காதல் செய்வீர் மானிடத்தீரே ! - பகுதி 3

பகுதி 1, பகுதி 2

மகளை சற்று சமாதானப்படுத்தி மதுரைக்கு கூட்டி வந்து ஒரு வாரம் ஒடியிருந்தது தியாகராஜனுக்கு. மதுரை வந்து சேர்ந்த அடுத்த நாளில் இருந்து அவரை வேலை முழுவதுமாக ஆக்ரமித்து கொண்டது. அவர் மதுரை நகரில் இருக்கும் ஒரு இன்சூரன்ஸ் கம்பேனியில் மேனஜர். மோட்டார் வாகனங்களின் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை நிர்வகிக்கும் அலுவலகம் அது. கடந்த வாரங்களில் ஆக்சிடெண்ட் ஆன சில லாரிகள் மற்றும் வேன்களின் போன்றவற்றின் கிளைம் சமபந்தபட்ட சில விசயங்களை மற்ற நிர்வாகிகளுடன் விவாதித்து அவரின் கீழ் வேலை செய்தவர்களுக்கு அது சம்பந்தமான உத்தரவுகளை பிறப்பித்து அவர்களை வேலை வாங்குவது என பொழுது மிகவும் பிஸியாக போனது.


கடந்த ஒரு வாரத்தில்  தியாகராஜனின் மனைவி மேகலாவும், மகன் சுரேஷும் வசந்தியை ஒருவழியாக சற்றே சகஜ நிலைக்கு கொண்டு வந்திருந்தனர். சுரேஷ் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பீ,காம் படித்துக்கொண்டே தியாக்ராஜனின் நண்பரான ஒரு ஆடிட்டரின் கிழ் வேலை பார்த்துக்கொண்டே சி.ஏ. வகுப்புகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருக்கும் இளைஞன். வசந்தியை விட மூன்று வயது இளையவன்.  மனைவி மேகலா ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளர். நல்ல வசதியான குடும்பம் இவர்களுடையது.


மகன் வந்து ஒரு வாரம் ஆகி விட்டாலும் சிதம்பரத்தால் அவன் விவகாரத்தில் அடுத்த படியாக ஒன்றும் செய்ய முடியாத மாதிரி அவரது வேலை அவரை இழுத்துக்கொண்டது. அவர் இருக்கின்ற நகரமான சாத்தூரில் உள்ள ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை அவருக்கு.  அந்த நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை மேனேஜ்மெண்டின் கீழ் வேலை பார்க்கும் அவருக்கும் தான் ஒரே இடத்தில் 40 வருடங்களாக வேலை பார்பது பெருமைதான். ஆர்.டி.ஒ ஆபிஸ் வேலைகள் மற்றும் அவர்களின் சடட சம்பந்தபட்ட வேலைகள் அனைத்தயும் தனி ஒரு ஆளாக சமாளிப்பது அவரின் திறைமைக்கு சான்று.


குமரேசன் வந்த தினத்தின் காலையில் அவரது அலுவலகத்தில் இருந்து வந்த அவசர அழைப்புக்கு விரைந்து சென்று பார்க்கையில் அவர்களின் லாரி ஒன்று லோடு ஏற்றி வருகையில் திருச்சியின் அருகே மற்றொரு சிறு வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் கோர்ட்டுகும், போலிஸ் ஸ்டஷ்னக்கும் அழைந்து அவரின் செருப்பு தேய்ந்துதான் போயிருந்தது. அந்த வண்டியின் இன்சூரன்ஸ் சம்பந்தபட்ட வேலைகளை பார்க்க அந்த இன்சூரன்ஸ் கம்பேனிக்கு வந்திருந்தார் அன்றைக்கு. வந்த வேலை முடிந்து கிளம்ப வாசல் நோக்கி திரும்பியவரை “சிதம்பரம் சார் . ஒரு நிமிடம்” என்றழைத்த குரல் தியாகராஜனுடையதாயிருந்தது.


-- தொடரும்.பிரபலமான இடுகைகள்