எழுத்தும் வாசிப்பும்

,

நட்பு சூழ் உலகு

இன்று நண்பர்கள் தினமாம். நட்பை நினைத்து பார்க்கையில் மிகவும் சந்தோஷமாகிறது மனசு. வாழ்க்கை அள்ள அள்ள குறையாமல் நண்பர்களை அள்ளிக்கொடுத்திறுக்கிறது எனக்கு. அந்த நண்பர்களை பற்றி எழுத எனக்கு இந்த வாய்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிகொள்கிறேன் முதலில்.

பள்ளி பருவத்தில் தொடங்கிய நட்பு, கல்லூரி காலம் தொட்டு அதை தாண்டி இன்றும் தொடர்கின்றது எனக்கு. என பால்ய பருவத்தில் எனக்கு முதலில் அறிமுகமானவன் நிருபன் என்ற நண்பன். நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாய் நியாபகம். அவனது வீடு என் தெருவில் இருந்து இரண்டு தெருதள்ளி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்தது. சிறிது காலமே எங்கள் நட்பு நீடித்திருந்தது. அதற்கு பிறகு அவன் பக்கத்தில் இருந்த சிவகாசிக்கு சென்று விட்டான். அதை தொடர்ந்து வந்த சில வருடங்களில் வந்த எந்த நட்பும் என் மனதில் நிற்க வில்லை.ஜந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பிற்கு உயர் நிலை பள்ளியில் அடியெடுத்து வைத்ததில் இருந்து தொடங்குகிறது என் நட்பு காலம்.

ஆறாம் வகுப்பில் என்னுடன் இணைந்த பல பேர் என்னுடைய நண்பர்களாக தொடர்வது எனக்கு கடவுள் அளித்த கொடைதான். சரவணண், சங்கர், கணேஷ், கங்காதரன், ஜெயவேலன், கார்த்திகேயன், கணேஷ் பாபு, செந்தில் குமார், சரவணப்பாண்டியன், கே.எஸ்.சரவண்ணன், குமரன், கிங்ஸ்லி, சுவாதி, ஸ்டான்லி, பரத் பாலாஜீ, சீனிவாசன் என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.


மேலிருக்கும் போட்டோ நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எடுத்தது. இதில் உள்ள எல்லோருடனும்(அல்மோஸ்ட்) இன்று வரை நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த போட்டோவில் மேலிருந்து முதல் வரிசையில் வலது ஒரத்தில் இருப்பது நெல்சன் சந்திரசேகர். கவிதை எழுத கற்றுதருகிறேன் என்று சொல்லி எங்கள் ஊர்(சாத்தூர்)
சொக்கலிங்கம் பூங்காவில் நாங்கள் எழுதி தீர்த்த கவிதைகள் நியாபகத்தில் வந்து போகிறது. சரியாக கற்றுக்கொடுக்க்காமல் போய் விட்டாய் நெல்சா, இன்னும் சரியாய் எழுத வராமல் படுத்துகிறது இந்த கவிதை. எங்கிருக்கிறாய் நெல்சா ? நாங்கள் ஒன்பாதவ்து ப்டிக்கும் போது எங்களுடன் வந்து சேர்ந்த பிரசன்னா வெங்கடேஷ்(இவனுக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம்), சுந்தரேசன்(இவன் இன்று கோயம்புத்தூரில் ஒரு பிரபல தொழிலதிபர்) போன்றவர்கள் திரும்பி பாதியிலேயே பிரிந்து சென்றாலும் இவர்கள்னுடான நட்பு மட்டும் இன்னும் மனதில் அப்படியே உள்ளது. இந்த போட்டோவில் மேலிருந்து இரண்டாவது வரிசையில் இடமிருந்து நான்காவதாக நிற்கும் கதிர்வேல் ஒரு இண்டரஸ்டிங் பெர்சனாலிட்டி.
அவன் ஆறாவதிலிருந்து பத்தாவது வரை ஐந்து வருடங்கள் வரை எங்களுடன் குப்பை கொட்டினான. அவன் அனிந்து வரும் டரவுசர் மிகவும் பெரிதாக இருக்கும். நண்பர்கள் எல்லாரும் அவனை பார்த்து “ஏட்டய்யா உன் டரவுசர் ஒட்டய்யா”(குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு நான் பாடலின் மெட்டில் படிக்கவும்) என்று கிண்டல் அடிப்போம்.
அதனால் கோபித்துக்கொண்டு கிளாஸில் பெரும்பாலனவர்களுடன் பேசாமல் இருந்தான். கேட்டதற்கு “நான் நெரயை தப்பு பண்ணிட்டேன். அதான் எனக்கு நானே தண்டனை கொடுத்திருக்கிறேனு” அச்சு பிச்சு தத்துவம்லாம் அந்த வயதிலேயே சொல்லுவான். பத்தாம் வகுப்பு முடிந்து மேல படிக்க திருநெல்வேலி போய்விட்டான். அதற்குப்பின் அவனுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

இந்த காலத்தில் (ஆறாவதில் இருந்து 12ஆம் வகுப்பு வரை) இந்த நண்பர்களோடு ஊரில் புழுதி பறக்க சுற்றி திரிந்ததும், ஆசை தீர கிரிக்கெட் விளையாடி திரிந்ததும் மறக்க முடியாத அனுபவங்கள். பின்னர் கல்லூரி சேர்ந்ததும் புதிதாக இன்னும் பல நட்புகள் கிடைத்தது. பொன்ராஜ், அழகர்ராஜ், அசோக், ரமேஷ்(http://sirippupolice.blogspot.com) மற்றும் ப்ல பேரை கொடுத்தது நண்பர்களாக காலம். கல்லூரி முடித்து பல இடங்களில் வேலை கிடைத்து செட்டில் ஆனாலும் இன்னும் எங்களை சேர்த்தே வைத்திருக்கிறது இந்த மனமும், இணையமும். வேலைக்கு வந்த பின்னரும் காலம் எனக்கு அளித்த வீரா, செல்வேந்த்திரன், சேஷாத்திரி, லதா பாலமுருகன், சுரேஷ், ஃபிலிக்ஸ், சிவா போன்ற வர்களின் நட்பால் இன்னும் அழகானது என் வாழ்க்கை.

வலைஉலகத்தில் எழுத வந்த இந்த சிறுகாலத்தில் எனக்கு கிடைத்த ஹாலிவுட் பாலா, சைவகொத்துப்ப்ரோட்டா, கொஞ்சம் வெட்டிப் பேச்சு  சித்ரா போன்றவர்களின் நட்பும் நெரைய சந்தோசங்களை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் நட்பினால் சூழப்பட்ட என் உலகம் இன்று போல் என்றும் அழகாக இருக்கும் என்று நினைக்கும் போது மனசு மிக லேசாகி போகிறது.
Share:

15 கருத்துகள்:

 1. நட்புக்குத்தான் எவ்வளவு அழகு... பள்ளி நண்பர்களுடன் எப்போதும் உறவோடே இருக்கிறேன்...ஆயினும் தூரயிடைவெளி கொஞ்சம் உணர்வுகளை ஆதங்கப்படுத்துகிறது...

  நல்ல இடுகை...

  பதிலளிநீக்கு
 2. அருமையான நினைவுகள் நண்பரே. பால்யத்தையும், பள்ளி, கல்லூரி நாட்களையும், ஏன் இந்த வாழ்க்கையையே அற்புதமாக்குவது நல்ல நட்பு மட்டும்தான்.

  பதிலளிநீக்கு
 3. தொர.. அப்பவே.. டையெல்லாம் கட்டி கலக்குறீங்க! :)

  பதிலளிநீக்கு
 4. மிக நெகிழ்வான பதிவு ஆர்.கே!

  நண்பர்கள் தின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. இன்றும்கூட தொடர்ந்து வரும் நட்புகள்.அதிஸ்டசாலி நீங்க.
  வாழ்த்துகள் கண்ணன்.

  பதிலளிநீக்கு
 6. நண்பா நன்றி என்னை பத்தியும் சொன்னதுக்கு. ஆனா கல்லூரியில எதுக்கெடுத்தாலும் சண்டை போட்டுட்டு கேண்டீன்ல போய் ஒரு டீ ஒரு வடைல சமாதானம் ஆவோமே. அதெல்லாம் ஒரு கனா காலம்.

  பதிலளிநீக்கு
 7. பள்ளி நாட்களின் நட்பு ... அது மகிழ்ச்சியை குத்தகைக்கு எடுத்தது போலங்க... இப்ப நினைத்தாலும்.... மனசுக்குள்ள மகிழ்ச்சி பரவும்.....

  கட்டுரை மிக நேர்த்தி.

  பதிலளிநீக்கு
 8. சுகமான மலரும் நினைவுகள்!!
  உங்க வலையுலக நட்பு லிஸ்ட்ல என்னையும் வைத்து
  இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியாய் இருக்கு நண்பா.

  பதிலளிநீக்கு
 9. அல்மோஸ்ட் அத்தனை பேருடனும் நட்பு தொடருதா..!! அருமை ராமசாமி..

  பதிலளிநீக்கு
 10. தொடரும் நட்புகளுடன் .. கொடுத்து வைத்தவர் நீங்கள்! :))

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  www.thalaivan.com


  You can add the vote button on you blog:

  http://thalaivan.com/page.php?page=blogger

  THANKS

  பதிலளிநீக்கு
 12. நட்பினால் சூழப்பட்ட என் உலகம்

  அருமை.. ஆஹா.. உங்கள் நட்புக்கு என் வாழ்த்துகளும்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.