மத்தியான நேரத்தில் எனது கீழ் ஒர்க் பண்ணும் டெவலப்பர் ஒருவனின் கோடிங்கை எடுத்து ரிவுயு பண்ணிக்கொண்டிருக்கும் போது இண்டர்காம் ஒலிக்க எடுத்தால் எனது மேனேஜர் சந்தர்.
“ ராம் குட் யு கம் டூ மை ரூம் பார் பைவ் மினிட்ஸ். ஐ ஹாவ் அ நீயுஸ் பார் யூ”.
“யெஸ் சார் ஐ ஆம் கம்மிங் நெள” இண்டர்காமை அதனிடத்தில் வைத்து விட்டு, சிஸ்டத்தை லாக் செய்து விட்டு என்ன விசயமாக இருக்குமென்று யோசித்து கொண்டே மேனேஜரின் கேபினை நோக்கி நடந்தேன்.
”குட் ஐ கம் இன் சார்” மேனேஜரின் கதவை தட்டி விட்டு “யெஸ்” என்றவுடன் கதைவ திறந்து உள்ளே நுழைந்தேன்.
தனது லேப் டாப்பை பார்த்து கொண்டே “டேக் யுவர் சீட்” என்றவரிடம் “இட்ஸ் ஒகே சார்” என்றவனை அவர் நிமிர்ந்து பார்க்க உடனே ஒரு சீட்டின் நுனியில் உட்கார்ந்தேன்.
”ஹோப் யூ வில் ரிமம்பர். கப்புள் ஆப் வீக்ஸ் பேக் பீபோர் வீ டிஸ்கஸ்டு அபவுட் ஆன் ஆன்சைட் ஆபர்சூனிட்டி. டூ யூ ஹாவ் இண்டரஸ்ட் டூ டிராவல்” என்றவரிடம் மனதில் சந்தோசம் இருந்தாலும் என்ன சொல்வதென தயங்கி நின்றவனிடம் “வாட் மேன். வென் எவர் ஆப்பர்சூனிட்டிஸ் நாக் யுவர் டோர் டோன் ஹெஸிடேட் டூ டேக் இட். திஸ் இஸ் த ஏஜ் பார் டிராவல் அண்ட் ஏனிங்” என்றார்.
” நோ சார். ஐ வில் டிஸ்கஸ் வித் மை பேமிலி அண்டு வில் லெட் யூ நோ இன் அனதர் கப்புள் ஆப் டேஸ்” என்று சொன்னவுடன் ”ஒகே மேன் டேக் யுவர் டைம்” என்று அவரின் லேப் டாப்பில் திரும்பியும் மூழ்க ஆரம்பிக்கே தலையாட்டிவிட்டு ஒரு தேங்ஸுடன் வெளியேறினேன்.
திரும்ப வந்து எந்து சீட்டில் உட்கார்ந்து சிஸ்டத்தை அன்லாக் செய்தாலும் சந்தோசத்தில் மனது வேலையை செய்ய மறுத்தது. இந்த கம்பேனியில் சேர்ந்து ஆறு மாதம்தான் ஆகிறது. ஐந்திலக்கத்தில் சம்பளம், ஆறிலக்கத்தில் கடன். இதற்கு முன்னால் சென்னையில் வேலை செய்த கம்பேனியில் கடைசி ஒன்றரை வருடம் அமெரிக்காவில் இருந்தாலும் வந்தவுடனே இந்த கம்பெனியில் இன்னும் கூடுதலாக சம்பளம் கிடைக்க , இப்பொழுது ஆறு மாதமாக பெங்களுருவில் வாசம். மனைவியும் குழந்தைகளும் அப்பா அம்மாவின் துணையுடன் சென்னையில். மனைவியும் வேலை பார்த்தாலும் புலி வாலைப்பிடித்த கதையாக ஹோம் லோனும் , வேகில் லோனும் இன்ன பிற பெர்சனல் லோன்களும் விடாமல் தொரத்த கூட கிடைத்த சம்பளத்தால் உத்தியோக மாற்றத்தை உளமாற நேசித்தது மனது. இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சென்னை பயனம்.
சந்தோச மிகுதியால் மனைவியை கூப்பிட்டு விசயத்தை சொல்ல உடனே போன் எடுத்து டயல் செய்தேன். ரீங் போய் சிறிது நேரம் களித்து போனை எடுத்தவள் “ஐ ஆம் இன் மீட்டிங். வில் கால் யூ லேட்டர்” என்று சொல்லி உடனே கட் செய்தாள். செரி என்று போனை அதன் இருப்பிடத்தில் வைத்து விட்டு ஒரு காப்பி எடுத்து கொண்டு லாஞ்சில் வந்து உட்கார செல்போன் ரிங் அடிக்க கலை காலீங் என்று வர செல்லை எடுத்து “என்னம்மா மீட்டிங் முடிஞ்சதா “ என்றவனிடம் “இம். இம் . சொல்லுங்க” என்றாள் உற்சாகம் இல்லாத குரலில்.
“பிஸியா இருக்கியா. பேசலாமா” நான்.
”இல்ல சொல்லுங்க என்ன விசயம்”. அவள்.
” ஒரு குட் நீயுஸ். “ என்றவனிடம் “என்ன இங்க டிரான்ஸ்பர் கிடைச்சுருச்சா” என்றாள் உற்சாகமாக.
“லூஸு. அதல்லாம் இல்ல. ஒரு ஆன்சைட் ஆப்பர்சூனிட்டி இருக்கும் போல இருக்கு. உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லறேன்னு சொல்லிருக்கேன் ஆபிஸ்ல. அதான் கால் பண்ணினேன். நீ என்ன சொல்ற”.
”இந்த வீக் எண்டு இங்க வருவீங்கள. அப்ப பேசிக்க்கலாம். ஏண்ட மட்டும்தான் கேப்பிங்களா. அப்பா அம்மா வேற ஊர்ல போய் ஒரு ஆறு மாசம் இருக்கனும்னு சொன்னாங்க. வீக் எண்டு வந்து அவங்க கிட்டயும் பேசிட்டு போய் முடிவ சொல்லுங்க” என்றாள்.
”ஏய் அதல்லாம் விடு அவங்க கிட்ட நான் பேசிக்கிறேன். நீ என்ன சொல்ற சொல்லு”.
“ஏங்க இந்த அவசரம். வீக் எண்டு வருவீங்களா? இல்லேன்னா அப்படியே அங்கேந்து ஆன் சைட் போகப்போறீங்களா” என்றவளிடம் “ஒ.கே போன வையி. நான் அங்க வந்து பேசிக்கிறேன்” என்று சொல்லி போனை கட் செய்தேன்.அடுத்த வந்த மூன்று நாட்களும் டெஸ்டிங், கோடு ரிவியு, ஆன்சைட் கால் என்று பிசியாக போனது. மேனஜரும் ஏதோ கஸ்டமர் மீட்டிங்க்கு போய் விட்டதால் அவரிடம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் நாட்கள் கழிந்தது. அந்த வெள்ளிக்கிழமை ஈவ்னிங் மடிவாலா போய் கே.பி.என் பஸ் பிடித்து சனிக்கிழமை காலை ஐந்து மணிக்கு கே.கே,நகரில் உள்ள பிளாட்டில் நுழைந்து காலிங் பெல் அடிக்கையில் அப்பா வந்து கதவை திறந்தார்.
“என்னப்பா எப்படி இருக்கீங்க” என்றவனிடம் “நல்லா இருக்கேன். போய் படுத்து ரெஸ்ட் எடு. அப்புறம் பேசலாம்” என்றார். பேக்கை சோபாவில் வைத்து விட்டு பெட்ரூம் கதைவை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தேன். நன்றாக தூங்கி கொண்டிருந்த மனைவியையும் குழந்தையையும் டிஸ்டப் செய்யாமல் நானும் ஒரு ஒரமாக படுத்து தூங்கிப்போனேன். காலை எழுந்து வெளியில் சென்று சில வேலைகளை முடித்துவிட்டு மத்தியம் லன்ச்சுகு வீட்டின் உள் நுழைந்தேன். அப்பா டீவியில் உட்கார்ந்து நீயுஸ் கேட்டு கொண்டிருந்தார். அவர் அருகே போய் உட்கார்ந்தேன்.
“ போய் சாப்பிடு ” அப்பா.
“நீங்க சாப்பிடீங்களா” என்றவனிடம் “இம்.இம்” என்றார் டீவியில் இருந்து கண்ணை எடுக்காம்லே. சரி என்று சாப்பிட்டு உட்கார அருகே வந்து மகனும் உட்கார அவனுக்கு ஊட்டி விட்டுக்கொண்டே நானும் சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்து அப்பா பக்கத்தில் வந்து உட்கார்ந்து “உங்க கிட்ட கொஞ்சம் பேசனும். நான் ஆன்சைட் போகப்போறேன் என்றேன்” என்றவனை திரும்பியே பார்க்காமல் இருந்தார்.
“கலை கிட்ட சொல்லிருந்தேன். உங்க கிட்ட சொன்னாலா” நான்.
“ தெரியாது. அம்மா கிட்ட சொல்லிருப்பா” அப்பா.
எரிச்சலுடன் மனவியை நிமிர்ந்து பார்க்க அவள் பெட்ருமினுள் நுழைந்து கொண்டிருந்தாள்.
”சாரிப்பா நான் உங்ககிட்ட சொல்லாததுக்கு. இப்ப என்ன சொல்றீங்க”.
”என்ன சொல்ல சொல்ற. தகவலா சொல்றியா இல்லேன்னா யோசனை கேக்கறியான்னு தெரியாம என்ன என்னத்த சொல்ல சொல்ற”.
“அப்பா” என்று சற்று உரக்க சொன்னவனை திரும்பி பார்த்து நிதானமாக “சொல்லு” என்றார்.
”சாரிப்பா. யோசனதான் கேக்கறேன் சொல்லுங்க” என்றேன்.

“எதுக்குப்பா கல்யாணம் பண்ணிக்கிட்ட ?” சற்று நக்கல் கலந்து வந்து விழுந்த வார்த்களை கேட்டு எரிச்சலுடன் “ இத எதுக்கு கேக்கறீங்க. நான் கேட்டதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். புரியல எனக்கு” என்றேன்.
“ரெண்டு பேரு கல்யாணம் பண்றதே வாழ்கைல ஒரு பற்றுதல் வரனுங்கிறதுக்குதான். கல்யாணம் முடிஞ்சு எத்தன நாள் சேந்து இருந்துருப்பீங்க நீங்க சொல்லு. கல்யாணம் முடிச்ச உடனே ஆன் சைட் போறேன்னு கிளம்பி போய்ட்டு ஒரு ஆறு மாசம் கழிச்சு வந்த. வந்த உடனே கடன வாங்கி ஒரு வீட்ட வாங்கின.எனனடா இவ்வளவ்வு கடன் வாங்கிருக்கானேன்னு பயம் ஒரு பக்கம் இருந்தாலும் நெரய சந்தோசமாவும் இருந்துச்சு உன்னய பாத்து. கொஞ்ச நாள் இருந்த . குழந்தையும் பொற்ந்துச்சு. குழந்த பொறந்துருச்சு . டூ வீலர் பத்தாது. கார் வாங்கனுன்னு யோசிச்ச. திரும்பியும் ஒரு கடன். கடன் அடைக்கனும் பணம் வேனுன்னு திரும்பியும் ஒரு ஒன்னரை வருசம் காணம போயிட்ட. திரும்பி வந்த. சேரி இனிமே எல்லாரும் சேந்து சந்தோசமா இருக்கலாம் அப்படின்னு நெனச்சா. இங்க இவன உட அவன் அதிகமா துட்டு தரான்னு ஆறு மாசமா அங்க போய் ஒங்காத்து இருக்க. ரெண்டு வாரத்துக்கு ஒரு தர வந்து போறேன்னு கொஞ்சம் சந்தோசப்பட்டா இப்ப அதுவும் இல்லைங்கிற. எத நோக்கி போய்ட்டு இருக்கனு ஒனக்கும் தெரில எனக்கும் புரியல. ஒன்கூடவே வரலான்னு ஒத்தி நெனச்சா நீ அவள மறந்து வேகமா ஒடிக்கிட்டே இருக்க. இதாப்பா வாழ்க்கை விட்டில் பூச்சி மாதிரி. அதுகுத்தான் ஒன்னும் தெரியாம வெளிச்சத்த பார்த்து வெளக்கு பக்கத்துல போய் வாழ்கைய முடிச்சுக்குது. நீங்க என்னன்னா பக்கத்துல இருக்குற சந்தோசத்த பத்தி யோசிககாம வேற எதயோ சந்தோசன்னு நெனச்சுகிட்டு அத அடய நெத்தமும் ஒடி ஒடி சாகூறீங்க. எலலாம் தெரிஞ்ச நம்மளும் அப்படியே இருக்கலாமா இராசா. சொல்லு. யோச்சிசு முடிவு எடு”.
“லச்சுமி நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன். கொஞ்சம் அந்த குடைய எடு” . அம்மா கொண்டு வந்து கொடுத்த உடன் செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பி போனார். எதுவமே தோன்றாமல் சற்று நேரம் அப்படியே உட்கார்ந்து இருந்தேன். அடுத்த நாள் யாரிடமும் எதுவும் பேசாமல் சாயங்காலம் வந்தது. ஊருக்கு கிளம்பும் போது “என்ன முடிவு எடுத்தீங்க” என்ற மனைவியிடம் “தெரியல் போயிட்டு கால் பண்ணி சொல்றேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினேன். அடுத்த நாள் காலையில் பெங்களுருவை தொட்ட பின் மொபைல் எடுத்து வீட்டுக்கு டயல் செய்ய அப்பா எடுத்தார்.
“நான் இங்க வந்துட்டேன்” என்றவனிடம் “சரி” என்ற ஒற்றை சொல் பதிலாக வர சற்று நிதானித்து “நான் போலப்பா” என்றேன். “சரி” என்ற அப்பாவிடம் குரலில் சற்று சந்தோசம் கலந்து இருந்தது.

Tags:
கதை
நல்லா எழுதி இருக்கீங்க ராமசாமி கண்ணன்
பதிலளிநீக்குகதையா...............
பதிலளிநீக்குஅவ்வ்..................
label - பாக்குறதுக்கு முன் வரை இது
உண்மையோன்னு நினச்சிட்டேன்.........:))
நல்லா இருக்கு ராம்.
இதாப்பா வாழ்க்கை விட்டில் பூச்சி மாதிரி. அதுகுத்தான் ஒன்னும் தெரியாம வெளிச்சத்த பார்த்து வெளக்கு பக்கத்துல போய் வாழ்கைய முடிச்சுக்குது. நீங்க என்னன்னா பக்கத்துல இருக்குற சந்தோசத்த பத்தி யோசிககாம வேற எதயோ சந்தோசன்னு நெனச்சுகிட்டு அத அடய நெத்தமும் ஒடி ஒடி சாகூறீங்க. எலலாம் தெரிஞ்ச நம்மளும் அப்படியே இருக்கலாமா இராசா. சொல்லு. யோச்சிசு முடிவு எடு”.
பதிலளிநீக்கு........ சர்தாங்க...... தத்துவத்துல இறங்கிட்டீங்க. . இதுவும் நல்லா இருக்குங்க. :-)
இப்படியே தான் எங்க காலை கட்டி வைத்து விடுகிறார்கள். அன்பு தொல்லை, என்ன செய்றது.
பதிலளிநீக்குநல்ல முடிவு தான். அவராக அந்த முடிவை எடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். தந்தையின் கெஞ்சலுக்கு பிறகு எடுத்தது சற்றே நெருடல்.
பதிலளிநீக்குஹ்ம்ம் நல்லா வந்துருக்கு ...
பதிலளிநீக்குநல்லா எழுதிருக்கீங்க!
பதிலளிநீக்கு@ நேசமித்ரன்
பதிலளிநீக்குநன்றி நேசமித்ரன் சார். வருகைக்கும் கருத்துக்கும்.
@ சைகொப
நன்றி சைகொப தொடந்து தரும் ஊக்கத்துக்கு
@ சித்ரா
அய்யோ தத்துவம்லாம் சொல்ற அளவுக்கு நான் இன்னும் பெரிய ஆள் ஆகலிங்க.
@ சியாம்
நன்றி சியாம் வருக்கைக்கும் கருத்துக்கும்
@ தமிழ் உதயம்
நன்றி தமிழ் உதயம்
@ பத்மா
நன்றி பத்மா மேடம்
@ அருணா
நன்றி அருணா வருகைக்கும் கருத்துக்கும்.
sir neenga eppe tamilla ezhuthuveenga?
பதிலளிநீக்குகதை ரொம்ப அருமையா வந்திருக்கு ராம் !!! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு