31 ஜன., 2010

வாசிக்கப்படாத கடிதம்

5

சண்டே அதி காலை எட்டு மணிக்கு நல்ல உறக்கத்தில் இருந்த போது நிலநடுக்கம் வந்த மாதிரி உணர்ந்து விழித்துப்பார்த்தேன். முந்தய நாள் ஈவ்னிங் ஷோவிற்கு தான் விரும்பிய தமிழ்(ப்) படத்திற்கு டிக்கட் கிடைக்கவில்லை என்று பொய் சொல்லி நான் விரும்பிய கோவா படத்திற்கு கூட்டிப்போன கோபத்தில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தாள் என் மனைவி. அவளின் கோபத்தை சந்திக்க மனதில் தில் இல்லாமல் திரும்பிப் படுத்தேன்.

“இன்னிக்கு வீட்ட ஒழிக்கனும்னு சொன்னது ஞாபகம் வரலையா ? சீக்கிரம் எந்திரிச்சு வாங்க. வேலை நிறைய இருக்கு.” அவளின் அன்பான கட்டளைக்கு அடிபணிந்து படுக்கையிலிருந்து எழும்பி காலை கடன்களை முடிக்க குளியல் அறைக்குள் தஞ்சம் புகுந்தேன். என்னை திட்டிக்கொண்டே படுக்கயை மடித்து வைக்கும் சத்தத்தை கேட்டுக்கொண்டே குளியல் அறையின் கதவை திறக்கும் போது படீர் என்ற சத்தமும் அதை தொடர்ந்து என் அன்பு மகனின் அழுகைசத்தமும் கேட்டது. கதவை திறந்த உடன் பளீர் என்று சிதறிக்கிடந்த கோலப்பொடியை பார்த்தபோது மகனின் அழுகைசத்தத்தின் காரணம் புரிந்தது.

மகனை தேற்றி ஒரமாக உக்காத்திவிட்டு, மனைவியின் அடுத்த வார்த்தைக்கு முன் வேலையை ஆரம்பித்தேன். பரணையில் இருந்து ஒவ்வொரு பொருட்களாக இறக்கி வைக்கும் போது அந்த பழைய டிரங்க் பெட்டியை திறந்துப்பார்த்தேன். அதனுள் பழைய புத்தகங்கள் நிறைய இருந்தது. அந்த பெட்டியை அப்படியே ஒரமாக வைத்து விட்டு மிதமிருந்த வேலைகளை விரைந்து முடித்து விட்டு குளிக்கச்சென்றேன். குளித்து முடித்து விட்டு வந்து அன்றைய நீயூஸ் பேப்பரை படித்து முடித்து மதிய உணவை முடித்து சிறிது நேரம் டீவி பார்த்து விட்டு மனைவியும் மகனும் தூங்கச்சென்றனர்.

ஒரமாக இருந்த அந்த டிரங்க் பெட்டி கண்ணில் பட அதை திறந்து பார்க்கையில் மேலாக இருந்த நா.பார்த்தசாரதியின் “பொன் விலங்கு” நாவலை கையில் எடுத்து புரட்டிக் கொண்டிருந்த போது அதனுள் இருந்து பழுப்பேறிய ஒரு கவர் வெளியில் விழுந்தது. என் தந்தையின் பெயருக்கு வந்திருந்த ஒரு பழைய கடிதம் அது. ஆவல் மேலிட அதை பிரித்து படிக்க தொடங்கினேன்.
பெயர் தெரியாத ஒரு பெண்ணிடம் இருந்து வந்திருந்த அந்த கடிதம் இப்படி தொடங்கியது.

“அன்பானவர்க்கு

உங்களை சந்திக்காத இந்த மூன்று மாதங்கள் ஏனோ முன்னூறு வருடங்களுக்கு உண்டான வருத்தங்களை தந்திருக்கிறது. என் வருத்தங்களின் நீட்சி உங்களுக்கும் ஏற்பட்டிற்கும் என்று நினைக்கிறேன். குட்டி கண்ணண் வயிற்றினுள் உதைக்க ஆரம்பித்திருக்கிறான். அவனின் ஒவ்வொரு உதையும் உங்களின் காலடிச்சத்தத்தை நினைவுபடுத்துவதுதான் இந்த பிரிவின் துயரத்தை சற்று தணிக்கிறது........” என்று நீண்ட அந்த கடிதத்தை படித்து முடித்த உடன் , வாழ்க்கையின் முழுவதும் பார்த்து பழகிய என் அம்மாவின் மெளனத்தின் அர்த்தம் புரிந்த மாதிரி இருந்தது.

20 ஜன., 2010

சிக்கன்

11

ஞாயிறு மத்தியானம் எனது சாப்ட்வேர் கம்பெனி சகாக்களுடன் கிரிக்கெட் ஆடி முடித்த களைப்பில் எனது ஹோண்டா சிட்டி காரை பார்க்கிங்கில் நிறுத்தி வீட்டுக்குள் நுழைகயில் வாப்பா நல்லா இருக்கியா , இன்னும் இந்த வெளயாட்டு புத்தி போகலியாக்கும் என்று குரல் வரவேற்ற பக்கத்தை பார்த்தால் ராஜெந்திரன் அங்கிள் ஒக்காந்து இருந்தார்.

ராஜெந்திரன் அங்கிள் அப்பாவின் சிரு வயது நண்பர். எங்க ஊரில் ஒரு சின்ன பிரிண்டிங் பிரஸ் வச்சுருந்தார். அவருக்கு சுபா என்று ஒரு பெண்ணும், சுகுந்தன் என்று ஒரு பையணும் உண்டு. எனது தந்தை ஒரு மத்திய வங்கியில் பனியில் இருந்ததால் வடமாநிலங்களின் பல ஊர்களில் எனது பள்ளி படிப்பு தொடர்ந்தது. அப்பொழுதெல்லாம் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போதெல்லாம் எனக்கு சுபாவும் சுகந்தனும்தான் விளையாட்டு தோழர்கள்.

அங்கிளிடம் எல்லாருடய சுகங்களயும் விசாரித்து விட்டு குளிக்க சென்றேன்.

 ஞாயிறு மத்தியானம் எனது வீட்டினில் ஸ்பெஷல் சமையலாக இருக்கும்.
அப்பாவிற்கு அன்றய தினம் ஒய்வாக வீட்டினில் இருப்பாரகையால் அன்று ஏதாவதொரு கறிக்குழம்பு இருக்கும். அப்பா வேலையில் இருந்து ஒய்வு பெற்று நாங்கள் சென்னை வந்தும் அந்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. குளித்து முடித்து விட்டு வெளிய வரவும் அம்மா சாப்பிட அழைக்கவும் சரியாக இருந்தது. டைனிங் டெபிளில் அப்பாவும் , அங்கிளும் உக்காந்து இருக்க நானும் உட்கார அம்மா பரிமாற ஆரம்பித்தார். டாக்டரை காரணம் காட்டி  அங்கிள் சிக்கன் குழம்பை வேண்டாம் என்றார். சாபிட்டு முடித்து சிரிது நேரம் எங்களுடன் பேசிவிட்டு அங்கிள் கிளம்பிச்சென்றார்.

அவர் சென்றவுடன் அன்றய வாரமலருடன் நான் என் அறைக்குள் சென்று அதை புரட்டி கொண்டிருக்கயில் பழைய சம்பவம் ஒன்று நினைவில் வந்தது. சிரு வயதில் ஒரு விடுமுறை முடிவினில்  தாத்தா வீட்டினில் இருந்து  ஊருக்கு திரும்பி கூட்டிச்செல்ல அப்பா வந்திருந்தார். கிளம்பும் முன்னர் நான் அப்பா அம்மா மூவரும் அங்கிளின் வீட்டிற்கு விடை பெற போயிருந்தோம். வீட்டினில் நுழைந்தவுடன் அம்மா அத்ட்தையுடன் பேச போய்விட்டார். நானும் அப்பாவும் முன்னறையில் அங்கிளுடன் பேசிக்கொண்டிருந்தொம். அப்பொழுது அங்கே எனது வயதொத்த சிறுவன் ஒருவன் வெளிறிய முகத்துடன் நின்று கொண்டிருந்தான். விசாரித்த
போது அவனது தந்தை பெயரயும், அவனது பள்ளி விருமுறைக்கு அவனை
பிரெஸ்லில் வேலைக்கு சேர்த்து விட்டுருப்பதயும் சொன்னார். அவனை பார்த போது அவன் சட்டையினுள் பூணூல் தெரிந்தது.

அன்றய தினம் அவனை பாய் கடைக்கு சிக்கன் கறி வாங்க பணம் கொடுத்து அனுப்பியகதாகவும், அவன் கொடுத்த பணத்தை தொலைத்து விட்டதாகவும்,
தான் அவனை அந்த பணத்தை அவனது தந்தையிடம் வாங்கி வர சொன்னதாகவும் , அவன் அதை மறுத்து அங்கேயே நின்று கொண்டிருப்பதயும் சொன்னார். என் தந்தை அவனை மன்னித்து விட சொன்னதற்கு , அவர் அதை
மருத்து , மன்னித்துவிட்டால் அவனுக்கு பொருப்பு வராது போய் விடும் என்று சொல்லி அவனை விரட்டவும் , அவன் அழுதுகொண்டே சென்ற்தும் என் நினைவில் வந்தது. சிரித்து கொண்டே தூங்கிப்போணென்.

18 ஜன., 2010

தோசை சுடுவது எப்படி

7

மல்லிகை டீவி தமிழ்நாட்டில் இன்றய தேதியில் மிக பாப்புலரான தொ(ல்)லைகாட்சி.தமிழ் பெண்கள் மிகவும் விரும்பும் “உஙக வீட்டு சமையல்” இன்னும் சிரிது நேரத்தில் ஒலிபரப்பாக போகிறது.நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் அரங்கத்தினுள் ஏற்பாடுகளை சரிபார்த்து விட்டு இன்று ”தோசை சுடுவது எப்படி ” என்று செயல் முறை விள்க்கம் கொடுக்க வந்திருந்த திருமதி ரமணியிடம்  நீங்க ரெடியா என்று கேட்க அவரும் தலையாட்டினார். உடனே ஒகே மகேஷ் நாம ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லிட்டு , பேஷ் டச்சப் முடிசிட்டு கேமாரா
முன்னாடி வந்து நிக்க  நிகழ்ச்சி ஆரம்பிச்சது.

”வன்கம் இப்ப உங்கொ மல்லி கை டீவில வீ ஆர் கோயிங் டு வாட்ச் உங்கலின் பெவரைட் போரொகிராம் உங்கு வுட்டு சம்யல்.இன்க்கு நம்ம ரம்னி மேடம் நம்ளுக்காக தோசை சுடுவது எப்படின்னு சென்ச்சு காட்ட போராங்க.  நம்ம இப்போ நிகழ்ச்சிக்கு போகலாம்”.

“ரம்னி மேடம் பர்ஸ்ட் நிங்க ஒங்கள பத்தி கொங்சம் சொல்லுங்க”.

“ஜ யம் ரமணி. நான் ஒரு ஹவுஸ் வைப். எங்க வீட்டுல நான், என்னோட ஹஸ்பெண்டு அப்புறம் எங்களோட ரெண்டு டாட்டர்ஸ்.
நாங்க பல்லாவரத்துல இருக்கோம். என்னோட பொழுதுபோக்கு வந்து விதவிதமா சமச்சு பார்கிரது, அப்புறம்..”

“ஓகே மேடம். இன்க்கு எந்த ஜட்டம் பன்னி காட்ட போறிங்க நிங்க”.

“நான் இப்போ தோசை சுடுவது எப்படின்னு பண்ணீ காட்ட போறேன். மொதல்ல கேஸ் ஸ்ட்வ் ஆன் பண்ணீக்கோங்க. அப்புறம் தோசை கல்ல அடுப்புல
தூக்கி வெச்சுட்டு கொஞ்சமா எண்னைய உத்திட்டு அப்படீயே தோசை கரண்டிய வெச்சு லைட்டா தேச்சு விட்டுக்கனும். அப்புறம் கல்லு ஹீட் ஆன உடனெ...”

“ மேடம் கல்லு ஹீட் ஆய்டுச்னு எப்படி கண்டுபிட்கிரது மேடம்”.

“ கொஞ்சமா தண்ணிய தெளிச்சா ஸ்னு சத்தம் வரும். அப்படி வந்துச்சுன்னா கல்லு ஹீட் ஆய்டுச்சுன்னு அர்த்தம். கல்லு ஹீட் ஆன உடனெ ஒரு ரெண்டு கரண்டி மாவு
எடுத்து கல்லுல ஊத்தி அப்படியெ நல்லா தேச்சு விடனும். கொஞ்ச நேரம் கலிச்சு இந்த ஒயிட் கலர் மாருன உடனெ , அப்படீயெ தோச கரண்டீய வெச்சு
திருப்பீ போட்டூ கொஞ்சம் ஆயில் வுத்தி நல்லா வேக விட்டு எடுக்கனும்.  தோசை எடுத்த உடனே மேல கொஞ்சமா இப்படி நெய் தடவீ , தேங்காய் அல்லது
தக்காளி சட்னியோ, இல்லென்னா மொளகா பொடிய கூட வெச்சு  பரிமாரினா ரொம்ப டேஸ்டா இருக்கும்”.

“தோச மாவு எப்டி பன்ரது மேடம்”.

“நாலு பங்கு இட்லி அரிசி, ஒரு பங்கு உளுத்தம் பருப்பு,ஒரு டேபிள் ஸ்புன் வெந்தயம் எடுத்துண்டு தணிதணியா ஊற வெச்சுக்கனும். ஓரு அன்சு மணி நேரம் களீச்சு
அரிசிய நல்லா வாஷ் பண்ணிட்டு க்ரைண்டர்லயொ , மிக்சிலயொ போட்டு நல்லா அரச்சுக்கனும். அப்புரம் உளுத்தம் பருப்பு,வெந்தயம் ரெண்டுத்தயும் ஒன்னா வாஷ்
பண்ணிட்டு, அரச்சுக்கனும். அரைக்கறெச்சே கொஞ்சம் பிரிட்ஜ் வாட்டர் விட்டாக்க குவாண்டிட்டி நெரய இருக்கும்”.

“ ஒங்க டைம் அ ஒதுக்கி நம்ம மல்லிகை டீவி முலமா  தோசை சுடுவது எப்படின்னு பன்னி காமிச்சதுக்கு ரொம்ப தேங்ஸ் மேடம். மீண்டும் அடுத்த வாரம் இதெ நேரத்தில் இன்னொரு பயனுள்ள சமயல் குரிப்போடு உங்களை சந்திக்கிறோம். அண்டில் ஒங்கிலிடம் இருந்து விடை பேர்வது உங்கல் தமில்அர்சி”.

11 ஜன., 2010

தீவிரவாதம்

9

இந்த திங்ககிழமை வந்தாலே சந்தோசம்தான்.. ஸ்கூல் கு போகலாம் .. பசங்க  கூட சேந்து விளையாடலாம்.. அனா இனிக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. ரேங்க் கார்டு ல அப்பா கிட்ட   இன்னிக்கு உள்ள கையெழுத்து வாங்கி குடுக்கணும்.. இல்லென டீச்சர் அடிப்பாங்க.. கணக்கு பரிச்சைல மார்க் கமியா வாங்கினதுனால அப்பா கிட்ட அடி வேற கிடைக்கும்.. இதல்லாம் யோசிச்சுகிட்டே குளிக்க போன்னேன்.

  "சனியனே இன்னும் குளிச்சு முடிகலையா .. எமுடு நேரம் ஆகுது.. சிக்கிரம் வந்து தொள" . அம்மாவோட சத்ததே கேட்ட உடனே , வெளில வந்து சாமி படம் முண்ணாடி நின்னு மனசுக்குள்ள  கடவுளே அப்பா அடிக்காம காப்பாத்துன்னு    வேண்டினா  சாமி என்னைய பார்த்து  சிரிகிது..

நியூஸ் பேப்பர் படிச்சுகிட்டு இருந்த அப்பா நிமிந்து பாத்து  "என்னடா ஸ்கூல் கு கிளம்பாம என்ன பண்ணறேன்னு கேக்கறப்ப ரேங்க் கார்டு எ எடுத்து நிட்டின உடனே என்னது இது ரேங்க் கார்டு எ , போயி பேனாவ எடுத்துட்டு வான்னு சொன்ன உடனே அப்பாடின்னு நினச்சுகிட்டே போய் பேனாவ எடுத்துட்டு வராதுகுள்ள ரேங்க் கார்டு எ பார்த்து முடிச்சிட்டு என்னைய பார்த்து முரசிக்கிட்டு கையெழுத்து போட்டுட்டு மண்டை ல நங்குன்னு ஒரு கொட்டு வெச்ச உடனே சொய்ங் நு காதுக்குள்ள ஒரே சவுண்ட்..

இன்னொரு கொட்டு வெக்க முண்ணாடி கண்ணுலேந்து தண்ணி வந்தத பார்த்துட்டு அடுத்த தடவ பாஸ் பன்னேலேனா வருத்த உப்பு மேள்ள முட்டி போடா வேசுருவேணு போய்ட்டாரு.. அம்மா சாப்ட குப்ட்ட உடனே போய் சாப்டுட்டு வரப்ப டிவி நியூஸ் ல பாகிஸ்தானில் தீவிரவாதி வெய்த்த குண்டு வெடித்து 100  பேர் பலின்னு நியூஸ் வந்துட்டு இருந்துச்சு.. அப்பா கிட்ட கேட்டேன் அப்பா "திவிரவாதம்னா என்ன" ?

4 ஜன., 2010

கடன்

4

மூணாம் தெரு சம்பந்தம் மாஸ்டர் சாக கிடகிராரம்.. ஊருக்கு போன் போட்டப்ப சங்கரன் சொன்னான்.. பாவம் மனுஷன் முணு பொம்பளை பிள்ளைகளையும் , ஒரு பையனையும் பெத்து வளத்தாலும் கடைசில யாரும் கூட இல்ல அவருக்கு.. என்ன பண்றது அவருக்கும் இத்தனை ரோசம் ஆகாது.. என்னோட சின்ன வயசுல அவர பார்கரப்ப எல்லாம் என்னோட டிரௌசெர் ஈரம்  ஆயிரும் .. என்னைய மொறச்சு பார்த்துகிட்டே அப்பா இருக்கார்னு கேக்கற போதே எனக்கு அழுகை வந்துரும்.. நல்ல உசரமா கருன்னு கருன்னு இருந்துகிட்டு , அந்த முட்டை கண்ணே  வெச்சுகிட்டு அவரு சாதரணமா பார்த்தாலே  மொறைக்கிற மாதிரிதான் இருக்கும்..  சாயங்கால டைம்ல எங்க அப்பாவ பாத்து பேசிட்டு பொடி மட்டை வாங்கி போட்டுட்டு போவாரு.

சம்பந்தம் மாஸ்டரும் அவரோட அம்மாவும்  சின்ன வயசுல ரங்கூன்ல  இருந்தாங்கலாம். அப்புறம் அங்க சண்டை வந்தப்ப இங்க அவங்க மாமா விடோட வந்துடாங்கலாம்.  சம்பந்தம் மாஸ்டர் மாமா அவர டீச்சர் ட்ரைனிங் படிக்க வெச்சு பக்கதுல இருக்கற ஏழாயிரம்பண்ணை நாடார் ஸ்கூல் ல வாத்தியார் வேலையும் வாங்கி தந்து ஒரே பொண்ணையும் கட்டி வெச்சாரம். மாஸ்டரோட சம்சாரம் எல்லாருகிட்டயும் ரொம்ப பாசமா இருப்பாங்களாம்.  மாஸ்டருக்கு பொறந்த பையன் ரொம்ப ஊதாரின்னு
சொல்லுவாங்க அப்பா .. படிப்பு செறியா வராம போனதால ஊர்ல இருக்கற வேலையத்த பசங்க கூட சேந்துகிட்டு அத இத பண்றேன்னு அளஞ்சாதள மாஸ்டர் விட்டுல இருந்த எல்லாம் காலி ஆனதுதான் மிச்சம்.. முத்த ரெண்டு பொண்ணுகளுக்கும் கல்யாணம் பந்ரதுகூல்ல  மாஸ்டரோட சம்சாரம் கழுத்துல இருந்த கொடிமணி வரைக்கும் எல்லாம் தொலஞ்சு போச்சாம்..  இதுக்கு நடுல பையன் வேற ஊர்ல இருந்த நாயகரோட பொண்ண இழுத்துட்டு ஓடி போக அதுல்ல வேற மாஸ்டர் ரொம்ப அசிங்க பட்டு போய்ட்டாரு.. பாவம் கடைசி பொண்ணுக்கு கல்யாணம் பண்ண முடியாம மாஸ்டரோட சம்சாரமும் கூட படுத்த படுக்கை ஆகி போய் சேந்துட்டாங்க.. இதனை அனாலும் மாஸ்டரோட கோப குணம் கொஞ்சம் கூட மாறேல்லேன்னு அப்பா சொலுவாங்க.. கடைசி தரம் நான் ஊருக்கு போயிருந்தப்ப கூட நான் பார்த்தப்ப டேய் பய நம்ம பயலும் பட்டணத்துல இக்கணம்.. பார்த்த இங்க வர சொல்லுனு சொன்னாப்ல.. அப்ப கூட அவர பார்த்து பயந்துட்டு பதில் சொல்லாம ஓடி வந்துட்டேன்..  இதுக்கு நடுல வேலை பார்த்த  விட்டுல அந்த பையனே மாஸ்டரோட கடைசி பொண்ண  கட்டிகிட்டாருன்னு  ஒரு கதை உண்டு .. பாவம் அதுவும் என்ன பண்ணும்.  அப்பாவுக்கு அப்புறம் வாழ்க்கைல ஒரு துணை வேணும்ல..   கடைசி வரைக்கும் மாஸ்டர் யாரு  கூடயும்   சேராம இருந்துடாருன்னு   சங்கரன் சொன்னாப்ல..