என் வாழ்வின் வசந்த காலங்கள்

/ 4 மார்., 2010 /
அம்மாவின் கைப்பிடித்து பழகிய நடையும்
அப்பாவின் தோழ் ஏறி பழகிய உப்பு மூட்டையும்
அக்காவின் நோட்டினில் இருந்து எடுத்த மயில் சிறகும்
அண்ணனின் கைபிடித்து சுற்றி திரிந்த பொருட்காட்சியும்
தாத்தா ஆசையோடு வாங்கிதந்த முதல் பேண்ட்டும்
பாட்டி பாசத்தோடு சுட்டுத்தந்த அரைவேக்காட்டு முறுக்கும்
என் குழந்தை பருவத்து குதுகாலங்கள்.

அப்பாவின் பைக்காசு திருடி வாங்கிதின்ன பரோட்டாவும்
அண்ணிண் சைக்கிளில் குரங்குபெடல் ரவுண்ஸும்
பள்ளிகட் அடித்து பார்த்த மர்ம மாளிகையும்
பரிட்சையில் பிட் அடித்து ஆசானிடம் வாங்கிய அடியும்
பள்ளித்தோழியின் பின்போய் பாடிய “நடக்குது நந்தவனமும்”
ஆற்றங்கரை மணலில் வெய்யில்லில் ஆடிய கிரிக்கெட்டும்
என் விடலை பருவத்து அருஞ்சொட்பொருட்கள்

வேலை(த்)தேடி தேய்ந்த செருப்பும்
பசித்தீர்க்க புசித்த சீகரெட்டும்
தந்தை முகம் காண கூசிய வெட்டிப்பொழுதுகளும்
வேலை கிடைத்து வாங்கிய முதல் சம்பளமும்
தாய் முகம் மலர வாங்கித்தந்த முதல் புடவையும்
விண்ணைத்தாண்டி பறந்த முதல் விமானப்பயணமும்
அவள் மனம் என் மனமான திருமணமும்
எங்கள் இருமுகத்தின் ஒரு முகமான என் மகனும்
என் வாலிபத்தின் வழித்தடங்கள்

இவையாவும் என் வயோதிகத்தில் கொசுவர்த்தி சுருளாக
என் மனதினை மீட்டும் என் வாழ்வின் வசந்த காலங்கள்


10 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

 
Copyright © 2010 க ரா, All rights reserved
Design by DZignine. Powered by Blogger