4 ஜூன், 2010

காருண்யம்

7

" கந்தனுக்கு மூத்தோனே
  மூச்சித வாகன்னே
  மூலப் பொருளோனே
” 
சுப்பிரமணி டிஸ்டாலில கனிரென சாமிப்பாடல் ஒளிக்க ஆரம்பித்தது. மணி காலை நாலு. கடை தெருவுக்கு விடிய ஆரம்பித்தது.

கடை தெருவென்றால் ஒரு டீக்கடை. ஒரு சிறிய ஹோட்டல், ஒரு பலசரக்கு கடை, காய் கறி கடை மற்றும் இரு கறிக்கடைகள் இவ்வளவ்வுதான். கடைகளோடு  ஒட்டிய ஒரு சில வீடுகளும் அங்கே இருந்தன. ஹோட்டலை ஒட்டிஇருந்த குப்பை தொட்டியின் அருகில் இரு நாய்கள் முந்திய இரவின் எச்சில் இலைகளுக்கு சண்டையிட்டு கொண்டிருந்தன.

திடிரென அந்த இரண்டும் இலைகள விட்டு குப்பை தொட்டியின் அருகே இருந்த இன்னொன்றை பார்த்து குரைக்க ஆரம்பித்தது. குப்பை தொட்டியின் அருகே கிடந்த அதின் மேல் ஈக்களும் கொசுக்களும் ஆக்ரமித்து இருந்தன. தொடை வரை ஏறி இருந்த ஆடையானது அங்கங்கெ கிழிந்து காற்று உள்சென்று வெளிவர வசதியாக இருந்தது.

நாய்களின் குரைப்பை கேட்டு மெது மெதுவாக குப்பை தொட்டியின் அருகே கடைத்தெருவுக்கு வந்த கூட்டம் கூட ஆரம்பித்தது. கூட்டத்தில் குரல்களின் மூலம் அங்கே கிடந்த அது ஒரு பெண்ணென அறியப்பட்டது.  அந்த பெண்ணின் விலகியிருந்த உடைகளை பார்த்து அங்க கூடியிருந்தவர்களின் மனசு ஆடையிழந்து நிர்வாணமாக ஆரம்பித்தது..

கூட்டத்தில் எழுந்த குரல்களின் நடுவே அந்த குப்பை தொட்டியின் அருகே இருந்த கதவு திறந்தது. கதவு திறந்தவுடன் கூடியிருந்த கூட்டம் “ கொலைகாரன் வந்துட்டான்” என்ற குரலுடன் பக்கத்தில் இருந்த மறைவுகளில் மறைந்தது சட்டென.  அங்கே படுத்து கிடந்த பெண்ணையும் சிதறி மறைந்த கூட்டத்தையும் பார்த்த அவன் திரும்பி வீட்டினுள் நுழைந்தான். அவன் வீட்டுக்குள் போவதை பார்த்த சில தலைகள் மறைவுகளில் இருந்து வெளியே வந்தன.

திரும்பியும் அவன் வீட்டிலிருந்து வெளியே வருவதை கண்ட அந்த தலைகளும் திரும்பி மறைந்தன.  வெளியே வந்த அவன் கைகளில் ஒரு துணியிருந்தது. கொண்டு வந்த துணியை பெண்ணின் மேல் போர்த்திவிட்டு கூட்டத்தை நோக்கி காரி துப்பி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அவன் தலை மறைந்ததை கண்ட கூட்டம் வெளியே வந்து பேச தொடங்கியது. அப்பொழுது கேட்ட  “ கொலைகாரன் வந்துட்டான்” என்ற வார்த்தைகளில் ஆத்திரம் கலந்து இருந்தது.7 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.