மர்பி ரேடியோ அல்லது

எங்கள் வீட்டில்
உடைந்தே போகாத
ஒரு பழைய மர்பி
ரேடியோ இருந்தது

அந்தகாலத்துல
தாத்தா ரங்கூன்லேந்து
வாங்கிட்டு வந்ததுடா
என்பாள் பாட்டி முகம் விரிய

எங்கள் வீட்டில்
நாங்கள் பேசிக்கொண்டிருப்போம்
அல்லது அது பேசிக்கொண்டிருக்கும்
எம்.ஆர.ராதாவின் குரலில்
அல்லது பாட்டி சொல்வது மாதிரி
தாத்தாவின் குரலில்.

ஏதோ ஒரு நன்னாளில்
அது தன் மூச்சைவிட்டது
அல்லது
அன்றிலிருந்து இவள்
பேசிக்கொண்டிருக்கிறாள்.

ஒரு வேளை
நாளை என் பேரன்
தொடங்கலாம் அவன்
கவிதையை
“என் வீட்டில் ஒரு பாட்டி”
என.

இராமசாமி கண்ணண்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

12 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. இந்த வருஷத்தில் நான் இதுவரை படித்த அற்புதமான கவிதைகளுள் இதுவும் ஒன்று.

    சபாஷ் ராம்ஸ்.

    பதிலளிநீக்கு
  2. நறுக்குன்னு இருக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஒன்னும் புரியலை. மவனே சென்னை வாடி உனக்கு இருக்கு

    பதிலளிநீக்கு
  4. அண்ணே! வீட்டு பெருசுகள ரொம்ப யோசிச்சீகளோ! நல்லாயிருக்குண்ணே!

    பதிலளிநீக்கு
  5. அன்பு ராம்,

    எல்லோரும் குறிப்பிட்டது போல அருமையான கவிதை இது... எனக்கு பூர்ணம் அவர்களின் ஒரு நாடகத்தையும், சுஜாதாவின் ஸ்ரீரங்கம் பாட்டி வைத்திருந்த ரேடியோவையும், எஸ்.வி.சேகரின் ஆவி புகுந்த ரேடியோவையும் ஞாபகப்படுத்தியது... என் வீட்டிலும் ஒரு மர்பி ரேடியோ இருந்தது... அதில் கன்னத்தில் ஒற்றை விரலை வைத்த மாதிரி ஒரு பாப்பா இருக்கும்... சிறுவயதில் அந்த பாப்பா தான் எல்லா குரலிலும் பாடுகிறது என்று ஒரு அழகான வானவில் போலான நம்பிக்கை இருந்தது...
    உடைந்தே போகாத என்ற prefix அல்லது adjective எதற்கு? தவிர்த்திருக்கலாம்... அதிகம் பேசும் மனைவியா அல்லது ரேடியோவை மறந்ததற்கு காரணம் அவள் எம்.ஆர். ராத போல பேசுவதாலா? என்று யோசிக்கும் போது சிரிப்பு வருகிறது...

    வாழ்த்துக்கள் ராம்... நீ சீக்கிரம் புஸ்தகம் போட்டுடுவ!

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  6. எஃப் பி ஐ கிட்ட சொல்லி.. இத யாருனாவது தமிழ்ல ட்ரேன்ஸ்லேட் பண்ணுங்களேன்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்