ஒழுக்கம்

அண்ணண் முருகன் நல்ல பேச்சாளர்
ஒழுக்கம் என்ற தலைப்பில் அவர் பேச இருந்தது
மங்கயைர்கரசி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
மனைவி வள்ளியம்மை வாழ்த்தி வழிஅனுப்ப
கிளம்பிச்சென்றார் பள்ளிக்கு 
அமுதென அழகிய தமிழில் அவர் எடுத்தியம்ப
அமைதியாக ரசித்தனர் பெண்கள் 
பேசி முடித்த பின் உண்டு ஒய்வெடுக்க 
அண்ணண் போனார் தெய்வானையின் வீட்டுக்கு

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

9 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. நம்ம பேரும் அதுதாங்க. ஆனா யாரு அந்த தெய்வானைன்னு அட்ரஸ் கொடுத்தீங்கன்னா.. நல்லாயிருக்கும். :) :)

    பதிலளிநீக்கு
  2. ம்... பாலாண்ணே, கலக்குங்க...

    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  3. அருமை ஒழுக்கம். அது ஏங்க வள்ளி ,தெய்வானை . வேறு பெயர் கிடைக்கவில்லையா...?

    பதிலளிநீக்கு
  4. @ மதுரை சரவணண்

    அது ஒரு குறியீடுதான் நண்பரே. வேறு நோக்கம் எதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
  5. எனக்கா சொன்னேன்? ஊருக்கல்லவா சொன்னேன் என்று வாழும் உள்ளம். :-)


    p.s. the letter size - right ones. . thank you.

    பதிலளிநீக்கு
  6. அவருக்கு ஒழுக்க சீலர் என்ற பட்டம் அளிக்கிறேன் :))

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு நண்பரே உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வீட்டுக்கொரு கண்ணகி
    வீதிக்கொரு கோவலன்
    மாதவியின் பட்டம் மட்டும்
    பரத்தையென்பர்...

    எப்பயோ நான் எழுதினேன்...

    பதிலளிநீக்கு
  9. @ சித்ரா
    @ நன்றி சித்ரா

    @ சைவகொத்துப்பரோட்டா
    @ நன்றி சைவகொத்துப்பரோட்டா
    @ சசிகுமார்
    @ நன்றி சசிகுமார் வுருகைக்கும் வாழ்த்துக்கும்
    @ க.பாலாசி
    @ நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்