தாமு

வீக் எண்டு முடிந்து வாரம் ஆரம்பித்திருக்கிறது இன்று.  காலையில் அவசரம் அவசரமாக குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு வந்தேன். சிரியல்ஸும் காப்பியும் ரெடியாக இருந்தது. என் சகதர்மினியிடம் இட்லி தோசை கேட்டால் நான்கு வருடத்திற்கு முன் டாக்டர் என் உடம்பின் வெயிட் கூடிப்போனதற்கு அப்போது பாலோ பண்ண சொன்ன  டயட்டை பற்றி ஒரு ஒரு மணி நேரம் கதாகாலட்சேபம் செய்ய ஆரம்பித்து விடுவாள். அதனால் காது வலிக்கு பயந்தே சீரியல்ஸே நலமாகி போனது எனக்கு.

சீரியல்ஸை சாப்பிட்டு கொண்டே டீவியை போட்டால் சி.என்.என்னனில் குட்டை பாவடை போட்டிருந்த ஒரு பாட்டியும் , கோட் சூட் போடு டை கட்டியிருந்த ஒரு தாத்தாவும் ஒபாமா வீட்டு நாயின் புகழ் பாடி கொண்டிருந்தனர்.

“ என்ன டீ.வீ. வேண்டி கிடக்கு. மானிங் 8.30 ஆச்சு ஆபிசுக்கு கிளம்ப வேணாம்மா” இடி மாதிரி வந்து இறங்கியது என் சகதர்மினியின் குரல்.

குட்டை பாவடையை ஆப் செய்து விட்டு நகர்ந்தேன். சாக்சை மாட்டுகையில் “ ஜன கன மன” ஒலிக்க சாக்சை மாட்டுவதை நிப்பாட்டி விட்டு அப்படியே அட்டென்சனுக்கு மாறினேன். ஒலித்தது என் செல்போன் ரிங்டோன்தான். அமெரிக்கா வந்தாலும் ஒரு தேசப்பற்றுதான். செல்போனை எடுத்தால் “நட்டு காலிங்” என்று வந்தது.

நட்டு = நடேசன் என் நண்பன் நியுயார்க்கில் இருந்து கால் பண்ணிணான். 

“ சொல்றா நட்டு” என்றேன்.

“ டேய் மாமா. உனக்கு ஒரு ஹாப்பி நியுஸ், ஒரு சாடு நியுஸ். எத முதல்ல சொல்லட்டும்” என்றான் சந்தோஷம் கலந்த குரலில்.

“ என்ன இந்தியா போறியா. உன்னய வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா” என்றேன்.

உங்களிடம் சொல்ல முடியாத ஒரு கெட்ட வார்த்தை அவனிடம் இருந்து வந்தது. போனை டெட்டால் ஊற்றி கழுவ முடியாதே என்ன செய்ய ?. 

“ தாமு யூ.எஸ் வந்திருக்கான். இது ஹாப்பி நியுஸ். அவன் உன்னைய பார்கனும்னு சொன்னான் இது ஹாப்பியா என்னன்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்றான்.

இதற்குள் என் கார் நிறுத்தி இருந்த பார்க்கிங் லாட்டுக்கு வந்திருந்தேன்.


காரில் சாவியை சொருகி காரை ஸ்டார்ட் செய்யும் போதா நட்டுவின் வாயினில் இருந்து வந்த அந்த வார்த்தைகளை என் செல் போன் என் காதில் துப்ப வேண்டும். ஏதோ பூகம்பம் வந்த மாதிரி என் காரே நடுங்கி போனது. நல்ல வேலை பூகம்பம் இல்லை. தாமு என்ற பெயரை கேட்டதில் என் கார் சற்றே நடுங்கி போயிருந்தது. சற்றே வயதான கார் அது.

“ ஏண்டா மாப்பிளை நீ இங்க வந்துட்டுபோனப்ப கூட உனக்கு சிவாஸ் ரீகல்லாம் வாங்கி தந்து நல்லாதானடா கவனிச்சேன். நீ ஏண்டா இப்படி பண்றே” என்றேன் கலக்கமாக.

“ நான் என்னடா பண்ண. அவன் தான் உன்னோட போன் நம்பர் கேட்டான். கொடுத்திருக்கேன். பேசுவான். பேசிக்கோ” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

விதி வலியது என்று மனசில் நினைத்துகொண்டு காரை ஸ்டார்ட் செய்தேன். ஒரு வலியாக ஆபிஸ் வந்தாயிற்று. ஆபிஸில் நுழைந்து சேரில் உட்கார்ந்து சிறிது நேரம் வேலை ஒடியிருக்கும். திரும்பியும் என் போன் நம் நேஷனல் ஆந்தந்தை பாட ஆரம்பித்தது. எடுத்து பார்த்தால் “ அன்நோன் நம்பர்” என்று வந்தது.

கால் அட்டென்ட் செய்து “ ஹலோ” என்றேன்.

“ ஹாய். கான் ஐ ஸ்பிக் டு சந்துரு” என்றது எதிர்பக்கம்.

“ எஸ். மே ஐ நோ ஹூ இஸ் திஸ்” என்றேன்.

“ டேய் நண்பா. நான் தாண்டா தாமு பேசறேன்” என்றதில் ஆரம்பித்த பேச்சு சில மணி நேரங்கள் நீடித்தது.

“ உங்கிட்ட பேசுனது ரொம்ப சந்தோசம்டா. உன்னைய பார்கனும்டா. நான் சனிக்கிழமை வரேண்டா அங்க” என்று முடித்தான் அல்லது முடிவெடுத்தான்.என் மெள்னம் அவனுக்கு சம்மதமானது.


ஆபிஸ் முடிந்து வீடு திரும்பியதும் , ரெப்ரேஸ் பண்ணிக்கொண்டு வெளியே வந்த ஹாலில் அமர்ந்து டீ.வியை ஆன் செய்தவுடன்

“ என்ன ஜிம்க்குக்கு போகலியா” என்ற என்னவளிடம்

“ இல்லை இண்டியன் ஸ்டோர் போனும்” என்றேன்.

“ நான் எதுவும் வாங்கனும்னு சொல்லலியே” என்றாள்.

“ இல்லம்மா. சனிக்கிழமை பிரண்டு வரேன்னு சொல்லிருக்கான். ஏதானும் ஸ்நாக்ஸ் வாங்கலான்னு” என்று இளுத்தவனிடம்

“ எனக்கு தெரியாம யார் அது பிரண்டு” என்று ஆரம்பித்தவளிடம் நான் சொன்னது பின்வருமாறு.

தாமு சுருக்கமாக தாமோதரன் எங்கள் ஜமாவின் செண்டர் ஆப் அட்ராக்‌ஷன் சிறு வயதில்.  எங்கள் ஊரில் இருந்த மீனாச்சி பஸ் சர்விஸ் ஒனர் நல்லமசாமி நாயுடுவின் ஒரே புத்திரன். இது வரையில் மட்டும் தான மனைவியிடம் சொன்னது. இனிமேல் ஒங்களுக்காக.

அவனுக்கு அம்மா கிடையாது. அவனது சிறு வயதிலேயே இறந்திருந்தார்கள். தாயில்லாத பிள்ளையாகி போனதால் அவனுக்கு எங்கு போனாலும் செல்லம்தான். யாரும் திட்டி வள்ர்காததினால் அவனது உடம்பு ஏகபோகத்திற்க்கு வளர்ந்திருந்தது. ஒரு முறை ஆத்திரத்தில் என் மீது அவன் கை பட்டதில் என் தோள் பட்டை சற்று இரங்கிப்போய் வெங்கடாசலபுரம் நாயக்கர் ( இவர்தான் எங்கள் ஊரில் எலும்பு மருத்துவர்) போய் சரி செய்ய வேண்டியதாய் போனது.

எங்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கும், இன்ன பிற விசயங்களுக்கும் அவனை நம்பி இருக்கவேண்டியிருந்த்தால் அவனை எதிர்த்து எங்களால் ஒன்றும் செய்ய முடியாததாயிருந்தது. அவனின் பராக்கிரமங்களை சொல்வதென்றால் எவ்வளவ்வோ விசயங்களை சொல்லி கொண்டு போகலாம். ஆனால் ஒரு பானை சோற்றிற்கு ஒரு பருக்கை போதும் பதம் பார்பதற்கு. இருந்தாலும் நான் இரண்டாகவே சொல்கிறேன்.

முதல் சம்பவத்தில் பாதிக்கபட்டது என் அக்காவும் மாமவும். அப்போதுதான் திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு வந்திருந்தார்கள் அக்காவும் மாமாவும். மாமவிற்காக சில பறப்பனவும், நடப்பனவும் எங்கள் வீட்டு சமையலறையில் சமாதியாயிருந்தது. என் அம்மாவின் சமையல் மணத்தை எங்கிருந்தோ உணர்ந்த தாமு வாயு வேகம் மனோ வேகத்தில் அவனது வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்து விட்டான். யானை புகுந்த கரும்பு தோட்டம் மாதிரி ஆகிப்போனது எங்கள் வீடு.  நல்லி எலும்பு கூட தனக்கு மிஞ்சாத சோகத்தில் என் மாமா அந்த வருட தலை தீபாவளிக்கு கூட எங்கள் வீட்டு பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.

இரண்டாவது சம்பவம் நடந்தது எங்கள் கூட்டத்தில் இருந்த நண்பனுக்கு. எப்படியோ காதலில் அவன் அப்போதுதான் செட்டில் ஆயிருந்தான். வழக்கமாக
நாங்கள் கூடுமிடத்தில் அவன் மட்டும் மறைவாக் நின்று கொண்டு ஏதோ ஒரு அயிட்டத்தை திண்று கொண்டிருந்தான் என்று கேள்வி. இதை எப்படியோ உணர்ந்த தாமு அங்கே வந்து விட்டான். வந்த வுடன் நண்பனிடத்தில் இருந்த பாத்திரத்தை பிடிங்கி அந்த அயிட்டத்தில் இருந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டான். போட்ட மாத்திரத்தில் துப்பியும் விட்டான். துப்பியவன் சும்மாயில்லாமல் “ எங்கடா வாங்கின , ரங்கன்னா கடையிலயா” என கேக்க நணபனும் ஒன்றும் சொல்ல முடியாமல் தலையாட்டி தொலைய “ ஏண்டா. அவன் கிட்ட போய் வாங்கின. அவன் எப்பவுமே ஊசி போனதான்ன விப்பான்” என் சொல்ல நண்பணின் காதல் அம்பேல். ஏன் என்றால் மறைவில் நின்று கொண்டிருந்தது ரங்கனின் தங்கையான நண்பணின் காதலி.

ஒரு வலியாக இந்தியன் ஸ்டோர் போய் ஸநாக்ஸ் வாங்கி , வால்மார்ட் போய் சிக்கனும், மட்டனும் வாங்கி வந்து பிரிட்ஜில் அடுக்கியாயிற்று. அடுத்து வந்த நான்கு நாட்களும் ச்டாரேன காணாமல் போனது.  சனிக்கிழமை காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து விட்டு கந்த சஸ்டி கவசம் சொன்னவனை என் மனைவி முறைத்த முறைப்பு “ இவன் எப்போதிருந்து பைத்தியம் ஆனான்” என்று பார்த்த மாதிரி இருந்தது.

ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்தி காலை உணவுக்கு சிக்கன் குழம்பும் , இட்லியும் பண்ண சொல்லி விட்டு ஏர்போட்டுக்கு ஒடினேன். காரை பார்க்கிங்கில் போட்டு விட்டு, டெர்மினலி வெயிட் செய்து கொண்டிருந்தேன். திடிரெண்று தோளில் ஒரு கை வில யாரன்று திரும்பி பார்த்தால் கொஞ்சம் ஒல்லியாக ஒருவன் நின்று கொண்டிருந்தான். 

“ எஸ்” என்றேன். “ டேய் . சந்துரு நான் தாமுடா” என்றவனை அதிசயமாக பார்த்தேன். சிறு வயதில் பக்கோடா காதர் மாதிரி இருந்தவன் இப்போது வையாபுரி மாதிரி ஆகியிருந்தான். காரில் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். சிறிது நேரம் கழித்து சாப்பிட உட்கார்ந்தோம். என் மனைவி இட்லியும் , சிக்கன் குழம்பும் கொண்டு வர 

“ஐயோ இதல்லாம் வேண்டாம்மா. எனக்கு ஒட்ஸ் இருந்ததுன்னா, கஞ்சி போட்டு குடுத்துரும்மா. மத்தியான சாப்படுக்கு கூட தயிர் சாதம் இருந்தா போதும் ” என்று சொன்னான். அவன் சொன்னதை கேட்டு என்னவள் என்னை காதலுடன் பார்க்க என்னயறியாமல் என் வாய் 

 “ காக்க காக்க
    கனகவேல் காக்க
   நோக்க நோக்க
   நொடியினில் நோக்க”
கந்த சஷ்டி கவசத்தை பாட ஆரம்பித்திருந்தது.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

18 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. நான்கு வருடத்திற்கு முன் டாக்டர் என் உடம்பின் வெயிட் கூடிப்போனதற்கு அப்போது பாலோ பண்ண சொன்ன டயட்டை பற்றி ஒரு ஒரு மணி நேரம் கதாகாலட்சேபம் செய்ய ஆரம்பித்து விடுவாள். அதனால் காது வலிக்கு பயந்தே சீரியல்ஸே நலமாகி போனது எனக்கு.

    ..... ha,ha,ha,ha,ha,.... ஜாலி மூட்ல இடுகை எழுதி இருக்கீங்க... செம காமெடி.

    பதிலளிநீக்கு
  2. வால்மார்ட் போய் சிக்கனும், மட்டனும் வாங்கி வந்து பிரிட்ஜில் அடுக்கியாயிற்று. ..... :-)

    பதிலளிநீக்கு
  3. கதை ரொம்ப நல்லாருக்கு.. விறுவிறுப்பாக செல்கிறது.

    பதிலளிநீக்கு
  4. ஒரு வலியாக அவளை சமாதானப்படுத்தி காலை உணவுக்கு சிக்கன் குழம்பும் , இட்லியும் பண்ண சொல்லி விட்டு ஏர்போட்க்கு ஒடினேன்.

    .... konjoondu spelling mistake. :-)

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப தான் கஷ்டபடுத்தி இருக்கார் தாமு...

    பதிலளிநீக்கு
  6. கதையை விறுவிறு வென கொண்டுபோய் மிகச்சரியாக முடித்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்..
    உங்கள் அமெரிக்கா அனுபவங்களை தொடராக எழுதுங்கள் ...

    பதிலளிநீக்கு
  7. //ஒரு வலியாக அவளை சமாதானப்படுத்தி //

    spelling mistakelam illa sariyaathan irukku

    பதிலளிநீக்கு
  8. \\“ காக்க காக்க
    கனகவேல் காக்க
    நோக்க நோக்க
    நொடியினில் நோக்க”
    கந்த சஷ்டி கவசத்தை பாட ஆரம்பித்திருந்தது.\\
    இது நல்லாயிருக்கே..!

    பதிலளிநீக்கு
  9. நன்றி
    @ சித்ரா
    @ ஸ்டார்ஜன்(அடிக்கடி வாங்க நண்பா)
    @ வானம்பாடிகள்
    @ ராசராசசோழன்
    @ கே.ஆர்.பி.செந்தில்
    @ ரமேஷ்
    @ எல்.கே( மொதல்ல இருந்ததுங்க. அப்புறம் திருத்திட்டேன்)
    @ அம்பிகா

    பதிலளிநீக்கு
  10. //காக்க காக்க
    கனகவேல் காக்க
    நோக்க நோக்க
    நொடியினில் நோக்க”
    கந்த சஷ்டி கவசத்தை பாட ஆரம்பித்திருந்தது//.

    ஜூப்பரு.:-)))))

    பதிலளிநீக்கு
  11. //காக்க காக்க
    கனகவேல் காக்க
    நோக்க நோக்க
    நொடியினில் நோக்க”
    கந்த சஷ்டி கவசத்தை பாட ஆரம்பித்திருந்தது//.

    இறுதியில் மிகவும் அழகாக அர்த்தம் சொல்லும் பாடல் அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. அமெரிக்கா வாழ்க்கையை ஹாஸ்யம் கலந்து அழகாக விவரித்திருக்கிறீர்கள்...அருமை

    பதிலளிநீக்கு
  13. இடி மாதிரி வந்து இறங்கியது என் சகதர்மினியின் குரல்.


    அங்கேயுமா......?

    ஐயோ இதல்லாம் வேண்டாம்மா. எனக்கு ஒட்ஸ் இருந்ததுன்னா, கஞ்சி போட்டு குடுத்துரும்மா. மத்தியான சாப்படுக்கு கூட தயிர் சாதம் இருந்தா போதும் ” என்று சொன்னான். அவன் சொன்னதை கேட்டு //என்னவள் என்னை காதலுடன் பார்க்க என்னயறியாமல் என் வாய் //

    தம்பி கவுந்துட்டியே....சரி விடு... நம்ம பரம்பர பழக்கம்தானா....! சூப்பர கொண்டுவந்து முடிச்சிறுக்கப்பா...வாழ்த்துக்கள்! நிறைய எழுதுப்பா..!

    பதிலளிநீக்கு
  14. நல்லாருக்கு நண்பா,நல்லா சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  15. அடப் பாவமே.. அதனால்தான் முன்னால மனுஷன் வெளுத்துக் கட்டியிருக்கார்..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்