மெய்பொருள்

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு..
 சுந்தரம் வாத்தியாரின் குரல் உரக்க ஒலித்தது ஐந்தாம் வகுப்பு ‘பி’ செக்சனில்.குள்ளமான உருவம், சற்றே கனத்த சரிரம், அதையொத்த நல்ல கனத்த சாரீரம் அதுதான் சுந்தரம் வாத்தியார். அவர் படித்து பெற்ற பட்டம் தமிழ் புலவ்ர். தன்னிடம் எந்த மாணவரும் ட்யுஷன் வைத்துக்கொள்ளாதது, மனைவியின் நச்சரிப்பு, அவர் அப்பா அவருக்கு தந்தை விட்டுப்போன வீட்டின் மேல் பங்காளிகள் கோர்ட்டில் தொடந்திருக்கும் கேஸ் போன்ற மனக்குறைகளும், சங்கடங்களும் அவருக்கு இருந்தாலும் அவர் கற்ற தமிழின் மேல் அவருக்கு இருக்கும் காதலும், அதை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் சற்றும் குறைந்ததில்லை அவருக்கு. 

பாடம் எடுத்துக்கொண்டிருக்கயில் இடையில் அய்யா தமிழ் வாத்தியாரய்யா என்ற குரல் நக்கலுடன் ஒலிக்க வகுப்பரைக்கு வெளியே வந்தார். அங்கே சேவியர் வாத்தியார் பக்கத்தில் ஒரு பையனுடன் நின்றிருந்தார். இவர் தலை வெளியில் தென்பட்டவுடன் “ ஏன்யா உம்ம பையனுக்கு வீட்டுல பென்சில் கின்சில்லாம் வாங்கி தரதில்லையா. பக்கத்துல இருக்கற பையனோட பய்லேந்துலாம் திருடறான்? “ என்று நக்கல் கலந்து ஒலித்த  சேவியர் வாத்தியரின் குரலை கேட்ட சுந்தரம் வாத்தியாரின் முகம் சிவந்தது. சேவியர் வாத்தியாரின் அருகில் உடம்பில் நடுக்கத்துடன் நின்றிருந்த பையன் மகேசு சுந்தரம் வாத்தியாரின் மகன். அவனும் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான்.
ஏற்கனவே வீட்டில் சட்டை பையிலும், பாத்திரங்களில்லும் வைத்த காசு அடிக்கடி காணமல் போவதில் மகனின் மேல சந்தேகத்தில் இருந்த வாத்தியார் திரும்பி வகுப்பறைக்குள் வேகமாக சென்று கையில் பிரம்புடன் வெளியில் வந்து மகேசை தரதரவென்று இளுத்துக்கொண்டு பள்ளியில் நடுப்பகுதிக்கு வந்தார். “அய்யா என்ன செய்யிறுரு” என்று கத்திக்கொண்டே சேவியர் வாத்தியாரும் பின் தொடர்ந்தார். பள்ளியின் நடுப்பகுதியை தொட்டவுடன் பள்ளி மக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க மகேசை கொண்டு வந்த பிரம்பு பிஞ்சு போகும் வரைக்கும் விளாசி தள்ளினார். கடைசியில் கைஒய்ந்து போக அவனை சுடும் வெய்யிலில் வெறும் காலில் முட்டி போட சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் விடுவிடுவென வகுப்பறையை நோக்கி நடந்தார்.  பள்ளி முடிந்து நண்பர்களுடன் பேசி முடித்து விட்டு வீடு திரும்பிய சுந்தரம் வாத்தியார் மகன் இன்னும் விடு திரும்பாத்தை அறிந்து மீண்டும் பள்ளி வந்து முழுவதும் மகனை காணாமல் வீடு திரும்பினார். வீடு திரும்பிய கணவனிடம் பள்ளியில் நடந்தை கேட்டறிந்த மனைவிக்கும் அவருக்கும் அந்த இரவு தூங்கா இரவாக விடிந்தது.

பொழுது புலர்ந்ததும் சென்னை எக்மோரில் வந்து நின்ற பெட்டியில் ஏறிய காசிமிற்கு நாற்பதில் இருந்து நாற்பத்தைந்து வயது இருக்கும். காலையில் வந்து நிற்கும் டிரைனில் ஏறி பயனிகள் விட்டு செல்லும் பேப்பர்கள் மற்றும் பாட்டில்களை பொறுக்கி விற்பது அவர் தொழில். அன்றும் ஒவ்வொரு பெட்டியாக போய் கொண்டிருக்கும் போது ஒரு பெட்டியில் ஒரு ஒரத்தில் சுருண்டு படுத்துக்கிடந்த அந்த பையனை பார்த்தார். அவனை தொடும் போது அவரை கண்டு பயந்து போன அவனை தேற்றி அவனை பற்றி விபரம் கேட்டாலும் அவன் எதுவும் சொல்லவும் இருக்க அவனை அங்கேயே விட்டுச் செல்ல மனமில்லாமல் அவனை அவருடனே கூட்டிச்சென்று சம்சுதின் என்று பெயரிட்டு வளர்க ஆரம்பித்தார்.  நாளடைவில் அவருடன் சம்சுதினும் மிகவும் ஒன்றிப்போய்விட்டான். காலம் உருண்டோடியது. இன்று சம்சுதின் சென்னை அறிந்த தொழிலதிபர். பல இடங்களில் சேரும் வேஸ்ட் பேப்பர்கள், அட்டை பெட்டிகளை சேகரித்து அவற்றை கூலாக்கி புது அட்டை பெட்டிகளாகவும் , பேப்பர்களாவும் மாற்றி மறு உபயோகதிற்கு அளிக்கும் தொழிற்சாலை ஒன்றை திரம்பட நிர்வகித்து வருபவன். அவன் கஸ்டமர் ஒருவன் சொன்ன விசயத்தை கேள்விப்பட்டு  தொழிற்சாலை அமைக்க நல்ல மலிவு விலையில் நிலம் வாங்க வந்த இடத்தில் அந்த ஊருக்கு வந்திருந்தான். ஒய்வு நேரத்தில் அந்த ஊரை அப்படியே நடந்து சுற்றி வரக்கிளம்பினான்.


வழியில் ஒரு வீட்டின் முன் ஒரு கூட்டத்தை பார்த்து ஒரு பெரியவர் சாகக்கிடப்பதை தெரிந்து கொண்டான். ஏனோ அவன் மனம் அந்த வீட்டின்  உள் நுழைந்து பார்க்க தூண்ட , அங்கு ஒரு பெரியவரை படுக்கையில் கிடத்தி இருக்க , படுக்கையை சுற்றி ஒரு வயதான் பெண்மணியும் இன்னும் சில பேரும் அழுது கொண்டு இருக்க, சற்றென நிமிர்ந்து பார்த்த அந்த வயதான் பெண்ணும் இவனை பார்த்து ஏங்க பாருங்க அவன் வந்துட்டான் என் அரற்ற ஆரம்பிக்க , இவனையும் ஏதோ ஒன்று செலுத்த அந்த பெரியவரின் அருகே போய் குனிந்து நின்றான். அவரின் காதருகே போய் அப்பா என்றவுடன் அவர் கண் அசைய இவன் அவரிடம்

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.. என்று சொல்ல அந்த பெரியவரின் உயிர் பிரிந்தது.








க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

8 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. ஒரு திரைப்படம் பாத்த
    மாதிரி இருக்கு, தொடர்ந்து
    கதை எழுதுங்கள் ராம்.

    பதிலளிநீக்கு
  2. உணர்வு பூர்வ மிக்க நடை. :-)

    பதிலளிநீக்கு
  3. @சைகொப

    நன்றி சைகொப

    @ ராஜு

    நன்றி ராஜீ வருகைக்கு

    @ சித்ரா டீச்சர்

    நன்றி கருத்துக்கு

    @ கார்த்திக்கேயன்

    நன்றி கார்த்திக்.

    பதிலளிநீக்கு
  4. ராம்ஸ் என்னமோ போ பின்ற பின்ற, இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா......

    பதிலளிநீக்கு
  5. ஆகா , கொஞ்சம் லேட்டா வன்டனோ?
    நம்ம ராமராசன் துறை படத்த போட்டு எங்க இதையத்த குளிர வசுடீக

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்