தோசை சுடுவது எப்படி

மல்லிகை டீவி தமிழ்நாட்டில் இன்றய தேதியில் மிக பாப்புலரான தொ(ல்)லைகாட்சி.தமிழ் பெண்கள் மிகவும் விரும்பும் “உஙக வீட்டு சமையல்” இன்னும் சிரிது நேரத்தில் ஒலிபரப்பாக போகிறது.நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் அரங்கத்தினுள் ஏற்பாடுகளை சரிபார்த்து விட்டு இன்று ”தோசை சுடுவது எப்படி ” என்று செயல் முறை விள்க்கம் கொடுக்க வந்திருந்த திருமதி ரமணியிடம்  நீங்க ரெடியா என்று கேட்க அவரும் தலையாட்டினார். உடனே ஒகே மகேஷ் நாம ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லிட்டு , பேஷ் டச்சப் முடிசிட்டு கேமாரா
முன்னாடி வந்து நிக்க  நிகழ்ச்சி ஆரம்பிச்சது.

”வன்கம் இப்ப உங்கொ மல்லி கை டீவில வீ ஆர் கோயிங் டு வாட்ச் உங்கலின் பெவரைட் போரொகிராம் உங்கு வுட்டு சம்யல்.இன்க்கு நம்ம ரம்னி மேடம் நம்ளுக்காக தோசை சுடுவது எப்படின்னு சென்ச்சு காட்ட போராங்க.  நம்ம இப்போ நிகழ்ச்சிக்கு போகலாம்”.

“ரம்னி மேடம் பர்ஸ்ட் நிங்க ஒங்கள பத்தி கொங்சம் சொல்லுங்க”.

“ஜ யம் ரமணி. நான் ஒரு ஹவுஸ் வைப். எங்க வீட்டுல நான், என்னோட ஹஸ்பெண்டு அப்புறம் எங்களோட ரெண்டு டாட்டர்ஸ்.
நாங்க பல்லாவரத்துல இருக்கோம். என்னோட பொழுதுபோக்கு வந்து விதவிதமா சமச்சு பார்கிரது, அப்புறம்..”

“ஓகே மேடம். இன்க்கு எந்த ஜட்டம் பன்னி காட்ட போறிங்க நிங்க”.

“நான் இப்போ தோசை சுடுவது எப்படின்னு பண்ணீ காட்ட போறேன். மொதல்ல கேஸ் ஸ்ட்வ் ஆன் பண்ணீக்கோங்க. அப்புறம் தோசை கல்ல அடுப்புல
தூக்கி வெச்சுட்டு கொஞ்சமா எண்னைய உத்திட்டு அப்படீயே தோசை கரண்டிய வெச்சு லைட்டா தேச்சு விட்டுக்கனும். அப்புறம் கல்லு ஹீட் ஆன உடனெ...”

“ மேடம் கல்லு ஹீட் ஆய்டுச்னு எப்படி கண்டுபிட்கிரது மேடம்”.

“ கொஞ்சமா தண்ணிய தெளிச்சா ஸ்னு சத்தம் வரும். அப்படி வந்துச்சுன்னா கல்லு ஹீட் ஆய்டுச்சுன்னு அர்த்தம். கல்லு ஹீட் ஆன உடனெ ஒரு ரெண்டு கரண்டி மாவு
எடுத்து கல்லுல ஊத்தி அப்படியெ நல்லா தேச்சு விடனும். கொஞ்ச நேரம் கலிச்சு இந்த ஒயிட் கலர் மாருன உடனெ , அப்படீயெ தோச கரண்டீய வெச்சு
திருப்பீ போட்டூ கொஞ்சம் ஆயில் வுத்தி நல்லா வேக விட்டு எடுக்கனும்.  தோசை எடுத்த உடனே மேல கொஞ்சமா இப்படி நெய் தடவீ , தேங்காய் அல்லது
தக்காளி சட்னியோ, இல்லென்னா மொளகா பொடிய கூட வெச்சு  பரிமாரினா ரொம்ப டேஸ்டா இருக்கும்”.

“தோச மாவு எப்டி பன்ரது மேடம்”.

“நாலு பங்கு இட்லி அரிசி, ஒரு பங்கு உளுத்தம் பருப்பு,ஒரு டேபிள் ஸ்புன் வெந்தயம் எடுத்துண்டு தணிதணியா ஊற வெச்சுக்கனும். ஓரு அன்சு மணி நேரம் களீச்சு
அரிசிய நல்லா வாஷ் பண்ணிட்டு க்ரைண்டர்லயொ , மிக்சிலயொ போட்டு நல்லா அரச்சுக்கனும். அப்புரம் உளுத்தம் பருப்பு,வெந்தயம் ரெண்டுத்தயும் ஒன்னா வாஷ்
பண்ணிட்டு, அரச்சுக்கனும். அரைக்கறெச்சே கொஞ்சம் பிரிட்ஜ் வாட்டர் விட்டாக்க குவாண்டிட்டி நெரய இருக்கும்”.

“ ஒங்க டைம் அ ஒதுக்கி நம்ம மல்லிகை டீவி முலமா  தோசை சுடுவது எப்படின்னு பன்னி காமிச்சதுக்கு ரொம்ப தேங்ஸ் மேடம். மீண்டும் அடுத்த வாரம் இதெ நேரத்தில் இன்னொரு பயனுள்ள சமயல் குரிப்போடு உங்களை சந்திக்கிறோம். அண்டில் ஒங்கிலிடம் இருந்து விடை பேர்வது உங்கல் தமில்அர்சி”.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

6 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. செம்மத் தாக்கு தாக்கிட்டிங்க போங்க....

    பதிலளிநீக்கு
  2. உங் பத்வில டமில் துலி வில்யாடுச்சு. சூப்பர். அமெரிக்காவில் இருந்துக்கிட்டு கரெக்டா சென்னை டமில் பின்னிட்டீங்க....

    பதிலளிநீக்கு
  3. வெல்டன் அமைதிச் சாரல்.. ஒரு வருஷத்துக்குள்ள, அறிமுகப் படுத்திட்டீங்களே..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்