பனை போல் வாழ்வு

ஒராயிரம் பனை இருந்தும்
ஒத்த கள்ளு குடிக்க விட்டதுல்ல
என்ன சிவனாண்டி கிழவனுக்கு
பொழுது விடிஞ்சு பொழுது போனா
எப்போதும் இதே பாட்டுதான்
பேருதான் பெத்த பேரு
பெருந்தனக்காரருன்னு
ஒத்த கல்லு இது வரைக்கும்
வாச்சதுண்டா எனக்கு
மீனாச்சி கிழவியோட
பொலம்பில்லா நாள் இல்ல
கொள்ளு பேர பிள்ள கல்யாணத்திலயும்
பெருசுகளோட ரவுசுக்கு குறையில்ல
சொல்லிப்போச்சு சொந்த சனம்.

இராமசாமி கண்ணண்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

20 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. கொள்ளு பேர பிள்ள கல்யாணத்திலயும்
    பெருசுகளோட ரவுசுக்கு குறையில்ல
    சொல்லிப்போச்சு சொந்த சனம்.
    முத்தாய்ப்பான இந்த வரியில் ரவுசுக்கு ஒரு மவுசு கிடைத்து விட்டது!

    பதிலளிநீக்கு
  2. சொலவடையில் சரியென்றாலும் கள்ளு தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
    மீனாட்சி கிழவி என்றாலும் உயிர் வந்துவிடும்..

    என் நெஞ்சை தொட்ட கவிதை

    பதிலளிநீக்கு
  3. அட இந்த ஜோடியும் அசத்துறாங்க:)

    பதிலளிநீக்கு
  4. எதோ சொல்ற நண்பா. எனக்குதான் புரியல. தமிழ் அகராதி கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  5. ஜோடிகளின் ரவுசு ரசனை...அழகாய் வந்திருக்கு வாழ்த்துகள்...கண்ணன்

    பதிலளிநீக்கு
  6. முதலில் தலைப்பை பார்த்ததும் நான் எதோ நினைத்தேன் . நல்ல இருக்கு நண்பரே . இப்பொழுது மரங்களே இல்லை . அதுதான் வருத்தம் !

    பதிலளிநீக்கு
  7. /ஒராயிரம் பனை இருந்தும்
    ஒத்த கள்ளு குடிக்க விட்டதுல்ல/

    அதான் இப்படி நாடு விட்டு நாடு திரியுறோம். ரொம்ப நல்லத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. இதற்கு முந்திய இடுகையின் ‘இரு கவிதைகள்’-உம் என்னைக் கவர்ந்திருந்தன. ‘பின்னூட்டம் இடலாம், அதற்கு முந்தி இவர் எழுதிய ஏனைய கவிதைகளையும் வாசித்துப் பார்த்துவிடலாம்’ என்று தேடினால், கவிதைகளைக் காணாமல் ‘கவுஜை’க்குள் நுழைந்தேன். என்ன சிக்கல் என்றால், முதற் சொடுக்கில், உரைவாக்கியங்கள் போலத் தொகுபட்டும், மறுசொடுக்கில் அடிகளாக வகுபட்டும் வடிவம் கிட்டுகிறது. அதுவும் மொத்தக் கவுஜைகளும் ஒருசேரக் கிட்டாமல் ஒவ்வொன்றாக உருவியெடுக்கவேண்டி வருகிறது. எனது கணிணியோ பழசு. கொள்ளளவும் கம்மி. ஐந்தாறு கவுஜைகளை வாசித்தேன். அதற்குமேல் கணிப்பொறிச் சுணக்கத்தோடு மல்லுக்கட்ட ஏலவில்லை. ஆகையால், ஆக்க வகையாக அமையாமல் போகலாம் இப் பின்னூட்டம். மன்னிக்க!

    பழமலய் என்றொருவர் எழுதிக்கொண்டு இருந்தார் (இப்போதும் எழுதுகிறாரா தெரியவில்லை). நாட்டுப்புற எளிய மனிதர்களைப் பற்றி அவர்கள் உணர்வுகளைப் பற்றி பேச்சுவழக்கு மொழியில் புரியும்படி எழுதினார். எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் என்ன கோளாறு என்றால், தான் எழுதிய வாக்கியங்களை உடைத்துப்போட்டு ‘கவிதை’ என்றார். (அந்தக் காலத்தில் ‘கவுஜை’ என்றொரு வகை இல்லாததால் அவரைக் குற்றம் சொல்லவும் கூடாது).

    ‘பனைபோல வாழ்வு’ கவுஜை என்கிறீர்கள். ஆனால் இதுபோலவேயான ‘ஒட்டுவார் ஒட்டி’யைக் கவிதை என்கிறீர்கள். உங்கள் புரிதலை மெச்சுகிறேன். ஆமாம், ‘ஒட்டுவார் ஒட்டி’ கவிதைதான், ஆனால் // வெடித்துக் கிழம்பிய விசும்பல் ஒன்று/ பெரும் அழுகையாயி அடங்க வெகுநேரமானது// என்னும் உணர்ச்சி வெளிப்பாடு அப்படியே வார்த்தைப் படாமல், ஒரு சூழற் காட்சியோ என்னவோ இடைவெட்டிக் காட்டப்பட்டிருக்க வேண்டும். அப்புறம், அமாவாசை உண்டானதிற்கான ஒரு பழங்குடிக் கதைபோலவும் (இப்பவும் கொஞ்சூண்டு தொனிக்கிறது).

    ‘யாருமற்ற பொழுதில்...’, ‘நான் குடிவந்திருந்த வீட்டு...’ இரண்டுக்காகவும் உங்களைப் பாராட்டுகிறேன். சிட்டுக் குருவியை ஒரு பெண்ணாகவோ ஒரு பிள்ளையாகவோ ஒரு கனவாகவோ ஏன் ஒரு கவிதையாகவோ கூட உருவகப் படுத்த இடம் தருகிறது. முகமெல்லாம் முத்திரை அடி வாங்கி வரும் கடிதத்தின் வழி தன்னையும் உலகத்தோடு இணைத்து நோவுணரும் பார்வைப்பாடும் அருமை. வாழ்க!

    முதற் கவிதை இரண்டாவது அடியின் இரண்டாவது ‘என்’ தேவை இல்லை. அத் தேவை இல்லாமலே கடைசி அடி பொருள்படுவதைக் கவனியுங்கள். //துரத்த மனமின்றி நொண்டியடித்து நின்றது என் மனம்// இதில் ‘மனம்’ இரண்டு இடத்தில் வருவது... ஏதாவது காரணம் உண்டா, அல்லது அது பாட்டுக்கா? ‘நொண்டியடித்து’ என்பது ஒரு விளையாட்டோடு சேர்ந்தது அல்லவா, அந்தப் பொருளில்தானா?

    இரண்டாவது கவிதையில், ‘முகாந்திரம்’ என்னும் சொல் அதுபாட்டுக்கு வந்து விழுந்ததா, அல்லது சிறப்புப் பொருள் உண்டா?

    உங்களுக்குக் கவிதை வருகிறது. ஆனால் மொழி (தமிழ்) மீது இன்னும் காதல் வந்து கூடவில்லை. அது வேண்டும். வெறித்தனமாக வேண்டும். தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நல்லதாம்பத்தியம்.. !!!ராமசாமி கண்ணன்..

    பதிலளிநீக்கு
  10. //முதற் கவிதை இரண்டாவது அடியின் இரண்டாவது ‘என்’ தேவை இல்லை. அத் தேவை இல்லாமலே கடைசி அடி பொருள்படுவதை//

    இதுக்கு கவிதையே புரிஞ்சிடும் போலயிருக்கே.

    பதிலளிநீக்கு
  11. மாப்ள,

    கவிதைதானே, ஏன் கவுஜைன்னு லேபில்? என்பதாகவே என் பின்னூட்டம் இட பின்னூட்டப் பகுதியில் வந்தேன். உறைவிக்கும் படியான, அண்ணனின் பின்னூட்டம்.(ராஜசுந்தரராஜன்)

    யோவ் மாப்ள,

    மோதிரவிரல் வாங்கிட்டீர்! கொண்டாடும்.

    பதிலளிநீக்கு
  12. திகைச்சு போய் நிக்கிறேன் மாம்ஸ். கொஞ்சம் பொருப்பு தெரிஞ்சிருக்கு இப்ப. இன்னும் நல்லா எழுதனும். அதுக்கு முன்னாடி கொஞ்சம் தெளியனும் மாம்ஸ் :-). நன்றி மாம்ஸ்.

    பதிலளிநீக்கு
  13. //கொஞ்சம் தெளியனும் மாம்ஸ்//

    யாருதான் தெளிஞ்சு வந்தோம் மாப்ள. இப்போதைக்கு ஒரே தெம்பு அண்ணன். சும்மா விளாசும். வேணும் எனில் தெளிவிப்பார். நடையைப் போடும்...

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்