முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிக்கன்

ஞாயிறு மத்தியானம் எனது சாப்ட்வேர் கம்பெனி சகாக்களுடன் கிரிக்கெட் ஆடி முடித்த களைப்பில் எனது ஹோண்டா சிட்டி காரை பார்க்கிங்கில் நிறுத்தி வீட்டுக்குள் நுழைகயில் வாப்பா நல்லா இருக்கியா , இன்னும் இந்த வெளயாட்டு புத்தி போகலியாக்கும் என்று குரல் வரவேற்ற பக்கத்தை பார்த்தால் ராஜெந்திரன் அங்கிள் ஒக்காந்து இருந்தார்.

ராஜெந்திரன் அங்கிள் அப்பாவின் சிரு வயது நண்பர். எங்க ஊரில் ஒரு சின்ன பிரிண்டிங் பிரஸ் வச்சுருந்தார். அவருக்கு சுபா என்று ஒரு பெண்ணும், சுகுந்தன் என்று ஒரு பையணும் உண்டு. எனது தந்தை ஒரு மத்திய வங்கியில் பனியில் இருந்ததால் வடமாநிலங்களின் பல ஊர்களில் எனது பள்ளி படிப்பு தொடர்ந்தது. அப்பொழுதெல்லாம் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போதெல்லாம் எனக்கு சுபாவும் சுகந்தனும்தான் விளையாட்டு தோழர்கள்.

அங்கிளிடம் எல்லாருடய சுகங்களயும் விசாரித்து விட்டு குளிக்க சென்றேன்.

 ஞாயிறு மத்தியானம் எனது வீட்டினில் ஸ்பெஷல் சமையலாக இருக்கும்.
அப்பாவிற்கு அன்றய தினம் ஒய்வாக வீட்டினில் இருப்பாரகையால் அன்று ஏதாவதொரு கறிக்குழம்பு இருக்கும். அப்பா வேலையில் இருந்து ஒய்வு பெற்று நாங்கள் சென்னை வந்தும் அந்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. குளித்து முடித்து விட்டு வெளிய வரவும் அம்மா சாப்பிட அழைக்கவும் சரியாக இருந்தது. டைனிங் டெபிளில் அப்பாவும் , அங்கிளும் உக்காந்து இருக்க நானும் உட்கார அம்மா பரிமாற ஆரம்பித்தார். டாக்டரை காரணம் காட்டி  அங்கிள் சிக்கன் குழம்பை வேண்டாம் என்றார். சாபிட்டு முடித்து சிரிது நேரம் எங்களுடன் பேசிவிட்டு அங்கிள் கிளம்பிச்சென்றார்.

அவர் சென்றவுடன் அன்றய வாரமலருடன் நான் என் அறைக்குள் சென்று அதை புரட்டி கொண்டிருக்கயில் பழைய சம்பவம் ஒன்று நினைவில் வந்தது. சிரு வயதில் ஒரு விடுமுறை முடிவினில்  தாத்தா வீட்டினில் இருந்து  ஊருக்கு திரும்பி கூட்டிச்செல்ல அப்பா வந்திருந்தார். கிளம்பும் முன்னர் நான் அப்பா அம்மா மூவரும் அங்கிளின் வீட்டிற்கு விடை பெற போயிருந்தோம். வீட்டினில் நுழைந்தவுடன் அம்மா அத்ட்தையுடன் பேச போய்விட்டார். நானும் அப்பாவும் முன்னறையில் அங்கிளுடன் பேசிக்கொண்டிருந்தொம். அப்பொழுது அங்கே எனது வயதொத்த சிறுவன் ஒருவன் வெளிறிய முகத்துடன் நின்று கொண்டிருந்தான். விசாரித்த
போது அவனது தந்தை பெயரயும், அவனது பள்ளி விருமுறைக்கு அவனை
பிரெஸ்லில் வேலைக்கு சேர்த்து விட்டுருப்பதயும் சொன்னார். அவனை பார்த போது அவன் சட்டையினுள் பூணூல் தெரிந்தது.

அன்றய தினம் அவனை பாய் கடைக்கு சிக்கன் கறி வாங்க பணம் கொடுத்து அனுப்பியகதாகவும், அவன் கொடுத்த பணத்தை தொலைத்து விட்டதாகவும்,
தான் அவனை அந்த பணத்தை அவனது தந்தையிடம் வாங்கி வர சொன்னதாகவும் , அவன் அதை மறுத்து அங்கேயே நின்று கொண்டிருப்பதயும் சொன்னார். என் தந்தை அவனை மன்னித்து விட சொன்னதற்கு , அவர் அதை
மருத்து , மன்னித்துவிட்டால் அவனுக்கு பொருப்பு வராது போய் விடும் என்று சொல்லி அவனை விரட்டவும் , அவன் அழுதுகொண்டே சென்ற்தும் என் நினைவில் வந்தது. சிரித்து கொண்டே தூங்கிப்போணென்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஷகிலா சேச்சியும் சிநேகிதர்களும் பின்னே விஷாலும்

சித்திரை திருநாளை முன்னிட்டு வெளியான நான் சிகப்பு மனிதனில் விஷாலின் பக்கெட் லிஸ்ட்டில் இருப்பதிலயே ஆக முக்கியமான விசயமானது கேரளத்து பைங்கிளியாய் ஒரு கால கட்டத்தில் இருந்த லால்களயும், மம்முட்டிகளயும் முட்டி புறந்தள்ளிய அகில இந்திய சூப்பர் ஸ்டாரினி உயர்திரு ஷகிலா சேச்சியின் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது.  இந்த பாயிண்ட் ஒரு பாடு மனதில் வைத்து பூட்டிய சாத்தூர் நினைவுகளை வெளியே கொண்டு வந்து விட்டது.
அது பள்ளி முடித்து காலேஜ் சேர்ந்த கால கட்டம். அதுவரைக்கும் வாழ்வினிலே மிகவும் மகிழ்ந்து செய்த விசயம் சாப்பிடுவது நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, ஆற்றங்கரை மணலில் கால் கடுக்க கிரிக்கெட் விளையாடுவது மற்றும் வெட்டி அரட்டை அடிப்பது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானதாக இருந்தது சரோஜாதேவி புத்தகம் படிப்பது. காலேஜ் சேர்ந்த கால கட்டத்தில் +2 முடித்தும் இஞ்சியரிங் சேரும் ஆசையில் இருந்தும் இஞ்சியரிங் சீட் கிடைக்காத சில நண்பர்கள் மட்டும் இம்ப்ரூவ்மெண்ட் எழுதுவதற்காக பயிற்ச்சியில் இருந்தனர். அவர்களின் ஆகப்பெரும் காரியம் தினமும் சாயங்கால வேளையில் இருட்டிய பின்னர் தேவி தியேட்டருக்கும் முருகன் திய…

அப்பா காணாமல் போனார்

காரை டெலிவரி எடுக்க வந்திருந்த கஸ்டமருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, டேபிளில் இருந்த டெலிஃபோன் அடிக்க ஆரம்பித்தது.

போனை எடுத்தவுடன் “பிஸியா இருக்கேன். யாருன்னாலும் கனெக்ட் செய்யாதன்னு சொன்னேன்ல” என்றேன் ப்ரியாவிடம்.

ப்ரியா ரிஷப்பனிஸ்ட்.

 “இல்லை சார் உங்கம்மான்னு சொன்னாங்க அதான் “ என்றாள்.

 “அம்மாவா ? “ ஒரு கணம் கேள்விக்குறி மாதிரி புருவங்கள் ரெண்டும் வளைந்து நிமிர்ந்தது.  கஸ்டமருக்கு புரிந்திருக்கவேண்டும். “கிளம்பட்டுமா ? “ என்பது மாதிரி சீட்டை விட்டு எழுந்திருந்தார்.

“சாரி” என்றேன். கைக்குலுக்கி அவர் நகர்ந்தவுடன், “ம்ம்.. கனெக்ட் பண்ணு என்றேன்”.

”அஷோக் “ என்று பதில்குரல் ஒலித்தது. கனெக்ட் செய்திருந்தாள். அம்மாவின் குரல்தானா என்று ஒரு நிமிடம் யோசனை வந்து போனது. அவளிடம் எப்போது கடைசியாக பேசினேன் என்று நினைவில்லை. “சொல்...லு..ம்மா” என்றேன் தயங்கி தயங்கி..
”அஷோக் ... அப்பாவ காணலடா “ என்றாள்..
தூக்கி வாரிப்போட்டது. “எத்தன மணி நேரம் ஆச்சும்மா . பக்கத்துலதான் போயிருப்பார். வந்துருவார்” என்றேன்.
“இல்ல அஷோக் .. மூணு நாளாச்சுடா” என்றாள்.
“என்னம்மா சொல்ற” ஜோதி மாமா வீட்டில் சோபாவில் உட்கார்ந்தி…

வாசிப்பு என்னும் பேரானந்தம்.

சிறு வயதிருலிருந்து எனது நினைவு தெரிந்த நாள் முதல் என்னுடைய முக்கியமான பொழுது போக்கு கனவு காண்பது.. எனக்கு நானே கதைகள் சொல்லி கொண்டு ஏதோ ஒரு கனவில் அழைந்த பொழுதுகள் ஏராளம்.   அந்த பழக்கம் பிற்கு வந்த நாட்களில் பல கதை புத்தகங்களை வாசிப்பதில் கொண்டு போய் சேர்த்தது.  
மற்ற சிறுவர்கள் பூந்தளிர், அம்புலிமாமா, சிறுவர் மலர் என்று படித்து கொண்டிருந்த காலத்திலேயே ஆனந்த விகடனை வாசிக்க காத்து கிடப்பேன் நான்.   ஏனோ எனக்கு புராண காலத்து கதாபாத்திரங்களின் மேல அந்த அளவு ஈடுபாடு இருந்தது இல்லை அந்த நாட்களில். அதானாலேயே என்னவோ காலப்போக்கில் தேவிபாலா, ரமணிசந்திரன் போன்றோர் எழுதிய நிகழ்கால மனிதர்களை போன்ற கதாபாத்திரங்களை உள்ளடக்கிய நாவல்கள் என்னை பெரிதும் கவர்ந்திருந்தன.  பாடப் புத்தகங்களை தொடாமல் நாவல்கள் , ஆனந்த விகடன் போன்ற புத்தகங்களிலேயே சஞ்சரித்திருந்தது என் மனம். இந்த பழக்கத்தினால் பள்ளியில் மதிப்பெண்கள் குறைய குறைய வீட்டில் வசவும் அடியும் ஏறுமுகம் அடைந்தது.
சிறுவயதிலேயே என்னிடம் ஒட்டிகிடந்த பிடிவாத குணம் அடிகளையும் வசவுகளையும் தாண்டி கதை புத்தகங்களை நோக்கி என்னை ஒட வைத்தது. வீட்டிற்கு தெரியாமல் கத…