காதல் செய்வீர் மானிடத்தீரே - பகுதி 2


சிறிது சிறிதாக கிளம்பிய விசும்பல் சத்தம் பெரும் அழுகையாக மாறதுவங்கியிருந்தது. எரிச்சலுடன் கையில் வைத்திருந்த சொம்பை தண்ணிருடன் தரையில் தூக்கி எறிந்தார் சிதம்பரம்.

"என்ன எழவுடா இது. என்ன விசயன்ன்னு சொல்லாம  பொட்ட(ப்) புள்ள மாதிரி அழுக ஆரம்பிச்சுட்ட. அசிங்கமா இல்ல உனக்கு. கொன்னு போட்ற போறேன். . அழுகைய  நிப்பாடிட்டு என்னன்னு சொல்லி தொலை இப்ப” பொங்கி எழுந்த கோபத்தை வார்த்தைகளில் காட்டினார் சிதம்பரம்.

“என்னன்னு சொல்ல சொல்றீங்க. அப்படியே செத்துறலாம் போல இருக்கு. ஒரு மதிப்பே இல்லாம போச்சு எனக்கு” அழுகையினூடே வெடித்து கிளம்பியது வார்த்தைகள் குமரேசனிடம் இருந்து.

“ தம்பி அப்படில்லாம் சொல்லாத. இராசா. உன்னய நம்பித்தானய்யா நாங்க இருக்கோம் ” என்ற மனைவியை “ கொஞ்ச நேரம் வாயை பொத்திக்கிட்டு சும்மா கிட. நீ வேற” என்றார் சிதம்பரம்.

“ எனக்கு என்ன மூளையே கிடையாதா. நான் என்ன சின்ன கொழந்தையா ஒவ்வொரு விசயத்துக்கும் எதுனாச்சும் சொல்லிகிட்டே இருக்கா. ஒவ்வொரு தடவயும் அவ எடுக்கற முடிவுக்குதான் நான் தலையாட்டனும்னு நெனக்கிறா. நானா எதுவும் பன்னுனாலும் குத்தம் கண்டுபிடிச்சுகிட்டே இருக்கா. கோபத்துல எதுவும் திருப்பி பேசுனா ஏதோ புழுவ பாக்கற மாதிரி பாக்குறா. அப்படி பாக்குறப்ப எனக்கு செத்து போய்றலாம்னு தோனும். இருந்தாலும் எல்லாத்தயும் சகிச்சிகிட்டு இருந்தாக்க முந்தா நேத்தி ஒன்னுமத்த விசயத்துக்கு கத்தி கூப்பாடு போட்டு நடுத்தெரும்னு பாக்காமா மேல கைய வெக்கறா. செத்தாலும்  சாவனே ஒளிய அவ கூட சத்தியமா இனிமே வாழ முடியாது என்னால” கோபமும் சுயபச்சாதாபமும் கலந்து வந்து விழுந்து வார்தைகளினால் நொந்து போய் தூணில் சாய்ந்தார் சிதம்பரம்.

”ஒரு விசய்த்தில கூட சொந்தாம யோசிச்சு முடிவு எடுக்க தெரியாத, நல்லத் எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்க தெரியாத, எடுத்ததுக்கெல்லாம் கோப படற, எதுலயும் ஒரு நிதானம் இல்லாத ஆம்பள் கூட எப்படி வாழுறதுன்னு தெரியலப்பா” பெரும் சோகத்திலும் நிதானமாக பேசிய மகளை பார்த்து பெருமையாக இருந்தது தியாகராஜனுக்கு. இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் “கோபப்படாம நிதானமா யோசிச்சு முடிவெடுக்காலாம்மா. என்னாச்சு சொல்லு” என்றார் நிதானாமாக.

“இல்லப்பா. கசந்து போச்சுப்பா. கோப்பட்டா பொருத்துக்கலாம். எடுத்ததுக்கல்லாம் கத்தறதும் இருக்கற இடம் என்னன்னு தெரியாமா அடிக்க கைய ஒங்கறதும் என்னப்பா பொழப்பு இது. இதல்லாம் கூட பொருத்துக்கலாம்பா. நாமள்ளலாம் படிச்சிருக்கோம்லப்பா. வார்த்தைகள்ள ஒரு டிகினிட்டி வேணாம். எடுத்ததுக்கெல்லாம் ஸ்லம் பிப்புள்ஸ் மாதிரியாப்பா பேசறது. அந்த வார்த்தயல்லாம் கேட்டா அப்படியே உடம்பு கூசுதுப்பா. இது வேணாம்பா எனக்கு. பேசாமா டைவர்ஸ் வாங்கி குடுத்துருங்கப்பா” என்ற வசந்தியை சற்றே கோபத்துடன் பார்த்தார் தியாகராஜன். வாழ்க்கையின் அந்த கணம் மிக கடினமாக தோன்றியது அவருக்கு. 
-- தொடரும்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

9 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. கதை நடை, நல்லா போய்க்கிட்டு இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. @ நன்றி சித்ரா தொடர்ந்து தரும் ஆதரவுக்கு.

    @ நன்றி சைகொப. சீக்கிரமே வரும்.

    பதிலளிநீக்கு
  3. நல்லாருக்கு ஆர்.கே.

    ரெண்டு இடுகையும் வாசித்தேன்.

    பத்தி பிரித்து போடணும் மக்கா.வாசிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி பா.ரா. சார். அப்படியே செய்துடறேன்.

    பதிலளிநீக்கு
  5. நம்ம பக்கம் கொஞ்சம் பாருங்க....
    www.egathalam.blogspot.com
    - சென்னைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  6. http://sirippupolice.blogspot.com/2010/04/1.html

    thamni ennoda blogs kku vanthu paaru. vettai aarampamaayiduchu doi...

    பதிலளிநீக்கு
  7. கதை வெகு இயல்பான நடையில் நிகழ்வுகளை கண்முன் காட்சிப்படுத்துகிறது..... அருமை...... தொடரட்டும்......

    பதிலளிநீக்கு
  8. மிகவும் சிறப்பாக போகுதுங்க . அடுத்த பதிவு எப்ப ?

    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்