சில கவிதைகள்

 என்
சோகம்
அழுகை
சந்தோசம்
சிரிப்பு
கோபம்
குரோதம்
வனமம்
அமைதி
எல்லாவற்றையும்
நிரப்பி வைக்கும்
கண்ணாடி சீசா
நீ
நீலம் பாரித்த
கண்ணன் போல்
சிரித்துக்கொண்டே
இருக்கிறாய்
உன் கழுத்தின்
மேல்
நான்
இந்தக் கத்தியை
பதிக்கும் போதும்..




"ஏன் என்னை கொல்லுகிறிர்கள் ? “
என்று கேட்டவளின் கண்களில்
புலியின் வாயில் சிக்கிய மானின் மிரட்சி
ஒரு ஆட்டினை
கொல்லும்
மாமிசக் கடைகாரனின்
லாவகத்துடன்
அவளின் உடம்பை
கையாள ஆரம்பிக்கிறேன்
ஒரு தேர்ந்த
மருத்துவ மாணவனின்
கற்றுக்கொள்ளும்
வேட்கை
என் கைகளிருக்கும்
கத்திக்கு
முதலில் என்னை 
முத்தமிடும் உதடுகளில்
இருந்து ஆரம்பிக்கிறேன்
பின் ஆதுரமாயென்
கழுத்துகளை சுற்றி
படர்ந்த அவள் கைகளை
புணர்ச்சியின்
போது என்னை முட்டி 
தள்ளிய முலைகளை
மட்டும் சற்றே கருணையுடன்
இதை சற்றே மிரட்சியுடன்
நோக்கும்
உங்களிடம் நான் 
விளக்கப் போவதில்லை
ஒரு தந்தியிசைக் கருவியை
மீட்டுவதும்
ஒரு பெண்ணைப் புணர்வதும்
ஒரு கொலை செய்வதும்
ஒன்றேயென

பொந்திடை வைத்த
அக்னிகுஞ்சென்று தகிக்கிறது
உண்ணாமுலை பெண்ணொருத்தியின்
ஆயிரமாண்டு தவம்

திருவிழா காணா
குழந்தையின் கண்களோடு
அதை எட்டிப் பார்க்கிறான்
பரமன்

வெக்கை நீங்க
மழையென அவனை
நுகர்ந்து கண் திறக்கிறாள்
அப்பெண்

மண் தீண்டும்
மழையென
காமுற்ற கடவுள்
மயங்கிநின்ற அப்பெண்ணின்
யோனி வழி உட் புகுந்தார்.


க ரா

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்