2 மே, 2011

ஒசாமா @ கரப்பான் பூச்சி

8

காலை தேநீர் அருந்திகொண்டிருக்கையில் வீட்டுக்காரம்மாவிடம் சொன்னேன்

“ அமெரிக்கா ஒசாமா பின்லேடனை கொன்னுட்டாங்களாம் தெரியுமா”  என்று.

”அச்சச்சோ என்னாச்சு” என்றவளிடம் இந்தமாதிரிம்மா என்று ஆரம்பித்து ஒசாமாவை அமெரிக்க உளவுபடை கொன்ற கதையை சொல்லி முடிக்கயில்

“ பாவங்க அந்த ஆளோட புள்ள குட்டிங்களாம் என்ன செய்யுமோ” என்றாள் ஒரு நொடி.

அமைதியாக இருந்தவள் “ வினை விதிச்சவங்க வினை அறுத்துருக்காங்க போல” என்று சொல்லிவிட்டு “ சரி நான் வேலைய பாக்கறேன்” என்று சொல்லியபடி எழுந்து போனாள்.

சமையல் அறையில் ஒரு கரப்பான் பூச்சி அலைய “ சே இந்த சனியனோட தொல்லையா போச்சு” என்று அதை நசிக்கி போட்டு விட்டு வேலையை ஆரம்பித்தாள்.
இராமசாமி கண்ணன்.

8 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.