10 மார்., 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்

14

முதல்ல சந்தோசம் நண்பர்களே. நம்மளயும் ஒரு மனுசனா மதிச்சி இந்த தொடர் பதிவிக்கு கூப்பிட்ட நண்பர் சைவகொத்துப்பரோட்டாவுக்கு நன்றி.


இந்த பதிவோட சட்ட திட்டம் என்னன்னா உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து பெண்மணிகளாவும் இருக்காலாம்.


இனி என்னோட பட்டியல்.


1. சின்னப் பொண்ணு : அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களே காலில் விழுந்து வணங்கிய பெரிய பொண்ணு இவர். ஏட்டறிவு இல்லாவிட்டாலும் விவசாய மக்களுக்கு இவர் ஒரு கலங்கரை விளக்கம்.


2. விஜயா : நாகப்பட்டினம் பள்ளி வேன் விபத்தில் சிறு குழந்தைகளை காப்பாற்ற தன் உயிர் தந்த தியாகி. அர்பணிப்பு என்னும் சொல்லின் அருஞ்சொல்பொருள்.


3. எம்.எஸ்.சுப்புலட்சுமி : இவரின் குரல் கேட்டு மயங்காதோர் இவ்வுலகத்தில் இல்லை.


4.  அன்னிபெசன்ட்அம்மையார் : கவிப்பேரரசர் (ரியல்) பாரதிக்கு பெண்களின் மகத்துவத்தை உணர்த்திய மாதர் குல மாணிக்கம். இவரின் பேச்சைக்கேட்ட பின்னர்தான் மாதவராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும் என்று பாடினான் பாரதி.  இந்திய சுதந்திர போரட்டத்துக்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது.


5.  கமலா செல்வராஜ் : காதல் மன்னனின் மகளாக பிறந்து , இந்திய பெண்களின் வயற்றில் பால் வார்த்தவர். டெஸ்ட் டுயுப் பேபியை சாத்தியப் படுத்தியவர். மருத்துவ உலகத்தில் இவர் ஆற்றி வரும் தொண்டு மகத்தானது.


6.  மதர் தெரசா : இவரின் சேவயை பற்றி சொல்ல எனக்கு அருகதை கிடயாது. மனிதராய் பிறந்த எவருக்கும் இவர் வாழ்ந்த இடம் ஒரு கோயில். இவர் வாழ்ந்த நாட்டினில் நாம் வாழ்வதே நமக்கு பெருமை.


7.  ஜான்சி ராணி லட்சுமி பாய் : வீரத்தின் விளை நிலம். வெள்ளயரை எதிர்த்து போரிட்ட இவரின் வீரமும், தன்னம்பிக்கையும் ஒவ்வொருக்கும் பாடம்.


8. கமலா மாமி : யார் இவர் என்று தெரியாதவர்கள் தயவு செய்து கடுகு தாளிப்பு வலை தளத்திற்கு ஒரு முறை சென்று பாருங்கள். பிறகு தெரியும் சகிப்பு தன்மையென்றால் என்னன்னு.


9. மதுரம் : என்.எஸ்.கே அவர்களின் மனைவி. இவரை திரையில் பார்த்தாலே நகைச்சுவை தெரிக்கும்.


10.  வலை உலக பெண்டீர் : சித்ரா டீச்சர்சின்ன அம்மினி, சந்தன முல்லை,அமிர்தவர்ஷினி அம்மா , கலகலப்பிரியா இன்னும் பலர். இவங்களலாம் பத்தி சொல்றதுகு என் கிட்ட சரக்கு பத்தாது.


இந்த பதிவ விருப்பபட்டவங்க எல்லாரும் தொடரலாம்.
 
டிஸ்கி


இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க
  

14 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.