அவ்வளவ்வுதான், இன்னும் மூணு மாசம்தான் இருப்ப அதுக்குள்ள என்ஜாய் பண்ணிக்கோன்னு சொன்னா, நமக்குள்ள மரித்துப்போன அல்லது புதைந்து போன ஆசைகளை தோண்டி எடுத்து நிறைவேற்றிக்கொள்ள மனசு துடிக்கும் அல்லவா? அதுதான் இந்த படமும்.

கார்ட்டர் ஒரு கார் மெக்கானிக். அவர் ஒரு பெரிய்ய குடும்பத்தின் தலைவன். ஒரே மனைவியுடன் 26 வருடங்களாக (!) வாழ்ந்து வருபவர். வரலாற்று பேராசியராக வர ஆசைப்பட்டு சில பல காரணங்களால் அது முடியாமல் கார் மெக்கானிக்காக ஆனவர். அது போல இன்னும் பல ஆசைகளை மனதினுள் அடக்கி கொண்டு வாழ்ந்து வருபவர்.
ஒரு நாள் Mr. எமதர்ம ராஜன் அவரின் முன் வந்து அவர் மரணத்திற்கு தான் நாள் குறித்தததை சொல்ல, அதாவது கார்ட்டர்க்கு தனக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது.


எட்வர்டு ஒரு மல்டி மில்லியனர். நம்ம அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் மாதிரி சில பல
ஹாஸ்பிட்டல்ஸ நடத்திட்டு இருக்கறவர். பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புவவர். நான்கு முறை கல்யாணம் ஆனாலும் நம்ம கமல் ஸார் மாதிரி சீ அந்த பழம் புளிக்கும்னு டைவர்ஸ் ஆனவர். சந்தர்ப்பவச்த்தால் அவருக்கும் கார்ட்டர்க்கு வந்த அதே நோய் வருகிறது. இருவரும் ஒரே ஹாஸ்பிட்டலில் ஒரே அறையை பகிர்ந்து கொள்ள நேரிடுகிற்து.

தமிழ் பட காதலர்கள் போல முதலில் முட்டிக்கொண்டாலும் , பின் வரும் தருணங்களால் இருவரும் நட்பாகின்றனர். எந்தளவிற்கு என்றால் நண்பணை பிடிக்காத அன்பு மனைவியிடம், அதே நண்பனுக்காக பரிந்து கொண்டு சண்டை பிடிக்கும் அளவுக்கு. இதில் ஒரு நாள் கார்ட்டர் எழுதி வைத்திருக்கும் பக்கெட் லிஸ்ட்டை(அவரின் ஆசைகளின் லிஸ்ட்) எட்வர்டு படிக்க நேரிடுகிறது. அதை தொடர்ந்து வரும் வாக்குவாதங்களின் முடிவில் கார்ட்டரின் ஆசைகளை இருவரும் இணைந்து செயல் படுத்த முடிவெடுக்கின்றனர்.

கார்ட்டரின் லிஸ்ட்டில் ஒவ்வொன்றாக குறைய ஒன்று மட்டும் முடியாமல் போகிறது.
அந்த ஒன்று இந்த உலகத்தின் உச்சமான எவரெஸ்ட்டின் மேல் ஏறி நிற்பது. அந்த ஆசை நிறைவேதுவதுக்கு முன்னலாலே Mr. எமதர்ம ராஜன் கார்ட்டரை அழைத்துக்கொள்ள எட்வர்டு அதை நிறைவேற்ற முடிந்ததா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

கார்ட்டராக மார்கன் பீரி மேனும், எட்வர்டாக ஜாக் நிக்கல்சனும் வாழ்த்திருக்கும் படம் இது. இருவரின் நடிப்பை பற்றி நான் சொல்வதை விட நீங்களே பார்த்து அனுபவிப்பது நலம். எல்லாரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய பீல் குட் மூவி இது.

டிஸ்கி

இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க

8 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.