அவன் இவன் அவர்

அவன் நீண்ட நேரமாக நடந்து கொண்டிருக்கிறான். அவனது குழப்பமான தெளிவற்ற மனநிலையை அவனது நடை பிரதிபலித்துக்கொண்டிருந்தது.எதிரில் வந்த ஒரு மோட்டார் பைக் காரணும் , சில பாதசாரிகளும் கூட அவனை திட்டி விட்டு விலகிச்சென்றனர். ஒரு நாயும் கூட அவன் மேல் மோதப்பார்த்து , அதன் மொழியில் அவனை குறைத்து விட்டு விலகி ஒடியது. இந்த செயல் எதுவும் அவன் புத்தியில் உரைக்க வில்லை. அவன் அவனது நடையை தொடர்ந்துகொண்டிருந்தான். அவனது இந்த மனநிலைக்கு காரணம் அவன் அன்று பூங்காவில் சந்தித்த அந்த மனிதர்தான். அவன் ஒரு இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவன். நீண்ட தொலைவில் இருந்த ஒரு சின்ன கிராமத்தில் இருந்து அவன் இந்த நகரத்தில் இருந்த கல்லூரியில் படிக்க வந்திருந்தான். மிகுந்த பொருளாதார சிக்கலினூடையே அவனது தந்தை கடன் வாங்கி அவனை படிக்க அனுப்பியிருந்தார். சிறிது காலமாக அவன் தந்தை நோய்வாய் பட்டு வேலைக்கு போக முடியாமல் வீட்டோடு இருந்த படியால் அவனுக்கு பணம் அனுப்ப முடியாமல் இருந்தார். அதனால் அவன் பரிட்சைக்கு பணம் கட்ட முடியாமல் தடுமாறினான். சின்ன வேலைகள் கூட அவனை நம்பி யாரும் கொடுக்காததால் மனம் வெறுத்து போய் இருந்த அவன் அன்று அவரை பூங்காவில் சந்திக்க நேர்ந்தது. அடுத்து என்ன செய்வது என்ற யோசனயில் ஒட்கார்ந்து இருந்த அவனுக்கு அவரின் பேச்சும் கனிவான தோற்றமும் ஆறுதல் அளித்தது. ஆனாலும் அடுத்தடுத்த சந்திப்பினில் அவரது பேச்சு அவனுக்கு நம்பிக்கையையும், நல்ல தெளிவையும் ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இன்று அவர் அவனிடம் தான் அவனுக்கு உதவ முடியும் எனவும் , ஆனால் அவன் அதற்கு உபகாரமாக ஒரு காரியம் செய்ய வேண்டும் என்றும் சொன்னார். அதை கேட்டு குழப்பமுற்ற அவனிடம் தான் அவனை கட்டாய படுத்தவில்லை எனவும் ஒரு இரண்டு , மூன்று நாட்கள் யோசித்து அவரிடம் அவனது முடிவை தெரிவிக்கும்படியும் சொன்னார்.

குழம்பிய மனநிலையில் வீட்டிற்கு திரும்புகையில் அவன் இவனை பார்த்தான்.அவன் நகரத்துக்கு வந்து சம்பாதித்த ஒரே ஒரு நண்பண் இவன் மட்டும்தான்.தாய் இல்லாமல் , குடிகார தந்தையின் கவனிப்பும் கிடைக்காமல் வளர்ந்திருந்தான். சின்ன சின்ன திருட்டுக்கள் நடத்தி பலமுறை சிறைக்கு போய் வந்திருந்தான். அவன் இவனிடம் மனக்குழப்பத்தை சொல்ல இவன் அவர் சொன்ன காரியத்தை செய்து முடித்தால் கிடைக்க போகும் லாபத்தை பத்தி யோசனை செய்ய ஆரம்பித்தான். முடிவினில் தான் அவனுடன் வருவதாகவும் இருவரும் அவரிடம் சென்று பேசலாம் என்றும் சொல்ல இருவரும் உணவறிந்து விட்டு உறங்கச்சென்றனர்.

அடுத்த நாள் இருவரும் சென்று அந்த மனிதரை இருவரும் சந்தித்தனர். அவன் இவனை அறிமுகப்படுத்தி, அவர் சொல்கிற காரியத்தை அவன் செய்ய சம்மதம் எனவும், அவர் தவறாக எடுத்துக்கொள்ளாவிட்டால் இவனையும் கூட சேர்த்துக் கொள்கிறென் என்றும் சொன்னான். சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் சம்மதம் எனவும் , ஒரு இடத்தை சொல்லி அங்கே வந்து விடும் படி சொன்னார். உடனே இவன் காரியத்தை முடித்தால் அவர் என்ன தருவார் எனக் கேட்க அதற்கு அவர் சிரித்துக்கொண்டே எல்லாம் நல்ல படியாக முடிந்தால் ஒரு பெரிய தொகயை தருவதாகவும் சொன்னார். அடுத்த நாள் அவர் சொன்ன இடத்திற்கு இருவரும் சென்றனர். அந்த இடத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடக்க ஆயத்தமாயிருந்தது. அவரும் சரியாக அதே நேரம் அங்கே வந்து சேர்ந்தார். அவர் கையில் ஒரு மாலை இருந்தது. வரும் தலைவர் அவரின் விருப்பமானவர் எனவும் , அவர் வந்த உடனே இந்த மாலையை அவருக்கு அனிவித்து விட்டு வேறு இடத்திற்கு போகலாம் எனவும் சொல்ல இருவரும் சம்மதம் என்றனர். கொஞ்ச நேரம் களித்து தான் போய் சிறுநீர் களித்து விட்டு வந்து விடுவதாகவும் , வரும் வரை மாலையை வைத்துக் கொண்டிருக்கும் படியும் சொல்லி விட்டுச்சென்றார்.

தலைவர் அந்த நேரத்தில் வர அவரை பார்க்க கூட்டம் முண்டியடித்து ஒடியது.அதைப்பார்த்த இருவரும் ஆவல் மிகுதியில் கூட்டத்துடன் இருவரும் சேர்ந்து
ஒடினர். கூட்ட நெரிசலில் தீடிர் என ஒரு பெரும் சத்தம் கேட்க , மீதி சனங்கள் சிதறி ஒடினர். போலிசாரும் சுறுசுறுப்பாக தலைவரை அந்த இடத்தில் இருந்து அழைத்துச்சென்றனர். அடுத்த நாள் நாளேடுகளில் அந்த செய்தி முதல் பக்கத்தில் இடம் பிடித்திருந்தது. ”தலைவர் பேச இருந்த கூட்டத்தில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.20 பேர் இறந்தனர்., இது ஒரு தீவிரவாத சதியாக இருக்காலாம் என போலிஸார் சந்தேகம்.”.

டிஸ்கி

இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

11 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. @ சித்ரா
    நன்றி சித்ரா.

    @ அண்ணாமலையான்

    நன்றி அண்ணாமலையான்

    பதிலளிநீக்கு
  2. gud ones ram. keep writing!

    you can reach me at:

    http://encounter-ekambaram-ips.blogspot.com/

    happy blogging

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதை. நாட்டு நடப்பை பிட்டு வைத்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  4. நன்றாக உள்ளது..

    தொடர்ந்து எழுதுங்கள்.. உங்கள் ப்ளாக் டிசைனும் அருமை..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள் ..

    தேவரஜ் விட்டலன்

    http://vittalankavithaigal.blogspot.com/

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்