கீணிங்.. கீணிங் என சத்தம் கேட்டு சற்றே கண் விழித்தார் சிதம்பரம். பக்கத்தில் படுத்திருந்த மனைவி கோமதியை உசுப்பி பார்த்தார்.
”ஏய் கொஞ்சம் எந்திருச்சு போய் என்னன்னு பாக்கலாம்ல” என்றவரிடம்
“நீங்க போய் பாருங்க” என்று பதில் வர “சரிதான்” என்றபடியே “இந்த நேரத்துல எந்த எழவு வந்து இப்படி இம்சை பன்றதுன்னு தெரியலயெ” என்று மனதில் நினைத்துக்கொண்டே இடுப்பில் நழுவி கிடந்த வேட்டியை கட்டிக்கொண்டே வாசலை பாத்துப்போனார்.
திரும்பியும் கீணிங்.. கீணிங்கென சத்தம கேக்கவே “ஏய் எவனப்பா அது. கொஞ்சம் கூட பொறுமை இல்லயா. வந்துட்டு இருக்கோம்ல” என்றபடியெ எரிச்சலுடன் கதவை திறந்தால் கையில் பெட்டியுடனும், தோழில் பையுடனும், முகத்தில் மூன்று நாள் தாடியுடனும் குமரேசன் நின்றிருந்தான். குமரேசன் அவரது மகன். அவன் பின்னால் எட்டிப்பார்த்து “எங்கடா, வசந்தி” என்றவரிடம்
“வரல” என்றவனிடம் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தாலும் “ சரி படுத்து தூங்கு அப்புறம் பேசலாம்” என்று சொல்லிவிட்டு படுக்கையை நோக்கிப்போனார்.
திரும்பியும் முழிப்பு தட்ட , ஏதோ விசும்பல் சத்தம் முத்ததில் இருந்து வர “என்ன எழவுடா இது” என்று மனதில் நினைத்துக்கொண்டே படுக்கையில் திரும்பி பார்த்தால் மனைவி இல்லை. “ஒ விடுஞ்சிருச்சா” என்று முனங்கியபடியெ படுக்கைய விட்டு எழும்பி வெளியே வந்தால் “ என்னங்க பாத்தீங்களா பாவி மவ நம்ம தம்பிய என்ன பாடு படுத்திருக்கான்னு” என்ற மனைவியை “ஏய் சும்மா” இரு என்று சொல்லி விட்டு “ என்னடா என்னாச்சு” என்றார் மகனிடம். “ வந்த்துட்டேன்” என்றவனிடம் “என்னடா ஆச்சு” என்றார் சற்று ஆத்திரத்துடன்.
மதுரை பொன்மேனி மூன்றாவது தெருவில் இருந்த அந்த வீட்டில் இருந்து ஒலித்த டெலிபோன் சத்தம் தெரு முழுதும் கேட்டது. “ ஏய் டெலிபோன் இந்த சத்தம் போடுது. அத யாராது எடுத்தா என்ன” என்று கத்தியபடியே டாய்லட்டின் கதவை திறந்த படியே வந்த தியாகராஜனை பூஜை அறையில் இருந்து எட்டிப் பார்த்த மனைவியிடம் “ ஒ அங்க இருக்கியா நீ. சாமிப்படத்தா பாத்துட்டா போதும் ஒனக்கு. இந்த சுரேஷ் எங்க போனான்” என்ற படியே போனை எடுத்து “ஹலோ” என்றவரிடம் “ அப்பா உடனே கிளம்பி வாங்கப்பா” என்று அவரின் மகள் வசந்தியின் குரல் ஒலித்தது.
-- தொடரும்.

Tags:
தொடர் கதை.
நல்லா இருக்கு நண்பரே
பதிலளிநீக்குதொடர்க !
ராமசாமிக்கண்ணன்.
பதிலளிநீக்குமுதல் கதையா ?
அப்படித் தெரியவில்லை.
தொடருக்கான சுவஸ்ய முடிச்சுடன் முடிக்க முடிகிறது.
முழுசும் படிக்கனுமே .படிக்லாம்.
தொடரட்டும் உங்கள் காதல் கதை - பதிவை சொன்னேன்!
பதிலளிநீக்குஅட!!! சஸ்பென்ஸ் வச்சு, தொடரும்
பதிலளிநீக்குபோட்டுட்டீங்களே.
நல்லா இருக்கு
பதிலளிநீக்குநல்லா போகுதுங்க. அடுத்த பார்ட் எப்ப?
பதிலளிநீக்கு