காதல் செய்வீர் மானிடத்தீரே! - பகுதி 4

பகுதி 1, பகுதி 2, பகுதி 3

சாத்தூர் போகும் அந்த பஸ்சின் மத்தியில் உள்ள ஜன்னலோர இருக்கையில் கண்முடி உட்கார்ந்திருந்தார் சிதம்பரம்.   அவரின் மனதில் எண்ண ஒட்டம் பஸ்ஸை விட மிக வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. 

தன்னை கூப்பிட்டது யார் என்று திரும்பி பார்க்கையில் நின்றிருந்த தியாகராஜனை பார்த்து ஒரு கணம் திகைத்துத்தான் போனார் சிதம்பரம். இன்சூரண்ஸ் அலுவலகத்தில் தியாகராஜனை பார்த்து விடாமல் போய்விட வேண்டும் என்றிருந்தவரை தியாகராஜனை பார்த்தவுடன் தர்மசங்கடாமியிருந்தது சிதம்பரத்துக்கு.  

திரும்பியவரிடத்தில் “என்ன சார் அநியாயமா இல்ல ஒங்களுக்கே” என்ற தியாகராஜனிடம் ஒரு கணம் திகைத்து “இல்ல.  அது வந்து ..... ” என்றார் சிதம்பரம்.

“ விட்டா ஒங்க ஆளுங்க எங்க தலைய மொட்ட அடுச்சிறுவாங்க போல்ருக்கு” என்று சிரித்த முகத்துடன் சொன்ன தியாகராஜனை பேச்சை கேட்டு ஒரு கணம் அவர் எதை பேசுகிறார் என்று தெரிந்தாலும் என்ன சொல்வதென்று நின்றிருந்த சிதம்பரத்தை பார்த்து “ வாங்க ரூமுக்கு போய் பேசலாம்” என்று அவரது ஆபிஸ் ரூமுக்கு கூட்டிப்போனார்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கையில் வந்த ஆபிஸ் பாயிடம் இரண்டு காபிக் கொண்டு வரச்சொன்னார் சிதம்பரம். ஆபிஸ் பாய் சென்றவுடன்
“ மாப்பிள்ளை எப்படி இருக்கார் ” என்றார் தியாகராஜன்.
ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் மவுனம் காத்த சிதம்பரம் “ சாரி சார்.  மன்னிச்சிருங்க” என்றவரிடம் “அய்யோ ஏங்க பெரிய வார்த்தயல்லாம் சொல்றீங்க”  என்றார் தியாகராஜன்.

அடுத்த சில நிமிடங்கள் நிலவிய மவுனத்தை  கலைத்தார் தியாகராஜன்.
“ஆக்சுவலி ரெண்டு பேரும் மேலயும் தப்பு இருக்கு சார். ரெண்டு பேரும் இன்னொருத்தங்க மேல வச்ச அதித அன்புதான் இதுகெல்லாம் காரணமா இருக்க முடியும்.  பொண்னுங்களுக்கு எப்பவுமே பொஸ்ஸவிவ்னெஸ் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். புருசன் தினம் போடற டிரஸ்லேந்து, சாப்பிடற சாப்பாடு வரைக்கும் தன்னோட சாய்ஸா இருக்கனும்னு நெனைக்கிறாங்க. ஆனா இந்த காலத்து ஆம்பிள பசங்களுக்கு அது என்னவோ தன்ன அடக்கிற மாதிரி ஒரு உணர்வு. பெத்தவங்க நம்ம ஒரு விசயத்த ஒரு தடைவுக்கு மேல சொன்னலே நம்ம மேலேயே எரிஞ்சு விலுவாங்க இல்லையா. கொஞ்ச காலம் விட்டு பிடிக்கலாம் சார். கவலை படாதீங்க ” என்று முடித்தார் தியாகராஜன்.

ஒரு சிறு சிரிப்புடன் கூடிய தலையாட்டலைதான் பதிலாக தர முடிந்தது சிதம்பரத்தால். காபி வரவும் குடித்து விட்டு மீண்டும் சிறிது நேரம் பேசி முடித்து விட்டு கிளம்புகையில் “ வீட்டுல வசந்தியையும் , மிச்ச எல்லாத்தையும் கேட்டதா சொல்லுங்க சார் ” என்றார் சிதம்பரம்.

“ உறுதியாக சொல்றேன் சார் ”  என்றார் தியாகராஜன். இந்த மனதில் ஒடிக்கொண்டிருக்கையில்  “ மாமா கண்ண தொறக்கறது.  வெங்கடாசலபுரம் வந்துருச்சுலா. இப்படியே தூங்கிட்டு இருந்தீங்கன்னா கோவில்பட்டி வந்துர போது ” என்ற குரல் கேட்டு கண்விழித்தார் சிதம்பரம். பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்  சிதம்பரத்தின் மனைவி கோமதியின் தம்பி மாடசாமி.

-- தொடரும்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

2 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. பொண்னுங்களுக்கு எப்பவுமே பொஸ்ஸவிவ்னெஸ் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். புருசன் தினம் போடற டிரஸ்லேந்து, சாப்பிடற சாப்பாடு வரைக்கும் தன்னோட சாய்ஸா இருக்கனும்னு நெனைக்கிறாங்க. ஆனா இந்த காலத்து ஆம்பிள பசங்களுக்கு அது என்னவோ தன்ன அடக்கிற மாதிரி ஒரு உணர்வு. பெத்தவங்க நம்ம ஒரு விசயத்த ஒரு தடைவுக்கு மேல சொன்னலே நம்ம மேலேயே எரிஞ்சு விலுவாங்க இல்லையா. கொஞ்ச காலம் விட்டு பிடிக்கலாம் சார். கவலை படாதீங்க ” என்று முடித்தார் தியாகராஜன்.


    ...... இப்படி ஒண்ணு இருக்கோ? நல்லா கருத்துக்களை ஆங்கே ஆங்கே தூவி, கதையை நல்லா கொண்டு போறீங்க. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்