மாதொருபாகன்



நண்பர் பாலாசியின் இந்த கவிதையுடன் தொடங்க தோன்றுகிறது இந்த பதிவை.


வேறென்ன வேண்டும்
கல்யாணிக்கு
ஒருகால் இல்லை
அக்கம்பக்க பிள்ளைகளுக்கு
அவள் அத்தையாகியிருந்தாள்
சிலர் பெரியம்மா பெரியம்மா என்பார்கள்
நானும்தான்...
செல்லையன் மட்டும்
அம்மா என்றுதான் கூப்பிடுவான்
எனக்குத்தெரிந்து
கல்யாணிதான் பலருக்கு
நேற்றுப்பிறந்த பொண்டு பொடிசுகளால்
ஆத்தாவும் ஆகிவிட்டாள்
வேறென்ன வேண்டும்
கல்யாணிக்கு கல்யாணம்தான் ஆகவில்லை.


இவ்வுலகத்தில் பெண்மையின் பெருமை போற்றப்படுவது தாய்மையினால்தான்.   இக்கவிதையின் நாயகி கல்யாணமாகவிட்டாலும் பொடிசுகளால் ஒரு தாயாக ம்திக்கப்படுகிறாள். இந்த சமுகம் ஒரு பெண் திருமண ஆகிய உடனே அவள் தாம்பத்யம் நிறைவடைவது அவள் ஒரு குழந்தைக்கு தாயவாதில்தான் என்று நம்புகிறது. இன்றும் கிராமப்புறங்களில் அன்றி நகரங்களிலும் கூட திருமணமான ஒரு பெண்ணின் அன்னையிடமோ அல்லது அவளது மாமியாரிடமோ கேட்க படும் கேள்வியானது “ என்ன உங்க வீட்டுல ஏதாச்சும் விசேஷமுண்டா ?”.  ஒரு லஜ்ஜையின்றி கேட்கப்படும் இந்த கேள்வியானது எத்தனை பெண்களின் மனதை குத்தி கிழித்து ரணமாக்குகிறது என்று தெரிந்தும் கூட, அதே கேள்வி திரும்பி தம்மயோ அல்லது தம்மை சார்ந்தவரையோ தாக்க கூடும் என்று அறிந்தும் கூட இச்சமுகம் அந்த கேள்வியை மறந்தும் விடுவாதாயில்லை.


திரு. பெருமாள் முருகனின் இந்த நாவலானது நமக்கு உணர்த்த முற்படுவதும், நம்மை கேட்க நினைப்பதுவும் இதுவாகத்தான் இருக்கிறது.  இந்த கதையின் நாயகனான காளிக்கும், நாயகியான பொன்னாளிற்கும் திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பேறு இல்லாமல் போக இச்சமுகம் அவர்களை எப்படி அனுகுகிறது என்பதையும், அவர்களின் மனநிலையையும் அவர்களின் பெற்றோர்களின் மனஓட்டங்களையும் படம்பிடித்து காட்டுகிறது இந்நாவல்.  அவ்விருவருக்கும் குழந்தை வேண்டி அவ்விருவரின் பெற்றோர் எடுக்கும் ஒரு முடிவின் வழி நம் பண்டைய மக்களின் சில சடங்குகளை கேள்விகுள்ளாகுகிறார் திரு. பெருமாள்முருகன்.   


மாதொருபாகன் என்பது பார்வதி தேவிக்கு தன் உடலில் சரி பாகத்தை கொடுத்த சிவபெருமானின் பெயர்.  உடலில் சரிபாதிதான் தர முடியாது மனதால் கூட எத்தனை பேர் அதை சாதித்திருக்கிறோம் என்று என்னும் போது பதில் தேடியும் கிடைக்காத ஒன்றாகிறது. இதை எழுதும் போது என் மனது கூட குற்றவுணர்ச்சியால் குறுகி போகிறது.   ஆண் சார்ந்த சமுதாயமாக ஆண்களால் வரையறுக்கப்பட்ட இந்த சமுதாயத்தில் பெண் என்பவள் சக்தியின் அடையாளமாக சொல்ல பட்டாலும் கூட மனம் சார்ந்து ஆண்களால் போகப்பொருளாகவும், ஆண்களை அண்டி வாழ வேண்டிய ஒரு உயிரினமாகவும் அடையாளபடுத்த படுகிறாள் என்பது வேதனைதான்.  ஆண் என்பவன் என்ன தவறு செய்தாலும் அவன் இந்த சமுதாயத்தில் கேள்விக்கு உள்ளாக்கபடுவதில்லை. ஆனால் ஒரு பெண் அவள் உண்மையிலேயே தவறு செய்திருக்காவிட்டாலும் கூட அவள் கேள்வி கனைகளில் இருந்து தப்புவதில்லை . இந்த கதையின் முடிவில் கதையின் நாயகன் காளியின் மேல இத்தகைய ஒரு உணர்வே எஞ்சி நிற்கிறது.  இறைவனை குறிக்க அடிக்கடி நாம் உபயோக படுத்தும் சொற்களனானது “ அவனின்றி அணுவும் அசையாது” ஆனால் இது “ அவளின்றி அணுவும் அசையாது” என்றே இருந்திருக்க வேண்டும்.

இந்நாவலின் ஊடாக திருச்செங்கோட்டின் வராலாற்றையும் அம்மண்ணின் மக்களின் பழக்கவழக்கங்களயும், அவர்கள் தொன்றுதொட்டு பின்பற்றும் சடங்குகளையும் வட்டாரமொழியில் அழகாக எழுதியிருக்கிறார்  திரு. பெருமாள்முருகன்.  

நாவலை படிக்க படிக்க நம்மை அந்த சூழ்நிலைகளிலேயே உலவும் படி செய்திருக்கிறார். நாவலை படித்து முடித்தபின் திருச்செங்கோட்டிற்குஒரு முறை சென்றுவரும் எண்ணமும் வலுத்திருகிறது. 


எல்லாரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகமிது. 


முடிவாக ஒன்றே ஒன்று மட்டும் சொல்லவேண்டியாதகிறது. 


“ பெண்மையை போற்றுதும்... பெண்மையை போற்றுதும் “.


நன்றி : பெருமாள்முருகன் சார், பாலாசி.


இராமசாமி கண்ணன்

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

4 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. மகளிர் தினத்துக்கு பொருத்தமான நூலின் விமர்சனம்! கதையின் மையத்தை மட்டும் தெளிவாக விமர்சனம் செய்திருக்கீங்க அண்ணே! :)

    பதிலளிநீக்கு
  3. ஆண் சார்ந்த சமுதாயமாக ஆண்களால் வரையறுக்கப்பட்ட இந்த சமுதாயத்தில் பெண் என்பவள் சக்தியின் அடையாளமாக சொல்ல பட்டாலும் கூட மனம் சார்ந்து ஆண்களால் போகப்பொருளாகவும், ஆண்களை அண்டி வாழ வேண்டிய ஒரு உயிரினமாகவும் அடையாளபடுத்த படுகிறாள் என்பது வேதனைதான். ஆண் என்பவன் என்ன தவறு செய்தாலும் அவன் இந்த சமுதாயத்தில் கேள்விக்கு உள்ளாக்கபடுவதில்லை. ஆனால் ஒரு பெண் அவள் உண்மையிலேயே தவறு செய்திருக்காவிட்டாலும் கூட அவள் கேள்வி கனைகளில் இருந்து தப்புவதில்லை


    .......ஆண், தான் எப்படித்தான் இருந்தாலும், தனக்கு வர வேண்டிய பெண் - "இப்படித்தான் இருக்க வேண்டும்" என்ற நியதியில் உருவாக்கப்பட்ட சமூக நிலை ஆயிற்றே!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்