காதலாகி

பிரான்ச் ஆபிஸ் இன்ஸ்பெக்சனுக்காக கோவைக்கு வந்து இன்று சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன். அது என்னுடைய ராசியோ என்னவோ தெரியாது எங்கே போனாலும் வேலை கடைசி வரை என் தோழில் தொங்கி கொண்டு ரயிலை பிடிக்க கால அவகாசம் இல்லாமல் அவசரத்தில் ஒடி வந்து தொற்றிகொள்ள வேண்டியிருக்கிறது ஒவ்வொரு முறையும். இந்த தடவையும் அப்படித்தான். இன்ஸ்பெக்சன் வேலைகள் முழுவதும் முடிந்து ஹோட்டல் வந்து ரூம் செக் அவுட் செய்து வெளியே வந்தால் டைமுக்கு ஆட்டோவோ டாக்சியோ கிடைக்காமல் பஸ்ஸில் பயணம் செய்து ரயில் கிளம்புகையில் வந்து தொற்றிக்கொள்ள வேண்டியதாக போனது.

எப்படியோ ஏறி என்னுடைய இடம் பார்த்து பெட்டியை சீட்டின் அடியில் வைத்து உட்கார்ந்த உடன் சற்று நேரம் கழித்து  டிடிஆர் வந்தார். அவரிடம் என் டிக்கெட்டை காண்பிக்க அவர் என்னையும் டிக்கெட்டையும் மாறி மாறி உற்றுப்பார்த்த வாறு சற்று நேரம் நின்றிருந்தார். இதை பார்த்து “ எனி பிராப்ளம் சார்” என்றவனிடம் ஒன்றும் இல்லையென தலையாட்டிவிட்டு டிக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார். 

கொண்டு வந்து ஆனந்த விகடனை சற்று நேரம் விரித்து படித்துக்கொண்டிருக்கையில் பக்கத்து சீட் ஆசாமி பெர்த்தை போட வேண்டும் என சொல்ல சரி என்று புத்தகத்தை மூடி விட்டு கதவின் ஒரமாக போய் நின்று கொண்டு காற்று வாங்கி கொண்டிருக்கையில் ஒரு கை மேலப்பட எரிச்சலுடன் திரும்பினேன். டிடிஆர் அங்கே நின்றிருந்தார்.


எரிச்சலுடன் “ என்ன சார் இங்க நிக்க கூடாதா” என்றேன்.

 “ அது இல்லை. நீங்க சுந்தரம் சார் பையனா” என்றார் டிடிஆர்.

கேள்வியை கேட்டு இவருக்கு எப்படி அப்பாவின் பேர் தெரியும் என்று சற்றே குழம்பி நிற்கையில் “ சாத்தூர் அக்ரஹாரத்தில சுப்பையர் காம்பவுண்டுல இருந்த சுந்தரம் சார் பையன் ராமசந்திரன் தான நீங்க” என்றார் சற்றே அழுத்தமாக.

“ஆமாம்..... நீங்க ... சுப்பு.. சுப்புராமன்னா” என்று முடிப்பத்ற்குள் ஆமாம் என்றார் சிரித்துக்கொண்டே.

“அப்பா. எங்க உனக்கு என்ன அடையாளம் தெரியாம போயிருமோன்னு பயந்திண்டிருந்தேன்” என்றார் சுப்புராமன் அண்ணா.


சிரித்துகொண்டே “ எப்படின்னா” என்றவனை பார்த்து “ என்ன சொன்ன அண்ணான்னா” என்றார் நக்கலுடன். “ சரி வா என்னோட கேபினுக்கு போய் செத்த நேரம் பேசிண்டு இருக்கலாம்” என்று நடந்தவரின் பின்னாடி நடந்தேன். எனது நினைவுகளும் பின்னோக்கி பறந்தது.

அப்பாவுக்கு சாத்தூர் அருகே  உப்பத்தூர் கவன்மெண்டு ஸ்கூலில் டீச்சர் வேலை. நாங்கள் கூடியிருந்தது சுப்பையர் காம்பவுண்டில். அப்பா, அம்மா, நான் அப்புறம் சுப்புலட்சுமி @ சுப்பா எனது அக்கா என்பதுநான் நாங்கள். சுப்பையர் காம்பவுண்டு என்பது பத்து விடுகள் கொண்ட ஒரு லயன் வீடு. பத்து விட்டிற்கும் சேர்ந்து ஒரே டாய்லட், ஒரே பாத்ரூம். எனக்கு 10 வயது பெரியவள் சுப்பா. நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது சுப்பா +2. 

அப்போதுதான் எங்கள் காம்பவுண்டுக்கு புதிதாக குடி வந்தது சுப்புராமன் அண்ணாவின் குடும்பம். அவரது அப்பாவும் அம்மாவும் யாருடன் அளவாகத்தான் பேசுவார்கள். ஆனால் சுப்புராமன்னா எல்லோருடனும் நன்றாக பேசுவார். கோலி, கில்லி என்று விளையாடி கொண்டிருந்த எங்களுக்கு அவர்தான் கேரம், செஸ் போன்ற இண்டோர் கேம்ஸுகளை சொல்லி கொடுத்தார். அவர் அப்போதுதான் காலேஜ் முடித்து வேலைக்கு முயற்ச்சி செய்து கொண்டிருந்தார்.

அண்ணா ஊர் லைப்பிரரிக்கு சென்று நிரைய புத்தகங்களை எடுத்து வந்து படிப்பார். அதல்லாம் என்ன புக்ஸ் என கேட்டால் பெரியவனாகித்தான் அந்த புக்ஸல்லாம் படிக்கனும்னு சொல்லிட்டு நமுட்டு சிரிப்பு சிரிப்பார். சில சமயம் என்னிடம் சில புக்ஸை கொடுத்து சுப்பாவிடம் கொடுக்க சொல்லுவார். என்னது என்று கேட்டால் சுப்பா சில பாடங்களில் டவுட்ஸ் கேட்டதாகவும் அதுக்கு விளக்கம் எழுதி கொடுத்திருப்பதாகவும் சிரித்துக்கொண்டே சொல்வார்.பிற பையன்கள் அவரை அண்ணா என்று கூப்பிட என்னை நீ என்னை அண்ணா என்று கூப்பிட கூடாது அத்திம்பேர் என கூப்பிடு என்றார் ஒரு முறை.


இது நடந்து சில் நாட்களில் ஒரு நாள் மதியம் நான் விளையாடி முடித்து விட்டு வெளியே வருகையில் எங்கள் வீட்டின் வாசலில் ஒரே கூட்டமாக இருந்தது. உள் நுழைந்து பார்த்த போது அம்மாவும் சுப்பாவும் மூலையில் உட்காந்து அழுது கொண்டிருந்தார்கள். அப்பா பெரும் கோபத்தில் கத்திக்கொண்டு இருந்தார். அவரின் முகம் மிக சிவந்திருந்தது.  திடிர் என்று எங்கள்து வீட்டில் இருந்து வெளியே போய் சுப்புராமன்னா வீட்டின் முன் நின்று பயங்கரமாக அசிங்க அசிங்கமான வார்த்தையில் கத்தினார்.

அன்று முழுவதும் அப்பா கத்திக்கொண்டே இருந்தார். அன்று இரவு நான் தூங்கிகொண்டிருக்கையில் திடிர் என்று அம்மா கத்திய கத்தலில் எழுந்திருந்து பார்த்தால் சுப்பா காம்பவுண்டின் பின்னே இருந்த கிணற்றில் குதித்திருந்தாள். எல்லாரும் கத்துகையில் , சுப்புராமன்னா ஒடி வந்து கிணற்றில் குதித்தார். சற்று நேரம் களித்து சுப்பாவுடன் மேலேறி வந்தார். வெளியே வந்தவுடன் அவரது கண்ணத்தில் ஒங்கி அறைந்த அப்பா பெரும்குரலெடுத்து அழ தொடங்கினார். 
அந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் வரையில் சுப்பா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பிரம்மை பிடித்த மாதிரி வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்தாள். சிறிது நாட்களில் சுப்புராமன்னாவின் குடும்பமும் காலி செய்துகொண்டு போய் விட்டது. சுப்பாவும் திருமணம் முடித்து மும்பையில் செட்டில் ஆகிவிட்டாள். 
“ உள்ள வா. இப்படி உக்காரு” என்ற சுப்புராமன்னாவின் குரலில் நினைவு கலைந்து நிகழகாலத்திற்கு வந்தேன். நான் ஒரு சேரில் உக்கார எனக்கு எதிர்க்க அமர்ந்த சுப்புராமன்னா “ சுப்பா எப்படி இருக்கா” என்றார். இரவின் அமைதியை கிழித்துகொண்டு கூக்குரலிட்டு ஒடிக்கொண்டிருந்தது ரயில்.



க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

15 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. //
    இரவின் அமைதியை கிழித்துகொண்டு கூக்குரலிட்டு
    ஒடிக்கொண்டிருந்தது ரயில்//

    ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  2. அதை ஃபளாஷ்பேக்காக சின்னப்பையனின் வார்த்தையில் சொன்னவிதம் அருமை.. கலக்குங்க..

    பதிலளிநீக்கு
  3. சிறுகதையொன்று வாசித்த திருப்தி.

    பதிலளிநீக்கு
  4. @ நசரேயன்
    நன்றி நசரேயன் சார் வருகைக்கும் கருத்துக்கும்
    @ வானம்பாடிகள்
    அய்யா நன்றி தொடர் ஆதரவுக்கு. இது தொடர் இல்லைஞ்ககய்யா.
    @ ரமேஷ்
    நன்றி நண்பா
    @ ஜெய்
    நன்றி நண்பா தொடர் ஆதரவுக்கு
    @ ஹேமா
    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  5. எனக்கு எதிர்க்க அமர்ந்த சுப்புராமன்னா “ சுப்பா எப்படி இருக்கா” என்றார். இரவின் அமைதியை கிழித்துகொண்டு கூக்குரலிட்டு ஒடிக்கொண்டிருந்தது ரயில்.
    கடைசி வரியில் எத்தனை வருடங்களைப் புரட்டிப் பார்த்தாகி விட்டது..

    பதிலளிநீக்கு
  6. ஒரு நிமிடம் கதையா இல்லை உண்மை சம்பவமா என்ற சந்தேகம் வந்துவிட்டது . மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் நண்பரே . மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  7. கனத்த முடிவுதான் காலப்போக்கில் சரியாகி போகும் காதல் தோல்வி ( காதல்ன்னு எங்கேயுமே சொல்லவேயில்லை நான் அப்படித்தான் புரிந்து கொண்டேன்...)

    பதிலளிநீக்கு
  8. @ பனித்துளி சங்கர்.
    நன்றி கருத்துக்கு
    @ பிரியமுடன் வசந்த்
    நன்றி வசந்த் முத்ல வருகைக்கும் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  9. இன்னொமொரு ஆட்டோகிராப்... சூப்பர்.... எழுத்து நடை நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  10. நல்லா இருக்குங்க ராமசாமி... இறுதியில் மனசு கனத்து போனது நிஜம்

    பதிலளிநீக்கு
  11. என்ன நீங்க கதையை இப்படி இடையிலேயே முடிசிட்டிங்க....

    இசக்கி ராஜா , மும்பை.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்