கடன்

மூணாம் தெரு சம்பந்தம் மாஸ்டர் சாக கிடகிராரம்.. ஊருக்கு போன் போட்டப்ப சங்கரன் சொன்னான்.. பாவம் மனுஷன் முணு பொம்பளை பிள்ளைகளையும் , ஒரு பையனையும் பெத்து வளத்தாலும் கடைசில யாரும் கூட இல்ல அவருக்கு.. என்ன பண்றது அவருக்கும் இத்தனை ரோசம் ஆகாது.. என்னோட சின்ன வயசுல அவர பார்கரப்ப எல்லாம் என்னோட டிரௌசெர் ஈரம்  ஆயிரும் .. என்னைய மொறச்சு பார்த்துகிட்டே அப்பா இருக்கார்னு கேக்கற போதே எனக்கு அழுகை வந்துரும்.. நல்ல உசரமா கருன்னு கருன்னு இருந்துகிட்டு , அந்த முட்டை கண்ணே  வெச்சுகிட்டு அவரு சாதரணமா பார்த்தாலே  மொறைக்கிற மாதிரிதான் இருக்கும்..  சாயங்கால டைம்ல எங்க அப்பாவ பாத்து பேசிட்டு பொடி மட்டை வாங்கி போட்டுட்டு போவாரு.

சம்பந்தம் மாஸ்டரும் அவரோட அம்மாவும்  சின்ன வயசுல ரங்கூன்ல  இருந்தாங்கலாம். அப்புறம் அங்க சண்டை வந்தப்ப இங்க அவங்க மாமா விடோட வந்துடாங்கலாம்.  சம்பந்தம் மாஸ்டர் மாமா அவர டீச்சர் ட்ரைனிங் படிக்க வெச்சு பக்கதுல இருக்கற ஏழாயிரம்பண்ணை நாடார் ஸ்கூல் ல வாத்தியார் வேலையும் வாங்கி தந்து ஒரே பொண்ணையும் கட்டி வெச்சாரம். மாஸ்டரோட சம்சாரம் எல்லாருகிட்டயும் ரொம்ப பாசமா இருப்பாங்களாம்.  மாஸ்டருக்கு பொறந்த பையன் ரொம்ப ஊதாரின்னு
சொல்லுவாங்க அப்பா .. படிப்பு செறியா வராம போனதால ஊர்ல இருக்கற வேலையத்த பசங்க கூட சேந்துகிட்டு அத இத பண்றேன்னு அளஞ்சாதள மாஸ்டர் விட்டுல இருந்த எல்லாம் காலி ஆனதுதான் மிச்சம்.. முத்த ரெண்டு பொண்ணுகளுக்கும் கல்யாணம் பந்ரதுகூல்ல  மாஸ்டரோட சம்சாரம் கழுத்துல இருந்த கொடிமணி வரைக்கும் எல்லாம் தொலஞ்சு போச்சாம்..  இதுக்கு நடுல பையன் வேற ஊர்ல இருந்த நாயகரோட பொண்ண இழுத்துட்டு ஓடி போக அதுல்ல வேற மாஸ்டர் ரொம்ப அசிங்க பட்டு போய்ட்டாரு.. பாவம் கடைசி பொண்ணுக்கு கல்யாணம் பண்ண முடியாம மாஸ்டரோட சம்சாரமும் கூட படுத்த படுக்கை ஆகி போய் சேந்துட்டாங்க.. இதனை அனாலும் மாஸ்டரோட கோப குணம் கொஞ்சம் கூட மாறேல்லேன்னு அப்பா சொலுவாங்க.. கடைசி தரம் நான் ஊருக்கு போயிருந்தப்ப கூட நான் பார்த்தப்ப டேய் பய நம்ம பயலும் பட்டணத்துல இக்கணம்.. பார்த்த இங்க வர சொல்லுனு சொன்னாப்ல.. அப்ப கூட அவர பார்த்து பயந்துட்டு பதில் சொல்லாம ஓடி வந்துட்டேன்..  இதுக்கு நடுல வேலை பார்த்த  விட்டுல அந்த பையனே மாஸ்டரோட கடைசி பொண்ண  கட்டிகிட்டாருன்னு  ஒரு கதை உண்டு .. பாவம் அதுவும் என்ன பண்ணும்.  அப்பாவுக்கு அப்புறம் வாழ்க்கைல ஒரு துணை வேணும்ல..   கடைசி வரைக்கும் மாஸ்டர் யாரு  கூடயும்   சேராம இருந்துடாருன்னு   சங்கரன் சொன்னாப்ல..

 

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

4 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. enna solla vareenga sir unga kathaila...

    பதிலளிநீக்கு
  2. nalla irukku , nalla kathai .. padichaale terror aguthu enakke moocha varuthu ponga

    பதிலளிநீக்கு
  3. //சாத்தூரில் பிறந்து, தவழ்ந்து, படித்து, விளையாடி மகிழ்ந்து இன்று வாழ்கையில் கொஞ்சம் உருப்பட வழிதேடி அமெரிக்க கரையோரம் தஞ்சம் புகுந்த பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவன் நான்//

    ஏன்டா நீ எல்லாம் இளைஞன் அப்படினா நாங்கெல்லாம் குழந்தைகளா!!! இன்னும் யூத் நு நினனைப்பா?

    ஓகே. சூப்பர் த கலக்குற.

    பதிலளிநீக்கு
  4. இப்பதான்.. ரெண்டாவது கதைக்கு வந்திருக்கேன்.

    எப்பவும் ஃபர்ஸ்ட் பர்ஸன் பார்வைதாங்களா??
    --

    இந்தக் கதையில் என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியலை. ஆனா நேடிவிடி நேரேஷன் நல்லாயிருக்கு.

    கதையில்.. எதையும் சொல்லனும்னு அவசியம் இல்லைன்னு எங்கயோ படிச்ச நினைவிருக்கு. இது அந்த கேட்டகரியோ??? :)

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்