2 பிப்., 2010

பயாஸ்கோப் - A Soldiers Story(1984)

8

பயாஸ்கோப்

இந்த பகுதியில் நான் பார்த்த , என்னை பாதித்த படங்களை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். இவை எதுவும் கண்டிப்பாக விமர்சனம் அல்ல. ஒரு திரைப்பட ரசிகனாக நான் ரசித்த படங்களை பற்றிய எனது சிறு குறிப்புக்கள் மட்டுமே. இனி...

A Soldiers story(1984)

நான் பிறந்த நாலவது வருடதில் வந்த இந்தப் படத்தை நேற்றுதான் நான் பார்க்க நேரிட்டது. இரண்டாவது உலகப் போரில் ஹிட்லரின் நாசிப்படைகளை எதிர்த்து போர் செய்த அமெரிக்க படையினர் தங்கியிருந்த கேம்ப்பில் நடந்த ஒரு கொலையையும் அதன் விசாரணையையும் பற்றிய படம் இது. அந்த சமயத்தில் (1944) அமெரிக்காவில் இருந்த உச்சகட்ட நிறவெறியை பிரதிபலித்த படம் இது. ஆர்மி கேம்ப்பில் ஒரு கருப்பின் ஷார்ஜெண்ட்(வாட்டர்ஸ்) கொல்லப்பட அதை விசாரிக்க வரும் இன்னொரு கருப்பின ஆபிசர்(டேவன்போர்ட்) வெள்ளையின அதிகாரிகளால் சந்திக்கும் சவால்களும் , அதை சவால்களை எதிர்த்து நின்று அவர் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதும்தான் படமே.
அந்த ஆபிசர் அந்த ஆர்மி கேம்ப் இருக்கும் இடதிற்கு பஸ்ஸினில் வந்து இறங்குவதிலிருந்து அவரது ஒவ்வொரு செயளும் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். டேவன்போர்ட்டாக நடித்த Howard E. Rollins Jr. மற்றும் கொலை செய்யப்ப்டும் ஷார்ஜெண்ட் வாட்டர்ஸாக நடித்திருக்கும் Adolph Caesar உம் அந்த கேரக்டர்களாவெ வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் Adolph Caesarன் குரலும் நடிப்பும் ந்ம்முர் எம்.ஆர்.ராதாவை கண்ணில் நிறுத்தியது. இவர்களை தவிர படதில் சிறு வேடங்களில் நடித்திருக்கும் எல்லாரும் மிக நன்றாக நடித்தருப்பார்கள். Denzel Washington கூட ஒரு சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார்.

படம் முழுவதும் என்னை கவர்ந்தாளும் நான் ரசித்த இடங்கள் இரண்டு. கறுப்பின ஆபிசர்(டேவன்போர்ட்) இரண்டு வெள்ளையின சிப்பாய்களை விசாரிக்க , வெள்ளையின அதிகாரியால் அனுமதி அளிக்கப்பட்ட உடன் வெளியே வந்து தரும் எக்ஸ்பிரஸன் அலாதியானது. படத்தின் முடிவில் வெள்ளையின அதிகாரிகளால் போரினில் சண்டையிட சான்ஸ் தரப்பட , அதை கறுப்பின போர் வீரர்கள் கொண்டாடும் இடம். மொத்தத்தில் ஒரு அருமையான ப்ரியட் மூவி இது.

டிஸ்கி

சினிமாவை பற்றிய எனது முதல் பதிவாகவிருப்பதால் இத்தொடு முடிக்கிறேன். இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க.

8 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.