பீபோர் தீ ரெய்ன்ஸ் - 2007

பீபோர் தீ ரெய்ன்ஸ் - 2007



சிறிது நேரத்திற்கு முன்னால் நண்பர் மயில்ராவணனின் தகான் படத்தின் பதிவை படிக்க நேர்ந்த்தது.படிக்கும் போதுதான் எனக்கு பீபோர் தீ ரெய்ன்ஸ் படத்தை பற்றிய ஞாபகம் வந்தது. இதுவும் சந்தோஷ் சிவனின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் 2007ல் வெளிவந்த ஒரு இந்திய ஆங்கிலப்படம். இந்தப்படத்திலும் ராகுல் போஸ் தான் ஹீரோ. படத்தின்கதை எனப்பார்த்தால் சுதந்திரத்திற்கு முன்பான ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் நடந்த ஒரு கூடாக்காதலும்  அதன் பொருட்டு நடந்தேறும் சில சம்பவங்களும் தான். இந்த விடயத்தை சுதந்திரப் போரட்டத்தின் பேக் கிரவுண்டில் சொல்லியிருப்பார் சந்தோஷ் சிவன்.

படத்தின் ஹீரோ டீ.கே (ராகுல் போஸ்) கேரளாவில் ரோடு போட வரும் ஒரு ஆங்கிலேய பொறியாளனின் கிழே வேலை பார்த்து வருபவன். அந்த ஆங்கிலேய பொறியாளனின் வீட்டில் வீட்டு வேலை பார்க்க வரும் டீ.கேவின் ஊரை சேர்ந்த ஷாஜினிக்கும் அந்த பொறியாளனக்கும் காதல் அரும்புகிறது. இதில் சிக்கல் என்னவென்றால் ஷாஜினி ஏற்கனவே மணமானவள். இந்த கூடாக்காதல் ஷாஜினியில் கணவனுக்கு தெரிய வர, அதற்குப்பின் ஏற்படும் சில சம்பவங்களின் முடிவில் ஷாஜினி இறக்க நேரிடுகிறது. அவள் மரணத்தில் டீ.கேவை சந்தேகிக்கும் அவனின் ஊர்மக்களிடம் பெரும்பாடு பட்டு அவன் அதற்கு காரணமில்லை என நிருபிக்கிறான்.




ஷாஜினியின் மரணத்திற்கு காரணமானவனை கொன்றவனை டீ.கே கொன்றால் அவன் குற்றமற்றவன் என் ஊர் சொல்ல, டீ.கே அந்த ஆங்கிலேய பொறியாளனை கொன்றானா என்பதை வெள்ளித்திரையில் காண்க. இந்த படத்தினை பொருத்த மட்டில் முதலில் பாரட்டவேண்டியது ஒளிப்பதிவு. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவை பற்றி நான் விளக்குவது சச்சினின் பேட்டிங்கை சடகோபன் ரமெஷ் விள்க்குவது போல. ஹீ இஸ் சிம்பளி கிரேட். இரண்டாவது கவனிக்க பட வேண்டிய விடயம் இசை. இந்த படத்தின் இசையமைப்பாளர் Mark Kilian . அருமையான இசை. நம் மனதினை ஊடுருவி நம் ஆத்மாவை தட்டி எழுப்பும் இசைக்கோர்வை. மூன்றாவதாக ஷாஜினியாக
வரும் நந்திதா தாஸ். சூரியனை கண்டவுடன் மலரும் சூரியகாந்தி பூவின் பிரகாசத்தை ஒத்திருக்கும் பிரகாசமான முகமுடையவர் அவர்.அந்த அழகிய கண்கள் பேசும் ஆயிரம் கவிதைகளை நம்மால் படிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். டீ.கே வாக வரும் ராகுல் போஸும் நிறைவாக செய்திருக்கிறார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவுக்காகவும், நந்திதா தாஸின் நடிப்புக்காகவும் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

டிஸ்கி

இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க


க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

2 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்