நான் விக்னேஷ். அவள் பெயர் லாவண்யா. எனக்கு அவகிட்ட ஒரு வேலை இருக்கு. ஆகா இதான வேண்டாங்கிறது. இந்த நித்தி வீடியோவல்லாம் பாத்து ரொம்ப கெட்டு போயிருக்கீங்க நீங்க. ஒரு இளைஞன் ஒரு இளைஞி கிட்ட ஒரு வேலை இருக்குன்னு சொன்னாக்க உடனே அது ஒன்னுதானா ? என்னோட விசயம் தெய்வீக காதல். பீயார். பிரேமம். சார் ? நீல்லுங்க எஙக போறீங்க. என்னாது பேச்ச் குறைச்சுகவா ? ஒ.கே சார் . ஆனா சார் எனக்கு ஒரு ஹெல்ப வேணும் ஒங்க கிட்ட இருந்து. சார் சார் பய்ப்படாதீங்க சார் விவகாரமால்லாம் ஒன்னும் கேட்டுட மாட்டேன். ஒரு பொண்ணு கிட்ட லவ் லெட்டர் எப்படி கொடுக்கிறது சார் ? சார் என்ன சொல்றீங்க ? சார். சார் பீளிஸ் நோ பேட் வேட்ஸ். ஏன் சார் கோச்சுகீறிங்க ?
இதல்லாம் கேக்குறானே சரியான கேணயா இருப்பானோன்னு நினைக்கிறீங்க. கரக்டா ? என்ன பண்றது சார் என்னோட நெலமை அப்படி. இப்படித்தான் நான் முதல்ல ஒரு பொண்ண லவ் பண்ணிணேன். அப்ப நான் கொஞ்சம் ஒல்லியா விசால் மாதிரி இருப்பேன். ஆனா கூட இருக்கற பசங்க எல்லாம் என்னவோ நான் ஷாருக்கான் மாதிரி இருக்கேன்னு சொல்வாங்க. பாவீங்க படு பாவிங்க ஒரு டீக்கும் ஒசி சிகரெட்டுக்கும் ஆசப்பட்டு என்னோட வாழ்க்கைய பொலி போட தெரிஞ்சானுங்க. பின்ன என்ன சார் வந்தோமா தம்ம போட்டோமா டீய குடிச்சோமான்னு போயிருக்கலாம்.? ஆனா என்ன் ஏத்து விட்டு ஒரு பொண்ணு பின்னாடி நாயா பேயா அலைய விட்டுடாங்க. அவ பேரு வித்யா சார். நாங்க வளக்க்கமா குடிக்கிற டீ கடை பக்கத்துல இருக்கற கம்பூயூட்டர் சென்டர்ல படிக்கிறதுக்கு வருவா. நான் கொஞ்சம் நல்லாவே பாடுவேன் பாத்துகங்க. அப்படித்தான் அன்னிக்கு ஒரு நாள் தங்கமகன்ல ரஜினி பாடுவாருல்ல ராத்திரியில் பூத்திருக்கு தாமரைதான் வண்டோன்னு அந்த பாட்ட பாடுக்கிட்டு இருக்கறப்ப அவ கடைய கிராஸ் பண்னியிருக்கா. அத நான் கவனிக்கல ஆனா இந்த பசங்க சும்மா இல்லாம ஏத்தி விட்டுடாங்க. அவ என்னவோ என்னய திரும்பி பாத்து சிரிச்சிட்டு போனதா.
மொதல்ல நான் அத நம்பல. ஆனா அடுத்த நாள் அவ கிராஸ் பண்றப்ப என்னய பாத்து சிரிக்கற மாதிரி இருந்துச்சு. அதுலேந்து நம்ம வாழ்கையே மாரி போச்சு. அவ வர டயத்துக்கு என்ன வேலை இருந்தாலும் கரக்டா கடைக்கு முன்னாடி வந்து நின்னுறுவேன். இப்படியெ போய்டு இருக்கறப்ப பசங்க எத்தன நாளைக்குதான் பார்த்துகிட்டே இருப்ப. போயி பேசுடானானுங்க. வாழ்க்கைல விதி அப்பத்தான் விளையாட ஆரம்பிச்சு எனக்கு. அடுத்த நாள் அவ நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு , கைல ஒரு ரோஸ்ஸ வச்சுகிட்டு கடைக்கு போனாக்கா கம்ப்யூட்டர் சென்டர்க்கு முன்னாடி ஒரே பரபரப்பா இருந்த்துச்சு. என்னான்னு விசாரிச்சா வித்யாகிட்ட அங்க வேலை பாக்கிற ஒருத்தன் லவ் லெட்டர் கொடுத்துடான்னு அவ வீட்டுல சொல்ல அவ அண்ணனுங்க , அப்பா எல்லாரும் வந்து கம்ப்யூட்டர் சென்டர்ர அடிச்சு நொறுக்கீட்டு அவனயும் அடிச்சு போட்டுட்டு சொன்னாங்க. இது தெரிஞ்ச உடனே நம்ம பிளான் டிராப் ஆய்டுச்சு. பின்ன என்ன பன்றது காதலுக்காக அடி வாங்க ஷாருக்கான இருக்கறத விட காதலிக்காம விசால்லாவ இருந்துட்டு போய்டலான்னு அப்ப முடிவு பண்ணினேன் சார். இருந்தாலும் கட்டிக்க போற பொண்ணுக்காது கல்யாணத்துக்கு முன்னாடி லவ் லெட்டர் கொடுக்கலான்னு பார்த்தா இந்த் லாவண்யா வேற என்ன கண்டாலே தெரிச்சு ஒடுறா சார்.
சார். சார். ஓடாதீங்க சார். ச். போய்டீங்களா ? சார் நீங்களாவுது சொல்லுங்க ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் எப்படி கொடுக்கிறது ?
டிஸ்கி
இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க
Tags:
கதை
தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க.
பதிலளிநீக்கு........சார், சார், இந்த தமிழிஷ், தமிழ்மணத்தில ஓட்டு எப்படி போடுறது? சார், சார், எங்கே ஓடுறீங்க........
அவங்க கிட்ட போய் நான் உன்னை காதலிக்கல, அப்படின்னு சொல்லிட்டு ஓடி
பதிலளிநீக்குவந்திருங்க..........ஹி........ஹி......
கைவசம் நிறைய ஐடியாஸ் இருக்கு .ஆனா கன்சல்டன்சி பீஸ் உண்டு .
பதிலளிநீக்குஓடுங்க ஓடுங்க நல்லது தான் ஹெல்த்க்கு :))
இன்னுமா லவ் லெட்டர் எல்லாம் கொடுக்குறீங்க... நீங்க ரெம்ப ஸ்லோ..
பதிலளிநீக்குதமிழிஷ், தமிழ் மணத்துல வோட்டுப் போட்டா காதல் சக்செஸ் ஆயிடுமாங்க..? என்னாலான உதவி அதைப் பண்ணிப் போட்டேனுங்க...
பதிலளிநீக்குரொம்ம பாவம் நீங்க ஒரு லெட்டர் குடுக்க தெரியாம இருக்கிரிங்க
பதிலளிநீக்குநல்ல வேலை புறா தூது விடாமல் விட்டிங்க
பதிலளிநீக்குநண்பரே..
செந்தில்குமாரின் வணக்கம்
என் கிட்டேயும் பத்து லெட்டர் இருக்கு.. யாராச்சும் வழி சொன்னா எனக்கும் ஒண்ணு சொல்லிக் கொடுங்க..
பதிலளிநீக்குஐயையோ ஏற்கனவே எத்தனை வைச்சிருக்கிறீங்க........
பதிலளிநீக்குரொம்ப ஜோக் தான் ...
நல்லாயிருக்குங்க..........
வலைச்சரம் மூலமாக வந்தேன், ஸ்டார்ஜனுக்கு நன்றி
பதிலளிநீக்கு